கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பி.எட். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பி.எட். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

B.Ed., படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி - TRB க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

 


பி.எட்., படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி - ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது பி.எட். படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஎட் முடிக்காமலேயே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பணி வழங்க உத்தரவிட்டிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், " தமிழக அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் கோரி கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 25-ந் தேதி அறிவிப்பு வெளியானது. நானும் விண்ணப்பித்தேன். அந்த தேர்வில் 97 மதிப்பெண் எடுத்தேன்.


பின்னர், கடந்த மே மாதம் 31-ந் தேதி சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடந்தது. இதன் பின்னர் வெளியிடப்பட்ட தேர்ச்சி பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு விதிகளின்படி எனக்கு இப்பதவி பெற தகுதியில்லை என்று கூறி ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்தது. மேலும் தகுதி இல்லாதோர் பட்டியலில் என் பெயர் முதலில் இடம் பெற்று இருந்தது. இந்த பட்டியலை ரத்து செய்து, எனக்கு ஆசிரியர் பணி வழங்க தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று ராஜேஸ்வரி கூறியிருந்தார்.


இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் கதிவரன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறும் போது, "மனுதாரர் ஆசிரியர் தகுதித்தேர்வில் 2017-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று விட்டார். ஆனால், பி.எட். படிப்பை 2018-ம் ஆண்டுதான் முடித்துள்ளார். அதனால், அவருக்கு பணி பெற தகுதி இல்லை" என்று வாதிட்டார்.


மனுதாரர் ராஜேஸ்வரி தரப்பில் வக்கீல் என்.கவிதா ராமேஸ்வர் ஆஜராகி, '2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையில், 2016-17 கல்வியாண்டில் இறுதியாண்டு படிக்கும் பி.எட். மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும், பி.எட். தேர்ச்சி பெற்ற பின்னர், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.


அதன்படி மனுதாரர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு 2017-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றார். ஆனால், பி.எட். படிப்பில் அவர் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தார். அந்த பாடத்திற்கான தேர்வை எழுதி 2018-ம் ஆண்டு பி.எட். பட்டம் பெற்றுவிட்டார்' என்று வாதிட்டார்.


அரசு தரப்பு , மனுதாரர் தரப்பு என இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார். அவர் தனது உத்தரவில், "2017-ம் ஆண்டு தகுதி தேர்விலும், 2018-ம் ஆண்டு பி.எட். தேர்விலும் மனுதாரர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆகவே, மனுதாரரை ஆசிரியர் பணியை பெற தகுதியில்லாதவர் என்று கூற முடியாது. மனுதாரரை தகுதியில்லாதவர் பட்டியலில் சேர்க்க எந்த காரணமும் கிடையாது.  எனவே, மனுதாரரின் பெயரை தகுதி பட்டியலில் சேர்க்க வேண்டும். அதன்பின்னர், அவருக்கு பணி வழங்கும் நடவடிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளவேண்டும்" என்று குறிப்பிட்டார்.


Seeking Details of promoted and working / retired Panchayat Union/Municipality/ Government Middle School Headmasters with B.Litt., educational qualification and without B.Ed., educational qualification, Joint Director of Elementary Education Proceedings Rc. No: 002460/ E1/ 2023 , Dated: 24-09-2024...


பி.எட்., கல்வித் தகுதி இன்றி பி.லிட்., கல்வித் தகுதியுடன் பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வரும் / ஓய்வு பெற்ற ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் விவரம் கோரி தொடக்கக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 002460/ இ1/ 2023, நாள்: 24-09-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



.



>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத வைக்கும் பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை...



 வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத வைக்கும் பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை...


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்./எம்.எட் பட்ட வகுப்புகளில வெளி மாநிலத்தில் இயங்கும் Global Academy போன்ற பல்வேறு சேர்க்கை மையங்கள் வாயிலாக, மாணவர்களை Irregular முறையில் வகுப்புகளுக்கே வராமல் சேர்க்கை செய்து தேர்வு எழுத அனுமதிப்பதாக UGC -யில் இருந்து புகார் மனு இப்பல்கலைக்கழகத்தில் பெறப்பட்டுள்ளது.


இது குறித்து பல்கலைக்கழகத்தின் சார்பில் நேரில் சென்று கேரளா காவல்துறையில் Global Academy மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. 


எனவே, கல்லூரி முதல்வர்கள் / செயலாளர்கள் இது போன்ற பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பான மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளக்கூடாது என கண்டிப்பாக தெரிவிக்கலாகிறது. 


மேலும், இது போன்ற தவறான irregular மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ளும் கல்லூரிகளின் மீது பல்கலைக்கழகத்தின் சார்பில் முன் அறிவிப்பின்றி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய வழிமுறைகளை பின்பற்றி, ஆட்சிமன்ற குழுவின் அனுமதி பெற்று, கல்லூரிகளின் இணைவு ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்.


பி.எட்., படிப்புக்கான வினாத்தாள் கசிவு - வினாத்தாளை திரும்ப பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு - 10 மணிக்கு முன் புதிய வினாத்தாள்...



பி.எட்., படிப்புக்கான வினாத்தாள் கசிவு - வினாத்தாளை திரும்ப பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு - 10 மணிக்கு முன் புதிய வினாத்தாள்...


இரண்டாம் ஆண்டு B.Ed., படிப்புக்கான 4வது செமஸ்டர் வினாத்தாள் லீக்கான விவகாரம்...


வெளியான வினாத்தாளை திரும்ப பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு...


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. நடத்தும் creating an inclusive school என்ற பாடத்துக்கான வினாத்தாள் லீக்கானது


இன்று காலை 10 மணிக்கு தேர்வு துவங்கும் முன்பாக இணையதளம் வாயிலாக புதிய வினாத்தாள் அனுப்பப்படும் எனவும் உயர் கல்வித் துறை அறிவிப்பு


கடந்த 27ம் தேதி தொடங்கிய பி.எட் படிப்புக்கான தேர்வுகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பி.எட் கற்பித்தல் பயிற்சியை அதே பள்ளியில் மேற்கொள்ளலாம் என்பதற்கான திருவள்ளூர் & திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள்...


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பி.எட் கற்பித்தல் பயிற்சியை அதே பள்ளியில் மேற்கொள்ளலாம் என்பதற்கான திருவள்ளூர் & திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள்...



Proceedings of Tiruvallur & Tirupur District Elementary Education Officers for Secondary Grade Teachers working in Primary and Middle Schools to undertake B.Ed Teaching Training in the same school...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தொடக்கக்கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது B.Ed., கற்பித்தல் பயிற்சியை பணிபுரியும் பள்ளியிலேயே விடுப்பின்றி மேற்கொள்ளலாம் - அரசாணை எண் : 77, பள்ளிக்கல்வி, நாள் : 24/04/2017 வெளியீடு...

 

அரசாணை (நிலை) எண் : 77, பள்ளிக்கல்வி, நாள் : 24/04/2017 - தொடக்கக்கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது B.Ed., கற்பித்தல் பயிற்சியை பணிபுரியும் பள்ளியிலேயே விடுப்பின்றி மேற்கொள்ளலாம் - ஆணை வெளியிடப்படுகிறது...



G.O. Ms. No : 77, School Education, Dated : 24-04-2017 - Elementary Education - Teachers working in Panchayat Union / Municipal / Government aided schools may undertake their B.Ed., teaching practice training in the school where they work without leave - Ordinance is issued...



>>> அரசாணை (நிலை) எண் : 77, பள்ளிக்கல்வி, நாள் : 24.04.2017 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2 ஆண்டுகள் பி.எட்., படிப்புகளுக்கு மாற்றாக 4 ஆண்டுகள் பி.எட்., - ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் (ITEP) அறிமுகம்...



2 ஆண்டுகள் பி.எட்., (B.Ed.,) படிப்புகளுக்கு மாற்றாக 4 ஆண்டுகள் பி.எட்., - ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் (ITEP) அறிமுகம் - Integrated Teacher Education Programme (ITEP)...



>>> Click Here to Download Circular of REHABILITATION COUNCIL OF INDIA...



 REHABILITATION COUNCIL OF INDIA 

F.No. 8-A/Policy(Recog)/2009/RCI 

CIRCULAR 

11. January, 2024 

In order to upgrade the competency of teachers, the National Council for Teacher Education (NCTE) has launched the Integrated Teacher Education Programme (ITEP) under the New Education Policy (NEP) 2020 in which the duration of B.Ed. programme has been increased from two years to four years and discontinued giving approval of two years B.Ed. programme from the academic session 2023-24. 


This Council has decided not to grant new approvals to any institutions for running two year B.Ed. (Special Education) programme(s) from the academic session 2024-25. The Council is in the process of developing a new training programme on the pattern of NCTE soon, as per NEP 2020. 


All the institutions/ colleges/ universities who desire to run the Integrated B.Ed. Special Education of 4 year duration (in line of the Integrated Teacher Education Programme - ITEP of NCTE) may apply afresh for the next academic session once the online portal is opened. 


(Vikas Trivedi) 

Member Secretary 

E-mail: rci-depwd@gov.in 

Website : www.rehabcouncil.nic.in



பி.எட்., சிறப்புக்கல்வி பட்டப்படிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-01-2024...



TNOU - பி.எட்., சிறப்புக்கல்வி பட்டப்படிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-01-2024 - B.Ed., Special Education Degree - Last Date to Apply: 20-01-2024...



பி.எட். ஆசிரியர் பயிற்சிக்கு இனி CEO அலுவலக அனுமதி தேவையில்லை - பள்ளிக் கல்வித் துறை நேரடியாக ஒதுக்கீடு செய்யும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) அறிவிப்பு (B.Ed. Teacher training no longer requires CEO office approval – Tamil Nadu Teacher Education University (TNTEU) announced that school education department will make direct allocation)...

 


>>> பி.எட். ஆசிரியர் பயிற்சிக்கு இனி CEO அலுவலக அனுமதி தேவையில்லை - பள்ளிக் கல்வித் துறை நேரடியாக ஒதுக்கீடு செய்யும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) அறிவிப்பு (B.Ed. Teacher training no longer requires CEO office approval – Tamil Nadu Teacher Education University (TNTEU) announced that school education department will make direct allocation)...



தமிழ்நாடு முழுவதிலும் உள்ள B.Ed., கல்லூரிகளுக்கான கட்டணம் குறித்த அறிவிப்பு...



 தமிழகம் முழுவதிலும் உள்ள B.Ed கல்லூரிகளில் 30 ஆயிரத்திற்கு மேல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் கல்லூரிகளில் 26ஆம் தேதி முதல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று கடந்த வாரம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழகத்தில் இயங்கி வரும் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது என தெரிவித்தார்.


அதற்கான விண்ணப்பங்கள் 26-02-2021 முதல் ஆன்லைன் மூலம் பெறப்படுகிறது என்றும் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார். அதேபோல பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை நடக்க உள்ளதை அடுத்து இன்று முதல் அதற்கும் விண்ணப்பங்கள் பெறப்படுவது தொடங்கியுள்ளது. இந்த வகை மாணவர்கள் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.


மேலும் நீதிமன்றத்தீர்ப்பின் அடிப்படையிலும் முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் அமைக்கப்பட்ட கட்டணக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும் B.Ed கல்லூரிகளில் கட்டணமாக ரூ.30 ஆயிரத்துக்கு மேல் வசூலிக்க கூடாது என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சில கல்லூரிகளில் அதையும் மீறி சில அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தவண்ணம் இருக்கிறது. இது குறித்து ஆலோசித்து ரூ.30 ஆயிரத்துக்கு மேல் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.


ஜூன் 24ல் B.Ed., செமஸ்டர் தேர்வு...

 


ஜூன் 24ல் பி.எட்., செமஸ்டர் தேர்வு...


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பொறுப்பு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தன், கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


உயர்கல்வி துறை செயலகத்தில், பல்கலைகளின் துணைவேந்தர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், கடந்த வாரம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், ஆன்லைன் வழி செமஸ்டர் தேர்வு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.


எனவே, 2021 ஜூனில் நடக்கும் செமஸ்டர் தேர்வுகள், வரும், 24ம் தேதி ஆன்லைன் வழியில் நடக்கும். இதில் பங்கேற்க உள்ள நடப்பு கல்வி ஆண்டு மாணவர்கள் மற்றும் அரியர் மாணவர்கள், கல்லுாரிகளில் வழிமுறைகளை தெரிவித்து, தேர்வு கட்டணம் செலுத்தவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால B.Ed படிப்பு தற்காலிக நிறுத்தம் - தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவிப்பு...

 பிஎஸ்சி, பிஏ உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகளை முடித்து, பி.எட். பயிலும் மாணவர்களின் வசதிக்காக பி.ஏ.பி.எட், பிஎஸ்சி.பி.எட் ஆகிய பிரிவுகளில் 4 ஆண்டுகால ஒருங்கிணைந்த படிப்பை 2021-22 கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கென தனியாக தேசிய அளவில் நுழைவுத் தேர்வுநடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, தமிழகத்தில் தனியார் பி.எட். கல்லூரிகள் 4 ஆண்டுகால படிப்பை வரும் கல்வியாண்டு முதல் தொடங்க தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியது.


இந்நிலையில், ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பு தொடங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக என்சிடிஇ அறிவித்துள்ளது. பட்டப் படிப்பு முடித்த பிறகு பி.எட். படிப்பை தனியாக படிப்பதால் ஓராண்டு காலம் கூடுதலாக செலவாகும். இதை தவிர்க்கவே, ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதாக என்சிடிஇ தெரிவித்திருந்தது.


இந்நிலையில், 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது,ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்புக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வை, தற்போது பட்டப் படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களால் எழுத முடியாது என்று கூறப்படுள்ளது. இந்த ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பு 2022-23 கல்வியாண்டில் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




B.Ed பட்ட சான்றிதழ் வினியோகம் துவக்கம்...

 பி.எட்., முடித்த மாணவர்களுக்கான பட்ட சான்றிதழ்களை, பல்கலையில் பெற்றுக் கொள்ள, கல்லுாரி நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.




தமிழகத்தில் செயல்படும், கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., படிப்புகள் நடத்தப் படுகின்றன. இந்த கல்லுாரிகள், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணைப்பில் செயல்படுகின்றன. தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் அங்கீகாரமும், பல்கலையின் இணைப்பு அந்தஸ்தையும் பெற்று, தமிழகம் முழுவதும், 700 கல்வியியல் கல்லுாரிகள் செயல் படுகின்றன. அவற்றில் படிக்கும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட, பி.எட்., - எம்.எட்., மாணவர்களுக்கு மார்ச், 2019ல் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன.



இந்த தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் முடிந்து, தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப் பட்டு விட்டன. இந்நிலையில், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பட்ட சான்றிதழ்கள் வினியோகத்தை, பல்கலை நிர்வாகம் துவங்கியுள்ளது. 



ஒவ்வொரு கல்லுாரியும், தங்கள் நிர்வாகத்தின், அங்கீகார கடிதம் பெற்ற பேராசிரியர் அல்லது அலுவலரை, சென்னையில் உள்ள பல்கலை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி, பட்ட சான்றிதழ்களை பெற்று செல்லும்படி, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...