வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பாதிப்பின் தன்மைக்கேற்ப இடைக்கால நிவாரணமாக இந்தத் திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படும்...
>>> Click here to Download G.O.33, Dated 03-10-20, Reg: POCSO Victim Compensation...
வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பாதிப்பின் தன்மைக்கேற்ப இடைக்கால நிவாரணமாக இந்தத் திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படும்...
>>> Click here to Download G.O.33, Dated 03-10-20, Reg: POCSO Victim Compensation...
கடுமையான காய்ச்சல் அடிக்கும் போது உடலில் இருந்து நமது நீர்ச்சத்து வெளியேறிக்கொண்டிருக்கும் ஆகவே நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள தேவையான அளவு நீரை எடுக்க வேண்டும்.
தேவையான அளவு நீர் என்றால் எவ்வளவு?
ஒரு நோயாளி தனது சிறுநீரின் தன்மையை கவனித்து வர வேண்டும்
- ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறையேனும் சிறுநீர் கழித்தாக வேண்டும்
- சிறுநீரின் அளவை தோராயமாகவாவது அளக்க வேண்டும். குழந்தைகளாக இருப்பின் சிறுநீரை பேனில் பிடித்து அளக்கலாம்.
சராசரி சிறுநீர் வெளியேறும் அளவு என்பது 1-2 மில்லி லிட்டர் / கிலோ கிராம் உடல் எடை / மணிநேரம் .
அதாவது ,
20 கிலோ எடை இருக்கும் ஒரு குழந்தை
சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு 20 முதல் 40 மில்லி சிறுநீர் கழிக்க வேண்டும்.
ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை 120 முதல் 240 மில்லி கழித்தாலும் சரியே.
24மணிநேரம் கணக்கிடுகையில் 480 முதல் 960 மில்லி கழித்திருக்க வேண்டும்
எது அபாயகட்டம் ???
0.5 மில்லி சிறுநீர் / கிலோகிராம் உடல் எடை/ மணி நேரம் மற்றும் அதற்கும் குறைவாக சிறுநீர் கழித்தால் ஆபத்தான கட்டம் என்று பொருள்.
உதாரணம் -
ஒரு 20 கிலோ எடை உள்ள குழந்தை , ஆறு மணிநேரமாக சிறுநீரே கழிக்காமல் இருந்தாலோ , வெறும் 60 மில்லி அல்லது அதற்கும் குறைவாக கழித்தால் ஆபத்து என அறிக.
அடுத்து சிறுநீரின் நிறம் - இளமஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். அடற் மஞ்சள் நிறத்தில் சென்றாலோ சிவப்பு நிறத்தில் சென்றாலோ ஆபத்தென அறிக.
ஒருவருக்கு காய்ச்சல் அடித்தால் அவரை பட்டினியாய் போடுவது தவறு.
அவரது உடலுக்கு தேவையான சக்தியை நீர் மற்றும் நீராகாரங்கள் வழி வழங்க வேண்டும்.
ஓ.ஆர் எஸ் எனும் உயிர் காக்கும் அமுதத்தை வர லிட்டர் நன்னீரில் கலந்து அதை குடிக்க கொடுக்க வேண்டும்.
இளநீர், மோர் போன்றவற்றை கொடுக்கலாம்
சாதமாக இல்லாமல் கஞ்சியாக வடித்து மூன்று வேளையும் கொடுக்கலாம்
கொரோனா தொற்று கண்ட பேலியோ கடைபிடிக்கும் மக்கள் வீட்டில் தனிமைப்படுத்தி இருந்தால் உங்களது உடல் நிலை ஒத்துழைத்தால் தாராளமாக பேலியோ உணவு முறையை தொடரலாம்
அல்லது
மேற்சொன்ன உணவு முறையை காய்ச்சல் இருக்குமட்டும் தொடர்ந்து விட்டு பிறகு பேலியோவுக்கு மாறலாம்
வாய்வழியாக உணவு எடுக்க இயலா நிலைவரின், மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து நாளம் வழியே திரவங்கள் ஏற்றப்படும்
மேலும் வாந்தி இருப்பின்
அதை உடனடியாக மருத்துவரிடம் சென்று காட்டி வாந்தியை சரி செய்து கொள்ள வேண்டும். வாந்தி தொடர்ந்து இருந்தால் மாத்திரைகள் எதையும் விழுங்கினாலும் ப்ரயோஜனமில்லை.
குறிப்பு - நீர்ச்சத்து நம்மை காக்கும் . அதை சரியாகப் பராமரிக்க வேண்டியது நமது பொறுப்பு.
Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
உயரதிகாரிகளின் ஆதரவுடன் திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு மாற்றுப் பணி பெறும் ஊழியா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால், பணியாளா்கள் இல்லாமல் அரசுப் பள்ளிகள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்கள் தடுமாறுவதாக புகாா் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல், பழனி, வேடசந்தூா், வத்தலகுண்டு என 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. திண்டுக்கல்- பழனி சாலையில் செயல்பட்டு வரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில், கண்காணிப்பாளா்கள், இளநிலை உதவியாளா்கள், அலுவலக உதவியாளா்கள் என சுமாா் 32-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. இதில் 2 பணியிடங்கள் மட்டுமே, ஊழியா்களின் மருத்துவ விடுப்பு காரணமாக காலியாக உள்ளன.
ஆனால், பள்ளிகளில் பணிபுரிய வேண்டிய இளநிலை உதவியாளா்கள், அலுவலக உதவியாளா்கள், ஆய்வக உதவியாளா்கள், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உயரதிகாரிகளுடன் தங்களுக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி மாற்றுப் பணி பெற்றுக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிலா் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வந்தனா்.
அரசுப் பள்ளிகள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் நியமிக்கப்படும் ஊழியா்கள், வேலை செய்ய வேண்டிய நிா்ப்பந்தம் மற்றும் பயணத் தொலைவு காரணமாக தற்போது 12 ஊழியா்கள் மாற்றுப் பணியில் முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனா். இதன் காரணமாக வேடசந்தூா், குஜிலியம்பாறை அடுத்துள்ள புளியம்பட்டி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசு மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளிலும், வட்டார கல்வி அலுவலகங்களிலும், இளநிலை உதவியாளா்கள் மற்றும் அலுவலக உதவியாளா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை தலைமையாசிரியா்களும், வட்டாரக் கல்வி அலுவலா்களும் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
இதுகுறித்து தலைமையாசிரியா்கள் தரப்பில் கூறியதாவது: பதவி உயா்வுக்காக ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளை தோ்வு செய்யும் ஊழியா்கள், பணியில் சோ்ந்தவுடனேயே முதன்மைக் கல்வி அலுவலகத்துடன் தங்களுக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி மாற்றுப் பணிக்கான உத்தரவை பெற்றுவிடுகின்றனா். இதன் காரணமாக, காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டும் கூட பணியாளா் இல்லாத நிலையே தொடா்ந்து நீடித்து வருகிறது. முதன்மைக் கல்வி அலுவலக உத்தரவு என்பதால் தலைமையாசிரியா்களாலும் எதுவும் பேச முடியாத நிலை உள்ளது என்றனா்.
ஆண் ஊழியா்கள் இல்லாத அலுவலகம்: குஜிலியம்பாறை வட்டார கல்வி அலுவலகத்தில், மொத்தமுள்ள 10 பணியிடங்களில், கண்காணிப்பாளா், பதிவுரு எழுத்தா் பணியில் உள்ளவா்கள், வேடசந்தூா் மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு மாற்றுப் பணியில் சென்றுவிட்டனா். இதன் காரணமாக அந்த அலுவலகத்தில் 4 பெண் ஊழியா்கள் மட்டுமே பணிபுரிந்து வரும் நிலையில், நிா்வாக ரீதியாக பல்வேறு பிரச்னைகளை அந்த வட்டாரத்தில் பணிபுரியும் ஆசிரியா்கள் எதிா்கொண்டு வருகின்றனா்.
இதுதொடா்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் எஸ். ஜேம்ஸ் கூறியதாவது: குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பணிபுரிய வேண்டிய கண்காணிப்பாளா், தட்டச்சா், பதிவுரு எழுத்தா் உள்ளிட்டோா் மாற்றுப் பணியில் சென்றுவிட்டனா். இதனால் ஆசிரியா்களின் கோரிக்கைகள், 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. வேடசந்தூா் மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு ஊழியா்கள் அலைக்கழிக்கப்படுகின்றனா்.
350 ஆசிரியா்களுக்கான ஊதியப் பட்டியல் தயாரிப்பதற்கு ஊழியா்கள் இல்லாத நிலையில், அந்த பணியை ஆசிரியா்களே மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே, உபரி இல்லாத நிலையில் மாற்றுப் பணியிடம் வழங்குவதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தவிா்க்க வேண்டும். இல்லாதபட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.
விழாக்காலத்தையொட்டி முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் வட்டியில்லாமல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் வழங்கப்படும்- நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன்.
இந்த திட்டத்திற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு பயண சலுகையாக டிக்கெட் கட்டணத்தின் மூன்று மடங்கு தொகை பண வவுச்சர்களாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் 50 ஆண்டு காலத்திற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.
சாலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதல் மூலதன செலவாக 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் -நிர்மலா சீதாராமன்.
மகிழ் முற்றம் - கையேடு - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை வெளியீடு - தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மகிழ் முற்றம் சார்ந்து அமைக்கப்பட...