கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Pongal Gift லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Pongal Gift லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பொங்கல் பரிசு - 12.01.2024 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பணிநாள் - 16.01.2024 அன்று விடுமுறை...



பொங்கல் பரிசு - நியாய விலைக் கடைகளுக்கு பணிநாள் & விடுமுறை நாள் அறிவிப்பு...


 பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக, 12.01.2024 (வெள்ளிக் கிழமை) அன்று அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பணி நாளாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஈடாக 16.01.2024 (செவ்வாய்க் கிழமை) அன்று அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது...


யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு இல்லை...

 தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்” - மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...



யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு இல்லை...

மாநில அரசு ஊழியர்கள்...

வருமான வரி செலுத்துவோர்...

பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிவோர்...

சர்க்கரை அட்டைதாரர்கள்...

பொருளில்லா அட்டைதாரர்கள்...




குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...



*பொங்கல் பரிசு 1000 ரூபாய்... யாருக்கு கிடைக்கும்.. யாருக்கு கிடைக்காது?


தமிழகத்தில் வரும் தை ஒன்றாம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் யாருக்கெல்லாம் 1000 ரூபாய் ரொக்கம் கிடைக்கும், யாருக்கெல்லாம் 1000 ரூபாய் கிடைக்காது என்பதை பார்ப்போம்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

"தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும், ஏன், மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-ம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.



மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி, சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10-ம் தேதியன்றே, மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.


*யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு கிடைக்கும்:
 முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பார்த்தால் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு ரூ.1000 கிடைக்கும். அதாவது PHH எனப்படும் முன்னுரிமை கார்டுகளுக்கும். PHH - AAY எனப்படும் அந்தோதயா அன்ன யோஜா கார்டுகளுக்கும், அதாவது 35 கிலோ அரிசி வாங்குவோருக்கும் கண்டிப்பாக கிடைக்கும். அதேபோல் NPHH - எனப்படும் முன்னுரிமையற்ற கார்டுகளுக்கும் வழங்கப்படும்.


*யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு கிடைக்காது:
 NPHH-S என்று குறிப்பிட்டிருக்கும் ரேஷன் கார்டுக்கு சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என்பதால் இந்த கார்டுகளுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசு கண்டிப்பாக கிடைக்காது, NPHH-NC ரேஷன் அட்டைதார்கள் எந்த பொருளும் வாங்காதவர்கள் என்பதால் அவர்களுக்கும் 1000 பொங்கல் பரிசு கிடைக்காது. அதேநேரம் NPHH கார்டோ அல்லது PHH கார்டோ, PHH - AAY கார்டிலோ குடும்ப உறுப்பினர்கள் யாராவது அரசு ஊழியராக இருந்தால் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாராவது வருமான வரி கட்டியிருந்தாலோ அந்த குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசான 1000 ரூபாய் கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வருமான வரி கட்டியவர்கள், அரசு ஊழியர்கள் என்றால், உங்கள் ரேஷன் கார்டு காட்டிக் கொடுத்துவிடும். எனவே உங்களுக்கு 1000 ரூபாய் கிடைக்காது.



*முதல் முறை: மகளிர் உரிமை தொகை வழங்கும் பாணியில் தான் 1000 ரூபாய் பொங்கல் பரிசினை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேநேரம் பொங்கல் பரிசு வருமான வரி கட்டுவோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தரப்படாது என்று தனியாக அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட பொங்கலுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் இந்த நடைமுறையில் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்குமே பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் வருமான வரி கட்டுவோர், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு இல்லை என்று அறிவித்திருப்பது இதுவே முதல்முறையாகும். நிதி நெருக்கடி காரணமாக அரசு இவர்களுக்கு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

2023ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக கூட்டுறவு துறையால் வழங்கப்படும் டோக்கனின் மாதிரிகள்(Token Samples issued by Co-operative Department for receiving Pongal Gift Package)...

 2023ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக கூட்டுறவு துறையால் வழங்கப்படும் டோக்கனின் மாதிரிகள்(Token Samples issued by Co-operative Department for receiving Pongal Gift Package)...




பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குதல் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (Presenting Pongal Gift Package - Government of Tamil Nadu Press Release) எண்: 2327, நாள்: 22-12-2022 - பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு (Chief Minister M.K.Stalin Announced that ₹1,000 will be given to family cardholders on the occasion of Pongal)...

 


>>> பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குதல் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (Presenting Pongal Gift Package - Government of Tamil Nadu Press Release) எண்: 2327, நாள்: 22-12-2022...


பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு (Chief Minister M.K.Stalin Announced that ₹1,000 will be given to family cardholders on the occasion of Pongal)...


2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000/-  ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை...


ரூ.1088 கோடி செலவில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 1132, நாள்:17.11.2021...



 ரூ.1088 கோடி செலவில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 1132, நாள்:17.11.2021...


>>> செய்தி வெளியீடு எண்:1132, நாள்:17.11.2021...



20 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு - தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு...


பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்கள் வழங்கப்படும். 


மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, உப்பு, கோதுமை மாவு அடங்கிய துணிப்பை வழங்கப்படும் - முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...