கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Challenge லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Challenge லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Classes 4 & 5 - 100 days challenge Assessment - மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்



Classes 4 & 5  -  100 days challenge Assessment - மாவட்டக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு


தமிழ் & ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய திறன்களில் தயார் நிலையில் உள்ளதாக மாவட்டக் கல்வி அலுவலர்களால் தெரிவிக்கப்பட்ட 4,552 பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடிப்படைத் திறன்களை மதிப்பிடும் பணிகள் 4.4.2025 நிறைவடைந்தது. 


4 மற்றும் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான மதிப்பீட்டு பணி நாளை 16.04.2025 அன்று நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

இம்மதிப்பீட்டு பணிக்கான Assessment Tool அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களின் (தொடக்கக் கல்வி) மின்னஞ்சல் முகவரிக்கு 16.04.2025 அன்று காலை 8.45 மணிக்கு அனுப்பி வைக்கப்படும்.

 

Assessment Tool 17.04.2025 வரை Liveலேயே இருக்கும். எனவே, மதிப்பீட்டு பணிகளை 16.04.2025 மற்றும் 17.04.2025 ஆகிய இரு தினங்களிலும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


- தொடக்கக் கல்வி இயக்குநருக்காக



பள்ளிக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - கற்றல் திறன் சோதனை நடைபெறும் 4552 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் - மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


100 Days Challenge - மாணவர்களின் அடைவுத் திறனை மதிப்பீடு செய்யும் பணி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

 

100 Days Challenge - மாணவர்களின் அடைவுத் திறனை மதிப்பீடு செய்யும் பணி - மாநிலத் திட்ட இயக்குநரின் SPD செயல்முறைகள், நாள் : 03-04-2025


100 Days Challenge - Student Achievement Assessment Task - State Project Director's Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




100 Days Challenge - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்







பள்ளிக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - கற்றல் திறன் சோதனை நடைபெறும் பள்ளிகளின் பட்டியல்


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



100 Days Challenge - 04.04.2025 மற்றும் 16.04.2025 ஆகிய நாட்களில் மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு - தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


 100 Days Challenge - 04.04.2025 மற்றும் 16.04.2025 ஆகிய நாட்களில் மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்த தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 03-04-2025


100 Days Challenge - Proceedings of the Director of Elementary Education to conduct assessment test for students on 04.04.2025 and 16.04.2025, Dated: 03-04-2025








பள்ளிக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - கற்றல் திறன் சோதனை நடைபெறும் 4552 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் - மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



100 Days Challenge - அடுத்த கட்டமாக அனைத்து பள்ளிகளுக்கும் - DEE Proceedings, Dated: 13-03-2025



 100 Days Challenge - அடுத்த கட்டமாக அனைத்து பள்ளிகளுக்கும் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 13-03-2025


100 Days Challenge - Next step for all schools - Proceedings of the Director of Primary Education, Date: 13-03-2025


100 days Challenge : '100 நாளில் மாணவர்களை முழுமையாகப் படிக்க வைத்தல்' சவால் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


அனைத்துப் பள்ளி மாணவர்களும் தமிழ், ஆங்கிலம் & கணிதத்தில் 100 நாட்களில் கற்றல் அடைவுத்திறன் பெற நடவடிக்கை - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக வழக்கமான கற்றல் கற்பித்தல் பணிகளுடன் எண்ணும் எழுத்தும் , திறன்மிகு வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் போன்ற திட்டங்கள் மாணவர்களின் வாசிப்புத் திறனையும் கற்றல் திறனையும் மேம்படுத்தி வருகின்றது.


தளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆனேகொள்ளு , ஊராட்சிக்குட்பட்ட டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி க.வளர்மதி என்பார் சமூக வலைத்தளப் பக்கத்தில் (Facebook ) 04.112024 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு அழைப்பு விடுத்து , அதில் "எங்கள் பள்ளியில் 33 மாணவர்கள் பயின்று வருகின்றார்கள் . அனைவரும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களை நன்றாக வாசிக்கத் தெரிந்தவர்கள் மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல் , கழித்தல் , பெருக்கல் , வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களில் அடைவு பெற்றுள்ளனர். 


மாண்புமிகு அமைச்சர் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களின் கற்றல் அடைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார் . மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பள்ளியில் மாணவர்களின் கற்றல் அடைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதே போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களும் அழைப்பு விடுக்க வேண்டும் என மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறினார் . அதனடிப்படையில் , தற்போது மேற்கண்ட பொருண்மையின் சார்பில் 4562 பள்ளிகளின் பெயர்ப் பட்டியல் மாவட்டக்  கல்வி அலுவலர்களிடமிருந்து ( தொடக்கக் கல்வி ) நவம்பர் 2024 - ல் பெறப்பட்டுள்ளது.


அதனை ஏற்று , பள்ளிக்  கல்வித் துறை , அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் மேற்கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்த கருத்துருக்களின்படி பெயர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளுக்கு , மாவட்ட ஆட்சியர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் , மக்கள் மன்ற பிரதிநிதிகள் , பள்ளி மேலாண்மைக் குழு . பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியோர் முன்னிலையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல் , கழித்தல் , பெருக்கல் வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை 100 நாட்களில் கற்பித்து , ஓப்பன் சேலஞ்ச் ( Open Challenge ) எனப்படும் வெளிப்படையான சவாலைப் பொது வெளியில் அறிவித்து இச்செயலை நடைமுறைப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்டக்கல்வி அலுவலர்களுக்குத் ( தொடக்கக் கல்வி ) தெரிவிக்கப்படுகிறது . மேற்குறித்த 100 நாட்களுக்குள் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் மற்றும் கணக்கு பாடத்தில் கழித்தல் , கூட்டல் , பெருக்கல் , வகுத்தல் ஆகிய கற்றல் திறன்களில் அடைவு பெறுவதற்கான இலக்கினை நிர்ணயித்தல் சார்ந்து ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலைமை ஆசிரியர்களுக்கான நேரடிக் கூட்டம் நடத்தி , போதுமான அறிவுரைகள் , வழிகாட்டுதல்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) வழங்க வேண்டும் . மேற்கண்ட விவரங்களை சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு தேவையான ஆலோசனைகளை சார்ந்த மாவட்டக் கல்வி ( தொடக்கக் கல்வி ) அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் . மேலும், மேற்கண்ட விவரத்தை ஆய்வு செய்யும் பொருட்டு சார்ந்த வட்டார வள மையப் பயிற்றுநர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.


 முதற்கட்டமாக 4552 பள்ளிகளில் செயல்படுத்தவும் , பள்ளிப் பார்வையின்போது பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி நடைமுறைப்படுத்தவும் , அதனைத் தொடர்ந்து , அனைத்து பள்ளிகளிலும் இந்நிகழ்வை கொண்டு செல்வதற்கு முத்தாய்ப்பாகவும் இதன்மூலம் அனைத்து அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க ஒரு ஊக்குவிப்பாக அமையும் என்பதால் , செயல்பாட்டினை முழுமையாக வெற்றி அடைய அனைத்து வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். 







தமிழ்நாடு முழுவதும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 100% தமிழ்,ஆங்கிலம், கணிதம் என அனைத்து பாடங்களிலும் கற்றல் நிலை திறன் ஆய்வு, 100 நாள் சவாலுக்கு தயாராக உள்ள 4552 பள்ளிகளின் பெயர் பட்டியல்


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - தேர்வு செய்யப்பட்டுள்ள 4552 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் பெயர்ப் பட்டியல் - மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக




பள்ளிக்கல்வித் துறையின் 100 நாள் சவால் - கற்றல் கற்பித்தல் திறனை சோதித்தறியும் முயற்சி. முதல் கட்டமாக 4552 அரசு ஆரம்ப / நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை சோதித்து அறியப்படுகிறது. அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் முன்னிலையில் நிகழ்ச்சியாக செயல்படுத்த உத்தரவு


தமிழ்நாடு முழுவதும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 100% தமிழ்,ஆங்கிலம், கணிதம் என அனைத்து பாடங்களிலும் கற்றல் நிலை திறன் ஆய்வு, 100 நாள் சவாலுக்கு தயாராக உள்ள 4552 பள்ளிகளின் பெயர் பட்டியல்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


 








100 days challenge of the School Education Department - List of 4552 Govt Elementary / Middle schools - District and Block wise

 


பள்ளிக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - தேர்வு செய்யப்பட்டுள்ள 4552 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் பெயர்ப் பட்டியல் - மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக


வாசிப்பு மற்றும் கணித அடிப்படைத் திறனில் 100% தயார் நிலையில் உள்ள பள்ளிகளின் விவரம் - தொடக்கக் கல்வி இயக்ககம் பட்டியல் வெளியீடு 


100-day challenge of the School Education Department - List of 4552 selected government primary / middle schools - District and Union wise


பள்ளிக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - கற்றல் திறன் சோதனை நடைபெறும் 4552 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் - மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...