இடுகைகள்

Social Media லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முதலமைச்சரின் தந்தையர் தின சமூக வலைதளப் பதிவு...

படம்
 முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தந்தையர் தின சமூக வலைதளப் பதிவு...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கணக்குப் பாட வினாத்தாள் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவு...

படம்
 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கணக்குப் பாட வினாத்தாள் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவு...   * A×B தந்தாய் * அம்புக் குறி பாய்ச்சினாய் * கூடுதல் காணச்சொல்லி மன மகிழ் கணமாக்கினாய் * வகையான வர்க்கமூலம் காணச் செய்தாய் * 7I2 காண வைத்து மாணவனை me too pass என உணரவைத்தாய் * தேல்(ன்)ஸ் தேற்றம் தந்து தேன் சுவைக்க வைத்தாய் * நாற்கரப் பரப்பு கேட்டு எங்கள் இதயப் பரப்பை அடைத்தாய் * மையக் குத்துக்கோடு சமன்பாடு கேட்டு குத்தாட்டம் போட வைத்தாய் * கப்பல் இடைப்பட்டத் தொலைவு கேட்டு மாணவனுக்கும் ஆசிரியருக்குமான இடைவெளி குறைத்தாய் * இடைக்கண்ட கன அளவு கேட்டு பெருங்கண்டம் தொலைத்தாய் * வெயிலுக்குக் கோன் ஐசாய் குளுமை தந்தாய் * மாறுபாட்டுக் கெழு கேட்டு மாணவரின் ஈடுபாட்டுக்கு உரமிட்டாய் * பகடை கணக்கு தந்து ஏணியில் ஏற்றிவிட்டாய் * 7+77+777+... கேட்டு ஏழேழு ஜென்மமும் உமக்கும் எமக்கும் மாணவனை நன்றி சொல்ல வைத்தாய்! * கேள்வியின் நாயகனே நீ வாழ்க...

SCRIBE என்பவர் சொல்வதை மட்டும் எழுதுபவரா? தனக்கு தெரிந்ததை எல்லாம் எழுதுபவரா?

படம்
SCRIBE என்பவர் சொல்வதை மட்டும் எழுதுபவரா? தனக்கு தெரிந்ததை எல்லாம் எழுதுபவரா?         - ராக குமார்- ----------------------------------------  "நீங்க எத்தனை மார்க் எழுதினீங்க?" நான் 40 மார்க் எழுதினேன். நீங்க? "நான் 70 மார்க்  எழுதுனேன்"  "ஓ 70 மார்க்குக்கு சொன்னானா " "அவன் எங்க சொன்னா,  எல்லாமே நானாத்தான் எழுதினேன்".  ஸ்க்ரைப்பாக நியமனம் செய்யப்பட்ட இரு ஆசிரியர்களின் உரையாடல்தான் இது.  தன்னால் சுயமாக எழுத முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் SCRIBE பெற்று தேர்வு எழுதும் நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. முன்பு  பாட ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட மாட்டார்கள். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் மட்டுமே ஸ்க்ரைப்பாக நியமனம் செய்யப்படுகிறார்கள். மாணவர் குறிப்பிடும் சில குறியீடுகள், வரைபடங்களை பிற பாட ஆசிரியர்களால் எழுத முடியாது என்பதனாலேயே இந்த ஏற்பாடு.  ஆனால் நம் ஆசிரியர்களோ ஸ்க்ரைப் என்பதை மறந்து தன்னையே தேர்வராக கருதிக் கொண்டு  தெரிந்ததை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு மற்ற மாணவர்களை விட ஸ்க்ரைப் எழுதும் மாணவர்கள் கூடு

இந்திய அரசின் விதிகளுக்கு இணங்கிய கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்: தனி அதிகாரியை நியமித்து புகார்களை கையாள சம்மதம்...

படம்
  இந்திய அரசின் விதிகளுக்கு இணங்கிய கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்: தனி அதிகாரியை நியமித்து புகார்களை கையாள சம்மதம்.. மத்திய அரசின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்பட கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. விதிகளின்படி புகார்களை விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்கவும் சம்மதம் தெரிவித்திருக்கின்றன. ஆனால், ட்விட்டர் மட்டும் இதுவரை விதிகளுக்கு கட்டுப்பட ஒப்புதல் தெரிவிக்கவில்லை. புதிய விதிகளின்படி குறைதீர்ப்பு, ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை கையாள ஒவ்வொரு சமூகவலைதளமும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும், அந்த அதிகாரிகள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களுக்கு அரசு வகுத்த புதிய ஒழுங்கு விதிமுறைகள் என்னென்ன? - ஒரு பார்வை...

படம்
  யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி வலைதளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் புதிய ஒழுங்கு விதிமுறைகள் என்னென்ன? - இதோ ஒரு பார்வை... சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசின் மின்னணு தகவல்நுட்ப அமைச்சகம் டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகள் என பெயரிட்டு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அரசாணையாக வெளியிட்டது. அதன்படி ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனமும் மாதம் ஒருமுறை எவ்வளவு புகார்கள் வருகின்றன என்பது தொடர்பான முழுமையான தகவல்களை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைதீர்ப்பு, ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை கையாள ஒவ்வொரு சமூகவலைதளமும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும், அந்த அதிகாரிகள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆபாச புகைப்படங்கள் குறித்து புகார் அளித்த 24 மணிநேரத்திற்குள் அவற்றை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும். புகார்கள் தொடர்பாக 36 மணிநேரத்திற்குள் நடவட

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...