இடுகைகள்

Smart Card லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிய நியமனம், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திறன் அட்டைகள் (Smart Card) வழங்க விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு...

படம்
  புதிய நியமனம், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திறன் அட்டைகள் (Smart Card) வழங்க விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 029/ எப்/ இ2/ 2021, நாள்: 12-02-2021... >>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 029/ எப்/ இ2/ 2021, நாள்: 12-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

ஆசிரியர்கள் அனைவருக்கும் இனி ஸ்மார்ட் கார்ட் கட்டாயம் - தமிழக அரசு...

படம்
 தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு கியூஆர் கோடு வசதியுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக, எமிஸ் என்ற இணையதளம் மூலம், பெயர், முகவரி, ரத்த வகை, புகைப்படம் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன. அதன்படி ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர், ஆசிரியல்லா பணியாளர் என 24 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளன. தற்போது முதல்கட்டமாக, 12 ஆயிரத்து , 901 கார்டுகள் தயார் நிலையில் உள்ளது. அதனை மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மூலம், அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறக்கும் போது, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வரும்போது, ஸ்மார்ட் கார்ட்டை கட்டாயம் அணிந்து வரவேண்டும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

அனைத்து ஆசிரியர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் (SMART CARD) உடனடியாக வழங்குதல் - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்...

படம்
 பள்ளிக் கல்வித் துறை - மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் (2019-20) - அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் (Smart Card)வழங்குதல் முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கான திறன் அட்டைகள் அச்சிடும் பணிகள் நிறைவுப் பெற்று 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 034333/ எப்/ இ2/ 2019, நாள்: 10-12-2020... >>> பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...