கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ருடால்ப் இங்க்ராம் (Rudolph Ingram)- உலகின் அதிவேக சிறுவன் (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)...

ருடால்ப் இங்க்ராம் (Rudolph Ingram)- உலகின் அதிவேக சிறுவன்..

ருடால்ப் இங்ராம், மினி உசேன் போல்ட் என கொண்டாடப்படுகிறார். ஏன் என்றால் அவர், அவ்வளவு வேகம்.

இன்ஸ்டாகிராமில் இங்ராமை 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர். கால்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் அவரைப் பற்றி ட்வீட் செய்ததை அடுத்து இங்காரம் புகழ் பெற்றார். உங்களுக்கு ஏன் ஓடுவது பிடித்திருக்கிறது என்று கேட்டபோது, ​​"பதக்கங்கள் கிடைக்கும்" என்றார்.

>>> ருடால்ப் இங்க்ராம் (Rudolph Ingram)- உலகின் அதிவேக சிறுவன் குறித்த காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...



அரசு ஊழியர்கள், அரசு மருத்துவர்களை வஞ்சிக்கும் தமிழக அரசு...

 தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்களான, ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெறும் போது அவர்களுக்கான ஓய்வூதிய பலன்கள்களில் 10,500 ரூபாய் உயர்த்தி அண்மையில் அரசாணை பிறப்பித்துள்ள கர்நாடக அரசை போல் எங்களுக்கும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தினர் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது தமிழக அரசு. ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர், அரசு நிர்வாகத்தில் மறு நியமனம் செய்யப்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தில் இது தொடர்பான பலன்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார் முதல்வர். 

தமிழக அரசின் இந்த உத்தரவு அரசு ஊழியர்களிடமும், அரசு மருத்துவர்களிடமும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசு ஊழியர் சங்கத்தினர் "கொரோனா ஊரடங்கால் அரசுக்கு ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியால் எங்களுக்கான பழைய பென்ஷன் திட்டத்தை ஏற்க மறுத்து வருகிறார் முதலமைச்சர். அதேபோல எங்களுக்கான அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு பலன்களை நிறுத்திவிட்டது தமிழக அரசு. இப்படிப்பட்ட சூழலில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மட்டும் உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றுவது துரதிஷ்டவசமானது' என்றனர்.

 நம்மிடம் பேசிய அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகியான டாக்டர். பெருமாள்பிள்ளை அரசின் கோரிக்கையை ஏற்று எங்களின் ஊதிய கோரிக்கை போராட்டத்தை வாபஸ் பெற்று ஒரு வருடம் கடந்து போன நிலையிலும் கோரிக்கையை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட சூழலிலும் முதல்வர், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எங்களின் ஊதிய பிரச்சினையை தீர்க்க மனம் வரவில்லை. தமிழகத்தில்தான் கொரானா தடுப்பு பணிகள் மிக சிறப்பாக இருப்பதால், மற்ற மாநிலங்கள் தமிழகத்தின் விவரங்களை பின்பற்ற வேண்டும் என ஐ சி எம் ஆர் நிறுவனம் தெரிவிக்கிறது. குணமடைந்தவரின் எண்ணிக்கையும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது. வெறும் 18 ஆயிரம் அரசு மருத்துவர்களை வைத்தே இதனை சாதித்து இருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புதான். சுகாதாரத்துறை செயல்பாடுகளில் 25வது இடத்தில் உள்ள பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் கூட அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியமும், ஊதிய உயர்வும் தரப்படுகிறது. தமிழக அரசு மட்டும் எங்களை துச்சமாக நினைக்கிறது. இத்தனைக்கும் அரசாணை எண் 354ன் படி அமல்படுத்துங்கள் என்றுதான் சொல்கிறோம். நிதி நெருக்கடியிலும் ஐஏஎஸ்-ன் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் போது எங்களுக்கான ஊதிய விஷயத்தில் மட்டும் அரசு பாராமுகம் காட்டலாமா? மக்களின் நோய் தீர்க்கும் பணியை அர்ப்பணிப்புடன் செய்து ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தில் 30 சதவீதம் குறைத்து இருப்பதை என்னவென்று சொல்வது? அதிகாரிகளுக்கு செய்தது போலவே எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் முன்வர வேண்டும். இல்லையெனில் மீண்டும் நாங்கள் போராடுவதை தவிர வேறு வழியில்லை' என்றார் ஆதங்கத்துடன்.

 இதுகுறித்து சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டபோது "கொரானா தடுப்பு நடவடிக்கையில் முழுமையாக ஈடுபட்டு வருகிறோம். அரசு மருத்துவர்கள் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் அரசுக்கு தெரியும். விரைவில் நல்லது நடக்கும். அதே சமயம் அரசின் நிதி நிலைமைகளை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்கிறார், சூழலை விளக்கியபடி...

நன்றி: நக்கீரன், 2020 நவம்பர் 25-27, இதழ் பக்க எண்:36,37...

அதானிக்குக் கடன் தர வேண்டாம்: சிட்னி மைதானத்துக்குள் நுழைந்து எதிர்ப்பைத் தெரிவித்த போராட்டக்காரர்கள்...

 இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் ஆட்டத்தின்போது, இரு போராட்டக்காரர்கள் மைதானத்துக்குள் நுழைந்து அதானி நிறுவனத்துக்கு எதிரான தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள்

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன.

சிட்னியில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மயங்க் அகர்வால், சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள் இந்நிலையில் ஏழாவது ஓவரின்போது இரு போராட்டக்காரர்கள் சிட்னி மைதானத்துக்குள் நுழைந்தார்கள். அவர்கள் கையில் இந்தியத் தொழிலதிபர் அதானிக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகள் இருந்தன. இதன்பிறகு பாதுகாவலர்கள் மைதானத்துக்குள் நுழைந்து போராட்டக்காரர்களை வெளியே கொண்டு சென்றார்கள். இச்சம்பவத்தால் கிரிக்கெட் ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்தில் நிலக்கரிச் சுரங்கம் வெட்டி எடுப்பதற்குகு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தொழிலதிபர் அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நிலக்கரிச் சுரங்கம் கட்டுமானத்தை மேற்கொள்ள அதானி குழுமத்துக்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் இந்த அனுமதிக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நிலக்கரி சுரங்கத்தால் வடக்கு ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் எனப் புகார் தெரிவித்துள்ளார்கள். பொது இடங்களில் பதாகைகளுடன் நின்று அதானிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள் சிட்னி நகரில் ஏற்கெனவே அதானிக்கு எதிரான போாராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதன் மற்றொரு முயற்சியாக இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் ஆட்டம் நடைபெறும் சிட்னி மைதானத்துக்குள் இரு போராட்டக்காரர்கள் நுழைந்து கவனத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

பாரத ஸ்டேட் வங்கி, அதானிக்கு 1 பில்லியன் டாலரைக் கடனாக வழங்குவதற்கு ஸ்டாப் அதானி என்கிற ஆஸ்திரேலியப் போராட்டக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிட்னி மைதானத்துக்குள் நுழைந்த இரு போராட்டக்காரர்களும் அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்கக் கூடாது என்கிற வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள்.

நன்றி : தினமணி

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது...

 சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது...

அரசு மருத்துவர்களுக்கு இந்தாண்டு இட ஒதுக்கீடு இல்லை - உச்சநீதிமன்றம்...

 


அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் (நாளிதழ் செய்தி)...

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளி ஆசிரியர்களில் சிலர் தனியார் பள்ளிகளில் பாடங்கள் நடத்த உதவுவதாகவும், பகுதி நேரமாக இந்த பணிகளில் ஈடுபடுவதாகவும் சில தகவல்கள் வெளியாகின்றன.

இதனால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் பாடம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் 17,840 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

கொரோனா தாக்கம் முழுமையாக குறையும் வரை ஆன்லைன் வகுப்புகள் தொடரும்....

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Director's Proceedings

  மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2411...