கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC தேர்வுகளில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு - தமிழக அரசின் சட்டமசோதாவுக்கு 8 மாதங்களுக்குப் பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்...

 TNPSC தேர்வுகளில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு - தமிழக அரசின் சட்டமசோதாவுக்கு 8 மாதங்களுக்குப் பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்...



பள்ளிகளைத் திறக்க அரசு தயாராக இருக்கிறது - அமைச்சர் செங்கோட்டையன்...

 


பள்ளிகளைத் திறக்க அரசு எந்த நேரமும் தயாராக இருப்பதாகவும் பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

முன்னதாக ஸ்ரீபெரும்பத்தூர் அருகே காரை பகுதியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு இருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டது. அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ITI படித்தவர்களுக்கு அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் (12 பணியிடங்கள்) நிரந்தர வேலைவாய்ப்பு - 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்...

ITI படித்தவர்களுக்கு அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் (12 பணியிடங்கள்) நிரந்தர வேலைவாய்ப்பு - 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்...

 Erode EIT Polytechnic College Recruitment 2020 - Skilled Assistant Posts...

Educational Qualification

Candidates should complete ITI in relevant field.

Age Limit

Candidate age maximum 36 years Old on 01/07/2020

Salary Details:-

S.No Post Name Salary

1. Skilled Assistant / Lab Assistant Rs.19,500 – Rs.62,000/- (Level 8) + Allowances per norms

Finally Submit application form following address.

Address:

The Correspondent,

EIT Polytechnic College,

Kavindapadi – 638 455.

Application Fees

No Fees

Selection procedure

Interview

Starting date of Application 07.12.2020

Last date within 10 days



>>> விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசாணை எண்:190, நாள் 08-12-2020 - தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் மாறுதல் ஆணை வெளியீடு...

 அரசாணை எண்:190,  நாள் 08-12-2020 மற்றும்  - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண்: 56184/ அ1/ இ1/ 2020, நாள்: 08-12-2020 - தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் மாறுதல் ஆணை வெளியீடு...

>>> தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் செயல்முறைகள் மற்றும் அரசாணை எண்:190 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கற்போம் எழுதுவோம் இயக்கம் - புதிய வயது வந்தோர் கல்வி திட்டம் - தன்னார்வ ஆசிரியர்கள் மற்றும் கற்போரின் மைய வருகையை EMIS Attendance App மூலம் பதிவு செய்ய வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்...

 கற்போம் எழுதுவோம் இயக்கம் - புதிய வயது வந்தோர் கல்வி திட்டம் - தன்னார்வ ஆசிரியர்கள் மற்றும் கற்போரின் மைய வருகையை EMIS Attendance App மூலம் பதிவு செய்ய வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்...

>>> இயக்குனர் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஸ்மார்ட்போன் கேமரா மூலம் 30 நிமிடங்களில் கரோனா தொற்றை கண்டறியும் புதிய பரிசோதனை...



ஸ்மார்ட்போன் மூலம் கரோனா வைரஸ் தொற்றை கண்டறிய உதவும் சிறப்பு பரிசோதனை கருவி.

ஸ்மார்ட்போன் கேமரா மூலம் 15 முதல் 30 நிமிடங்களில் கரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பரிசோதனை முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்றைக் கண்டுபிடிக்க தற்போது பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன்படி, நோயாளியின் தொண்டை, மூக்கில் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிக்கப்படுகிறது. ஆய்வகங்களில் நடத்தப்படும் இந்த பரிசோதனை முடிவை அறிந்து கொள்ள சுமார் 4 முதல் 8 மணி நேரமாகிறது.

இந்நிலையில், ஸ்மார்ட்போன் கேமரா மூலம் கரோனா தொற்றை துல்லியமாகக் கண்டறியும் புதிய சோதனை முறையை அமெரிக்காவின் யு.சி.பெர்கிலே மற்றும் கிளாட்ஸ்டோன் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதன்மூலம் 15 முதல் 30 நிமிடங்களில் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இதுகுறித்து பெர்கிலே பயா இன்ஜினீயரிங் பேராசிரியர் டேனியல் கூறியதாவது:

சிஆர்ஐஎஸ்பிஆர் முறையில் ஸ்மார்ட்போன் கேமரா உதவியுடன் கரோனா வைரஸ் தொற்றை கண்டறிகிறோம். இதற்காக சிறப்பு கருவியை உருவாக்கி உள்ளோம். மூக்கில் இருந்து எடுக்கப்படும் சளி மாதிரியை இந்த கருவியில் வைக்க வேண்டும். அந்த கருவியின் மேற்பரப்பில் ஸ்மார்ட்போனை பொருத்த வேண்டும்.

சளி மாதிரியை ஆய்வு செய்யும் கருவி, கரோனா வைரஸ் கிருமிகளை ஒளிவில்லைகளாக மாற்றிக் காட்டும். ஸ்மார்ட்போன் கேமரா அந்த ஒளிவில்லைகளை பதிவு செய்யும்போது ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா என்பதை தெளிவாக கண்டறிய முடியும். அவருக்கு எந்த அளவுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

இந்த நடைமுறை மூலம் 15 முதல் 30 நிமிடங்களில் துல்லியமாக முடிவை அறிந்து கொள்ளலாம். எந்த வகையான ஸ்மார்ட்போனையும் பொருத்தும் வகையில் எங்களது கருவியை வடிவமைத்து உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை வென்ற ஜெனிபரும் இந்த ஆராய்ச்சியில் முக்கிய இடம் பெற்றுள்ளார். அவர் கூறும்போது, ‘‘எங்களது சோதனை நடைமுறை மூலம் விரைவாக, துல்லியமாக கரோனா தொற்று முடிவை அறிந்துகொள்ள முடியும். ஆய்வக வசதி குறைவாக உள்ள பகுதிகளில் எங்களது கருவி பயனுள்ளதாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்


தமிழகத்தில் 51 இடங்களில் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மையம் தயார் - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்...

 தமிழகத்தில் அனைத்து மருத்துவ கல்லூரிகளில் 2-ம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தால் மட்டுமே வகுப்புக்கு செல்ல அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினமே சொந்த ஊர்களில் இருந்து கல்லூரிக்கு மாணவர்கள் படையெடுக்க தொடங்கினர். இதையடுத்து அந்தந்த மருத்துவ கல்லூரிகளிலேயே, அங்கு வரும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அனைத்து மாணவர்களும் முக கவசம் அணிந்து வந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ உதவியுடன் உடலின் வெப்பநிலை சோதனை செய்த பின்னரே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று முதல் நாள் மாணவர்களின் வருகைக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அந்த மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி உடன் இருந்தார்.

பின்னர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுவதால், அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிப்பதை உறுதி செய்யும் வகையில் 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களின் மூலம் மாணவர்கள் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்தல், சுகாதார பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் நோய் விலகி விட்டது என்று எண்ணி அலட்சியம் கொள்ளாமல், கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்டவைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் 51 இடங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கான பாதுகாப்புடன் சேமித்து வைக்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு தடுப்பூசி வினியோகித்தல் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் தரவில்லை. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் எவ்வாறு வினியோகிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Union Education Minister Mr. Dharmendra Pradhan launched The Teacher App - Press Release

   டீச்சர் ஆப் (The Teacher App) என்ற செயலியைத்  தொடங்கி வைத்தார் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் - செய்தி வெளியீடு Union Educ...