கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Evaluation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Evaluation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எண்ணும் எழுத்தும் திட்டம் - Impact Assessment - Third Party Evaluation - Enumeratorsக்கான பயிற்சி - Field Investigation பணி 01.09.2023 முதல் 15.09.2023 வரை நடைபெறுதல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள் (Ennum Ezhuthum Scheme - Impact Assessment - Third Party Evaluation - Training for Enumerators - Field Investigation Work to be held from 01.09.2023 to 15.09.2023 - SCERT Director Proceedings)...

 

>>> எண்ணும் எழுத்தும் திட்டம் - Impact Assessment - Third Party Evaluation - Enumeratorsக்கான பயிற்சி - Field Investigation பணி 01.09.2023 முதல் 15.09.2023 வரை நடைபெறுதல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள் (Ennum Ezhuthum Scheme - Impact Assessment - Third Party Evaluation - Training for Enumerators - Field Investigation Work to be held from 01.09.2023 to 15.09.2023 - SCERT Director Proceedings)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 எண்ணும் எழுத்தும் திட்டம் அனைத்துப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சென்றடைந்தது குறித்து மூன்றாம் நபர் மதிப்பீடு ( Third Party evaluation ) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.



இந்நிலையில் , இம்மதிப்பீட்டினை மேற்கொள்ள அரசு , அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வியியல் ( B.Ed. ) கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டியுள்ளதால் அனைத்து மாவட்டங்களில் உள்ள கல்வியியல் ஆண்டு ( B.Ed ) கல்லூரிகளில் பயிலும் முதலாம் மற்றும் இரண்டாம் மாணவர்களை Third Party evaluation பணியில் மதிப்பீட்டாளராக ( Enumerators ) செயல்பட அனுமதி வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



 மேலும் , இம்மாணவர்களுக்கு மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான பயிற்சி அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 28.08.2023 முதல் 31.08.2023 வரை இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது. பள்ளிகளில் Field investigation பணியானது 01.09.2023 முதல் 15.09.2023 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


கற்போம் எழுதுவோம் இயக்கம் - மதிப்பீட்டு முகாம் குறித்த கேள்வி பதில்கள்...

 


கற்போம் எழுதுவோம் இயக்கம்,  விருதுநகர் மாவட்டம் - மதிப்பீட்டு முகாம் குறித்த கேள்வி பதில்கள்...


1.   *மதிப்பீட்டு முகாம்* என்றால் என்ன?


 கற்போர் களின் குறைந்தபட்ச கற்றல் அளவை கற்போரின் கற்ற நிலைக்கு ஏற்றவாறு மதிப்பிடும் நிகழ்வாகும். இது அடைவுத்தேர்வு அல்ல.


2.  மதிப்பீட்டு முகாம் *எப்பொழுது* நடத்தப்பட வேண்டும்?


 29. 7 2021 முதல் 31. 7 2021 வரை.


3.  மதிப்பீட்டு முகாம் *மையத்தில் மட்டும்தான்* நடத்தப்பட வேண்டுமா?


 இல்லை. கற்போருக்கு ஏதுவாக  மையம் இல்லத்தில், அவர்கள் பணியாற்றும் இடங்களில், குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்படலாம். 


4.  மதிப்பீட்டு முகாமை *அடைவுத்தேர்வு எனக்* கூறலாமா?


 கூறுதல் கூடாது.


5.  மதிப்பீட்டு முகாமை நடத்துவதற்கு  *முன்னாயத்த*  பணிகளாக எவற்றை மேற்கொள்ள வேண்டும்?


 மையத்தில் பயிலும் கற்போரை மதிப்பீட்டு முகாம் நடக்கும் நாட்களில் எந்த நாட்களில் அவர்களை மதிப்பீடு செய்வது,  எந்த இடத்தில் மதிப்பீடு செய்வது என கற்போர்  வசதிக்கு ஏற்றவாறு  மையத் தலைமை ஆசிரியரால்  மதிப்பீட்டு முகாம் நடப்பதற்கு முன்னரே  பட்டியல் தயார்  செய்ய வேண்டும். 


 6.பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கத்தால் வழங்கப்பட்டுள்ள *வினா-விடை* கையேட்டை  மதிப்பீட்டு படிவமாக பயன்படுத்தலாமா?


 மதிப்பீட்டுப் படிவம் ஆக பயன்படுத்தலாம்.


7. ஒன்றிய அளவில் *கூட்டங்கள் நடத்தப்பட* வேண்டுமா?


கொரோனா தொற்று பரவல் சார்ந்த  உரிய  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி  மைய  தலைமை ஆசிரியர்கள் மற்றும்  தன் ஆர்வலர்களுக்கு நடத்தப்படலாம்.


8. கற்போரை  மதிப்பீடு  செய்யும் பொழுதே *திறன்கள் வாரியாக* மதிப்பெண் வழங்கப்பட வேண்டுமா?


ஆம்


9. கற்போருக்கு மதிப்பீட்டு முகாம் நடைபெறுவதை *தெரிவிக்கலாமா* ?


 முன்னரே தெரிவிக்க வேண்டும்.


 10.கற்போருக்கு  *திருப்புதல்* செயல்பாடுகள் மேற்கொள்ளலாமா?


 மேற்கொள்ளலாம் அவரவர் வீட்டு அளவில்


.11.  மையத்தில் சேராமல் இம் மதிப்பீட்டு முகாமில் *நேரடியாக பங்கேற்க*  கற்போர் விரும்பினால் அனுமதிக்கலாமா?


 அனுமதிக்கலாம்.


12.  மையத்திலுள்ள *கற்போர்* *எண்ணிக்கைக்கு* ஏற்றவாறு மதிப்பீட்டு முகாம் நடத்தப்பட வேண்டுமா?


 ஆம்


13.  மதிப்பீட்டு படிவங்களை மைய தலைமையாசிரியர்கள் *எப்பொழுது* பெற்றுக் கொள்வது?


 26. 7. 2021 முதல் 27. 7. 2021 க்குள்  வட்டார கல்வி அலுவலரின் மேற்பார்வையில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் இடம் பெற்றுக்கொள்ளலாம்.



14.  கற்போரின் எவ்வகையான *திறன்களை* மதிப்பீடு செய்ய  வேண்டும்?


 எழுதுதல், வாசித்தல் ,  எண்கள் அறிதல் திறன்.


 15.கற்போரை மதிப்பீடு செய்வது யார்?


 *தன்னார்வலர்* .


 16.மதிப்பீட்டு முகாம்  சிறப்பாக நடத்துவதற்கு  யார் யாரெல்லாம் *ஒருங்கிணைந்து*  செயல்பட வேண்டும்?


 வட்டார கல்வி அலுவலர், மேற்பார்வையாளர், மைய ஆசிரியர் பயிற்றுனர், பள்ளி தலைமையாசிரியர், மற்றும் தன்னார்வலர்


 17.கற்போரின் *ஒட்டுமொத்த சராசரி* மதிப்பெண் பட்டியல் எப்பொழுது தயார் செய்ய வேண்டும்?


 2.8. 2021 க்குள்  தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்


18.  கற்போர் மதிப்பெண் TN *EMIS*  Web portal   இல் விவரங்களை பதிவு செய்ய வேண்டுமா?


 ஆம். ஆசிரிய  பயிற்றுநர்கள் வட்டார அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


19.  மதிப்பீட்டு முகாம் நடைபெறும் ஒவ்வொரு நாட்களிலும்  பூர்த்தி செய்யப்பட்ட மதிப்பீட்டு படிவங்களை மைய தலைமையாசிரியரிடம் தன்னார்வலர் ஒப்படைக்க வேண்டுமா?


 ஆம்


20. ஒட்டுமொத்த சராசரி மதிப்பீடு *33* சதவீதத்திற்கும் குறைவாக பெற்ற கற்போருக்கு ஏதாவது ஒரு திறனில் ஐந்து மதிப்பெண் *கருணை*  மதிப்பெண்ணாக வழங்கலாமா?


 வழங்கலாம்.



21. மதிப்பீட்டு முகாம் நடத்துவதற்கு ஏதுவாக வட்டார அளவில் செயல் திட்டம் தயாரிக்கப் பட வேண்டுமா? 


ஆம். வட்டார அளவில் செயல் திட்டம் தயாரித்து அதன் அடிப்படையில் திட்டமிட்டு இயங்குதல் வேண்டும்.


22. கற்போர் பெற்ற மதிப்பெண்களை எத்தனை நாட்களுக்குள் ஆசிரியர் பயிற்றுனர்கள் TN EMIS WEB PORTAL ல் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்? 


03.08.21 முதல் 10.08.21 க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


23. இந்த மதிப்பீட்டு முறையில் ஒவ்வொரு திறனுக்கும் எத்தனை மதிப்பெண் வழங்கப்படும்?


ஒரு திறனுக்கு 50 மதிப்பெண் என்ற அளவில் மூன்று திறன்களை சோதித்து அறிய மொத்தம் 150 மதிப்பெண் வழங்கப்படும்.


24. கல்வி தன்னார்வலர்களை  தவிர்த்து விருப்பமுள்ள மற்ற தன்னார்வலர்களை  மதிப்பீடு செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாமா? 


பயன்படுத்தி கொள்ளலாம். தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.


25. மதிப்பீட்டு முகாம் நடைபெறும் ஒவ்வொரு நாட்களிலும் கலந்து கொண்ட  கற்போர் களின் எண்ணிக்கையை  Emis  web portal இல் பதிவு செய்ய வேண்டுமா?


  ஒவ்வொரு நாளிலும் பதிவு செய்ய வேண்டும்


26.

26.7.21&27.7.21 ஆகிய நாட்களில் மைய தலைமையாசிரியர்கள் மதிப்பீட்டு படிவத்தை பெற்றுக்கொண்ட விவரத்தை TN EMIS web portal  இல் பதிவு செய்ய வேண்டுமா?


 ஆம்  பெறப்பட்ட மதிப்பீட்டு படிவங்கள் இன் எண்ணிக்கையை பதிவு செய்ய வேண்டும்

 

27. கருணை மதிப்பெண் வழங்கி   33% பெற்று   கற்போரை வெற்றிகரமாக முடித்தவர் என சான்றிதழ் வழங்கலாமா?


 சான்றிதழ் வழங்கலாம்


28. கருணை மதிப்பெண் வழங்கியும் 33% பெற இயலாத கற்போருக்கு சான்றிதழில் எவ்வகையான அளவீடு தேவைப்படும்?


 முன்னேற்றம் தேவை என்ற அளவீடு தேவைப்படும்


 மாவட்ட திட்ட அலுவலகம் 

விருதுநகர்.



🍁🍁🍁 IGNOU மூலம் B.Ed., பயின்றவர்களுக்கு , Evaluation Certificate தேவையா? அரசாணை மற்றும் செயல்முறைகள்...

 தமிழகத்தில் பல்வேறு DEO அலுவலகங்களில், IGNOU மூலம் B.Ed., பயின்றவர்களுக்கு , அயல் மாநில University என்று கூறி Evaluation Certificate கேட்பது ஏற்புடையதல்ல. ஏனென்றால் அரசாணை (நிலை) எண்: 160, நாள்: 02.12.2004-ல் Evaluation தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...