- கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி பிரதமர் மோடி தனது உரையை துவங்கினார்.
- இந்தியாவில் உருமாறிய ஒமிக்ரான் தொற்று பரவ தொடங்கியுள்ளது.
- ஒமிக்ரான் பரவலைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை - பிரதமர் மோடி
- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
- கைகளை கழுவ வேண்டும்; முகக்கவசம் அணிய வேண்டும்.
- குழந்தைகளுக்காக 90,000 படுக்கைகள், 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளன - பிரதமர் மோடி
- தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதிலும், அதனை மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதிலும் மத்திய அரசு விரைவாக செயல்படுகிறது- பிரதமர் நரேந்திர மோடி.
- மரபணு தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
- நாட்டில் 61% பொதுமக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர்- பிரதமர் மோடி.
- இந்தியாவில் இதுவரை 141 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
- 18 வயதுக்கு மேற்பட்டோரில் 90% பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்- பிரதமர் மோடி.
- முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி.
- நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.
- ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 - 18 வயதுள்ளவர்களுக்கும் தடுப்பூசி
- இந்தியாவில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது-பிரதமர் மோடி அறிவிப்பு.
- ஒமிக்ரான் பரவி வருகிறது. நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
- ஒமிக்ரானை கண்டு பீதியடைய வேண்டாம். எச்சரிக்கையுடன் இருங்கள் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை