கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Reconstitution லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Reconstitution லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

SMC Reconstitution : The number of SMC members to be elected based on the number of parents

 


பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு 2026-2028


 பெற்றோர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 


School Management Committee Reconstitution 2026–2028: The number of SMC members to be elected based on the number of parents.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


SMC Reconstitution 2026 - Observers Formல் கேட்கப்பட்டுள்ள தகவல்கள்

 


SMC Reconstitution 2026 - Observers Google Formல் கேட்கப்பட்டுள்ள தகவல்கள் 


Observers Google Form - Questionnaires - For Reference



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> Google Form Link...



SMC Reconstitution - Observers Form

 

 

பள்ளி மேலாண்மைக்குழு (School Management Committee) மறுகட்டமைப்பு - பார்வையாளர் படிவம் 


SMC Reconstitution - Format for Observers 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


SMC மறு கட்டமைப்பு (12.09.2026) - பள்ளிகளில் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை

 

SMC மறு கட்டமைப்பு (12.09.2026) - பள்ளிகளில் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை


 *நிகழ்விற்கு முன் மேற்கொள்ள வேண்டிய பணிகள்:*


பள்ளி பாடத்திட்டம்

அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை முன்கூட்டியே தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.  

கூட்டம் நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.  

மறுகட்டமைப்புக்குத் தேவையான படிவங்கள் மற்றும் ஆவணங்கள் தயாராக உள்ளதா எனச் சரிபார்க்க வேண்டும்.  

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிக்கு மட்டுமே பார்வையாளராகச் செல்ல வேண்டும்.  



*நிகழ்வின் போது* *மேற்கொள்ள வேண்டிய பணிகள்:*


நிகழ்வு தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகவே ஒதுக்கப்பட்ட பள்ளிக்குச் செல்ல வேண்டும்.  

நிகழ்வு உரிய நேரத்தில் தொடங்க உதவிட வேண்டும் மற்றும் நிகழ்வு முடியும் வரை பள்ளியிலேயே இருக்க வேண்டும்.  

எவ்விதக் குறுக்கீடும் செய்யாமல், நடுநிலையோடு நிகழ்வுகளைக் கவனிக்க வேண்டும்.  

பெண்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட இடஒதுக்கீட்டு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.  

பெற்றோர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், தலைமையாசிரியருக்குச் சார்பற்ற முறையில் தீர்வு காண ஆலோசனை வழங்க வேண்டும்.  



*நிகழ்விற்குப் பின் மேற்கொள்ள வேண்டிய பணிகள்:*


படிவங்கள் 1 முதல் 7 வரையிலான ஆவணங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.  

பார்வையாளர்களுக்கான Google Form அறிக்கையை நிகழ்வு நடைபெறும் அதே நாளில் மாலை 6 மணிக்குள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.


 *கட்டாயம் செய்ய வேண்டியவை:*


அரசு வழிகாட்டுதல்களையும் சுற்றறிக்கைகளையும் முழுமையாகப் பின்பற்றி நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.  

மாணவர் நலன் மற்றும் பள்ளி வளர்ச்சியையே முதன்மையாகக் கொண்டு செயல்பட வேண்டும்.  

ஏதேனும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக மாவட்ட/வட்டாரப் பார்வையாளர் குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.  


*கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:*


தங்களுக்குத் தெரிந்த நபர்களை உறுப்பினராகத் தேர்வு செய்ய தலைமையாசிரியருக்கு அழுத்தம் கொடுப்பதோ பரிந்துரைப்பதோ கூடாது. 

தேர்வு முடிவுகளை மாற்ற முயற்சி செய்யக் கூடாது.  

தலைமையாசிரியரின் மறுகட்டமைப்பு நடைமுறைகளில் தேவையின்றி தலையிடவோ, ஆதாரமற்ற கருத்துக்களைக் கூறவோ கூடாது.  

ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் பார்வையாளராகப் பங்கேற்கக் கூடாது.


SMC Reconstitution | Observers from other departments

 


பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு 2026-2028


 பிற துறைகளிலிருந்து நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள்


School Management Committee Reconstitution 2026–2028: Observers from other departments 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




SMC மறுகட்டமைப்பு - பார்வையாளர்களுக்கான தகவல்கள்

 


பள்ளி மேலாண்மைக்குழு (School Management Committee) மறுகட்டமைப்பு - பார்வையாளர்களுக்கான தகவல்கள் Powerpoint Presentation ( PPT )


SMC Reconstitution – Information for Visitors



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> SMC மறுகட்டமைப்பு தகவல்கள் PPT தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


SMC RECONSTITUTION – CHECKLIST ✅ | Phase 1 | 12.09.2026

 


🌟 *SMC RECONSTITUTION – CHECKLIST* ✅

 *Phase 1 |* *12.09.2026* 


📌 IMPORTANT DOCUMENTS & ACTIVITIES


✅ G.O. No. 143 – SMC Reconstitution Circular

✅ *Form 1* – Attendance

 • Download from EMIS

 • 1–5 students with parents’ details in Excel


✅ *Form 2* – Parent Representative Selection

✅ *Form 3* – Alumni Parent Representative Selection

✅ *Form 4* – Chairperson Selection

✅ *Form 5* – Vice-Chairperson Selection

✅ *Form 6 –* Alumni (General) Selection

✅ *Form 7* – All SMC Members – 24 Members


📸 *EVENT ACTIVITIES* 


✅ *Invitation Letters from Parents* 

✅ *Pledge* 

✅ *Member Certificates* 

✅ *Group Photo* 

✅ *Observers – Google Form* 

✅ *Attendance Updation in EMIS Web Portal* ✅

🌟 *Let’s make Phase 1 a 100% SUCCESS* 💪


SMC மறு கட்டமைப்பு 2026-2028 : சந்தேகங்களும் தீர்வுகளும்


பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு 2026-2028


 சந்தேகங்களும் தீர்வுகளும்


School Management Committee Reconstitution 2026–2028: Doubts and Solutions


* 14 பெற்றோர் உறுப்பினர் தேர்வு செய்தல் (பெண்கள் - 7)


* சுய உதவிக் குழு உறுப்பினர் தேர்வு 


* மூன்று முன்னாள் மாணவர் உறுப்பினர் (பெற்றோர்) தேர்வு செய்தல் - (பெண் -2 முன்னுரிமை )


* ஒரு முன்னாள் மாணவர் (பொது) தேர்வு செய்தல்


* தலைவர் தேர்வு செய்தல் (பெண்)


* துணைத் தலைவர் தேர்வு செய்தல் 


நினைவில் கொள்ள : 


# ஒரு பள்ளியில் தேர்வு செய்யப்பட்ட பெற்றோர் , வேறொரு பள்ளியில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட கூடாது. 


# மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் சூழலுக்கு ஏற்றவாறு SMC உறுப்பினர் எண்ணிக்கையை மாற்றி கொள்ளலாம் 


# உறுப்பினர்களை தேர்வு செய்யும் நிகழ்வில் ஒவ்வொரு முறையும் அனைத்து பெற்றோரும் பங்கேற்கலாம்


# 5-ம் வகுப்பு மாணவரின் பெற்றோரை உறுப்பினராக தேர்வு செய்யக் கூடாது.

# ஆனால், குறைவாக மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் உறுப்பினராக மட்டும் செயல்பட தேர்வு செய்யலாம். 


# துணைத் தலைவரை தேர்வு செய்வதில் தலைவரும் பங்கேற்கலாம்.


# *முன்னாள்  மாணவர் உறுப்பினர்கள்* (பெற்றோர் -3 நபர்கள் ; அதில் 2- பெண்கள் முன்னுரிமை) ஏதாவது ஒரு அரசு பள்ளியில் 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் அவர்களின் பிள்ளைகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் படித்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்தான் முன்னாள் மாணவர் (alumini parent)பெற்றோர் உறுப்பினர் ஆவார்.


#  *முன்னாள் மாணவர் உறுப்பினர் (பொது)*

குறைந்தபட்சம் அதே பள்ளியில் 2 ஆண்டுகள் படித்தவராகவும், அதே குடியறுப்பு பகுதியில் வசிப்பராகவும் இருக்க வேண்டும், ஆனால் பெற்றோராய் இருக்க வேண்டிய தேவை இல்லை.


# 14 பெற்றோர் உறுப்பினரில் ஒருவரே தலைவராகவும், துணைத் தலைவராகவும்  பெற்றோர் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும்.


SMC மறுகட்டமைப்பு முடிந்த அதே நாளிலே EMIS தளத்தில் வருகை பதிவும், புகைப்படமும் பதிவேற்றம் செய்திட வேண்டும். 


நன்றி.


SMC Reconstitution Day - Attendance Marking Procedure

 

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நாள் - வருகைப்பதிவு செய்யும் வழிமுறை 



SMC Reconstitution Day - Attendance Marking Procedure 



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 





School Management Committee Reconstitution Day - Attendance - Demo of Web module


🔐 Login to emis.tnschools.gov.in

🏫 Select *School*

📋 Select *SMC Reconstitution 2026–2028*

👥 Click *Meeting type*

✅ Select correct *Phase* option

 Enter Male & Female Attendance

📸 Upload Group Photo

✅ Click Submit Attendance → Submit



SMC Reconstitution 2026 | Budget & Phase wise school list | SPD Proceedings



2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் மறுகட்டமைப்பு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் உத்தேச செலவினங்களுக்கான நிதி விடுவித்தல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


 SPD Proceedings for the SMC Reconstitution 2026 - Including Budget & Phase wise school list



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை-600 006


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி


அனுப்புநர்


மாநிலத் திட்ட இயக்குநர். 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்

நுங்கம்பாக்கம், சென்னை-06.


பெறுநர் 

முதன்மைக் கல்வி அலுவலர்.

அனைத்து மாவட்டங்கள்.


ந.க.எண்:1338/A11/பமேகு/ஒபக/2026, நாள் : 24.08.2026


பொருள்: பள்ளிக் கல்வித் துறை - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் மறுகட்டமைப்பு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் உத்தேச செலவினங்களுக்கான நிதி விடுவித்தல் சார்பு


பார்வை 1) அரசாணை (நிலை) எண். 144. பள்ளிக் கல்வித் (அகஇ.2) துறை நாள்: 28.06.2024,


2) அரசாணை (நிலை) எண். 143, பள்ளிக் கல்வித் (அக.இ2) துறை நாள்: 19.08.2026.


3) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குதிரின் செயல்முறைகள் நகஎண்: 1338/A11/பமேகு/ஓபக/2026, நாள். 24/08/2026


பார்வை-1இல் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம். 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகள். 2011 அடிப்படையில் அனைத்து வகை அரசு தொடக்கநிலை. நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2024ஆம் ஆண்டில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போதைய உறுப்பினர்களின் பதவிக் காலம் 2026 ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் நிலையில் பார்வை-2இல் கண்டுள்ள


அரசாணையில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்டங்களில் உண்டு உறைவிடப் பள்ளிகள் (NSCBAV/KGBV/பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகள் வனத்துறைப் பள்ளிகள் தவிர ஏனைய அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் 2026ஆம் ஆண்டு செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் 2026-2028ஆம் ஆண்டுகளுக்கனப் பள்ளி மேலாண்மைக் குழுவானது புதிய உறுப்பினர்களைக் கொண்டு மறுகட்டமைப்பு செய்யப்படவுள்ளது.


(அ) பெற்றோர்கள் விழிப்புணர்வுக் கூட்டத்திற்கான வழிகாட்டுதல்கள்:


பார்வை-2இன்படி முதற்கட்டமாக மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்து பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் 29.08.2026, சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும்.


இதன்படி, பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துவது தொடர்பாக பார்வை 2இல் கண்டுள்ள அரசாணை பக்கம் 22 முதல் 25 வரை கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கூட்டத்திற்கான அழைப்பிதழை பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு 27.08.2026 வியாழக்கிழமைக்குள் மாணவர்கள் மூலம், புலனக் குழுச் (வாட்சப்) செய்திகள், துண்டுப் பிரசுரங்கள் மூலமாக தலைமையாசிரியர்கள் அனுப்பி வைக்கவேண்டும்.


மேலும், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தை பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழுவின் தற்போதைய உறுப்பினர்கள். பள்ளி ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள். வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திட வேண்டும்.


ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லாத நேர்வுகளில் அப்பள்ளிகளில் பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் மறுகட்டமைப்பு நிகழ்வுகள் பார்வை-3இல் கண்டுள்ள மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டும்.


இந்த விழிப்புணர்வு கூட்டதில் பங்கேற்கும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரது வருகை பதிவு விவரத்தினை பெற்றோர் கூட்டம்


நடைபெறும் 29.08.2026 அன்று பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி தலைமையாசிரியர் தவறாது பதிவு செய்ய வேண்டும்.


Login to School Login https://emis.tnschools.gov.in


Select "School" Tab


Select "SMC Reconstitution 2026-2028" Module


Select Meeting Type "Parents Awareness meeting attendance"


விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்கும் ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை பதிவிட வேண்டும்.


விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றவர்களின் குழு புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


இறுதியாக Submit Attendance தேர்வு செய்தவுடன் பதிவு செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் பங்கேறப்பாளர்களின் எண்ணிக்கையுடன் மொத்த பங்கேறப்பாளர்கள் எண்ணிக்கை காண்பிக்கப்படும். அதனை சரிபார்த்து சரியாக இருப்பின் மீண்டும் Submit தேர்வு செய்தவுடன் தங்கள் பள்ளியின் பள்ளிமேலாண்மைக் குழு விழிப்புணர்வு கூட்டதில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உறுதிசெய்யப்படும்.


பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்துவகை அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்களுடைய பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்பதை உறுதிசெய்திட அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (ஆ) பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வு பின்பற்ற வேண்டிய அட்டவணை


பார்வை-2இல் கண்டுள்ள அரசாணையின்படி மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை அரசாணை வழிகாட்டு நெறிமுறைகள் பக்கம் 4, பத்தி x இல் உள்ள முன்மொழியப்பட்ட கால அட்டவணையில் உள்ளவாறு நடத்திட அனைத்து வகைப் அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEO) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


SMC Reconstitution 2026-2028 Meeting Formats

 


பள்ளி மேலாண்மை குழு (SMC) மறு கட்டமைப்பு 2026-2028  கூட்டம் | அனைத்து படிவங்கள் தொகுப்பு


School Management Committee Reconstitution 2026-2028 Meeting Formats



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


SMC மறுகட்டமைப்பு 2026-2028 பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் Banner Model

 


பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு 2026-2028 பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் Banner Model


School Management Committee Reconstitution 2026-2028 Parents Awareness Meeting Banner Model


Sir / Madam,


Please note that the banner design is common for both the Parents Awareness Meeting and SMC Reconstitution Day. The School Name and Date may be changed accordingly.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





SMC Reconstitution பெற்றோர் விழிப்புணர்வு கூட்டத்தில் செய்ய வேண்டியவை


பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டத்தில் செய்ய வேண்டியவை





SMC மறுகட்டமைப்பு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய 24 உறுப்பினர்கள் குறித்த தகவல்

 

செப்டம்பர் மாதம் நடைபெறும் மறுகட்டமைப்பு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள 24 உறுப்பினர்கள் யார் யார் என்ற விபரம்



SMC Parents Awareness Meeting குறித்து CEO தகவல்

 


SMC Parents Awareness Meeting குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் CEO தகவல்


அனைவருக்கும் வணக்கம்.


*தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கான பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் தொடர்பான சுற்றறிக்கை* 


 முதற்கட்டமாக மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்து பெற்றோருக்கான விழிப்புணர்வுக் கூட்டம் 29.08.2026, *சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை* அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும்.


இதன்படி, பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துவது தொடர்பாக *பார்வை-2இல் கண்டுள்ள அரசாணை பக்கம் 22 முதல் 25 வரை* கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி *கூட்டத்திற்கான அழைப்பிதழை* பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு 27.08.2026 வியாழக்கிழமைக்குள்ளாக மாணவர்கள் மூலம், 

*புலனக் குழுச் (வாட்ஸ்அப்) செய்திகள், துண்டுப் பிரசுரங்கள்* மூலமாக தலைமையாசிரியர்கள் அனுப்பி வைக்கவேண்டும்.



மேலும், பெற்றோர்களுக்கான *விழிப்புணர்வுக் கூட்டத்தை பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில்* பள்ளி மேலாண்மைக் குழுவின் தற்போதைய உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திட வேண்டும்.


இந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் *பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரது வருகை பதிவு விவரத்தினை* பெற்றோர் கூட்டம் நடைபெறும் 29.08.2026 அன்று பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி தலைமையாசிரியர் தவறாது பதிவு செய்ய வேண்டும்.


*Login to School Login - https://emis.tnschools.gov.in*


*Select "School" Tab*


*Select "SMC Reconstitution 2026-2028" Module*


*Select Meeting Type - "Parents Awareness meeting attendance*


"விழிப்புணர்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை பதிவிட வேண்டும்.

விழிப்புணர்வுக் கூட்டத்தில் *பங்கேற்றவர்களின் குழு புகைப்படத்தை* பதிவேற்றம் செய்ய வேண்டும்.இறுதியாக *'Submit Attendance'* தேர்வு செய்தவுடன் *பதிவு செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்களின்* எண்ணிக்கையுடன் *மொத்த பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை* காண்பிக்கப்படும். 

அதனை சரிபார்த்து சரியாக இருப்பின் *மீண்டும் 'Submit'* தேர்வு செய்தவுடன் தங்கள் பள்ளியின் பள்ளிமேலாண்மைக் குழு விழிப்புணர்வுக் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உறுதிசெய்யப்படும்.


*முதன்மை கல்வி அலுவலர் தஞ்சாவூர்*


SMC Awareness Meeting Attendance Update



பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 2026-2028


பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மறு கட்டமைப்பு நாள் வருகைப்பதிவு செய்யும் வழிமுறை


Attendance - Demo of Web module


📌 EMIS – SMC Parents Awareness Meeting Attendance Update

🔐 Login to emis.tnschools.gov.in

🏫 Select School

📋 Select SMC Reconstitution 2026–2028

👥 Select Parents Awareness Meeting Attendance

👨‍👩‍👧 Enter Male & Female Attendance

📸 Upload Group Photo

✅ Click Submit Attendance → Submit



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




Reconstitution of SMCs for 2026-2028 : Guidelines for conducting a parent awareness meeting on 29.08.2026 (Saturday) – SPD Proceedings




 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் - பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல் 29.08.2026 (சனிக்கிழமை) வழிகாட்டுதல்கள் வழங்குதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


Reconstitution of School Management Committees for the years 2026–2028 : Guidelines for conducting a parent awareness meeting on 29.08.2026 (Saturday) – Proceedings of the State Project Director


மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை-600 006 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி


மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


ந.க. எண். : 1338/A11/பமேகு/ஒபக/2026, நாள். 24/08/2026


பொருள்:


பள்ளிக் கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் - பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல் 29.08.2026 (சனிக்கிழமை) வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு.


பார்வை:


(1) அரசாணை (நிலை) எண்.144, நாள்: 28.06.2024, பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை.


(2) அரசாணை (நிலை) எண். 143, நாள்: 19.08.2026, பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை.


பார்வை-1இல் காணும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி 2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவானது கடந்த 2024 ஆகஸட் மாதம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு உறுப்பினர்களின் பதவிக் காலம் 2026 ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவானது புதிய உறுப்பினர்களைக் கொண்டு மறுகட்டமைப்பு செய்யப்படவுள்ளது.


பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம்


பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகளில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் முழுமையாகப் பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில் 2026-2028ஆம் ஆண்டுகளுக்கானப் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் சார்ந்து பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் 29.08.2026, சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும்


1


பார்வை-2இல் காணும் அரசாணையில் பக்கம்-22இல் கண்டுள்ள "மறுகட்டமைப்பு நாளுக்கு முன்னதாக செய்ய வேண்டியவை" தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திடவும்,


மேலும், பார்வை-2இல் கண்டுள்ள அரசாணையின்படி மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை அரசாணை வழிகாட்டு நெறிமுறைகள் பக்கம் 9-இல் உள்ள கால அட்டவணைக்கு மாற்றாக, பக்கம் 4, பத்தி x.-இல் உள்ள முன்மொழியப்பட்ட கால அட்டவணையில் உள்ளவாறு நடத்திட அனைத்து வகைப் அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEO) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



>>> செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





boAt Wave Call 3 Smartwatch 1.83” HD Display with Animated Watch Faces; BT Calling, Functional Crown, Multiple Sports Modes, IP68, HR, SpO2 Monitor, Smart Watches for Men & Women (Timber Brown)


https://link.amazon/B0c7XR0xj

SMC Reconstitution 2026-2028 Meeting Forms



பள்ளி மேலாண்மை குழு (SMC) மறு கட்டமைப்பு 2026-2028  கூட்ட படிவங்கள்


School Management Committee Reconstitution 2026-2028 Meeting Formats



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




Nylon 55 litres Waterproof Strolley Duffle Bag- 2 Wheels - Luggage Bag


https://link.amazon/B0aFpFHUq

SMC Reconstitution Awareness Meeting Invitation

 


SMC Reconstitution Invitation 


பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு : பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் அழைப்பிதழ் 


School Management Committee Reconstitution : Invitation to an Awareness Meeting for Parents



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





EXIDE INVA Master IMTT2200 220Ah 12V Tall Tubular Inverter Battery | Ideal for Home, Office & Shops | Long Backup & Low Maintenance | Leak Resistant | 60 Months Warranty


https://link.amazon/B03b5bJg4



Reconstitution of SMCs (2026–2028): பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்துதல் குறித்த வழிகாட்டுதல்கள்

 


பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு 2026-2028 : பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்துதல் குறித்த வழிகாட்டுதல்கள்


Reconstitution of School Management Committees (2026–2028): Guidelines for Conducting Awareness Meetings for Parents



அனைவருக்கும் வணக்கம் 


அனைத்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு


 பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு 2026-2028


👉பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் 29.8.2026 அன்று நடைபெறுதல்.


👉 விழிப்புணர்வு கூட்டம் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்வுகள் வெளிப்படைத்தன்மையுடனும் பெற்றோர்களின் முழுமையான பங்கேற்புடனும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும் வகையில் பெற்றோர்கள் விழிப்புணர்வு கூட்டமானது பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து அரசு பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும். 


👉 👉பெற்றோர்களுக்கான அழைப்பு /தகவல் தெரிவித்தல்.


1. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மூலம் அவரிடம் பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைக்க வேண்டும் 


2. Whatsapp செய்திகள் மூலம் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நடைபெறுவதை குறித்து பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் 


3. தற்போதைய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மூலமாகவும் அனைத்து பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் 


4. விழிப்புணர்வு கூட்டம் அழைப்பிதழை பெற்றோர்கள் உள்ளிட்ட உள்ளூர் மக்கள் அணுக கூடிய முக்கிய இடங்களான ரேஷன் கடை ஊராட்சி நகராட்சி பேரூராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள் சமுதாயக்கூடம் மற்றும் மின் கட்டணம் செலுத்தும் மின்வாரிய அலுவலகம் முன்பாக பார்வையில் படும்படியாக வைக்கலாம்.


👉கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் பள்ளி தலைமையாசிரியர் மேற்கொள்ள வேண்டும்


👉 பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் நடத்தும் வழிமுறைகள் அரசாணையின்படி முறையாக பின்பற்றப்பட வேண்டும்.




Xiaomi Power Bank 4i 20000mAh 33W Super Fast Charging PD 


https://link.amazon/B0ik5kVpv


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வெள்ளி முலாம் பூசிய ஈய பாத்திரம் TAPS : CPS ஒழிப்பு இயக்கம்

வெள்ளி முலாம் பூசிய ஈய பாத்திரம் TAPS : CPS ஒழிப்பு இயக்கம் CPS ஒழிப்பு இயக்கம் *_மாநில மையம்_* ________________________ *வெள்ளி முலாம் பூசி...