கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
>>> தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (DEE) முதலாமாண்டு தேர்வுகள் 21.09.2020 முதல் தொடக்கம் - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (DEE) முதலாமாண்டு தேர்வுகள் 21.09.2020 முதல் 28.09.2020 வரையிலும், இரண்டாமாண்டு தேர்வுகள் 29.09.2020 முதல் 07.10.2020 வரையிலும் நடைபெறவுள்ளன.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகளுக்கான முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலருக்கான அறிவுரைகள் மற்றும் தேர்வின் போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு...
>>>DEE Exam Departmental Officers Instruction
>>>அனைத்து குறைகளையும் ஒரே தளத்தில் முறையிட "முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம்" உருவாக்கம்...
பல்வேறு அரசுத் துறைகள் தொடர்பான குறைகளை ஒரே தளத்தில் பதிவேற்றம் செய்யும் புதிய திட்டம் - முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் என்ற பெயரில் விரைவில் செயல்படுத்தப்படும்.
- 110விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு.!!
>>>தென்னாட்டு பெர்னாட்ஷா அறிஞர் அண்ணா பிறந்த நாள் இன்று 15.09.2020
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொன்ன தென்னாட்டு பெர்னாட்ஷா
அறிஞர் அண்ணா!
பிறந்த நாள் 15.09.2020
அறிஞர் அண்ணா மறைந்து 50ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அரசியலில் அவர் காட்டிய நெறிமுறைகள் முன்பு எப்போதையும்விட இன்றுதான் மிகவும் அவசியமாக இருக்கின்றன. முன்பைவிட இன்றுதான் அண்ணா மிகவும் தேவைப்படுகிறார்.
இளைஞர் அண்ணா, பெரியாருடன் இணைந்தார். திராவிடர் கழகத்திலிருந்து 1949ல் பிரிந்த பிறகும் பெரியார் அளித்த நல்லுணர்வுகளை அண்ணா தொடர்ந்து போற்றிவந்தார். 1967ல் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு பெரியாரைச் சந்தித்து அண்ணா வாழ்த்து பெற்ற நிகழ்வு யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாதது.
அண்ணாவின் மொழி ஆளுமை
அண்ணா சிறந்த இதழாளர். குடியரசு, நம் நாடு, திராவிட நாடு, காஞ்சி உள்ளிட்ட பல தமிழ் ஏடுகளிலும், ஹோம் லேண்ட், ஹோம் ரூல் ஆகிய ஆங்கில வார ஏடுகளிலும் பன்னாட்டு அரசியல் தொடங்கி இந்நாட்டு அரசியல் வரை பல்துறைகளில் அவர் ஆங்கிலத்தில் அவர் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள் இன்றும் ஆய்வுக்குரிய கலைக்களஞ்சியமாகவே விளங்குகின்றன. அண்ணாவின் எழுத்திலும் பேச்சிலும் பகுத்தறிவு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு போன்ற கொள்கைகள் தொடர்ந்து இடம்பெற்றன. தனது சொற்பொழிவுகளில் அவர் கடைப்பிடித்த மொழி ஆளுமை இளைஞர்களை ஈர்த்தது.
தனிநாடு கோரிக்கை
திராவிட நாடு என்ற பிரிவினைக்கான காரணங்களை அண்ணா மாநிலங்களவையில் 1962-ல் முன்மொழிந்தபோது, அனைவரும் அதிர்ந்துபோனார்கள். 1962ல் இந்திய-சீனப் போரின்போது அண்ணா இந்தக் கோரிக்கையை நாட்டின் ஒருமைப்பாட்டைக் கருதிக் கைவிட்டார். 'வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும்' என்று ஒரே வரியில் அளித்த விளக்கம் எல்லோரையும் சிந்திக்கத் தூண்டியது. இது போன்று அண்ணா எண்ணற்ற சொற்றொடர்களைத் தமிழுக்கு வழங்கியுள்ளார்.
கூட்டாட்சி சுயாட்சி
1965ல் ஆங்கில இதழொன்றுக்கு அளித்த பேட்டியில், 'கூட்டாட்சி, மாநிலங்களுக்கு முழுமையான சுயாட்சி, அனைவருக்கும் சமஉரிமை போன்ற கொள்கைகளைத் திமுக முன்னிறுத்திப் போராடும்' என்றார். 1967ல் ஆட்சி யமைத்த பிறகு, சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல், சுயமரியாதைத் திருமணச் சட்டம் இயற்றல் ஆகிய முற்போக்கான நடவடிக்கைகளை மிகக் குறுகிய காலத்திலேயே அண்ணா மேற்கொண்டார்.
தம்பிக்கு கடிதம்
1969ல் தம்பிக்கு எழுதிய இறுதி மடலில், 'மாநிலங்கள் அதிக அளவில் அதிகாரம் பெறத் தக்க விதத்தில் இந்திய அரசியல் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும்' என்றும் அண்ணா வலியுறுத்தியுள்ளார். மேலும், 'செல்வம் சிலரிடம் சென்று குவிந்திடுவது வெள்ளத்துக்கு ஒப்பானது, அது கொண்டவனையும் அழித்துவிடும், சமூகத்தில் வலிவற்றவரையும் அழித்துவிடும்... பணம் பெட்டியிலே தூங்குகிறது, பணக்காரன் பட்டு மெத்தையில் தூங்குகிறான். ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறான், இல்லாவிடில் ஏன் இத்தனை பிச்சைக்காரர்கள்' என்ற மொரேவியா நாட்டின் பழமொழியையும் குறிப்பிட்டுள்ளார்.
மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பு
தன்னைக் கடுமையான முறையில் யார் பேசினாலும் ஏசினாலும் கவலை கொள்ளாமல் கொள்கை சார்ந்த நெறிகளுக்கு முன்னுரிமை அளித்தார். அதுதான் அவருக்கு வெற்றியை வழங்கியது. தனது அறிவு மூலதனத்தால், நேர்மையால், எளிய வாழ்க்கையால், அயராத உழைப்பால், அர்ப்பணிப்பு உணர்வால், மாற்றுக் கட்சியினரையும் மதித்துப் போற்றியவர் அறிஞர் அண்ணா. மற்றவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்து மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று கூறினார்.
கொள்கையால் ஈர்த்தவர்
அண்ணாவின் கொள்கை முத்துகள் சில:
•கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு
•மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
•கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 3 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக இவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
1934 இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்) , மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.
ஆங்கிலம் பேச மறுத்த அண்ணா
அன்றைய காலகட்டத்திலும் கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்ற மனப்பான்மையும் ஆங்கில மோகமும் அதிகமிருந்தது[11]. ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர் பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது, அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசிக் காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை.
மொழிப்புலமைதொகு
ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் ஏனென்றால் என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர்,
"No sentence can end with because because, because is a conjunction. எந்தத்தொடரிலும் இறுதியில் வராச்சொல் 'ஏனென்றால்'. ஏனென்றால், 'ஏனென்றால்' என்பது இணைப்புச்சொல் |
என்று உடனே பதிலளித்தார்.
நன்றி : விக்கிபீடியா
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key
3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...