கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
🍁🍁🍁 இளநிலை பட்டப் படிப்பு/ தொழிற்கல்வி பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு...
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கல்விக் கட்டணம் செலுத்தி கீழ்கண்ட பட்டியல் வகைப்பாட்டின் அடிப்படையில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு தொழில்நுட்ப பட்டயப் படிப்பு பயிலும் மாணவ மாணவியர்களிடம் இருந்து கீழ்க்கண்ட அறக்கட்டளைகள் மூலமாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகையைப் பெற வின்பப்பிக்கலாம்...
கீழே உள்ள link மூலம் விண்ணப்பம் download செய்து கொள்ளுங்கள்...
>>> Click here to Download Details of Scholarship & Application...
🍁🍁🍁 மனத்தாழ்வு நிலையில் சிக்காமல் வாழ்வதற்கான சில பயிற்சிகள்... Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...
1. ஒரே மாதிரி வாழ்கை முறையை மாற்ற வேண்டும்( try to avoid monotonous life style) அன்றாட வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன மாற்றங்களையும் மகிழ்ச்சியுடன் ரசிக்க வேண்டும்.
இருவாரத்திற்கு ஒருமுறையேனும் ஏதேனும் உறவினர் வீடுகளுக்கு சென்று வரலாம் .
இரண்டு மாதம் ஒருமுறையேனும் சிறு சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லலாம்.
புதிதாக ஒரு இசை ஆல்பத்தைக் கேட்கலாம் அதை ரசிக்கலாம்
ஒரு புத்தகத்தில் மனதை சிறிது தொலைக்கலாம்
சிலருக்கு திரைப்படம் காண்பதில் சிறிது ரிலாக்சேசன் கிடைக்கும்.
ஒய்வு என்பது வெறுமனே படுத்து தூங்குவது அன்று. நாம் அன்றாடம் செய்யும் வேலைகளில் இருந்து மாற்றமாக வேறொன்றைச்செய்வதே ஓய்வு.
2. சிறுசிறு விஷயங்களையும் ரசிக்கப் பழக வேண்டும்( try to appreciate small things , which are so big for our mind )
புதிதாக வெளியிடப்பட்ட இசைக்கோர்வை,
வீட்டு பூந்தொட்டியில் அன்று மலர்ந்த ரோஜாப்பூ,
சிறிது நேரமே தோன்றும் வானவில்,
அம்மா / மனைவி செய்த புதிய வகை சிற்றுண்டி
குழந்தையின் புன்னகை இவ்வாறு ரசிக்க எவ்வளவோ இருக்கின்றன.
அதை விடுத்து எப்போதும் நம்மிடம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் தேவையற்றது.
3. " தான்" என்ற அகந்தை( ego is the gateway for depression ) எண்ணம்.
எல்லாம் தன்னால் தான் நடந்தது.
நான் இல்லையேல் எதுவும் இல்லை என்ற எண்ணம் கொண்டோரே பின்னாளில் மனத்தாழ்வு நிலைக்கு செல்கின்றனர்.
வீட்டில் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் உரிய மரியாதை கொடுத்து கூட்டு முயற்ச்சியால் வளர்ச்சி காண்கிறோம் என்று நினைப்பதே மனதுக்கு நல்லது.
அதிகாரத்தை எப்போதும் அடுத்தவனை பலகீனப்படுத்த அடிமையாக்க பயன்படுத்தக்கூடாது.
4. தோல்விகள் நல்லது என்று நம்ப வேண்டும்
வெற்றி பெற்ற யாரும் எடுத்த எடுப்பிலேயே அந்த நிலைக்கு வரவில்லை. பல தோல்விகளுக்குப் பின்பே இந்த நிலையை அடைந்திருப்பார் என்ற அறிவு வேண்டும். காதல் தோல்வி/ தொழில் தோல்வி/ திருமண தோல்வி இப்படி எதில் தோற்றாலும் அதற்குப் பின்பும் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்ப வேண்டும்( defeats are not permanent , victories too) .நாம் பெறும் வெற்றிக்குப்பிறகும் தோல்விகள் உண்டு என்பதையும் நம்ப வேண்டும்.
வெற்றியால் வரும் பெருமை கர்வத்தை தலைக்கு பாரமாக ஏற்றக்கூடாது. தோல்வியில் பெறும் பொறுமையையும் ஞானத்தையும் தலையில் ஏற்றிக்கொள்ள வேண்டும்.
5. மது / புகை ( getting away from addictive habits) இவையிரண்டிலும் இருந்து எப்போதும் விலகியிருப்பது நல்லது. மனத்தாழ்வு நிலையில் இந்த போதை வஸ்துக்களுக்கு அடிமையாகிவிட வாய்ப்புள்ளது. Occasional party drinker களாக இருக்கும் பலரும் மனத்தாழ்வு நிலையில் தினமும் மது அருந்து பழக்கத்திற்கு அடிமை ஆகி விடுவர்.
6. ஆன்மீக நாட்டம்( spirituality) இறை வழிபாடு முதலியவை மனதை சாந்தப்படுத்தலாம். இருப்பினும் அதுவும் நமது வீட்டுக்குள் வழிபாட்டுத்தலங்களுக்குள் இருக்க வேண்டும். நமது சுதந்திரம் பிறரது சுதந்திரத்தில் தலையிடக்கூடாது. நமது சமயமே சிறந்தது. மற்றவை தாழ்ந்தவை என்ற எண்ணம் ஆபத்தானது. மனிதனை சாதி சமய பணக்கார ஏழை வர்க்க ஏற்றத்தாழ்வுகளின்றி மதிக்க வேண்டும். இது மன அமைதிக்கு மிகவும் முக்கியம்.
7. சரியான நேரத்தில் உறங்கி சரியான நேரத்தில் எழுவது நல்லது. ( இரவு 10 முதல் காலை 6 வரை) ( sleep hygiene).
இந்த தூக்க ஒழுக்கத்தை பேணாதவர்களுக்கு மன அமைதி கிடைப்பது கஷ்டம்தான்.
8. எதையும் ஆக்கப்பூர்வமாக( positive thoughts) அணுகுவது மனதுக்கு நல்லது. எதிர்மறை எண்ணங்கள்( negative feeling) இருக்கலாம். ஆனால் அதுவே எப்போதும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
9.மனத்தாழ்வு நிலை என்பது மனநோயாகவே இருப்பினும் உடலில் மூளையின் ரசாயனங்களில் ஏற்படும் மாற்றங்களும் இதற்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது ( செரடோனின் எனும் ரசாயன நொதியின் அளவு மூளையில் குறைவதால் வருகிறது )
10.மனத்தாழ்வு நிலைக்கு மருத்துவ சிகிச்சை அவசியம்
அதை சரிசெய்ய திறன்மிக்க மருந்துகள் நம்மிடம் உள்ளன.
ஆகவே நாட்களை வீண்டிக்காமல் உடனே தங்களுக்குத் தெரிந்த மனத்தாழ்வினால் அவதியுறும் நண்பர்கள் உறவினர்களை உடனடியாக மன நல மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள உந்துங்கள்.
உடலைக் காப்பது போல மனதையும் காத்துக் கொள்வது நல்லது.
Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
🍁🍁🍁 அரசு பணியிடங்களுக்கு நேர்காணல் நியமனம் ரத்து...
பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கிணங்க 23 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்கள்அரசு பணிக்கான நேர்காணலை ரத்து செய்துள்ளது என மத்தியஅமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டில் சுதந்திர தின உரையின் போது மத்திய அரசு பணிகளில் குரூப் பி (நான் கெஸடட்) மற்றும் குரூப் சி பிரிவுகளில் நேர்காணல் கூடாது. அதற்கு பதிலாக எழுத்து தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யலாம் என கூறி இருந்தார். மேலும் கடந்த காலங்களில் நேர்காணலின் போது நிகழ்ந்த குற்றங்கள் மற்றும் புகார்கள் ஏராளமாக இருந்தது. அதுமட்டுமல்லாது வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே பணத்தை பெற்றுக்கொண்டு சலுகை காட்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. நேர்காணலை ரத்து செய்வதோடு எழுத்து தேர்வு நடத்துவதன் மூலம் அனைவருக்கும் சம அளவிலான வாய்ப்பு வழங்கப்படும். என அமைச்சர் கூறினார். குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் பிரதமரின் இந்த வேண்டுகோளை நடைமுறைப்படுத்தின. அதே நேரத்தில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த உத்தரவை அமல்படுத்த தயங்கின. தற்போதைய நிலையில் ஜம்முகாஷ்மீர் , லடாக் உள்ளிட்ட எட்டு யூனியன் பிரதேசங்கள் மற்றும் 28 மாநிலங்களில் 23 மாநிலங்கள் வரையில் நேர்காணல் நடைமுறையை நிறுத்தி உள்ளது. இது திருப்தி அளிப்பதாக உள்ளது என அமைச்சர் கூறினார்.
🍁🍁🍁 டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு- மேலும் 6 பேர் கைது...
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு தொடர்பாக, மேலும் 6 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் உட்பட 6 பேர் விசாரணைக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இடைத்தரகர் ஜெயக்குமார், அரசு ஊழியர்கள் என இதுவரை 51 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 6 பேர் கைதாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு கிடப்பில் கிடந்ததாகப் புகார் எழுந்ததால் 15 நாட்களில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. வட்டார தகவல் கூறுகின்றன.
இதனிடையே, ராமநாதபுரத்தில் குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சிப் பெற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக நேரடி நியமனம் செய்யப்பட்ட மாலாதேவி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...