2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள்‌ - பெற்றோர்‌ விழிப்புணர்வுக்‌ கூட்டம் நடத்துதல் மற்றும் மறு கட்டமைப்பு நிகழ்வுகள் சார்ந்த வழிகாட்டுதல்களில திருத்தங்கள்‌ - மாநிலத்‌ திட்ட இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 1842/A11 /பமேகு/ஒபக/2024, நாள்‌. 16/07/2024...

 



2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள்‌ - பெற்றோர்‌ விழிப்புணர்வுக்‌ கூட்டம் நடத்துதல் மற்றும் மறு கட்டமைப்பு நிகழ்வுகள் சார்ந்த வழிகாட்டுதல்களில திருத்தங்கள்‌ - மாநிலத்‌ திட்ட இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 1342/A11 /பமேகு/ஒபக/2024, நாள்‌. 16/07/2024...



>>> மாநிலத்‌ திட்ட இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 1342/A11 /பமேகு/ஒபக/2024, நாள்‌. 16/07/2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> SMC மறு கட்டமைப்பு - பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் - SPD செயல்முறைகள், நாள்: 12-07-2024...



>>> SMC மறுகட்டமைப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை எண்: 144 வெளியீடு...




 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாநில திட்ட இயக்குநரின் திருத்தப்பட்ட SMC செயல்முறைகள் - பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் (2.8.24 வெள்ளி 10மணி 1மணி வரை)

Revised Proceedings - SMC Parents Meeting & Reconstitution Schedule-reg - SPD Proceedings




மாநிலத்‌ திட்ட இயக்ககம்‌, சென்னை-600 006

ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநிலத்‌ திட்ட இயக்குநரின்‌ செயல்முறைகள்‌


ந.க.எண்‌: 1842/A11 /பமேகு/ஒபக/2024, நாள்‌. 16/07/2024


பொருள்‌: ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி-பள்ளி மேலாண்மைக்‌ குழு - 2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள்‌ - பெற்றோர்‌ விழிப்புணர்வுக்‌ கூட்டம் நடத்துதல் மற்றும் மறு கட்டமைப்பு நிகழ்வுகள் சார்ந்த வழிகாட்டுதல்களில திருத்தங்கள்‌: சார்பு


பார்வை: 1) அரசாணை (நிலை) எண்‌.144, நாள்‌: 28.06.2024, பள்ளிக்‌ கல்வித்‌ (அ௧இ 2) துறை.


2) மாநிலத்‌ திட்ட இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 1342/A11/பமேகு/ஒபக/2024, நாள்‌.12/07/2024


பார்வை-2ல்‌ காணும்‌ 12/07/2024 செயல்முறைகளில்‌ வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில்‌ கீழ்கண்டவாறு திருத்தங்கள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளது.


1) பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு குறித்துப்‌ பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்‌ நடத்துதல்‌:


02.08.2024, வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல்‌ மதியம்‌ 01.00 மணி வரை பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக்‌ கூட்டம்‌ நடத்திடவும்‌, கூட்ட அழைப்பினை பள்ளியில்‌ படிக்கும்‌ மாணவர்களின்‌ பெற்றோர்களுக்கு புலனக்‌ குழுச்‌ (வாட்சப்‌) செய்திகள்‌, துண்டுப்‌ பிரசுரங்கள்‌ அல்லது பள்ளியில்‌ படிக்கும்‌ மாணவர்கள்‌ மூலமாக பார்வை-1இல்‌ காண்‌ அரசாணை பக்கம்‌ 17 மற்றும்‌ 18, வரிசை-4-ன்‌ கீழ்‌ கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி 31.07.2024, புதன்கிழமைக்குள்‌ பெற்றோர்களுக்கு அழைப்புவிடுக்க அனைத்து அரசுப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடவும்‌, 


மேலும்‌, முன்னேற்பாடாகப்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு நிகழ்வன்று தலைமையாசிரியர்கள்‌ மேற்கொள்ள வேண்டிய பணிகள்‌ குறித்துப்‌ பார்வை-1இல் காண்‌ அரசாணை பக்கம்‌ 22 மற்றும்‌ 23, வரிசை-6-ல்‌ கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப்‌ பின்பற்றிப்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகளைச்‌ சிறப்பாக நடத்திட உரிய முன்தயாரிப்புப்‌ பணிகளை மேற்கொள்ள அனைத்து வகை அரசுப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்களுக்கும்‌ அறிவுறுத்திடுமாறு முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.


2) மாவட்ட ஆட்சியர்களுக்கான வழிகாட்டுதல்கள்‌:

பார்வை-1-இல் காண்‌ அரசாணை பக்கம்‌ 21, வரிசை-5-ன்‌ கீழ்‌ மாவட்ட ஆட்சியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்‌ விரிவாகக்‌ கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட அளவில்‌ துறைசார்‌ அலுவலர்களுடனான திட்டமிடல்‌, பார்வையாளர்களை நியமித்துப்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழு மற்றும்‌ மறுகட்டமைப்பு நடைமுறை நிகழ்வுகள்‌ குறித்துப்‌ பயிற்சியளிப்பது, பார்வையாளராகப்‌ பங்கேற்க அறிவுறுத்துவது, உறுப்பினர்கள்‌ தேர்வு செய்வதில்‌ சிக்கல்கள்‌ இருப்பதாகக்‌ கருதப்படும்‌ நேர்வுகளில்‌ உயர்‌ அலுவலர்‌ நிலையில்‌ உள்ள அலுவலர்‌ ஒருவரை மேற்பார்வையாளராக நியமிப்பது மற்றும்‌ மாவட்ட மக்கள்‌ தொடர்பு மையம்‌ மூலம்‌ மக்களிடையே பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு நிகழ்வு குறித்த விழிப்புணர்வுப்‌ பிரச்சார நிகழ்வுகளை நடத்துவது என மேற்காண்‌ அரசாணையில்‌ உள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி மாவட்ட ஆட்சியர்‌ தலைமையில்‌ செயல்படுத்திடக்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறது.

3) பள்ளிமேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு நிகழ்வு - திருத்தப்பட்ட கால அட்டவணை: 

பார்வை-1இல்‌ காண்‌ அரசாணையின்படி மாநிலம்‌ தழுவிய பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை கீழ்க்காண்‌ திருத்தப்பட்ட கால அட்டவணையில்‌ உள்ளவாறு நடத்திட அனைத்து வகை அரசுப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்களுக்கும்‌ அறிவுறுத்திடுமாறு முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.


1) முதல்‌ 50% தொடக்கப்‌ பள்ளிகள்‌ -- 10.08.2024, சனிக்கிழமை
2) மீதமுள்ள 50% தொடக்கப்‌ பள்ளிகள்‌- 17.08.2024, சனிக்கிழமை
3) உயர்நிலை, மேல்நிலைப்‌ பள்ளிகள்‌ -- 24.08.2024, சனிக்கிழமை
4) நடுநிலைப்‌ பள்ளிகள்‌ - 31.08.2024, சனிக்கிழமை

மாநிலத்‌ திட்ட இயக்குநருக்காக

பெறுநர்‌: 
(1) மாவட்ட ஆட்சியர்கள்‌

(2) முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌
அனைத்து மாவட்டங்கள்‌



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...