கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்காளர் பட்டியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாக்காளர் பட்டியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அக்டோபர் 29 முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு...


 அக்டோபர் 29 முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு...


*சென்னை: நாடு முழுவதும், அக்.29 முதல் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


*இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான கால அட்டவணையை இந்தியதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கடிதத்தையும் அனுப்பியுள்ளது.


 

*அதன்படி, 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்கும் நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.


*வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகளுக்கு முன்னதாக, ஆக.20 முதல் அக்.18-ம் தேதி வரை வாக்குச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று பட்டியலை சரிபார்க்க வேண்டும், வாக்குச்சாவடிகளை சீரமைக்க வேண்டும், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய வேண்டும்.



*வாக்காளர்களின் தெளிவான மற்றும் சரியான புகைப்படங்களைப் பெற்று இணைத்தல், உரிய பாக எண் அடிப்படையில் அதற்கு உட்பட்ட பகுதியில் வாக்குச்சாவடியை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அக்.19 முதல் 28-ம் தேதி வரை, உரிய படிவங்களைத் தயாரித்தல் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


 

*அதன்பின், அக்.29-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். அன்று முதல் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கான விண்ணப்பங்களைப் பெறும் பணியை தொடங்க வேண்டும். நவ.28ஆம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெற வேண்டும்.



*பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையை டிச.24-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, தரவுகளை முழுமை செய்து வாக்காளர் பட்டியலைத் தயாரித்து, துணைப்பட்டியலை அச்சிட வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியலை அடுத்தாண்டு ஜனவரி 6-ம் தேதி வெளியிட வேண்டும்.


Voter Helpline App மூலம் வாக்காளர்கள் Booth slip Download செய்யும் முறை & பாகம் எண், வரிசை எண் அறியும் முறை...

  


Voter Helpline App மூலம் வாக்காளர்கள் Booth slip Download செய்யும் முறை & பாகம் எண், வரிசை எண் அறியும் முறை...


அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே / தேர்தல் பணி அலுவலர்களே, 


தேர்தல் நாளன்று (19.04.2024) (வெள்ளிக்கிழமை) வாக்குச்சாவடி போவதற்கு முன் #BoothSlip #பூத்ஸ்லீப் ஆன்லைனில் நீங்களே download செய்துகொள்ளலாம்.


இதோ வழிமுறை.

1. Download Voter Helpline App from this website --> voters.eci.gov.in


இந்த வெப்சைட்டில் கிழே சென்று பார்த்தால் Mobile Apps பகுதியில் இருக்கும் "Voter Helpline App" for Android and Apple.

2. Install செய்த பின்னர், App open செய்தால் Login registration செய்து கொள்ளவும்.


3. Login செய்த பின்னர், உங்களின் mobile number + Password மூலம் உள்ளே செல்லுங்கள்.


4. App open செய்த பின்னர், மேலே "Search your name in electoral role" என search option இருக்கும். அதை கிளிக் செய்யவும்.


5. பின்னர் நான்கு வழிகள் மேலே தெரியும்.


     - Search by Mobile
     - Search by Bar / QR code
     - Search by Details
     - Search by EPIC No



6. நாம் உபயோகிப்பது "Search by EPIC No" option. அதை கிளிக் செய்து, உங்கள் Voter IDயில் உள்ள நம்பரை Enter செய்து Search பட்டனை அழுத்தவும்.


7. உங்களின் #பூத்ஸ்லீப் #BoothSlip வரும். அதில் பாகம் எண், வரிசை எண் அறிந்து கொள்ளலாம். அதை நீங்கள் சரிபார்த்த பின்னர், கீழே Share Option மூலம் உங்களின் இமெயிலுக்கோ, WhatsApp message ஆகவோ, அல்லது Print option கிளிக் செய்து PDF ஆக download செய்து கொள்ளலாம்.



வாக்காளர் பட்டியல் - பாகம் எண், வரிசை எண் எளிமையாக அறிந்து கொள்ளும் முறை...



வாக்காளர் பட்டியல் - பாகம் எண், வரிசை எண் எளிமையாக அறிந்து கொள்ளும் முறை...


Voter List - Part Number, Serial Number - Easy way to know...



1. கீழே உள்ள  Link ஐ Click செய்யுங்கள்...

👇🏼👇🏼👇🏼


https://electoralsearch.eci.gov.in/


*Search by EPIC* என்பதை Click செய்யுங்கள்


2. உங்கள் 

*Voter ID number* ஐ பதிவிடுங்கள்


3. "SUBMIT"

என்ற optionஐ 

Click செய்யுங்கள்


4. வாக்காளர் பட்டியலில் 

உங்கள் 

*பாகம் எண்

*வரிசை எண்

*முகவரி

போன்ற அனைத்து விவரங்களும் கிடைக்கும்.



18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைப் பதிவு செய்யும் வழிமுறை - தேர்தல் ஆணையம் (Procedure for Enrollment of Names in Electoral Roll for 18-year-olds - Election Commission)...

 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில்  தங்களது பெயர்களைப் பதிவு செய்யும் வழிமுறை - தேர்தல் ஆணையம் (Procedure for Enrollment of Names in Electoral Roll for 18-year-olds - Election Commission)...



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் மாதம் 27-ந்தேதி வெளியீடு (Draft Electoral Roll of Tamil Nadu to be released on October 27)...




தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் மாதம் 27-ந்தேதி வெளியீடு (Draft Electoral Roll of Tamil Nadu to be released on October 27)...


வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.


 இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5-ந் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.


ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறுகிறது. அந்த காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வு செய்யப்படும்.


அதன் பின்னர் வரும் ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கும் நாளன்று, சரிபார்ப்புக்கு வசதியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.



இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் வரும் அக்டோபர் 17-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.


இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:-


தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியாக அறிவிக்கப்பட்ட வரும் அக்டோபர் 17-ந் தேதிக்கு பதிலாக அக்டோபர் 27-ந் தேதி வெளியிடப்படும். இதற்கான அட்டவணையை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் அன்றைய தினம் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளும் தொடங்கும்.



அதன்படி, அக்டோபர் 27-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.


இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், டிசம்பர் 26-ந் தேதி வரை பரிசீலிக்கப்படும். அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5-ந் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.


வாக்காளர் பட்டியல் திருத்த காலகட்டத்தில் ஆதார் இணைப்புக்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். பல மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகங்கள் ஆதார் இணைப்புக்கான முகாம்களை நடத்துகின்றனர். ஆனால் நகர்ப்புறங்களில் ஆதார் இணைப்பு குறைவாக உள்ளது.


இவ்வாறு சத்யபிரதா சாகு  கூறினார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2023ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ள Voter Helpline செயலி (App to know if your name is included in 2023 voter list)...



2023ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ள Voter Helpline செயலி (App to know if your name is included in 2023 voter list)... 



       🎯 *வாக்காளர்களின் கனிவான கவனத்திற்கு...


🎯  வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா? என்பதை கீழ்க்கண்ட செயலி மூலம் உடனே கண்டறிய முடியும்...


🎯  இந்த செயலியை பதிவிறக்கம் செய்தவுடன், open செய்து, Search by EPIC  Number (வாக்காளர் அடையாள அட்டை எண்)_ உதாரணமாக WRC1234765

உள்ளீடு செய்து, Search தர வேண்டும்.



🎯  அடுத்த சில நொடிகளில், உங்கள் பெயர், நீங்கள் எந்த வாக்குச்சாவடியில் ஓட்டு செலுத்த வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.


🎯  இந்த தகவல்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🎯 இந்த பட்டியலில் உங்கள் பெயர் அடங்கிய தகவல்கள் இடம் பெற்றிருந்தால் மட்டுமே, வருகிற  2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க இயலும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்...


🎯  உங்கள் பெயர், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா?  என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள்.


செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான - செய்தி வெளியீடு எண்: 1247, நாள்: 27-06-2023 (Regarding Amendment of Special Abbreviation System of Electoral Roll with Photograph - Press Release No: 1247, Dated: 27-06-2023)...


>>> புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான - செய்தி வெளியீடு எண்: 1247, நாள்: 27-06-2023 (Regarding Amendment of Special Abbreviation System of Electoral Roll with Photograph - Press Release No: 1247, Dated: 27-06-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, அடுத்த மாதம் ஜூலை 21ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.


அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக வைத்து, புகைப்படத்துடன் கூடிய, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான அட்டவணையை, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


அதன்படி, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அடுத்த மாதம் 21ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21 வரை, வீடு வீடாகச் சென்று, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் ஈடுபடுவர்.


ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர 29 வரை, ஓட்டுச்சாவடிகளை திருத்தி அமைத்தல்; வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல்; வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் படத்தின் தரத்தை மேம்படுத்துதல்;

ஓட்டுச்சாவடிகளின் எல்லைகளை மறு சீரமைத்து ஒப்புதல் பெறுதல், போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.


அக்டோபர் 17ஆம் தேதி, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.


 அன்று முதல் நவம்பர் 30 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பம் அளிக்கலாம். அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.


அலுவலக வேலை நாட்களில், ஓட்டுச்சாவடி அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில், விண்ணப்பம் அளிக்கலாம். சிறப்பு முகாம் நாட்களில், முகாமுக்கு சென்று விண்ணப்பம் அளிக்கலாம்.


பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

வாக்காளர் (Voter's) பட்டியலில் பெயர் சேர்த்தல் / திருத்துதல் / இடமாற்றம் / ஆதார் எண் இணைத்தல் முகாம் - தேவையான ஆவணங்கள் மற்றும் படிவங்கள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1976, நாள்: 09-11-2022 (Name Addition / Correction / Transfer / Aadhaar Number Linking Camp in Electoral Roll - Required Documents and Forms - Tamil Nadu Government Press Release No: 1976, Dated: 09-11-2022)...



>>> வாக்காளர் (Voter's) பட்டியலில் பெயர் சேர்த்தல் / திருத்துதல் / இடமாற்றம் / ஆதார் எண் இணைத்தல் முகாம் - தேவையான ஆவணங்கள் மற்றும் படிவங்கள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1976, நாள்: 09-11-2022 (Name Addition / Correction / Transfer / Aadhaar Number Linking Camp in Electoral Roll - Required Documents and Forms - Tamil Nadu Government Press Release No: 1976, Dated: 09-11-2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு...

 நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு.



உள்ளாட்சி பெயர் , வார்டு பதிவு செய்து  பட்டியலை பார்க்கலாம்


வாக்குச்சாவடி பட்டியலும் வெளியீடு.


வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தும் வாக்குச்சாவடியை தெரிந்து கொள்ளலாம்.


>>> உங்கள் விவரங்களைத் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...



வாக்காளர் பட்டியலில் பாகம் எண், வரிசை எண் அறிய வலைதள முகவரி...

 வாக்காளர் பட்டியலில் பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை இரு முறைகளில் அறியலாம்...

பெயர், தந்தை/கணவர் பெயர், வயது, பிறந்த தேதி, பாலினம், மாநிலம், மாவட்டம், சட்டமன்ற தொகுதி ஆகியவற்றை உள்ளீடு செய்து பெறலாம்.



அல்லது

வாக்காளர் அடையாள அட்டை எண் (EPIC No.), மாநிலம் ஆகியவற்றை உள்ளீடு செய்து பெறலாம். 



வலைதள முகவரி:

https://electoralsearch.in/##resultArea

புதிதாக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சரிபார்க்கவும், 18 வயது நிரம்பியவர்கள் பெயரை இணைக்கவும் வலைதள முகவரிகள்...

 புதிதாக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சரிபார்க்கவும், 18 வயது நிரம்பியவர்கள் பெயரை இணைக்கவும் வலைதள முகவரிகள்...

உங்கள் குடும்ப உறுப்பினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியல் உள்ளதா என்பதை அறியவும், உங்கள் பெயர், வயது, வார்டு எண் எல்லாம் சரியாக உள்ளதா என்பதையும்  இந்த இணைப்பில் சரி பார்த்து கொள்ளலாம்

https://www.elections.tn.gov.in/rollpdf/SSR2020_16112020.aspx


 18 வயது நிரம்பியவர்கள்  பதிவு செய்ய, இந்த https://www.nvsp.in/ இணைப்பை பயன்படுத்தி ஆன்லைனிலேயே எளிமையாக பதிவு செய்யலாம். 


திருத்தம் செய்ய Dec 12,13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்...

🍁🍁🍁 தமிழகத்தில் 6.10 கோடி வாக்காளர்கள் உள்ளதாக வரைவு பட்டியல் வெளியீடு...

 தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். 

தமிழகத்தில் இன்னும் 5 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்டந்தோறும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 1 லட்சத்து 12 ஆயிரத்து 370.

பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 603. மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 385. ஆண் வாக்காளர்களைவிட, பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 13 ஆயிரத்து 233 பேர் அதிகம் உள்ளனர். தமிழகத்திலேயே ஆறு லட்சத்து 55 ஆயிரம் எண்ணிக்கையுடன் சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் கீழ்வேளூர் குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி. அங்கு 1,73,107 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் விவரங்களை elections.tn.gov.in இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள டிசம்பர் 15ஆம் தேதி வரை மண்டல அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.

இதுதவிர, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நவம்பர் 21 மற்றும் 22, டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அதிலும் பொதுமக்கள் பங்கேற்று திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

சென்னை மாநகராட்சியில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 16 சட்டமன்ற தொகுதிகளில் 39.40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதன்படி சென்னையில் 19,39,694 ஆண் வாக்காளர்கள், 19,99,995 பெண் வாக்காளர்கள், 1015 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 39,40,407 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...