கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பாங்க் ஆப் இந்தியா (Bank of India) - வேலைவாய்ப்பு...

 பாங்க் ஆப் இந்தியா பாதுகாப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2020 !

பாதுகாப்பு அதிகாரி, தீயணைப்பு அதிகாரி, மனிதவள ஆலோசகர், எம்.எஸ்.எம்.இ – ஐடி ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 23 ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 21.12.2020. விண்ணப்பத்தார்கள் தகுதி விவரங்களை சரிபார்த்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் பாங்க் ஆப் இந்தியா

பணியின் பெயர் பாதுகாப்பு அதிகாரி, தீயணைப்பு அதிகாரி, மனிதவள ஆலோசகர், எம்.எஸ்.எம்.இ – ஐடி ஆலோசகர்

பணியிடங்கள் 23

விண்ணப்பிக்க இறுதி நாள் 21.12.2020

விண்ணப்பிக்கும் முறை Online

பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்கள்:

Security Officer (20)

Fire officer (01)

HR consultant (01)

MSME – IT Advisor (01)

 வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது 25 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

B.E. (Fire Engineering)/ BE (Fire Engineering) / B.Tech.(Safety & Fire Engineering / B. Tech (Fire Technology & Safety Engineering) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 மாத சம்பளம்:

Security Officer Rs. 31,705 to RS. 45,950/- per month

Fire Officer Rs. 31,705 to RS. 45,950/- per month

HR Consultant Rs.20,000/- will be paid for attending each meeting

MSME – IT Advisor Rs.75,000/- per month on consolidated basis

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் குழு விவாதம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

வங்கி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 21.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Apply Online

https://bankofindia.co.in/Career

ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு விண்ணப்பித்து IFHRMS – PAN No, Cell No, E-mail ID Update செய்யலாம்...



 IFHRMS ல் ஒவ்வொரு பணியாளரின் PAN No, Cell No, E-mail ID ஆகியவற்றை மாற்ற DDO (ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்) Levelல் Option வழங்கப்பட்டுள்ளது…


PAN Number ஐ மாற்றம் செய்ய Helpdesk ஐ அணுகத் தேவையில்லை… DDO Level ல் மாற்றிக் கொள்ளலாம்…


E-Mail ID update செய்வதால்…. ஒவ்வொரு பணியாளரது Pay Slip  அவரது E-mail ID க்கு மாதம்தோறும் அனுப்பப்படும்…. தனியாக Login செய்து Payslip Download செய்ய வேண்டியது இல்லை….


Cell Number Update செய்வதால்… Salary Credit ஆன உடன் Message அனுப்பப்படும்…


மேற்கூறிய மாற்றங்களை கீழ்கண்ட Option ல் மாற்றலாம்..

Initiator Level – HR – Employee Profile – Employee Basic Details Update Web – enter the details and then upload the excel…

பொறியியல் பட்டதாரிகளுக்கு நெடுஞ்சாலை துறையில் வேலை - விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.01.2021...

 


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Manager (Technical) - 54

சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,700

பணி: Deputy General Manager(Technical) - 97

சம்பளம்: மாதம் ரூ.78,800 - 2,09,200

பணி: General Manager(Technical) - 10

பணி: GeneralManager(Finance) - 02

சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000


தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்து அனுபவம் உள்ளவர்கள், வணிகவியல், கணக்கியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் எம்பிஏ, ஐசிஏஐ, ஐசிடபுள்யுஏஐ முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து DGM(HR & Admn,)-I A, NATIONAL Highways of India, Plot No: G - 5 & 6, Sector -10, Dwarka, New Delhi - 110075  என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.01.2021


ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.01.2021


மேலும் விரிவான விவரங்கள் அறிய https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Advt_for_Mgr_T_DGM_T_%20GM_T_and_GM_Fin_Nov_2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் பணிப் பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் ரத்து...

தமிழக ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சியில் துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பல்வேறு காலிபணியிடங்கள் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திற்கு தனித்தனியாக விளம்பரங்கள் அறிவிக்கப்பட்டன. பலரும் ஆர்வமுடன் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தனர். இன்னமும் சில மாவட்டங்களில் விண்ணப்பிக்க கால அவகாசம் இருந்தால் பலரும் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்நிலையில், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தென்காசி, வேலூர் என பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட விளம்பர அறிவிப்புகள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 




தமிழக ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சியில் துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு நிரப்ப புதிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதா அல்லது குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் இல்லை.

பழைய இலவச பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் - போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்...

 


பழைய இலவச பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட நிலையில் பழைய பாஸ் செல்லும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ( Contributory Pension Scheme - CPS ) - தொடக்கம் முதல் தற்போது வரை - இனி அரசு செய்ய வேண்டியது என்ன..?

 


  •  CPS திட்டத்தை ரத்து செய்தால் அரசின் நிதிச்சுமை குறைய வாய்ப்பு...
  • CPS திட்டத்தால் அரசுக்கு செலவினமே தவிர வருமானம் இல்லை.
  • CPS திட்டத்தை இரத்து செய்தால் அரசுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியாக சேர வாய்ப்பு.  இத்திட்டத்தை இரத்து செய்தால் வட்டி மூலம் ஏற்படும் இழப்புகளை தவிர்த்து அரசின் நிதி சுமை குறைய வாய்ப்பு ஏற்படும்.
  • அன்று முதல் இன்று வரை இத்திட்டத்தால் அரசால்  ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் விவரம்....

ஓய்வூதியத் தொகை கிடைக்குமா?

- ஆ.நங்கையார் மணி...

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 10.50 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இதில் சுமார் 60 சதவீத ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் (சிபிஎஸ்) கீழ் கடந்த 2003 ஏப்ரல் மாதத்திற்குப் பின்பு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், நாட்டிலேயே புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலமாக தமிழகம் மாறியது.  

அப்போது  முதல், புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத் தொகையை அரசு பிடித்தம் செய்து வருகிறது. ஆனாலும் 2013-ஆம் ஆண்டு செப்டம்பரில்தான் "ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று  - மேம்பாட்டு ஆணைய சட்டம்' (பிஃஎப்ஆர்டிஏ) அமலுக்கு கொண்டு வரப்பட்டது.        

2003 டிசம்பர் இறுதியில் இடைக்கால பிஃஎப்ஆர்டிஏ அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்களும் பங்களிப்பு ஓய்வூதியத்  திட்டத்தில் இணைவது கடந்த 2004 ஜனவரி முதல்  கட்டாயமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களும் (மேற்கு வங்கம் நீங்கலாக), ஒன்றன்பின் ஒன்றாக புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துவிட்டன. 

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு, ஓய்வு கால பலன்களான பணிக்கொடை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், இயலாமை ஓய்வூதியம்,  வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட எதுவும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக புதிய  ஓய்வூதியத்  திட்டத்திற்கு நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் சார்பில் எதிர்ப்பு  தெரிவித்து  போராட்டங்கள் நடைபெற்றன. 

அதன் காரணமாக,  2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக வல்லுநர் குழுவை அமைத்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.   

இக்குழு நான்கு மாதங்களுக்குள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.  பின்னர், மூன்று முறை கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதனிடையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர், வல்லுநர் குழுவின் தலைவராக இருந்த சாந்தஷீலா நாயர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

அதன் பின்னர் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் நியமிக்கப்பட்டார். அப்போதும் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படாததால், மேலும் மூன்று முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. 

கடந்த 2018}ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி வல்லுநர் குழு தனது ஆய்வு அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது. அதே காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்ற நிலையில், நீதிமன்றம் தலையிட்டு ஆய்வு அறிக்கை தொடர்பான விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பியது. அதனால், நீதிமன்றத்திலும் ஆய்வு அறிக்கை தொடர்பான விவரங்கள் வழங்கப்பட்டன.  

கடந்த 2003-ஆம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டபோதிலும், 2016 வரை அத்திட்டத்தில் இணைந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கோ மரணமடைந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கோ பிடித்தம் செய்யப்பட்ட எவ்வித தொகையும் வழங்கப்படவில்லை. 

2016 பிப்ரவரி 10 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் எதிரொலியாக, இறந்த ஊழியரின் குடும்பத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் அரசின் பங்களிப்புத் தொகையும் ஒரே தவணையில் வழங்கப்பட்டன. ஆனாலும் 17 ஆண்டுகாலமாக பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்குவது குறித்து இதுவரை விதிகள் உருவாக்கப்படவில்லை.     

வல்லுநர் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த போதிலும், அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகியவை தமிழக அரசின் பொது கணக்கில் வைக்கப்பட்டு, மத்திய கருவூலப் பட்டியில் தொடர் முதலீடு செய்யப்படுகிறது. அந்த வகையில் தற்போது வரை சுமார் ரூ. 40ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 

இன்றைய நிலவரப்படி இந்த முதலீடு பணத்திற்காக 3.17 சதவீதம் வட்டி தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், சுமார் ஆறு லட்சம்  ஊழியர்களின் பணத்திற்கு வட்டியாக தமிழக அரசு 7.1 சதவீதம் வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ.1500 கோடி அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. கடந்த 2015 முதல் 2018 வரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய கருவூலப்பட்டியில் முதலீடு செய்யப்பட்ட தொகை மூலமாக மட்டும் ரூ.797 கோடி தமிழக அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த 2019 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு அரசால் வழங்கப்படும் பங்களிப்புத் தொகையினை 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுபோல பங்களிப்புத் தொகை சதவீதம் உயர்த்தப்படும் பட்சத்தில் அரசுக்கு கூடுதலாக ரூ.1000 கோடி நிதிச் சுமை ஏற்படும். அதே நேரத்தில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தால் சுமார் ரூ.20ஆயிரம் கோடி அரசின் கணக்கில் உபரி நிதியாக சேர வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். 

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தால், வட்டி மூலம் ஏற்படும் இழப்புகளை தவிர்த்து, அரசின் நிதிச் சுமை குறைய வாய்ப்பு ஏற்படும்.

நன்றி: தினமணி 08-12-2020

CPS வல்லுநர் குழுவின் அறிக்கை மீதான நடவடிக்கையானது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது - நிதித் துறை சார்புச் செயலாளர் தகவல்...



 >>> நிதித் துறை சார்புச் செயலாளர் கடிதம்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Part-time teachers transfer counselling - Date of joining service on revised transfer priority norms - SPD's letter, Dated : 24-12-2024

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி த...