>>> Click here to Download Non Ommission Certificate Format...
>>> Particulars of Polling Personnel - Annexure I -FORMAT
>>> Non Ommission Certificate Format...
அரசு அறிவித்துள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் பயன், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘தற்போது 7.5 சதவீத உள் ஒதுக்கீடு காரணமாக, நீட் தேர்வில் 720-க்கு 150 மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்குகூட அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். அதேநேரம், 500-க்கும் அதிகமான மதிப்பெண் எடுத்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்காது. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஏழை, நடுத்தர மாணவர்களே அதிகம் படிக்கின்றனர். எனவே, கலந்தாய்வு தொடங்குவதற்குள், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் தமிழக அரசு சேர்க்க வேண்டும்’’ என்றனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 405 இடங்கள் கிடைக்க வாய்ப்பு சென்னை நேரு விளையாட்டரங்கில் கலந்தாய்வு நாளை தொடக்கம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்குகிறது. இதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 405 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் 26 அரசு மற்றும் 15 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 2 அரசு மற்றும் 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 2020-21ம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண் ணப்பித்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கு 24,712 பேரும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,511 பேரும் விண்ணப்பித்திருந்தனர். பரிசீலனைக்குப்பின் அரசு ஒதுக்கீட்டுக்கு 23,707, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 14,276 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
இதற்கான தர வரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் சென்னையில் நேற்று வெளி யிட்டார். சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மாணவர் தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வ ராஜன் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நீட் தேர்வில் 720-க்கு 710 மதிப்பெண்கள் எடுத்த திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்த ஆர்.ஜன் அகில இந்திய அளவில் 8-வது இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்தார். நாமக்கல்லைச் சேர்ந்த மோகனபிரியா ரவிச்சந்திரன் (705) 2-வது இடத்தையும் சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ஜி.ஸ்வேதா (701) 3-வது இடத்தையும் பிடித்தனர்.
தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் தலா 5 மாணவர்களும் மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசையில் ஷமீல் கல்லாடி 700 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும் அம்மு மரியம் அனில் (695) 2-ம் இடத்தையும் ஜெய் முரேகர் (691) 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் 313 எம்பிபிஎஸ் இடங் கள், 92 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 405 இடங்கள் 7.5 சதவீதம் உள் ஒதுக் கீட்டின்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த இடங்களுக்கு விண்ணப்பித்த 972 பேரில் 951 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன்படி, நீட் தேர்வில் 644 மதிப்பெண் கள் எடுத்த தேனி பெரியகுளம் சில்வார் பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார் முதலிடம் பிடித்தார். கள்ளக்குறிச்சி எஸ்.அன்பரசன் (646) 2-வது இடத்தையும் சென்னை எஸ்.திவ்யதர்ஷினி (620) 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அரசு ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் மாநில அரசு கல்வித் திட்டத்தில் படித்த 15,885 பேர், சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்களில் படித்த 7,822 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 9,596 பேர் நடப்பாண்டு படித்த வர்கள். 14,111 பேர் பழைய மாணவர்கள்.
சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தரவரிசைப் பட்டியல்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கலந்தாய்வு 18-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. முதலில் சிறப்பு பிரிவினருக்கும் அடுத்ததாக 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும். இதையடுத்து, பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கும்.
கரோனா தொற்று தடுப்பு விதி முறைகளின்படி கலந்தாய்வு நடைபெற உள்ளது. தினமும் 500 மாணவர் கள் அழைக்கப்படுவார்கள். மாணவருடன் வர ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். எந்த தேதி, நேரத்தில் கலந்தாய்வுக்கு வரவேண்டும் என்று எஸ்எம்எஸ் மூலமும் இணையதளத்திலும் தகவல் தெரிவிக்கப்படும். மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் இன்னும் 5 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்டந்தோறும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 1 லட்சத்து 12 ஆயிரத்து 370.
பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 603. மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 385. ஆண் வாக்காளர்களைவிட, பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 13 ஆயிரத்து 233 பேர் அதிகம் உள்ளனர். தமிழகத்திலேயே ஆறு லட்சத்து 55 ஆயிரம் எண்ணிக்கையுடன் சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கீழ்வேளூர் குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி. அங்கு 1,73,107 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் விவரங்களை elections.tn.gov.in இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள டிசம்பர் 15ஆம் தேதி வரை மண்டல அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
இதுதவிர, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நவம்பர் 21 மற்றும் 22, டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அதிலும் பொதுமக்கள் பங்கேற்று திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சியில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 16 சட்டமன்ற தொகுதிகளில் 39.40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதன்படி சென்னையில் 19,39,694 ஆண் வாக்காளர்கள், 19,99,995 பெண் வாக்காளர்கள், 1015 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 39,40,407 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கர்நாடகாவில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கான கல்லூரிகள் இன்றுமுதல் திறக்கப்படுகின்றன. நேரில் வர முடியாத மாணவர்கள் ஆன்லைன் வழியாககற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, மற்ற மாநிலங்களைப் போல கர்நாடகாவிலும் கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. புதிய கல்வி ஆண்டுக்காகவும் கடந்த ஜூன் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த ஒரு மாதமாக வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளது.
கரோனா புதிய நோயாளிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10 ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால் கல்விநிலையங்களை திறப்பது குறித்துஅதிகாரிகளுடன் கர்நாடக அரசுஆலோசித்து வருகிறது. அதன்படி இந்த கல்வி ஆண்டுக்கான கலை, அறிவியல், பொறியியல்,சட்டம் உள்ளிட்ட பாடங்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கான கல்லூரிகளை 17-ம் தேதி (இன்று) திறக்க முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டார்.
இதையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகங்கள் முடுக்கிவிட்டுள்ளன. கல்லூரி வளாகம், வகுப்பறை உட்பட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தூர இடைவெளியுடன் இருக்கை கள் போடப்பட்டுள்ளன. கல்லூ ரிக்கு வரும் மாணவர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
“கல்லூரிகளில் உரிய பாதுகாப்புடன் பாடம் கற்பிக்கும் அதே வேளையில், கரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்களை மட்டுமே வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும். வகுப்புக்கு நேரடியாக வர விருப்பம் இல்லாத மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கற்க அனுமதிக்க வேண்டும்” என கல்லூரி நிர்வாகங்களுக்கு உயர்க்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது - ஆசிரியர் கூட்டணி கண்டனம் Joint Director Mr. Pon K...