இடுகைகள்

WHO லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனா பெருந்தொற்றால் அறிவிக்கப்பட்ட உலக சுகாதார அவரச நிலை முடிவுக்கு வந்து விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு (The World Health Organization announced that the global health emergency declared by the Corona pandemic has ended)...

படம்
 கொரோனா பெருந்தொற்றால் அறிவிக்கப்பட்ட உலக சுகாதார அவரச நிலை முடிவுக்கு வந்து விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு (The World Health Organization announced that the global health emergency declared by the Corona pandemic has ended)... கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார மையம் அறிவித்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று 2019 ஆண்டு இறுதியில் துவங்கியது. பின் பல்வேறு நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகின் இயல்பு நிலையை உலுக்கியது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த கொடூர நோயின் தீவிரம் காரணமாக உலக சுகாதார மையம் கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக அறிவித்தது. முதல் அலை, இரண்டாவது அலை என்று உலக நாடுகளை கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்தது. இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது, இந்த பாதிப்பில் இருந்து எப்படி விடுபடுவது என்ற பணிகளில் மருத்துவத் துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். நீண்ட ஆய்வுக்கு பின் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கும் திறன் கொண்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின் இந்த மருந்துக்கான தட்டுப்பாடு அதிகர

காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலி - இந்திய நிறுவனத்திடம் விசாரிக்க உலக சுகாதார அமைப்பு உத்தரவு (66 children died after drinking cough medicine in Gambia - WHO orders to investigate Indian agency)...

படம்
 காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலி - இந்திய நிறுவனத்திடம் விசாரிக்க உலக சுகாதார அமைப்பு உத்தரவு (66 children died after drinking cough medicine in Gambia - WHO orders to investigate Indian agency)... ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில் இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் தயாரிப்புகள் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஹரியாணாவின் சோனிபட்டை சேர்ந்த மெய்டென் மருந்தியல் நிறுவனம் தயாரித்த அந்த மருந்துகள் நச்சு மற்றும் இறப்புக்கு காரணமான ரசாயனங்களைக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கெட்டுபோன மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவைத் தவிர வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகியிருக்கலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறுகையில், காம்பியாவில் குழந்தைகள் இறப்புடன்

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு "டெல்டா" & "கப்பா" என பெயர் சூட்டியுள்ளது உலக சுகாதார அமைப்பு...

படம்
 இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு "டெல்டா" & "கப்பா" என பெயர் சூட்டியுள்ளது உலக சுகாதார அமைப்பு... இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் வகைகளுக்கு டெல்டா, கப்பா என கிரேக்க எழுத்துகளை உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களாக அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு ஆல்பா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவின் கொரோனாவுக்கு பீட்டா என்றும் பிரேசில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு காமா எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. உருமாறும் கரோனாவைக் கண்டுபிடிக்கும் நாட்டின் பெயரை சூட்ட எதிர்ப்பு எழுந்தால் உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...