கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Police லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Police லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

G.O.(Ms) No.458, Dated:02.08.2024 - Smart Identity Card to the Police Personnel up to the rank of inspector of Police while travelling in Government Transport Buses on official duties with in the district jurisdiction


 "காவலர் முதல் ஆய்வாளர் "வரை அவர்கள் பணிபுரியும் மாவட்டத்திற்குள் பேருந்தில் பயணம் செய்ய புதிய அடையாள அட்டை - தமிழ்நாடு அரசு அரசாணை G.O. Ms. No.458, Dated: 02-08-2024 வெளியீடு


Home Department - Issuance of Smart Identity Card to the Police Personnel up to the rank of inspector of Police while travelling in Government Transport Buses on official duties with in the district jurisdiction - Announcement made by the Hon'ble Chief Minister on the Floor of Assembly on 13.09.2021 - sanction of funds for a sum of Rs.29,96,80,800 -Orders- Issued.

Home (Pollce XI ) Department

G.O.(Ms) No.458, Dated:02.08.2024


From the Director General of Police / Head of Police Force,Tamll Nadu, Chennal, letter. Rc.No.C.Bil-3/8490/2021, dated 28.05.2024.


ORDER

The Hon'ble Chief Minister of Tamil Nadu during the Police Demand has made among others the following announcement.on the floor of the Legislative Assembly on 13.09.2021.

Announcement No. 20





கடந்த 2021 ஆம் ஆண்டு காவல்துறை மானிய கோரிக்கையின் போது, முதல்வர் ஸ்டாலின், ‘போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்’ வரை தங்கள் அடையாள அட்டையை காட்டி, அரசு பஸ்களில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள்,கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் நடைமுறைப்படுத்தாமல் இருந்ததை அடுத்து, தற்பொழுது அரசு பஸ்சில் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை உள்ளவர்களுக்கு, கட்டணமின்றி பயணம் செய்வதற்கான, ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்திற்கான அரசாணை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை எந்த முன்னேற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை, அரசு பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்வதற்கு, ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க, மாவட்ட எஸ்.பி.,க்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

போலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது தொடர்பாக டிசம்பர் 16-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு பேருந்தில் போலீஸார் அலுவல் ரீதியாக பயணம் செய்வதற்கு எந்தவொரு அடையாள அட்டையும் வழங்கப்படாமல் இருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக, அரசு பேருந்து நடத்துநர்களுக்கும்,போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம், மோதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.


இதை கருத்தில் கொண்டு, அரசு பேருந்துகளில் மாவட்டத்துக்குள் பயணம் செய்யும் வகையில் காவலர் முதல் ஆய்வாளர் வரை நவீன அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் 3,191 ஆய்வாளர்கள், 8,245 உதவி ஆய்வாளர்கள், 1,13,251 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், இரண்டாம் நிலைக் காவலர்கள் என மொத்தம் 1,24,867 பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.29.96 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில் ஒரு மாதத்துக்கு ரூ.2.49 கோடி செலவிடப்படுகிறது. காவலர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு மூலம் நகர பேருந்துகள், புறநகர் பேருந்துகள் ஆகியவற்றில் பயணம் செய்யலாம். ஏசி பேருந்துகளிலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் ஸ்மார்ட் கார்டு மூலம் பயணம் செய்ய அனுமதி கிடையாது.


சொந்த மாவட்டத்துக்குள் மட்டும் ஸ்மார்ட் கார்டு மூலம் காவலர் பயணிக்கலாம். வாரன்ட் உத்தரவு நடவடிக்கைக்கு செல்லும் போலீஸார், மாநிலம் முழுவதும் பயணம் செய்யலாம். இந்த திட்டத்தின்படி ஒரு காவலருக்கு மாதத்துக்கு ரூ.200 ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலும், திட்டம் தொடர்பான விவரங்களை அறிக்கை மூலம் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அறிவுறுத்தி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

காவல்துறையினர் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது தங்களுடைய அடையாள அட்டைகளை காட்டிய இதுவரை பயணித்து வந்த நிலையில் தற்பொழுது இவர்களுக்காக ஸ்மார்ட் கார்டு திட்டம் 2021 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டமானது செயல்படாமல் இருந்த நிலையில் அதனை தற்போது செயல்படுத்த டி ஜி பி அவர்கள் உத்தரவிட்டிருப்பது காவல்துறையினரிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு தகுதியானவர்களை கண்டறிந்து டிசம்பர் 16-ம் தேதிக்குள் நிலை அறிக்கையை அனுப்பும்படி அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அரசு வாகனங்களை வைத்திருக்கும் போலீஸார், ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்கு தகுதியானவர்கள் கிடையாது என்றும் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.

2,153 Police Personnel transferred in one day - DGP orders





தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 2,153 காவலர்கள் பணியிடமாற்றம் - டிஜிபி உத்தரவு


தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்தனர். மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு அளித்துள்ளார்.


தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 2,153 காவலர்கள் பணியிடமாற்றம் – டிஜிபி உத்தரவு


முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் அளித்த மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


காவலர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர்களுக்கு பணியிட மாற்றத்துக்கான படி தொகை வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டு பிரிவின் கீழ் சேர்ந்த காவலர்கள், 3 ஆண்டுகால சேவையை நிறைவு செய்யாவிடில் அவர்களை விடுவிக்க வேண்டாம் என்று துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.


மேலும், துறைரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருப்பவர்களையும் விடுவிக்க வேண்டாம் என்று டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார். பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்களில் யாரேனும் கடந்த ஓராண்டில் நிர்வாகக் காரணங்களால் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தாலும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.


தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு அளித்துள்ளார்.


இது தொடர்பான அறிக்கையில், ” இரண்டாயிரத்து ஐம்பத்து மூன்று (2153) காவலர்கள், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மாற்றப்பட்டு, அவர்களின் கோரிக்கையின் பேரில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிடப்பட்டுள்ளபடி நகரங்கள், மாவட்டங்களுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்கள், அதற்கேற்ப தேவையான உத்தரவுகளை பிறப்பித்து, நிவாரணம் மற்றும் தனிநபர்கள் சேர்ந்த தேதியை உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


காவலர்களுக்கு ஏதேனும் பாதகமான அறிவிப்பு வந்தாலோ அல்லது அவர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலோ அல்லது அவர்கள் மீது சிந்தனையின் கீழ் இருந்தாலோ அவர்களை விடுவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மேலும், இந்த இடமாற்ற உத்தரவின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தனிநபர்கள் எவரேனும் கடந்த ஓராண்டில் நிர்வாகக் காரணங்களுக்காக முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தால், அவர்களின் நிவாரணத்திற்காக, மேலதிக அறிவுறுத்தல்களுக்காக, தலைமை அலுவலகத்திற்கு உண்மையைத் தெரிவிக்கலாம்.


குறிப்பு : இந்த இடமாற்றங்கள் தனிநபர்களின் கோரிக்கையின் பேரில் மட்டுமே உத்தரவிடப்படுகின்றன. எனவே ரத்து செய்வதற்கான கோரிக்கை பரிசீலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Rc.No.A-40/NGB III(1)/184/2024

Transfer Order:06/2024

Date:09.11.2024

Office of the Director General of Police &

Head of the Police Force,

Tamil Nadu, Chennai-04.


TRANSFER ORDER

Sub: Police - Establishment - Transfer and Postings of Police Personnel from one City /District to another City / District on their request- Orders Issued.

*****

Two thousand hundred and fifty three (2153) Police Personnel, whose name mentioned in the Annexure - I are transferred and posted to the Cities/Districts as noted against each on their request. They are not entitled for any TTA.

2. The Unit Officers concerned are requested to issue necessary orders accordingly

and inform the date of relief and joining of the individuals immediately to Chief Office.

3. If any of the individual was posted on sports cluster, they shall not be relieved before completion of 03 years in the unit where they are now serving. If any of the individual is coming under sports cluster the fact may be informed to Chief Office before their relief for further instructions.

4. It is also requested not to relieve the Police Personnel, if they have come to any adverse notice or departmental action has been initiated or under contemplation against them, and if so, inform the same to Chief Office immediately for further instructions.

5. Further, if any of the individual mentioned in Annexure - I to this transfer order was transferred previously on administrative grounds during the past one year, the fact may be informed to Chief Office for further instructions, for their relief. Similarly, if any of the police personnel mentioned in Annexure-I were already transferred to any special units from the present unit noted against them, then they may not be relieved to the District / City to which they are now posted in this order. Their details may be informed to Chief Office for further instructions and also to the special unit to which they are transferred.

6. These transfers are ordered only on the request of the individuals. Hence request for cancellation will not be considered.

Encl: As above

To

All Commissioners of Police in Cities.

All Superintendents of Police in Districts.

The Superintendent of Police, Railways, Trichy and Chennai.

Copy to: All Inspectors General of Police in Zones.

Copy to: All Deputy Inspectors General of Police in Ranges.


தமிழ்நாடு காவல்துறையில் 18 இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு...




 தமிழ்நாடு காவல்துறையில் 18 ஐ.பி.எஸ். அலுவலர்கள் பணியிட மாற்றம்...


சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் இருவரும் பணியிட மாற்றம்...


சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (வடக்கு) அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு நரேந்திரன் நாயர் நியமனம்


சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு கண்ணன் நியமனம்


தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமனம்


வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு அஸ்ரா கர்க் நியமனம்


தெற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஆளிநர்கள் மற்றும் சிறப்பு இலக்கு படை ஆளிநர்கள் பணிபுரியும் பொழுது உயிரிழப்பு / உடல் ஊனம் / காயம் ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத்தொகை உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு...


 தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஆளிநர்கள் மற்றும் சிறப்பு இலக்கு படை ஆளிநர்கள் பணிபுரியும் பொழுது உயிரிழப்பு / உடல் ஊனம் / காயம் ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத்தொகை உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு...


ஏழு இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள்...


காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் அறிவிப்புகள் - 2024-2025...


Announcements of Police, Fire and Rescue Services Department - 2024-2025 - Tamil Version




>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




தமிழ்நாட்டில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தும், 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், தமிழ்நாடு அரசு உத்தரவு - HOME (SC) DEPARTMENT - Police Note No.SC/01/2024, Dated: 07.01.2024...



தமிழ்நாட்டில் 16 IPS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தும், 32 IPS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், தமிழ்நாடு அரசு உத்தரவு - HOME (SC) DEPARTMENT - Police Note No.SC/01/2024,  Dated: 07.01.2024.......



>>> Click Here to Download - HOME (SC) DEPARTMENT - Police Note No.SC/01/2024,  Dated: 07.01.2024...




*சென்னை மேற்கு பகுதி இணை ஆணையராக விஜயகுமார் ஐபிஎஸ் நியமனம்.*


*விருதுநகர் மாவட்ட எஸ்பியாக ஃபெரோஸ் கான் அப்துல்லா நியமனம்.*


*ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக சந்தீஸ் நியமனம்.*


*ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரை கிருஷ்ணகிரி எஸ்.பியாக பணியிடமாற்றம்.*


*மதுரை எஸ்.பி சிவபிரசாத் தேனி எஸ்.பியாக பணியிட மாற்றம்.*


*தேனி எஸ்.பி டோங்கரே பிரவீன் ரமேஷ், மதுரை எஸ்.பியாக பணியிட மாற்றம்.*


*காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக பணியிட மாற்றம்.*


*சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக தீபக் விழுப்புரம் எஸ்.பி ஆக பணியிட மாற்றம்.*


*விழுப்புரம் எஸ்.பி ஷஷாங் சாய் சென்னை கியூ பிரிவு சிஐடி எஸ்.பியாக பணியிட மாற்றம்.*


*அரியலூர் எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா விருதுநகர் எஸ்.பியாக பணியிட மாற்றம்.*


*கோவை வடக்கு துணை ஆணையர் சந்தீஷ் ராமநாதபுரம் எஸ்.பியாக பணியிட மாற்றம்.*


*ஐஜி ஆர் தமிழ்சந்திரனுக்கு கூடுதல் டிஜியாக பதவி உயர்வு; மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் டிஜிபியாக ஆர்.தமிழ்சந்திரன் நியமனம்.*


*ஐபிஎஸ் அதிகாரி வி ஜெயஸ்ரீக்கு ஐஜியாக பதவி உயர்வு; சென்னையில் காவல்துறை நடவடிக்கை பிரிவு ஐஜியாக ஜெயஸ்ரீ நியமனம்.*


*டிஐஜி சாமூண்டிஸ்வரிக்கு ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது; சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக சாமூண்டீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.*


*ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி எஸ்.லட்சுமி சென்னையில் ஆயுதப்படை பிரிவு ஐஜியாக நியமனம்.*


*ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.ராஜேஸ்வரி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் - செயலாளராக நியமனம்.*


*ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.ராஜேந்திரன் ஆவடியில் தலைமையக போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமனம்.*


*ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.எம் முத்துசாமி, தமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியின் கூடுதல் இயக்குனராக நியமனம்.*


*ஐஜியா பதவி உயர்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மயில் வாகனன் சென்னை அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமனம்.*


*சரஜோகுமார் தக்கூர் ஐபிஎஸ் வேலூர சரக டிஜிபியாக நியமனம்.*


*சென்னை தெற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையர் மகேஸ்குமார் பதவி உயர்வு பெற்று இணை ஆணையராக நியமனம்.*


*பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள தேவராணி, சென்னை வடக்கு போக்குவரத்து காவல் இணை ஆணையராக நியமனம்.*


*காவல் கண்காணிப்பாளராக உள்ள ஆர். திருநாவுக்கரசு பதவி உயர்வு பெற்று உளவுப்பிரி டிஐஜியாக நியமனம்.*


*ஜி.ராமர் ஐபிஎஸ் சென்னையில் ரயில்வே டிஜிபியாக நியமனம்.*


தமிழ்நாட்டில் IPS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு...



தமிழ்நாட்டில் 7 IPS அதிகாரிகளுக்கு காவல்துறை தலைவராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது...


IPS அதிகாரிகளான வி.ஜெயஸ்ரீ, பி.சாமூண்டேஸ்வரி, எஸ்.லட்சுமி, எஸ்.ராஜேஷ்வரி, எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ் முத்துசாமி மற்றும் என்.எம் மயில்வாகனன் ஆகியோருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.


தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது...


இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “ஐபிஎஸ் அதிகாரிகளான பி.ஆர். வெண்மதி, பி. அரவிந்தன், வி. விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், டி. மகேஷ்குமார், என். தேவராணி, இ.எஸ். உமா, ஆர். திருநாவுக்கரசு, ஆர். ஜெயந்தி, ஜி. ராமர் உள்ளிட்ட 10 பேருக்கும் டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.


அதே போன்று ஐபிஎஸ் அதிகாரிகளான ஆனந்த்குமார் சோமானி, ஆர். தமிழ்ச்சந்திரன் ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. மேலும் ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜி. யாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் & பணி நியமனம்...

இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் & பணி நியமனம் (Police Note No.  SC/ 25 & 26/ 2023, Dated: 14-12-2023)...


11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஐ.ஜியாக தமிழ்சந்திரன் நியமனம்


சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மகேஸ்வர் தயால் நியமனம்


சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம்.





தனிப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் POLICE ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது - சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சுற்றறிக்கை (Curtailing the unauthorised use of POLICE stickers on private vehicles both two wheelers and four wheelers - instructions issued - Memorandum of Additional Director General of Police)...



 தனிப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் POLICE ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது - சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சுற்றறிக்கை (Curtailing the unauthorised use of POLICE stickers on private vehicles both two wheelers and four wheelers - instructions issued - Memorandum of Additional Director General of Police)...



>>> Click Here to Download Memorandum of Additional Director General of Police...


பணியில் இருக்கும் காவலர்கள் அலைபேசி பயன்படுத்தக் கூடாது - காவல் துறை இயக்குநர் குறிப்பாணை (Police Personnel on duty should not use cell phones - Director General of Police / HoPF Memorandum)...


>>> பணியில் இருக்கும் காவலர்கள்  அலைபேசி பயன்படுத்தக் கூடாது - காவல் துறை இயக்குநர் குறிப்பாணை (Police Personnel on duty should not use cell phones - Director General of Police / HoPF Memorandum)...


பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என, சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தல்.


இந்த அறிவிப்பை காவலர்கள் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் எனவும், அனைத்து காவல் நிலைய தகவல் பலகையில் இதை ஒட்ட வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக திரு.அபய் குமார் சிங், இ.கா.ப., நியமனம் (Mr. Abhay Kumar Singh, IPS., Transferred & Appointed as Director of Tamil Nadu Vigilance & Anti-Corruption Unit)...


>>> தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக திரு.அபய் குமார் சிங், இ.கா.ப., நியமனம் (Mr. Abhay Kumar Singh, IPS., Transferred & Appointed as Director of Tamil Nadu Vigilance & Anti-Corruption Unit)...


இப்பிரிவின் இயக்குநராக இருந்த திரு.கந்தசாமி பணி ஓய்வு பெற்ற நிலையில், புதிய நியமனம்.


மேலும் 3 ஏ.டி.ஜி.பி. அதிகாரிகள் பணியிட மாற்றம்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

1819 ஆண் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள், 780 பெண் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் என மொத்தம் 2599 காலிப்பணியிடங்கள் - தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவர்களின் கடிதம், நாள்: 20-03-2023 (1819 Men Grade II Police Constable Posts, 780 Women Grade II Police Constable Posts Total 2599 Vacancies - Director General of Tamilnadu Police Letter, Dated: 20-03-2023)...


>>> 1819 ஆண் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள், 780 பெண் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் என மொத்தம் 2599 காலிப்பணியிடங்கள் - தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவர்களின் கடிதம், நாள்: 20-03-2023 (1819 Men Grade II Police Constable Posts, 780 Women Grade II Police Constable Posts Total 2599 Vacancies - Director General of Tamilnadu Police Letter, Dated: 20-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

சைபர் கிரைம் குற்றத்திற்குள் வரும் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் - குழு நிர்வாகி காவல் நிலையத்தில் ஆஜராக மாவட்ட குற்றப்பிரிவு அறிவுறுத்தல் (Information shared in WhatsApp group falling under cybercrime - District Crime Branch instructs Group Administrator to appear at police station)...



>>> சைபர் கிரைம் குற்றத்திற்குள் வரும் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் - குழு நிர்வாகி காவல் நிலையத்தில் ஆஜராக மாவட்ட குற்றப்பிரிவு அறிவுறுத்தல் (Information shared in WhatsApp group falling under cybercrime - District Crime Branch instructs Group Administrator to appear at police station)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


காவலர் பணிநியமனம் - பணியிலுள்ள/ ஓய்வு பெற்ற/ இறந்த/ மருத்துவ ரீதியாக இயலாமை உள்ள காவல் துறை & அமைச்சுப் பணியாளர்களை சார்ந்திருப்பவர் / வாரிசுகளுக்கு 10% சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் - அரசாணை (நிலை) எண்: 67, நாள்: 22-01-2010 (G.O. (Ms) No: 67, Dated: 22-01-2010 - 10% percent Reservation provided in "Ward cum Dependent Quota" granted to the dependents of Serving / Retired/ Deceased/ Medically invalidated Police Personnel including Ministerial staff of police department)...


>>> காவலர் பணிநியமனம் - பணியிலுள்ள/ ஓய்வு பெற்ற/ இறந்த/ மருத்துவ ரீதியாக இயலாமை உள்ள காவல் துறை & அமைச்சுப் பணியாளர்களை சார்ந்திருப்பவர் / வாரிசுகளுக்கு 10% சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் - அரசாணை (நிலை) எண்: 67, நாள்: 22-01-2010 (G.O. (Ms) No: 67, Dated: 22-01-2010 - 10% percent Reservation provided in "Ward cum Dependent Quota" granted to the dependents of Serving / Retired/ Deceased/ Medically invalidated Police Personnel including Ministerial staff of police department)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


காவலர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் - அரசாணையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் (The Supreme Court upheld the Government Order granting reservation to the wards of the police personnel)...



 காவலர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் -  அரசாணையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் (The Supreme Court upheld the Government Order granting reservation to the wards of the police personnel)...


போலீசாரின் வாரிசுகளுக்கு சீருடை பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.


சீருடை பணிக்கான வேலைவாய்ப்புகளில் போலீசாரின் வாரிசுகளுக்கு 9 சதவீதமும், போலீஸ் அமைச்சுப் பணியில் இருப்போரின் வாரிசுகளுக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணை (நிலை) எண்: 67, நாள்: 22-01-2010 (G.O.Ms.No.67, Dated: 22-01-2010) அன்று பிறப்பிக்கப்பட்டது.


உயர்நீதிமன்றம் தடை


இந்த இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி தீர்ப்பு கூறியது.


அதில், போலீசாரின் வாரிசுகளுக்கு, சீருடைப் பணி வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லாது, சட்டவிரோதமானது என்றும், எதிர்காலத்தில் இந்த அரசாணையை செயல்படுத்தக்கூடாது என்றும் தடை விதித்து மனுவை தள்ளுபடி செய்தது.


மேல்முறையீடு


சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசும், பாதிக்கப்பட்ட மதுரையை சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட 119 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.


இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபய் எஸ். ஓகா, பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.


அரசாணை செல்லும்


மனுதாரர்களின் வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, 'போலீசாரின் வாரிசுகளுக்கு சீருடை பணி வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் எனவும், ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்த ஆண்டில் சீருடைப் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தும் எனவும் உத்தரவிட்டது.



>>>  காவலர் பணிநியமனம் -  பணியிலுள்ள/ ஓய்வு பெற்ற/ இறந்த/ மருத்துவ ரீதியாக இயலாமை உள்ள காவல் துறை & அமைச்சுப் பணியாளர்களை சார்ந்திருப்பவர் / வாரிசுகளுக்கு 10% சதவீத இடஒதுக்கீடு - அரசாணை...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


எஸ்.பி. வீட்டு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்: முதல்வர் அலுவலகம் தலையிட்டு ரத்து (Policeman suspended for refusing to bathe S.P's pet dog: Chief Minister's office intervened and canceled)...



 எஸ்.பி. வீட்டு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்: முதல்வர் அலுவலகம் தலையிட்டு ரத்து (Policeman suspended for refusing to bathe S.P's pet dog: Chief Minister's office intervened and canceled)...


திருவனந்தபுரத்தில் வீட்டு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரரை எஸ்பி சஸ்பெண்ட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்வர் அலுவலகம் தலையிட்டதை தொடர்ந்து அவரது சஸ்பெண்ட் உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. திருவனந்தபுரத்தில் போலீஸ் தொலை தொடர்பு எஸ்பியாக பணிபுரிந்து வருபவர் நவநீத் சர்மா. இவரது மனைவி ரயில்வேயில் உயரதிகாரியாக உள்ளார். இதனால் ரயில்வே குடியிருப்பில் தான் நவநீத் சர்மா மனைவியுடன் தங்கி உள்ளார். நவநீத் சர்மாவுக்கு 2 பாதுகாவலர்கள் உள்ளனர்.


இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவரது பாதுகாவலரான ஆகாஷ் என்பவரை அவரது வீட்டு வேலைக்காரர் அழைத்து நாயை குளிப்பாட்டுமாறு கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய வேலை அதுவல்ல என்று கூறி ஆகாஷ் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று டிவி பார்த்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீட்டு வேலைக்காரர், நவநீத் சர்மாவுக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளார். இதில் கோபமடைந்த நவநீத் சர்மா, தொலைத்தொடர்பு சப் இன்ஸ்பெக்டரை அழைத்து, ஆகாஷ் தன்னுடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து  பொருட்களை சேதப்படுத்தியதாக எப்ஐஆர் பதிவு செய்யுமாறு கூறியுள்ளார்.


வேறு வழியின்றி எஸ்பி கூறியபடி ஆகாஷ் மீது சப் இன்ஸ்பெக்டர் எப்ஐஆர் பதிவு செய்துள்ளார். இதன் பின் ஆகாஷை உடனடியாக சஸ்பெண்ட் செய்து நவநீத் சர்மா உத்தரவு பிறப்பித்தார். இது குறித்து ஆகாஷ் முதல்வர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து சஸ்பெண்ட் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய போலீஸ் தலைமையாக உதவி ஐஜிக்கு  முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆகாஷின் சஸ்பெண்ட் உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும் அவர் எஸ்பி நவநீத் சர்மாவின் பாதுகாவலர் பணியிலிருந்து  ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.  இந்த சம்பவம் கேரள போலீசில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


காவல்துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளித்து அரசாணை வெளியீடு (Government gives one day off a week to police - Sanction of One-day Weekly off to the Police Personnel up to the rank of Head Constables In order to take care of their health and to spend time along with their family members - Amendment to Police Standing Order - Orders - Issued)...



 காவல்துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளித்து அரசாணை வெளியீடு (Government gives one day off a week to police - Sanction of One-day Weekly off to the Police Personnel up to the rank of Head Constables In order to take care of their health and to spend time along with their family members - Amendment to Police Standing Order - Orders - Issued)...

Home (Police-IX) Department 
G.O. (Ms.) No.489 Dated : 03.11.2021 

Read : From the Director General of Police & Head of Police Force, Tamil Nadu, Chennal, Letter R.C. No. 1396277/PBA.II(1)/ 2021, Dated 30.09.2021. 


>>> Click here to Download G.O. (Ms.) No.489, Dated : 03.11.2021...


காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை - வார ஓய்வு நாளில் விருப்பத்துடன் பணியாற்றும் காவலர்களுக்கு மிகைநேர ஊதியம் - பிறந்த நாள், திருமண நாள் அன்று வாழ்த்து & விடுமுறை - தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) சுற்றறிக்கை குறிப்பாணை ந.க.எண்: 1322702/ஊ.த.பி.II(2)/2021, நாள்:30-07-2021...


 காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை - வார ஓய்வு நாளில் விருப்பத்துடன் பணியாற்றும் காவலர்களுக்கு மிகைநேர ஊதியம் -  பிறந்த நாள், திருமண நாள் அன்று வாழ்த்து & விடுமுறை - தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) சுற்றறிக்கை குறிப்பாணை ந.க.எண்: 1322702/ஊ.த.பி.II(2)/2021, நாள்:30-07-2021...


>>> தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) சுற்றறிக்கை குறிப்பாணை ந.க.எண்: 1322702/ஊ.த.பி.II(2)/2021, நாள்:30-07-2021...



தமிழ்நாட்டில் 12 IPS அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு Home (SC) Department Police Note No.S C/37/2021, Dated: 27-07-2021.....



 தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. (Home (SC) Department Police Note No.S C/37/2021, Dated: 27-07-2021...)


ரயில்வே ஐ.ஜி.,யாக இருந்த சுமித் சரன் ஊர்க்காவல் படை ஐ.ஜி.,யாக நியமனம்.


பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த தினகரன், சிலைகடத்தல் தடுப்பிரிவு ஐ.ஜி.,யாக நியமனம்.


திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக இருந்த கயல்விழி, சென்னை காவல்துறை பயிற்சி பிரிவு டிஐஜியாக நியமனம்.


திருவாரூர் எஸ்.பி.,யாக இருந்த சீனிவாசன் திண்டுக்கல் எஸ்.பியாக நியமனம்.


சென்னை குற்றப்பிரிவு சிஐடி சிறப்பு பிரிவு எஸ்.பி.,யாக இருந்த விஜயகுமார் திருவாரூர் எஸ்.பி.,யாக நியமனம்.


திண்டுக்கல் எஸ்.பி.,யாக இருந்த ரவளிபிரியா தஞ்சாவூர் எஸ்.பி.,யாக நியமனம்.


தஞ்சாவூர் எஸ்.பி.,யாக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் ராணிப்பேட்டை எஸ்.பி.,யாக நியமனம்.


ராணிப்பேட்டை எஸ்.பி.,யாக இருந்த ஓம் பிரகாஷ் மீனா சென்னை சைபர் குற்றப்பிரிவு 2 எஸ்.பி.,யாக நியமனம்.


சென்னை சிறப்பு சிஐடி குற்றப்பிரிவு 2 எஸ்.பி.,யாக விக்ரமன் நியமனம் .


சென்னை சைபர் குற்றப்பிரிவு 3 எஸ்.பி.,யாக தேவராணி நியமனம்.


சென்னை பெருநகர துணை ஆணையராக அருண் பாலகோபாலன் நியமனம்.


சென்னை, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு துணை ஆணையராக ஷியாமளா தேவி நியமனம்.


>>> Click here to Download Home (SC) Department Police Note No.S C/37/2021, Dated: 27-07-2021...



மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க முதலமைச்சர் மற்றும் VIPக்கள் வருகையின் பொழுது பாதுகாப்பு பணிகளிலிருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து DGP உத்தரவு...

 முதலமைச்சர் உள்ளிட்ட வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு - டிஜிபி திரிபாதி உத்தரவு...


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவையடுத்து டிஜிபி உத்தரவு...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Abolition of passing procedure for all students from 1st to 8th standard - Central government action - Publication of Gazette - Tamil Translation

1-8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் நடைமுறை ரத்து - மத்திய அரசு நடவடிக்கை - அரசிதழ் வெளியீடு - தமிழாக்கம் Abolition of...