கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 SBI இணையவழிச் சேவை நாளை (08-11-2020) ஒரு நாள் மட்டும் தடை ஏற்படும்...

 


🍁🍁🍁 நீதிமன்ற வழக்குகள் காலதாமதம் - சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளரிடம் நிதி இழப்பு வசூலிக்கப்படும். மேலும் ஒவ்வொரு வழக்கிற்கும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரே முழு பொறுப்பாகும் - பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்களின் உத்தரவு...

 பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்: 16046/ அ5/ இ1/ 2016, நாள் : 03-11-2020...





🍁🍁🍁 Whatsapp இன் புதிய அப்டேட் - தானாகவே Message கள் மறையும் வசதியை அறிமுகப்படுத்தியது whatsapp...

Disapear வசதியை ஆன் செய்து விட்டால் Group chat & பயனாளரின் message அனுப்பப்பட்ட 7 நாட்களில் தானாக அழிந்து விடும்.



🍁🍁🍁 தொலைநிலைக்கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்வழி படிப்பு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து வழக்கு...

தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்றோருக்கு தமிழ் வழியில் படித்ததற்கான இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்த வழக்கில், பல்கலைக்கழகங்கள் தரப்பில் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சட்டப்படிப்பை தமிழ் வழியில் முடித்துள்ளேன். டிஎன்பிஎஸ்சி கடந்தாண்டு நடத்திய துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 குரூப் 1 பணியிடங்களுக்கு விண்ணப்பித்தேன். 

முதல்நிலை தேர்வு மற்றும் பிரதான எழுத்துத்தேர்வை முடித்து நேர்முகத்தேர்வில் பங்கேற்றேன். கடந்த டிச. 9ல் வெளியான தேர்வானோர் பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை.தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு எனக்கு வழங்கப்படவில்லை. ஆனால், இந்த இட ஒதுக்கீட்டை தொலைநிலைக்கல்வியில் பயின்றோருக்கு கொடுத்துள்ளனர். தொலைநிலைக்கல்வியில் சில பாடங்கள் ஆங்கிலத்திலும், சில பாடங்கள் தமிழிலும் நடத்தப்படுகிறது. தொலைநிலைக் கல்வியில் பயின்ற பலர் டிஎன்பிஎஸ்சியில் இந்த ஒதுக்கீட்டின் மூலம் வேலை பெற்றுள்ளனர்.

எனவே, தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இடஒதுக்கீட்டின் படி, தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கக்கூடாது என்றும், 

குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதித்தும், கல்லூரிக்கு சென்று முழு நேரமாக தமிழ் வழியில் பயின்றவர்களை, தேர்வு செய்து புதிய பட்டியல் வெளியிட்டு, அதன்பிறகே குரூப் 1 பணி நியமனங்களை மேற்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், இந்த வழக்கில் தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்மனுதாரராக சேர்த்து, அவர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

🍁🍁🍁 பள்ளிகள் திறப்பு - கருத்து கேட்பு கூட்டம் - பெற்றோருக்கு மட்டுமே அனுமதி... (நாளிதழ் செய்தி)

 பள்ளிகளை திறந்தால், கொரோனா தொற்று அதிகமாகும் என, எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, வரும், 9ம் தேதி, அனைத்து பள்ளிகளிலும், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதன் விபரம்: பள்ளிகள் திறப்பு குறித்த கருத்து கேட்பில், பெற்றோர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பெற்றோர் இல்லாத நிலையில், காப்பாளர் அல்லது உறவினர்கள் பங்கேற்கலாம்.

பெற்றோர் - ஆசிரியர் கழக முன்னாள் நிர்வாகிகள்பங்கேற்கக் கூடாது. பெற்றோர் என்ற பெயரில், அரசியல் கட்சியினர், கருத்து கேட்பு கூட்டத்தில்பங்கேற்க அனுமதி அளிக்கக் கூடாது. எவ்விதமான சமூக அமைப்புகள், அரசியல் ஆதரவு அமைப்புகளை சேர்ந்தவர்களையும் அனுமதிக்க கூடாது.இவ்வாறு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

🍁🍁🍁 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து நவம்பர் 11ல் முதல்வர் அறிவிப்பு...

 ஈரோடு மாவட்டம், பவானியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: 

பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை, ஆசிரியர் தகுதி தேர்வில் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற அனைவரும், வாழ்நாள் முழுதும் ஆசிரியர் பணி பெற தகுதி உடையவர்களாக, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கும்பகோணம் பள்ளி தீ விபத்து பிரச்னைக்கு பின், கட்டட உறுதி சான்றிதழ் பெறும் பள்ளிகளுக்கு மட்டுமே, அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

முன்னர், பள்ளிக்கான அங்கீகார சான்று ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டது. தற்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கட்டட உறுதிசான்று பெற்ற பள்ளிகளுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு பள்ளிக்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இதன்படி தமிழகத்தில், 2,690 பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதிகளில் உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வாயிலாக நடத்தப்படும் பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப் பட்டு உள்ளன. ஏதாவது பள்ளியில், அப்பொருட்கள் வழங்காமல் விடுபட்டிருந்தால், உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வரும், 9ல் பெற்றோர்களுடன் அந்தந்த பள்ளிகளில் கலந்தாய்வு நடத்தப்படும்.

11ல் அறிவிப்பு

அதன்பின், முதல்வரிடம் வழங்கப்படும் கருத்துகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் வரும், 11ல், பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் உரிய முடிவை அறிவிப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.

🍁🍁🍁 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது? தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு...

கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் சென்றுவரத் தேவையான போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்த முகமது யூனுஸ் ராஜா, கடந்த 2018ல் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், ஏழை நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். ஆகவே, மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் இன்று விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன? கிராமங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சென்று வர போதுமான அளவு போக்குவரத்து வசதிகள் உள்ளதா?.மருத்துவர்களின் ஆரம்ப கால ஊதியமாக எவ்வளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது? இதே நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து அரசுத் தரப்பில் விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...