கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 07.12.2020 (திங்கள்)...

 🌹கண்ணீர் சிந்தும்போது துடைக்க யாரும் வருவதில்லை.

கவலை கொள்ளும் போது ஆறுதல் சொல்ல யாரும் வருவதில்லை.

ஆனால் அறியாமல் ஒரு  

தவறு செய்து பாருங்கள்.

உங்களை விமர்சிக்க 

இந்த உலகமே கூடிவரும்.!

🌹🌹சந்தோஷம் என்பது நாம் வாழும் இடத்தில் இல்லை.

நாம் வாழும் விதத்தில் தான் உள்ளது.!!

🌹🌹🌹இதுவும் கடந்து போகும் என்பதை விட இதுவும் பழகிப் போகும் என்பதே சில சமயம் வாழ்க்கைக்கு பொருத்தமானதாக அமைகிறது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘கொவிட்-19 தடுப்பூசி ஒரிரு வாரங்களில் தயாராகிவிடும் - பிரதமர் நம்பிக்கை. 

📕📘ஜனவரியில் பள்ளிகளை திறக்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் - நாளிதழ் செய்தி. 

📕📘மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தரப்பில் அறிவுறுத்தப் பட்டால் CBSE பள்ளிகளை திறக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை. 

📕📘பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில் நிரப்புதல் தொடர்பாக இயக்குநரின் செயல்முறை வெளியீடு.

📕📘கோவை பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு டிசம்பர் 23 என  அறிவிப்பு.

📕📘M.Phil, P.Hd. ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க ஜுன் 2021 வரை கால அவகாசம் நீட்டிப்பு.

📕📘ஆரோக்ய சேது' ஆப் அவசியம்... கல்லூரிகளுக்கு தமிழக அரசின் நெறிமுறைகள் அறிவிப்பு!

📕📘அரசு அலுவலகம்/ பள்ளிகளில் தினக்கூலியாக பணியாற்றுபவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க உரிய வழிமுறையாக புள்ளிவிபரம் கோருவது சார்ந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

📕📘ஜிப்மரில் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு; 71 சதவீதத்தினர் பங்கேற்பு: வரும் 11-ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள்

📕📘தொழில்நுட்ப களப்பணிக்கு 640 ஆசிரியர்கள் தேர்வு பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

📕📘20 துறைகளில் உள்ள 52 பிரிவுகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை மறுசீரமைப்பு செய்ய உத்தரவு.

டிசம்பர் மாத ஊதியத்துடன் மறுசீரமைக்கப்பட்ட ஊதியத்தை வழங்க உத்தரவிட்டு அரசாணை வெளியீடு.

டிசம்பர் 15க்குள் மறுசீரமைப்பு செய்து அறிவிக்கையை கருவூலத்துறைக்கு சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தல்

📕📘நாள்கள் குறைவாக உள்ளதால் பாடங்களை மேலும் குறைக்க முடிவு.                  👉பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து மற்றொரு ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்                                                                                                                                                                                                                                                    📕📘அரசு ஒதுக்கீட்டு பணியிடங்களில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய கூடாது தலைமை   செயலாளர் சண்முகம் எச்சரிக்கை.                                            

📕📘தமிழகத்தில், புயல் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மேற்கொள்ள,11 அமைச்சர்களை நியமனம் செய்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு  உத்தரவிட்டுள்ளார்.

📕📘டெல்லியில் 861.90 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான பூமி பூஜை வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். 

📕📘கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகளின் முடிவுகள் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளன. எனவே கொரோனா வைரஸ் பெருந்தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம் - டெட்ரோஸ் அதனோம்.

📕📘நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு, சீன விண்கலம் பூமிக்குத் திரும்பும் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது.

📕📘நிர்வாக வசதிக்காக தற்போது 38 மாவட்டங்களாக உள்ள ரஜினி மக்கள் மன்றங்களை 60ஆக விரிவுப்படுத்த ரஜினிகாந்த் முடிவு.

மாவட்டங்களை பிரிவுக்கும் பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பாளர்  அர்ஜூன மூர்த்திக்கு அதிகாரம் வழங்கினார் ரஜினி

📕📘எந்த ஒரு கட்சி உதயமாவதற்கும் முன்னணி, பின்னணியில் பாஜக இல்லை

 எங்கள் கட்சியை தமிழகத்தில் வளர்க்க உள்ளோம், பிற கட்சிகளை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை

- வானதி சீனிவாசன்

📕📘நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறாரா?

ரஜினியின் தேவை தமிழ்நாட்டிற்கு தேவையே இல்லை

- சீமான்

📕📘காங்கிரசுடன் கூட்டணி வைத்ததன் மூலம் மிகப்பெரிய தவறை செய்து விட்டேன்.நான் சேர்த்து வைத்த நற்பெயரை எல்லாம் இழந்து விட்டேன்.

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் முதலமைச்சராக நீடித்திருப்பேன்.

- கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

📕📘வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில்  போராட்டம்.

சான் பிரான்ஸிஸ்கோ - ஆக்லாந்து பே பாலத்தின் மீது கார்களை நிறுத்தியது உட்பட பல்வேறு இடங்களில் போராட்டம்.

📕📘வீரப்பனை வீழ்த்திய குழுவில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இரட்டைப் பதவி உயர்வு செல்லாது - உயர் நீதிமன்றம்

📕📘மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் - விவசாயிகள் அறிவிப்பு

📕📘மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன்-க்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா நன்றி

என்னுடைய நேர்மை, அர்ப்பணிப்பு, கல்வித்துறைக்கான எனது சேவையை கருத்தில் கொண்டு ஆதரவளிப்பது என்பது எனக்கான ஆதரவு அல்ல, இந்த நாட்டின் எதிர்காலத்திற்கான ஆதரவு அது 

-சூரப்பா

📕📘அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஐதராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த்; பிறந்தநாளன்று போயஸ் இல்லத்திற்கு ரசிகர்கள் வரவேண்டாம் என ரஜினிகாந்த் வேண்டுகோள்

📕📘புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளான நேற்று ஊடகவியலாளர் விக்ரமன் எழுச்சித்தமிழர் முன்னிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார்.

📕📘வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாவிட்டால் கேல்ரத்னா விருதை திருப்பித்தருவேன் என ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் எச்சரிக்கை. 

📕📘தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிவர் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் நேற்று முதல் ஆய்வு செய்து வருகின்றனர். 

📕📘வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்பது பற்றி நாங்கள் விவாதிக்கத் தயார் 

- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

📕📘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 -வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

📕📘ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா : 

"நடராஜன்  ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்படுவார் என்று நினைத்தேன். அனைத்து பந்து வீச்சாளர்களும் தடுமாறினர் , ​​ஆனால் நடராஜன் மிக சிறப்பாக பந்து வீசினார். நடராஜனுக்கு எனது வாழ்த்துக்கள்."

📕📘டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு கோரி வரும் 8 ஆம் தேதி,விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

📕📘திட்டமிட்டப்படி தமிழகத்தில் இன்று கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு

📕📘டிசம்பர் 8ம் தேதி நடக்கவிருக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கிறது.                        

📕📘தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்துக்கு 8 மாதங்களாக ஆளுநரின் ஒப்புதலை பெறாதது ஏன் மு.க. ஸ்டாலின் கேள்வி

📕📘சேலத்தில் சாலை விதிகளை மீறுவோரை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வழக்குப் பதிவு செய்யும் முறை அறிமுகம்                                            

📕📘ஊடக செய்திகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

📕📘அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான வாக்குகளை திரு. ஜோ பைடன் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

📕📘நாகை மாவட்டம் கொளப்பாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மழை சேதங்களை பார்வையிட்டார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

📕📘வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்துக்கு திமுக தோழமை கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.

வருகின்ற 8ம் தேதி நடைபெறும் பாரத் பந்த் முழு அடைப்பை வெற்றி அடைய செய்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

📕📘பாஜக & ஆர்எஸ்எஸ் அச்சுறுத்தல் காரணமாகவே ரஜினி கட்சி தொடங்குகிறார்.

ரஜினி பாஜகவின் முகமே , உடல்நலம் சரியில்லை எனக் கூறியவர் கட்சி தொடங்கியது அச்சுறுத்தல் காரணமாகதான்

துணைவேந்தர் சூரப்பாவை கமல் ஆதரிப்பது ஏன் என தெரியவில்லை ?

திருமாவளவன் எம்பி

📕📘சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன

இரும்பாலை தனியார் மையத்தால் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது

மத்திய அமைச்சர் பக்கன்சிங் குளாஸ்தே

📕📘அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளில் சமூகநீதி சுடரை அணையாமல் காப்போம்

இந்தியாவில் தோன்றிய அறிவு சூரியன் ,  நூற்றாண்டின் புதிய புத்தர் ,  ஒடுக்கப்பட்டோரின் ஒளிவிளக்கு அம்பேத்கர்

திமுக தலைவர் முக.ஸ்டாலின்                                      

📕📘தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அம்பேத்கரின் பங்களிப்பை நாம் நினைவில் கொள்வோம் என ராகுல் காந்தி கூறினார். மேலும் இந்தியாவை அனைத்து விதமான பாகுபாடுகளிலிருந்தும் விடுவிக்க உழைப்பதே அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை என தெரிவித்தார்.

📕📘கொரோனா தடுப்பு மருந்து வரும் வரையில் கவனக்குறைவு வேண்டாம்     முகக் கவசம் அனைவரும் அணிய வேண்டும்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்                                                           📕📘ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் (TDS) செய்தல் தொடர்பான அனைத்து தகவல்களையும்  உள்ளடக்கிய வருமான வரித் துறையின் சுற்றறிக்கை வெளியீடு

📕📘தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் வாய்ப்பு வழங்குங்கள் -உயர்நீதிமன்ற மதுரை கிளை

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

நிலம் தொடர்பாக தமிழக அரசால் வெளியிடப்பட்ட அனைத்து அரசாணைகளின் தொகுப்பு - PDF FILE...

 Compendium of  Government Orders on Land  Issues Pertaining to the Urban Local Bodies...

நிலம் தொடர்பாக தமிழக அரசால் வெளியிடப்பட்ட அனைத்து அரசாணைகளின் தொகுப்பு - PDF FILE...



வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி...

 


2021 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது கூகுள் பே, போன்பே மூலம் பணம் அனுப்பவும் 30 சதவீதம் கட்டணம்...

 2021 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது Google Pay,  Phone Pay மூலம் பணம் அனுப்பவும் 30 சதவீதம் கட்டணம்...



டெட் (TET) தேர்வு அறிவிப்பு எப்போது? - தேர்வாளர்கள் எதிர்பார்ப்பு...

 


பள்ளிக்கல்வி பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு First Aid for Students and Teachers (FAST) என்ற செயலியை பதிவிறக்கம் செய்தல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள் & Mobile Application Direct link...

பள்ளிக்கல்வி பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு First Aid for Students and Teachers (FAST) என்ற செயலியை பதிவிறக்கம் செய்தல்...


>>> இயக்குநரின் செயல்முறைகள்...


>>> Mobile Application Direct link...


ஓய்வூதியதாரர்களுக்கான இணையதளம் ( Pensioners' Portal )...


 பென்ஷனர்கள் தங்கள் விவரங்களை பென்சனர் போர்ட்டலில் பதிவு செய்து கொண்டால் மாதாமாதம் கிடைக்கும் பென்ஷன் தொகை எவ்வளவு, டி ஏ எவ்வளவு போன்ற விஷயங்களையும் தங்களின் வாரிசுதாரர் பதிவு போன்ற விஷயங்களையும் எளிதாக வலைதளம் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் பார்த்துக்கொள்ளலாம். அதற்கான வலைதள விவரம்  கொடுக்கப்பட்டுள்ளது...

https://tnpensioner.tn.gov.in/pensionportal/

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers suffer as online training links are not available - Daily News

 இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காதால் ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி  Teachers suffer as online training links are not available - Dail...