கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Pongal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Pongal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Sale of 3 types of 'Co-operative Pongal' packages containing grocery items at Ration Shops



கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் மளிகை பொருட்கள் அடங்கிய 3 வகையான ‘கூட்டுறவு பொங்கல்’ தொகுப்பு விற்பனை


Sale of 3 types of 'Co-operative Pongal' packages containing grocery items at Co-operative Stores and Fair Price Ration Shops


 ரூ.199, ரூ.499, ரூ.999... - 3 அலகுகளில் ‘கூட்டுறவு பொங்கல்’ தொகுப்பு விற்பனை


கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் மளிகை பொருட்கள் அடங்கிய 3 வகையான பொங்கல் தொகுப்புகளை விற்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.



அரசு கூட்டுறவுத்துறை சார்பில் பண்டிகை காலங்களில், பண்டிகைக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. விலை மலிவாகவும், பொருட்கள் தரமாகவும் இருப்பதால், இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'கூட்டுறவு பொங்கல்' என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புகளை விற்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த தொகுப்புகளில் பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற உள்ளன.



இதுகுறித்து அனைத்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன் அனுப்பியுள்ள செயல்முறை ஆணையில் கூறியிருப்பதாவது: அடுத்த மாதம் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, 'கூட்டுறவு பொங்கல் தொகுப்பு' என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புகளை விற்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது. அவற்றை நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், சுயசேவை பிரிவுகள், நியாயவிலைக் கடைகளில் விற்க வேண்டும்.


ரூ.199 முதல் 999 வரை: இதில் ரூ.199-க்கு 'இனிப்பு பொங்கல் தொகுப்பு' (8 பொருட்கள்), ரூ.499-க்கு 'சிறப்பு கூட்டுறவு பொங்கல் தொகுப்பு' (20 பொருட்கள்), ரூ.999-க்கு 'பெரும் பொங்கல் தொகுப்பு' (35 பொருட்கள்) ஆகிய 3 வகைகளில் பொங்கல் தொகுப்புகள் விற்கப்பட உள்ளன. இத்தொகுப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


14.01.2025 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு "கூட்டுறவு பொங்கல்" என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்க மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை தயார் செய்து தங்கள் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களான நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவை பிரிவுகள், சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ளபடி


இனிப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.199/-க்கும்,


சிறப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.499/-க்கும் மற்றும்


பெரும் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ரூ.999/-க்கும் விற்பனை செய்ய உத்தரவிடப்படுகிறது.


*=> இனிப்பு பொங்கல் தொகுப்பு ரூ.199 :*

* பச்சரிசி (BPT 43) - 500 கிராம்

* பாகு வெல்லம் - 500 கிராம்

* ஏலக்காய் - 5 கிராம்

* முந்திரி - 50 கிராம்

* ஆவின் நெய் - 50 கிராம்

* பாசி பருப்பு - 100 கிராம்

* உலர் திராட்சை - 50 கிராம்

* சிறிய பை - 1

----------------------------


*=> சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499:*

* மஞ்சள் தூள் - 50 கிராம் 

* சர்க்கரை - 500 கிராம்

* துவரம் பருப்பு - 250 கிராம்

* கடலைப் பருப்பு - 100 கிராம்

* பாசிப் பருப்பு - 100 கிராம்

* உளுத்தம் பருப்பு - 250 கிராம்

* கூட்டுறவுப்பு - 1 கிலோ

* நீட்டு மிளகாய் - 250 கிராம்

* தனியா - 250 கிராம்

* புளி - 250 கிராம்

* பொட்டுக் கடலை - 200 கிராம்

* மிளகாய் தூள் - 50 கிராம்

* செக்கு கடலை எண்ணெய் - 1/2 லிட்டர்

* கடுகு - 100 கிராம்

* சீரகம் - 50 கிராம்

* மிளகு - 25 கிராம்

* வெந்தயம் - 100 கிராம்

* சோம்பு - 50 கிராம்

* பெருங்காயம் - 14 கிராம்

* மளிகை பை - 1

----------------------------


*=> பெரும் பொங்கல் தொகுப்பு ரூ.999*

* மஞ்சள் தூள் - 50 கிராம்

* சர்க்கரை - 1/2 கிலோ

* கூட்டுறவுப்பு - 1 கிலோ

* துவரம் பருப்பு - 1/4 கிலோ

* உளுந்தம் பருப்பு - 250 கிராம்

* கடலை பருப்பு - 200 கிராம்

* பச்சை பட்டாணி - 100 கிராம்

* பாசி பருப்பு (சிறுபருப்பு) - 250 கிராம்

* வெள்ளை சுண்டல் - 200 கிராம்

* வேர்க்கடலை - 200 கிராம்

* பொட்டுக்கடலை - 200 கிராம்

* வரமிளகாய் - 250கிராம்

* புளி - 200 கிராம்

* தனியா - 25 கிராம்

* கடுகு - 100 கிராம்

* மிளகு - 50 கிராம்

* சீரகம் - 50 கிராம்

* வெந்தயம் - 100 கிராம்

* சோம்பு - 50 கிராம்

* ஏலக்காய் - 5 கிராம்

* செக்கு கடலை எண்ணெய் - 1/2 லிட்டர்

* வரகு - 500 கிராம்

* சாமை - 500 கிராம்

* திணை - 500 கிராம்

* ரவை - 500 கிராம்

* அவல் - 250 கிராம்

* ராகி மாவு - 500 கிராம்

* கோதுமை மாவு - 500 கிராம்

* ஜவ்வரிசி - 200 கிராம்

* வறுத்த சேமியா - 170 கிராம்

* மல்லி தூள் - 50 கிராம்

* சாம்பார் தூள் - 50 கிராம்

* மிளகாய் தூள் - 50 கிராம்

* பெருங்காயத் தூள் - 25 கிராம்

* பெரிய மளிகை பை - 1

- மேற்குறிப்பிட்ட பெரும் பொங்கல் பெயரில் தொகுப்புடன் விலையில்லாமல் நாட்டு சர்க்கரை 500 கிராம் வழங்கப்படும்.


டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் விழா 03.06.2024 - சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முதல் நாளான 10.06.2024 அன்று இனிப்புப் பொங்கல் வழங்குதல் - சமூக நல ஆணையரின் கடிதம்...


டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் விழா 03.06.2024 - சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முதல் நாளான 10.06.2024 அன்று இனிப்புப் பொங்கல் வழங்குதல் - சமூக நல ஆணையரின் கடிதம், நாள்: 07-06-2024...



>>> சமூக நல ஆணையரின் கடிதம், நாள்: 07-06-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு இல்லை...

 தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்” - மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...



யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு இல்லை...

மாநில அரசு ஊழியர்கள்...

வருமான வரி செலுத்துவோர்...

பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிவோர்...

சர்க்கரை அட்டைதாரர்கள்...

பொருளில்லா அட்டைதாரர்கள்...




குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...



*பொங்கல் பரிசு 1000 ரூபாய்... யாருக்கு கிடைக்கும்.. யாருக்கு கிடைக்காது?


தமிழகத்தில் வரும் தை ஒன்றாம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் யாருக்கெல்லாம் 1000 ரூபாய் ரொக்கம் கிடைக்கும், யாருக்கெல்லாம் 1000 ரூபாய் கிடைக்காது என்பதை பார்ப்போம்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

"தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும், ஏன், மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-ம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.



மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி, சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10-ம் தேதியன்றே, மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.


*யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு கிடைக்கும்:
 முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பார்த்தால் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு ரூ.1000 கிடைக்கும். அதாவது PHH எனப்படும் முன்னுரிமை கார்டுகளுக்கும். PHH - AAY எனப்படும் அந்தோதயா அன்ன யோஜா கார்டுகளுக்கும், அதாவது 35 கிலோ அரிசி வாங்குவோருக்கும் கண்டிப்பாக கிடைக்கும். அதேபோல் NPHH - எனப்படும் முன்னுரிமையற்ற கார்டுகளுக்கும் வழங்கப்படும்.


*யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு கிடைக்காது:
 NPHH-S என்று குறிப்பிட்டிருக்கும் ரேஷன் கார்டுக்கு சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என்பதால் இந்த கார்டுகளுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசு கண்டிப்பாக கிடைக்காது, NPHH-NC ரேஷன் அட்டைதார்கள் எந்த பொருளும் வாங்காதவர்கள் என்பதால் அவர்களுக்கும் 1000 பொங்கல் பரிசு கிடைக்காது. அதேநேரம் NPHH கார்டோ அல்லது PHH கார்டோ, PHH - AAY கார்டிலோ குடும்ப உறுப்பினர்கள் யாராவது அரசு ஊழியராக இருந்தால் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாராவது வருமான வரி கட்டியிருந்தாலோ அந்த குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசான 1000 ரூபாய் கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வருமான வரி கட்டியவர்கள், அரசு ஊழியர்கள் என்றால், உங்கள் ரேஷன் கார்டு காட்டிக் கொடுத்துவிடும். எனவே உங்களுக்கு 1000 ரூபாய் கிடைக்காது.



*முதல் முறை: மகளிர் உரிமை தொகை வழங்கும் பாணியில் தான் 1000 ரூபாய் பொங்கல் பரிசினை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேநேரம் பொங்கல் பரிசு வருமான வரி கட்டுவோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தரப்படாது என்று தனியாக அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட பொங்கலுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் இந்த நடைமுறையில் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்குமே பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் வருமான வரி கட்டுவோர், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு இல்லை என்று அறிவித்திருப்பது இதுவே முதல்முறையாகும். நிதி நெருக்கடி காரணமாக அரசு இவர்களுக்கு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

எங்கே போனது பொங்கல் கொண்டாட்டங்கள்...? (Where did the Pongal celebrations go?)...



 எங்கே போனது பொங்கல் கொண்டாட்டங்கள்...? (Where did the Pongal celebrations go?)...

பொங்கல் இல்லை

பூபறிப்பில்லை

மாடுகன்று இல்லை


சொந்த ஊருக்கு வர வேண்டாம் படித்து பட்டம் பெற்று பதவிக்காக நகரம் சென்ற என் மகனே


தைப் பொங்கல் திருநாளென்றும்

தமிழினத்தின் பெருநாளென்றும்

பொங்கலோப் பொங்கலென்று

பொங்கியெழும் மகிழ்ச்சியென்றும்,


ஆடு மாடு கோழியெல்லாம்

ஆனந்தக் கூத்தாடுமென்றும்

பறவைகளின் பெருங்கூச்சல்

பரவசத்தைக் கொடுக்குமென்றும்,


விதம் விதமாய்க் கற்பனையை

வீணாகச் சுமந்து கொண்டு

பிறந்த ஊரைப் பார்க்க நீ

புறப்படாதே என் மகனே!


அப்படியெல்லாம் இங்கே

அற்புதங்கள் நடப்பதில்லை

பற்பல ஆண்டுகளாய்ப்

பால்பானைப் பொங்கவில்லை!


உன்னை நான் கருத்தரித்தேன்

உயிர்ச் செண்டாய்ப் பெற்றெடுத்தேன்

ஓராயிரங் கதை சொல்லி

உரமூட்டி வளர்த்தெடுத்தேன்!


படி படி என்றுன்னைப்

படுத்திப் படிக்க வைத்தேன்–என்

உழைப்பையெல்லாம் உடையாக்கி

உடுத்தியுன்னை உலவ வைத்தேன்!

நீ வாழ்ந்தால் போதுமென்று

நான் வாழத் தவறிவிட்டேன்–உன்

அப்பனுக்கும் கூடுதலாய்

அரை அடி உயர வைத்தேன்!


பட்டணத்தில் வாழ்வதுதான்

பெருமையென மனந்திரிந்து

பாவி நான்தான் உன்னைப்

பேருந்தில் ஏற்றிவிட்டேன்!


உன்னோடு படித்தவர்கள்

ஊரிலே யாருமில்லை

அப்பன் அழியும் ஊரில்

அவன் பிள்ளை இருப்பதில்லை!


கெட்டுப் பட்டணம் போய்ச்

சேர்ந்தவர்கள் எத்தனைப் பேர்?

பட்டணம் போய்ச் சேர்ந்த பின்னர்

கெட்டவர்கள் எத்தனைப் பேர்?


வயல் வேலை செய்து இங்கே

வாழவே முடியாதென்று

அயல் வேலை செய்வதற்கு

அவனவன் பறந்து விட்டான்!


வெறிச்சோடிப் போய்விட்ட

வேளாண்மைக் கிராமத்தில்

பாற்பொங்கல் பொங்குமெனப்

பகற்கனவு காணாதே!


ஒப்புக்குத் தான் இது

ஊர் போலத் தெரிகிறது

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்

உயிர்க் குமுறல் கேட்கிறது!


வேளாண்குடி மக்களது

வாழ்வறமும் வீரியமும்

பாலைவனம் போலாகிப்

பாழ்பட்டுப் போனதனால்,

ஊருக்குள் ஆங்காங்கே

உயிரொன்று பிரிகிறது!


என்றைக்கோ மூட்டிய

இடுகாட்டுப் பெருநெருப்பு

இன்றைக்கும் கூட

அணையாமல் எரிகிறது!


நெடுநாள் உறவாக

நிலைத்திருந்த விளை நிலங்கள்

வேளாண்மை கசந்து

விற்றுவிட்ட காரணத்தால்

கம்பிவேலிக் காரனுக்குக்

கைமாறிப் போனதடா!


நான்கு தலைமுறையாய்

நமதாக இருந்த நிலம்

பத்திரக் காகிதத்தில்

பெயர் மாறி போனதனால்

பதறிய உன் அப்பன்

பைத்தியமாகிச் செத்தான்!


விரால் மீன் ஏரியென்றும்

வெளிச்சக் கெண்டைக் குளமென்றும்,


குரவை மீன் குட்டையென்றும்

குள்ளக் கெண்டைக் கால்வாயென்றும்,


அயிரை மீன் தாங்கல் என்றும்

ஆரா மீன் சதுப்பு என்றும்,

உளுவையும், நெத்திலியும்

ஊர்ந்து வரும் ஓடையென்றும்,


வாளையும், விலாங்கு மீனும்

வளருகின்ற கண்மாயென்றும்,


அறுபத்தொரு பெயர்களிலே

அமைந்திருந்த நீர் நிலைகள்

அத்தனையும் இன்றைக்கு

அழிந்தொழிந்து போனதனால்,


பாடையிலே வருவதுபோல்

கூடையிலே வருகின்ற

குளிர்ந்துறைந்த கடல்மீனைக்

குழம்பு வைத்துத் திண்கின்றோம்!


ஓடையிலே ஓடிவரும்

உயிர்மீனைப் பறிகொடுத்துக்

கூடை மீன் தேடி நாங்கள்

குறுகிப் போனோமடா!


நீர் நிலைகள் நிரம்பி

நெகிழ்ச்சி தரும் காட்சியாகி

கடை மடையான் வயல்களுக்கும்

கால்வாய் நீர் பாய்கையிலே

எத்தனையோ சுகம் கண்டோம்

எவ்வளவோ விளைய வைத்தோம்!


ஒரேயொரு கால்வாயில்

ஊர்வலம் வரும் நீரில்

ஆங்காங்கே நெற்பயிர்கள்

அன்னையின் பால் குடிக்கும்!


பாம்புக்குத் தவளைகளைப்

பரிசளிக்கும் கால்வாய் நீர்,

எங்களுக்கான மீனை

எங்கெங்கோ ஒளித்து வைக்கும்!


வாய்க்காலின் வரப்புகளில்

வளருகின்ற மரங்களெல்லாம்

கூடுதலாய்ப் பூப்பூத்துக்

கொத்துக் கொத்தாய்ப் பழங்கொடுக்கும்!


வழிநெடுக எம் பெண்கள்

வளை சிணுங்கக் குளிப்பார்கள்,

குளித்து முடித்த பின்னர்

கூந்தலைத் துவட்டிக் கொண்டே

கூடுதலாய்க் குளிர்வதாகக்

கண்சிமிட்டிச் சிரிப்பார்கள்!


மாடுகளும் ஆடுகளும்

மண்டியிட்டு நீர் குடிக்க,

முந்தானை கொண்டே பெண்கள்

மீன் பிடித்துச் சேகரிக்க,


மேட்டு நிலத்துக்காரன்

கொண்டம் கட்டி நீர் தேக்க–அவன்

கால்வாயின் இருபுறமும்‘

காய்கறிகள் விளைந்திருக்க,


வாத்துகளின் கூட்டம்

வரும்நீரை வழிமறித்துப்

பெருங் கூச்சலிட்டுப்

படபடத்து நீர்த் தெளிக்க,


ஒரேயொரு கால்வாயில்

ஒரு நூறு பயன் கண்டு

ஈரமும் நீருமாக,

எங்களது நிலம் மணக்க,

உயிர்கள் அனைத்துக்கும்

உரியது நீர் என்றும்

எல்லோரும் எல்லாமும்

ஏற்பதுதான் வாழ்வென்றும்,


சிந்தித்த நாங்கள் இன்று

சீர்குலைந்து நீர் மறந்து

சொட்டு நீர்ப் பாசனத்தில்

செடி கொடியை வளர்க்கின்றோம்!

ஆற்று நீர்ப் பாசனம்

அருகி மறைந்து வர,

ஏரி நீர்ப் பாசனம்

இனி இல்லை என்றாக,

கண்மாய்ப் பாசனமோ

காணாமற் போய் மறைய,

எந்தப் பாசனத்தால்

எம் பயிரின் உயிர்காப்போம்?

எந்த நீரைக் கொண்டு

எம் உயிரைத் தக்கவைப்போம்?

சொட்டுச் சொட்டாய் வடிகின்ற

சொட்டு நீர்ப் பாசனமும்,

குடம் குடமாய் இரைக்கின்ற

கிணற்று நீர்ப் பாசனமும்,

பயிர் செய்ய ஏதுவான

பாசன முறை என்றால்,


பொதுவான ஏரி நீரைப்

பகிர்ந்து பயிர்செய்த

ஏரிப் பாசனத்தார்

எங்கேதான் போவார்கள்?


எங்களது நீர் நிலையின் 

இடுப்பொடித்துக் காயவிட்டு

இஸ்ரேலைப் பார் என்று

எங்களுக்குச் சொல்கிறார்கள்!


நீர் தேடிப் பறந்து வரும்

நெடுந்தூரப் பறவைகளும்,

நீந்தித் துள்ளியெழும்

நூறுவகை மீனினமும்,

ஏரி நீரில் அமிழ்ந்து

இறுமாந்து கிடந்தெழுந்து

எங்களுக்குப் பால் சுரக்கும்

எருமைக் கூட்டங்களும்

எங்கேயேடா போகும்?

இஸ்ரேல் பிரியர்களே!


நூறடி ஆழத்தில்

நீரை உறிஞ்சுகின்ற

மோட்டாருக்குக் கூட

மூச்சிரைக்கும் நிலை கண்டு

வெட்கித் தலைக் குனிந்து

வேண்டாமென விட்டுவிட்டோம்!


மெல்லிய தோல் அணிந்து

மின்னி மனங்கவரும்

எங்களூர்த் தக்காளியை

எங்கோ மறையவிட்டு

பெங்களூர்த் தக்காளிக்குப்

பழக்கப் பட்டுப் போனோமடா!


போன் செய்தால் வீட்டுக்குப்

புண்ணாக்கு வருமென்று

பெருமையாய்ப் பேசிப்

பணத்தைத் தொலைப்பவனே

கேழ்வரகுக் களியுனக்குக்

கசக்கிறதே ஏனப்பா?


ஓர் ஆண்டுக் கால

உழைப்பிலே உயிர்பெற்று

உலக்கை உலக்கையாக

உற்பத்தியாகுமெங்கள்

ஒரு டன் கரும்பு இங்கே

இரண்டாயிரத் தைந்நூறு!


மூன்று மணி நேரத்துக்கு 

மூன்றாயிரங் கொடுத்து

புதுப்படம் ஒன்றை அங்கே

பார்த்தவர்கள் பல நூறு!


இருவேறு உலகத்து

இயற்கையிது என்றாலும்

அருவருப்பாய் இருக்குதடா– உங்கள்

ஆடம்பரக் கலாசாரம்!


ஒரு கரண்டி மாவெடுத்து

ஒரு தோசை சுட்டு வைத்து

எழுபது எண்பது என்று

ஈட்டுகின்ற திறமையற்று,


மூட்டை மூட்டையாய் நெல்லை

மோசடி விலைக்குப்போடும்

விவரமே தெரியாத

விவசாயிகளப்பா நாங்கள்!

அரிசி மூட்டைக்காரன் அங்கே

அவன் விலைக்கு அவன் விற்பான்–இங்கே

நெல் மூட்டைக் காரனுக்கோ

எவன் எவனோ விலை விதிப்பான்!


யார் யாரோ ஆண்டார்கள் 

எங்களுக்கு விடியவில்லை,

எங்களை நிமிர வைக்க

எழுபதாண்டு போதவில்லை!


எங்களது மாண்புகள்

எல்லாவற்றையும் இழந்து

கிழிந்தும் இழிந்தும் இங்கே

கிடக்கிறோமடா நாங்கள்!


தைப் பொங்கல் திருநாளென்றும்

தமிழினத்தின் பெருநாளென்றும்

பொங்கலோப் பொங்கலென்று

பொங்கியெழும் மகிழ்ச்சியென்றும்


ஆடு மாடு கோழியெல்லாம்

ஆனந்தக் கூத்தாடுமென்றும்

பறவைகளின் பெருங்கூச்சல்

பரவசத்தைக் கொடுக்குமென்றும்

விதம் விதமாய்க் கற்பனையை

வீணாகச் சுமந்து கொண்டு

பிறந்த ஊரைப் பார்க்க நீ

புறப்படாதே என் மகனே!

பெற்றவளையேனும் பார்க்கப்

புறப்பட்டு வருவாயெனில்

வா இங்கு வந்து சேர்!

வந்துவிட்டால் போகாதே!

உன்னோடு படித்தவரை

ஊருக்கு அழைத்துவந்து,

ஒன்றிக் கலந்துவிடு

உன்னுடைய ஊரோடு!

உருக்குலையும் எம் வாழ்வை

உயிர்ப்பிக்கப் போராடு!


*படித்ததில் மனதை கணமாக்கிய வரிகள்*






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி (Pongal greetings from Hon'ble Governor of Tamilnadu)...

 மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி (Pongal greetings from Hon'ble Governor of Tamilnadu)...




மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி (Honorable Chief Minister of Tamil Nadu Mr.M.K.Stalin's greeting message for Tamil people's festival Pongal Thirunal)...



>>> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி (Honorable Chief Minister of Tamil Nadu Mr.M.K.Stalin's greeting message for Tamil people's festival Pongal Thirunal)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி - சட்டை மற்றும் சேலை 12.01.2023 & 13.01.2023 ஆகிய நாட்களில் அணிந்து வர கரூர் மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கை (In order to celebrate Pongal festival properly Tamils ​​should wear traditional clothes like Vetti - shirt and saree on 12.01.2023 & 13.01.2023 - Karur District Collector Circular)...



>>> பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி - சட்டை மற்றும் சேலை 12.01.2023 & 13.01.2023 ஆகிய நாட்களில் அணிந்து வர கரூர் மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கை (In order to celebrate Pongal festival properly Tamils ​​should wear traditional clothes like Vetti - shirt and saree on 12.01.2023 & 13.01.2023 - Karur District Collector Circular)...


14-01-2022 முதல் 18-01-2022 (பொங்கல் முதல் தைப்பூசம்)வரை 5 நாட்கள் விடுமுறை - அரசாணை (1டி) எண்:14, நாள்: 11-01-2022 வெளியீடு (5 days holiday from 14-01-2022 to 18-01-2022 (Pongal to Thaipusam) - G.O. Released)...

 


பொங்கல் விடுமுறையைத் தொடர்ந்து 17-01- 2022 திங்கட்கிழமை அரசு உள்ளூர் விடுமுறை. அதற்கு பதிலாக 29-01-2022 அன்று பணி நாளாக இருக்கும்.


>>> 14-01-2022 முதல் 18-01-2022 (பொங்கல் முதல் தைப்பூசம்)வரை 5 நாட்கள் விடுமுறை - அரசாணை (1டி) எண்:14, நாள்: 11-01-2022 5 days holiday from 14-01-2022 to 18-01-2022 (Pongal to Thaipusam) - G.O.)...


பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 17.01.2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியீடு...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...