கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DCRG லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
DCRG லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Case seeking payment of gratuity in the new pension scheme - High Court order


புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்கக் கோரிய வழக்கு - உயர்நீதிமன்ற உத்தரவு


Case seeking payment of gratuity in the new pension scheme - High Court order


* தஞ்சாவூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. ராஜா என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்க கோரி கொடுக்கப்பட்ட வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


* புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்குவது பற்றி மூன்று வாரங்களுக்குள் அரசு கூடுதல் வழக்கறிஞர் எதிர்வாத உரை தாக்கல் செய்ய உத்தரவிட்டு  நீதியரசர் வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.


DSE Proceedings to all CEOs regarding timely preparation & submission of GPF / CPS / Gratuity / Commutation Proposals / E-SR Upload / Update


 ஓய்வூதியம் / பங்களிப்பு ஓய்வூதியம் / பணிக்கொடை / தொகுத்துப் பெறும் ஓய்வூதியக் கருத்துருக்களை உரிய காலத்தில் தயார் செய்து அனுப்புதல் / E-SR பதிவேற்றம் / புதுப்பித்தல் தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் கடிதம், நாள் : 12-03-2025


Proceedings Letter from the Director of School Education to all District Chief Education Officers regarding timely preparation and submission of Pension / Contributory Pension / Gratuity / Commutation Pension Proposals / E-SR Upload / Update, Dated: 12-03-2025 & GPF / CPS / DCRG Pending as on 12-03-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பணிக் கொடை DCRG ரூ. 25,00,000 /- (இருபத்தைந்து லட்சம்) யாருக்கு கிடைக்கும்?


பணிக் கொடை DCRG - Death Cum Retirement Gratuity ரூ. 25,00,000 /- (இருபத்தைந்து லட்சம்) யாருக்கு கிடைக்கும்?


50% மேல் அகவிலைப் படி ஏறினால்...    


வீட்டு வாடகைப் படி, மருத்துவப் படி, பயணப்படி, மாற்றுத் திறனாளி ஊர்திப் படி முன்பணம், பணிக் கொடை உட்பட அனைத்து வகையான படிகளையும் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு  25% உயர்த்தி வழங்கி வருகிறது.


அதனடிப்படையில், பணிக் கொடை உச்சவரம்பு ரூ 20 லட்சம் என்பதை ரூ. 25 லட்சமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.


மத்திய அரசை பின்பற்றி தமிழ்நாடு அரசும் பணிக் கொடை உச்ச வரம்பை ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தி உள்ளது.


பணிக் கொடை ரூ. 25 லட்சம் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கிடைக்குமா.?


கிடைக்காது.


குறிப்பாக, Group D & C ஊழியர்களுக்கு கிடைக்காது.


ஓய்வு பெறும் நாளில் அடிப்படை ஊதியம் ரூ. 82,000/- க்கு மேல் பெற்று, முழு கால அளவு பணி புரிந்தவர்களுக்கு மட்டுமே பணிக்கொடை ரூ. 25 லட்சம் கிடைக்கும்.


பொதுவாக பணிக்கொடை ரூ 25 லட்சம் DRO, RDO, DD, JD, AD, DE, CEO போன்ற மாவட்ட அளவிலான உயர் அலுவலர்களுக்கு கிடைக்கும்.


மத்திய அரசைப் பின்பற்றி பணிக் கொடையை 25% உயர்த்தி ரூ 25 லட்சமாக அறிவித்த தமிழ்நாடு அரசு..


அதே பார்வையில்..


 வீட்டு வாடகைப் படி, மருத்துவப்படி, பயணப்படி, மாற்றுத் திறனாளி ஊர்திப் படி முன்பணத் தொகையை 25% உயர்த்தி அறிவித்திருக்க வேண்டும்.



>>> Click Here to Download - DCRG G.O.Ms.No.281, Dated 06-09-2024...

பணி ஓய்வு மற்றும் இறப்பு பணிக்கொடைத் தொகையினை 01.01.2024 முதல் ₹ 20 இலட்சத்தில் இருந்து, ₹ 25 இலட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை DCRG G.O.Ms.No.281, Dated 06 September 2024 வெளியீடு...


பணி ஓய்வு மற்றும் இறப்பு பணிக்கொடைத் தொகையினை Death Cum Retirement Gratuity Amount 01.01.2024 முதல்  ₹ 20 இலட்சத்தில் இருந்து, ₹ 25 இலட்சமாக   உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை DCRG G.O.Ms.No.281, Dated: 06-09-2024 வெளியீடு...


1.1.2024 முதல் 

பணிக்கொடை 25,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.. 


1.1.2024 முதல் நடைமுறை..


1.1.2024 to 31.8.2024 வரை ஏற்கனவே ஓய்வு பெற்றோர்....

( தமிழ்நாட்டில் GPF employee)


இந்த கூடுதல் பணப் பலனை பெறலாம்...


புதிய கருத்துருக்கள் அனுப்பும் போது DCRG அதிகபட்சமாக 25L வரை பெறலாம்...



>>> Click Here to Download - DCRG G.O.Ms.No.281, Dated 06-09-2024...


01-01-2020 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு அவ்வப்போது உயர்த்தப்பட்ட அகவிலைப்படி சதவீதத்தில், ஈட்டிய விடுப்பு மற்றும் பணிக்கொடை கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான மத்திய அரசின் செயல்முறைகள் (Office Memorandum of Ministry of Finance, Government of India, No.1(5)/E.V./2020, Dated: 07-09-2021, Important Order for those who retired between 01/01/2020 to 30/06/2021 - Calculation Gratuity and Cash payment in lieu of Leave - Regarding)...

 


01-01-2020 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு அவ்வப்போது உயர்த்தப்பட்ட அகவிலைப்படி சதவீதத்தில், ஈட்டிய விடுப்பு மற்றும் பணிக்கொடை கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான மத்திய அரசின் செயல்முறைகள் (Office Memorandum of Ministry of Finance, Government of India, No.1(5)/E.V./2020, Dated: 07-09-2021,  Important Order for those who retired between 01/01/2020 to 30/06/2021 - Calculation Gratuity and Cash payment in lieu of Leave - Regarding)...


>>> Click here to Download Office Memorandum of Ministry of Finance, Government of India, No.1(5)/E.V./2020, Dated: 07-09-2021...




பணியிலிருக்கும் போது மரணமடையும் ஆசிரியர்களின் குடும்பத்தினர் பலன்களை எவ்வாறு பெறுவது என்பதை விளக்கும் கணக்கீடுகள், படிவங்கள் மற்றும் செயல்முறைகள் அடங்கிய தொகுப்பு...



 பணியிலிருக்கும் போது மரணமடையும் ஆசிரியர்களின் குடும்பத்தினர் பலன்களை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி விளக்கும் படிவங்கள் மற்றும் செயல்முறைகள் அடங்கிய தொகுப்பு...


👉பணியிலிருக்கும் போது மரணமடையும் ஆசிரியர்களுக்காக, அவர்தம் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் அடுத்த கட்ட நிகழ்வுகளை மேற்கொள்ளுதல், IFHRMS முறையில் Bill Creation செய்யும் வழிமுறைகள்....


👉அவர்கள் அனைத்து பண பலன்களையும் அவர்களின் வாரிசு எவ்வாறு பெறுவது என்பதற்கான முழுமையான விளக்கத்துடன் அனைத்து படிவங்கள் மற்றும் அரசாணைகளுடன் PDF கோப்பு...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்....


பணிக்கொடை (DCRG - Death Cum Retirement Gratuity) - தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கணக்கிடப்படும் முறை...


பணிக்கொடை என்பது அரசு /அரசு சார்ந்த ஊழியர் அல்லது ஆசிரியர் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது அவ்வூழியருக்கு, ஊதியம் வழங்கும் நிறுவனம், ஊழியரின் பணியை பாராட்டும் விதமாக வழங்கும் ஒரு ஒட்டு மொத்தத் தொகையாகும். பணிக்கொடை ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும் அவர் ஓய்வுபெறும்போது பெற்ற ஊதியமும் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகிறது.


அரசு & அரசு சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை கணக்கீடு முறை

பணி ஓய்வின் போது பணிக்கொடை கணக்கீடு செய்யும் போது ஊழியர் இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்காலம் ஆகிய இரண்டும் கணக்கீட்டில் எடுத்து கொள்ளப்படுகிறது.


இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் (Last Pay Drawn)

அரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களைப் பொருத்த வரை, அடிப்படை ஊதியம் (Basic Pay), தர ஊதியம் (Grade Pay), சிறப்பு ஊதியம் (Special Pay), தனி ஊதியம் (Personal Pay) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) ஆகியவற்றின் கூட்டுத்தொகையை, இறுதியாக வழங்கப்பட்ட ஊதியமாகக் (Last Pay Drawn) கொண்டு பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.


பணிக்காலம் கணக்கிடுதல்

ஓய்வு (Retirement) இனங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளும் (அல்லது 4 ஆண்டு 9 மாதங்களுக்கு மேலும்) அரசுப் பணியில் இருந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 33 ஆண்டு பணிக்காலம் மட்டுமே பணிகொடை கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

32 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு மேல் பணி செய்திருந்தால் 33 ஆண்டு பணிக்காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 32 ஆண்டுகள் 5 மாதங்கள் பணி செய்திருந்தால் 32 ஆண்டுகள் மட்டுமே பணிக்காலமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.


பணிக்கொடை கணக்கீடு

மொத்தப் பணி செய்த ஆண்டிற்கு அரை மாத ஊதியம் வீதம், குறைந்த பட்சமாக இரண்டரை மாத ஊதியமும், அதிக பட்சமாக பதினாறரை (16 ½) மாத ஊதியமும் பணிக்கொடையாக வழங்கப்படும். ஆனால் அதிகபட்ச வரம்பு ரூபாய் 20 இலட்சம்.


பணிக்கொடை வருவாய்க்கு வருமான வரி சட்டம் 10 (10)-இன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்பட மாட்டாது.


அரசு மற்றும் அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனங்களுக்கு ஊழியர் செலுத்த வேண்டிய தொகைகள் நிலுவை இருப்பின், அதனை பணிக்கொடைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.


பணியின் போது காலமான ஊழியர்களுக்கு பணிக்கொடை

பணியின் போது இறந்த அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச பணிக்காலம் கணக்கில் கொள்ளாமல், பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள் இறந்தவர்களுக்கு இரண்டு மாத ஊதியமும், ஒன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இறந்தவர்களுக்கு ஆறு மாத ஊதியமும், ஐந்து முதல் 20 ஆண்டுகளுக்குள் பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு 12 மாத ஊதியமும், 20 ஆண்டும் அதற்கு மேலும் பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு அரை மாத ஊதியம் வீதம் கணக்கிட்டு பணிக்கொடை வழங்க வேண்டும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உச்சநீதிமன்றத்தில் TET வழக்கு ஒத்திவைப்பு

 உச்சநீதிமன்றத்தில் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET தேவை  வழக்கு 03.04.2025க்கு ஒத்திவைப்பு  Teacher Eligibility Test required f...