கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 தமிழகத்தில் 8 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் இடமாற்றம்...

 பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது..

 அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஸ்வரி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழியை கரூர்

மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் ஆட்சியர் அன்பழகன் மதுரைக்கும், பெரம்பலூர் ஆட்சியர் சாந்தா திருவாரூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 தர்மபுரி ஆட்சியராக  கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  கன்னியாகுமரி ஆட்சியராக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த வினய் சேலம் பட்டுப்புழு வளர்ப்பு துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சுகாதாரத்துறை திட்ட இணை செயலாளராக இருந்த சிவஞானம் சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக நிர்மல் குமாரும், சுகாதாரத்துறை இணை செயலாளராக அஜய் யாதவும்,  கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

>>> Click here to Download G.O. Rt. No.3101, Dated: 24.10.2020 - IAS Transfers and Postings...


🍁🍁🍁 M.Phil., - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - இணைய வழி நுழைவுத்தேர்வு 31.10.2020...

 



🍁🍁🍁 வட்டியின் மீது வட்டியை தள்ளுபடி செய்வதற்கான வழி முறையை மத்திய அரசு வெளியிட்டது. 2020 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை பெறப்பட்ட கடன்களுக்கும் இது பொருந்தும். (ரூ. 2 கோடி வரையிலான தனிநபர் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையலாம்)...

1








🍁🍁🍁 G.O.Ms.No.324, Dated 25-4-95 (Cross Major Incentive) மேல்நிலை வகுப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாடங்களில் எந்த பாடத்தை பயின்றாலும் ஊக்க ஊதியம் வழங்கலாம் எனும் அரசாணை...

 

>>> Click here to Download G.O.Ms.No.324, Dated 25-4-95 (Cross Major Incentive)...


🍁🍁🍁 மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான படிவம்... (1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை), பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்...

 >>> Click here to Download CWSN Children Scholarship, Aid, Maintenance Allowance Formats...


🍁🍁🍁 01-01-2021முதல் 100% பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு ஐந்து வேலைநாட்கள் இயங்கும் - அரசாணை வெளியீடு...

 அரசாணை எண்: 597, நாள் : 24-10-2020, 

01-01-2021முதல் 100% பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு ஐந்து வேலைநாட்கள் இயங்கும்...



🍁🍁🍁 தலைமையாசிரியரின் கையெழுத்தை போலியாக போட்ட ஆசிரியர் - போலீசில் புகார்...

 தலைமை ஆசிரியரின் கையொப்பத்தை போலியாக போட்டு, கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பித்த அரசுப்பள்ளி கணினி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினி பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சரவணன், முதுகலை அறிவியல் பட்டதாரியான இவர் பள்ளி நிர்வாகத்திற்கு கட்டுப்படாமல் ஒழுங்கீனமாக செயல்பட்டு வந்ததால், தலைமை ஆசிரியரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது பணி உயர்வுக்காக கல்வியியல் கல்வி பயில எண்ணிய சரவணன் டெல்லியிலுள்ள திறந்தநிலை பல்கலைகழகம் ஒன்றில் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் தலைமையாசிரியர் சின்னதுரையின் கையொப்பத்தை போலியாக தனது கையால் போட்டு பள்ளி முத்திரை குத்திய சரவணன் அத்துடன் இணைத்து அனுப்பிய பல்கலைகழக சேர்க்கை கட்டணத்திற்கான வரைவோலைக்கான தொகை ரூ 500-க்கு பதில் ரூ 400-க்கு எடுத்து அனுப்பியுள்ளார்.

இதனால் பல்கலைக்கழகத்தால் நிராகரிக்கப்பட்ட சரவணனின்  விண்ணப்பம் மீண்டும் பள்ளி முகவரிக்கே திருப்பி அனுப்பப்பட அது தலைமையாசிரியரின் கைக்கே வந்துள்ளது. கவரை பிரித்து பார்த்த தலைமை ஆசிரியர் சின்னதுரை தனது கையொப்பம் போலியாக போடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியுற்று சரவணனிடம் கேட்க இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. விளைவு தற்போது தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சரவணனை தேட தற்போது முதுகலை பட்டதாரி கணினி ஆசிரியரான சரவணன் தலைமறைவாகி தேடப்படும் குற்றவாளியாகியுள்ளார்.

மாணவர்களுக்கு கல்வியுடன் நல்லொழுக்கத்தை கற்று தர வேண்டிய ஆசிரியர் ஒருவரே மோசடி பேர்வழியாகி போலீசாரால் தேடப்பட்டு வரும் சம்பவம் சக ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teacher stabbed to death in government school near Thanjavur - what is the reason..?

தஞ்சாவூர் : அரசுப் பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை - காரணம் என்ன..? மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவர் கத்தியால் குத்திக்...