ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வெளிநாடு செல்வதற்கு தேவையான தடையின்மைச் சான்றிதழை (NOC), இணையவழியில் விண்ணப்பித்து பெறும் வசதியை உயர் கல்வித் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
The Minister of Higher Education launched the facility of online application for No Obligation Certificate (NOC) for teachers and staff to travel abroad
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசுப் பள்ளி ஆசிரியா்கள் வெளிநாடு செல்ல தடையின்மை சான்று வழங்குவது தொடா்பாக கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசுப் பள்ளி ஆசிரியா்கள் வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு புதுப்பித்தல் நடைமுறைகளுக்கு கல்வித் துறையிடம் தடையின்மைச் சான்று பெற்று சமா்ப்பிக்க வேண்டும். இது தொடா்பாக ஏற்கெனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு, ஏற்பளிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலா்களையே சாா்ந்தது என்பதால் அதன் அடிப்படையில் 2007-இல் வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அதில் தவறுகள், சுணக்கம் ஏற்படுவதைத் தவிா்த்து ‘காவல்துறை கண்காணிப்பாளா், பாதுகாப்புப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை, மருதம் காம்ப்ளக்ஸ், எண்.17, போட் கிளப் சாலை, சென்னை- 600028’ என்ற முகவரியில் செயல்படும் காவல் துறை சிறப்பு பிரிவுக்கு அனுப்பி எவ்வித குறிப்புரையும் நிலுவையில் இல்லை எனச் சான்று பெறப்பட்ட பின்னா் கடவுச்சீட்டு பெற, புதுப்பிக்க தடையின்மைச் சான்று வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள் அனைவரும் வெளிநாடு செல்ல துறைத் தலைவரான பள்ளிக் கல்வி இயக்குநரால் மட்டுமே விடுப்பு அனுமதி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வெளிநாடு செல்வதற்கு தேவையான தடையின்மைச் சான்றிதழை (NOC), இணையவழியில் விண்ணப்பித்து பெறும் வசதியை உயர் கல்வித் துறை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.