கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணிக்கொடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பணிக்கொடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

"பணிக்கொடை" (Gratuity) குறித்த தகவல்கள்...


 "பணிக்கொடை" (Gratuity) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?

 

Gratuity - Amount


"கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள். குறிப்பிட்ட காலம் பணிசெய்து ஓய்வு பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது.


இதை அளிப்பதற்காக அவர் பணி செய்யும் காலங்களில் இதற்கென்று எந்த ஒரு தொகையும் அவரிடம் பிடித்தம் செய்யப்படுவதில்லை.


இது முழுவதுமே நிர்வாகத்தால் வழங்கப்படும் "கொடை"தான்.


    பழங்காலத்தில் பணிக்கொடை என்பதெல்லாம் கிடையாது. சில தனியார் முதலாளிகள் தங்களிடம் ஓய்வு பெறும் ஊழியருக்கு இந்த மாதிரி ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அனுப்பும் வழக்கம் இருந்தது.


நாளாவட்டத்தில் இது எல்லா இடத்திலும் பரவி சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு பணிக்கொடை கொடுத்தே ஆகவேண்டுமென்று சட்டமும் ஆகிவிட்டது.


 கிராஜூவிட்டி கணக்கிடும் முறையைப் பார்ப்போம்.


ஒரு ஆண்டு சர்வீஸூக்கு 15 நாட்கள் சம்பளம் கிராஜூவிட்டி என்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி செய்துள்ளாரோ அதற்குரிய தொகையை கிராஜிவிட்டியாக வழங்கவேண்டும்.


   உதாரணமாக ஒருவர் 25ஆண்டுகள் பணி செய்திருந்தால் அவருக்கு 25×15=375 நாட்கள் சம்பளமும் 30 ஆண்டுகள் பணி செய்திருந்தால் 30×15=450 நாட்கள் சம்பளமும் கிராஜூவிட்டியாக வழங்கப்படவேண்டும்.


   கிராஜூவிட்டியில் சீலிங் உண்டு. அதிகப்பட்சம் 2000000 (இருபது லட்சம்) மட்டுமே வழங்கப்படும்.


  பனிஷ்மென்ட் இருந்தால் சர்வீஸ் ஆண்டுகள் குறைத்துக் கணக்கிடப்படும்.


உதாரணமாக 30ஆண்டுகள் பணி செய்தவருக்கு இரண்டாண்டு இன்க்ரிமென்ட் கட் ஆகி இருந்தால் 28ஆண்டுகள் மட்டுமே சர்வீஸ் என கணக்கிடப்படும்.


    கடைசியாக வாங்கிய பேசிக்கையும் DAவையும் கூட்டி அதை 26ஆல் வகுத்து வருவதுதான் ஒருநாள் சம்பளமாகும்.


    இப்பொழுது கடைசிமாத பேசிக் 40000ரூபாய் வாங்கிய 35ஆண்டுகள் (அதிகபட்சம் 33 ஆண்டுகள் மட்டுமே கணகக்கீடுக்கு எடுத்துக் கொள்ளப்படும் ) சர்வீஸ் முடித்த பனிஷ்மெண்ட் ஏதும் இல்லாத ஒருவரின் கிராஜூவிட்டியைக் கணக்கிடுவோம். (இப்போதைய DA 50%.)


  பேசிக்....................................40000

 DA 50%(40000×50÷100)..............20000

மொத்தம்(40000+20000)........60000

26ஆல் வகுக்க= 42800/26 = 2308ரூபாய்.


   இந்த 2308தான் ஒருநாள் சம்பளம்.


15நாள் சம்பளம்= 2308×15= 34620ரூபாய்


33 ஆண்டுக்கு = 34620×33= 11,42,460ரூபாய் கிராஜூவிட்டியாகக் கிடைக்கும்.


சுருக்கமாகச்சொன்னால்


(Basic+DA)÷26×15×சர்வீஸ் செய்த ஆண்டுகள். இதுவே கிராஜூவிட்டி ஆகும்


பணிக் கொடை DCRG ரூ. 25,00,000 /- (இருபத்தைந்து லட்சம்) யாருக்கு கிடைக்கும்?


பணிக் கொடை DCRG - Death Cum Retirement Gratuity ரூ. 25,00,000 /- (இருபத்தைந்து லட்சம்) யாருக்கு கிடைக்கும்?


50% மேல் அகவிலைப் படி ஏறினால்...    


வீட்டு வாடகைப் படி, மருத்துவப் படி, பயணப்படி, மாற்றுத் திறனாளி ஊர்திப் படி முன்பணம், பணிக் கொடை உட்பட அனைத்து வகையான படிகளையும் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு  25% உயர்த்தி வழங்கி வருகிறது.


அதனடிப்படையில், பணிக் கொடை உச்சவரம்பு ரூ 20 லட்சம் என்பதை ரூ. 25 லட்சமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.


மத்திய அரசை பின்பற்றி தமிழ்நாடு அரசும் பணிக் கொடை உச்ச வரம்பை ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தி உள்ளது.


பணிக் கொடை ரூ. 25 லட்சம் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கிடைக்குமா.?


கிடைக்காது.


குறிப்பாக, Group D & C ஊழியர்களுக்கு கிடைக்காது.


ஓய்வு பெறும் நாளில் அடிப்படை ஊதியம் ரூ. 82,000/- க்கு மேல் பெற்று, முழு கால அளவு பணி புரிந்தவர்களுக்கு மட்டுமே பணிக்கொடை ரூ. 25 லட்சம் கிடைக்கும்.


பொதுவாக பணிக்கொடை ரூ 25 லட்சம் DRO, RDO, DD, JD, AD, DE, CEO போன்ற மாவட்ட அளவிலான உயர் அலுவலர்களுக்கு கிடைக்கும்.


மத்திய அரசைப் பின்பற்றி பணிக் கொடையை 25% உயர்த்தி ரூ 25 லட்சமாக அறிவித்த தமிழ்நாடு அரசு..


அதே பார்வையில்..


 வீட்டு வாடகைப் படி, மருத்துவப்படி, பயணப்படி, மாற்றுத் திறனாளி ஊர்திப் படி முன்பணத் தொகையை 25% உயர்த்தி அறிவித்திருக்க வேண்டும்.



>>> Click Here to Download - DCRG G.O.Ms.No.281, Dated 06-09-2024...

பணி ஓய்வு மற்றும் இறப்பு பணிக்கொடைத் தொகையினை 01.01.2024 முதல் ₹ 20 இலட்சத்தில் இருந்து, ₹ 25 இலட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை DCRG G.O.Ms.No.281, Dated 06 September 2024 வெளியீடு...


பணி ஓய்வு மற்றும் இறப்பு பணிக்கொடைத் தொகையினை Death Cum Retirement Gratuity Amount 01.01.2024 முதல்  ₹ 20 இலட்சத்தில் இருந்து, ₹ 25 இலட்சமாக   உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை DCRG G.O.Ms.No.281, Dated: 06-09-2024 வெளியீடு...


1.1.2024 முதல் 

பணிக்கொடை 25,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.. 


1.1.2024 முதல் நடைமுறை..


1.1.2024 to 31.8.2024 வரை ஏற்கனவே ஓய்வு பெற்றோர்....

( தமிழ்நாட்டில் GPF employee)


இந்த கூடுதல் பணப் பலனை பெறலாம்...


புதிய கருத்துருக்கள் அனுப்பும் போது DCRG அதிகபட்சமாக 25L வரை பெறலாம்...



>>> Click Here to Download - DCRG G.O.Ms.No.281, Dated 06-09-2024...


குறித்த காலத்தில் வழங்காததால் பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வுக்காலப் பணப்பலன்களுக்கு வட்டி வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு...

 


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் மண்டலத்தில் டிரைவர், கண்டக்டர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமமூர்த்தி உள்பட 11 பேர், தங்களுக்கு சட்டப்படி இரண்டு மாதங்களுக்குள் பணிக்கொடை விடுப்பு ஊதியம் உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்கள் வழங்காததால், அதற்கு ஆண்டுக்கு 10 சதவீத வட்டி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் அளித்த உத்தரவு வருமாறு: தாமதமாக வழங்கப்பட்ட ஓய்வுகால பணப்பலன்களுக்கு 6 சதவீத வட்டியை, ஆறு தவணைகளாக வழங்கும்படி ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கிலும், ஓய்வுபெற்ற டிரைவர், கண்டக்டர்களுக்கு 6 சதவீத வட்டியை அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும். இந்த தொகையை, மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஆறு மாத தவணைகளாக வழங்க வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் வட்டி தொகையை வழங்காவிட்டால், 10 சதவீத வட்டியை வழங்க வேண்டும். அந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பணிக்கொடை (DCRG - Death Cum Retirement Gratuity) - தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கணக்கிடப்படும் முறை...


பணிக்கொடை என்பது அரசு /அரசு சார்ந்த ஊழியர் அல்லது ஆசிரியர் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது அவ்வூழியருக்கு, ஊதியம் வழங்கும் நிறுவனம், ஊழியரின் பணியை பாராட்டும் விதமாக வழங்கும் ஒரு ஒட்டு மொத்தத் தொகையாகும். பணிக்கொடை ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும் அவர் ஓய்வுபெறும்போது பெற்ற ஊதியமும் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகிறது.


அரசு & அரசு சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை கணக்கீடு முறை

பணி ஓய்வின் போது பணிக்கொடை கணக்கீடு செய்யும் போது ஊழியர் இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்காலம் ஆகிய இரண்டும் கணக்கீட்டில் எடுத்து கொள்ளப்படுகிறது.


இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் (Last Pay Drawn)

அரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களைப் பொருத்த வரை, அடிப்படை ஊதியம் (Basic Pay), தர ஊதியம் (Grade Pay), சிறப்பு ஊதியம் (Special Pay), தனி ஊதியம் (Personal Pay) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) ஆகியவற்றின் கூட்டுத்தொகையை, இறுதியாக வழங்கப்பட்ட ஊதியமாகக் (Last Pay Drawn) கொண்டு பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.


பணிக்காலம் கணக்கிடுதல்

ஓய்வு (Retirement) இனங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளும் (அல்லது 4 ஆண்டு 9 மாதங்களுக்கு மேலும்) அரசுப் பணியில் இருந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 33 ஆண்டு பணிக்காலம் மட்டுமே பணிகொடை கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

32 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு மேல் பணி செய்திருந்தால் 33 ஆண்டு பணிக்காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 32 ஆண்டுகள் 5 மாதங்கள் பணி செய்திருந்தால் 32 ஆண்டுகள் மட்டுமே பணிக்காலமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.


பணிக்கொடை கணக்கீடு

மொத்தப் பணி செய்த ஆண்டிற்கு அரை மாத ஊதியம் வீதம், குறைந்த பட்சமாக இரண்டரை மாத ஊதியமும், அதிக பட்சமாக பதினாறரை (16 ½) மாத ஊதியமும் பணிக்கொடையாக வழங்கப்படும். ஆனால் அதிகபட்ச வரம்பு ரூபாய் 20 இலட்சம்.


பணிக்கொடை வருவாய்க்கு வருமான வரி சட்டம் 10 (10)-இன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்பட மாட்டாது.


அரசு மற்றும் அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனங்களுக்கு ஊழியர் செலுத்த வேண்டிய தொகைகள் நிலுவை இருப்பின், அதனை பணிக்கொடைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.


பணியின் போது காலமான ஊழியர்களுக்கு பணிக்கொடை

பணியின் போது இறந்த அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச பணிக்காலம் கணக்கில் கொள்ளாமல், பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள் இறந்தவர்களுக்கு இரண்டு மாத ஊதியமும், ஒன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இறந்தவர்களுக்கு ஆறு மாத ஊதியமும், ஐந்து முதல் 20 ஆண்டுகளுக்குள் பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு 12 மாத ஊதியமும், 20 ஆண்டும் அதற்கு மேலும் பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு அரை மாத ஊதியம் வீதம் கணக்கிட்டு பணிக்கொடை வழங்க வேண்டும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...