கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அனைத்து ஆசிரியர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் (SMART CARD) உடனடியாக வழங்குதல் - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்...



 பள்ளிக் கல்வித் துறை - மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் (2019-20) - அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் (Smart Card)வழங்குதல் முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கான திறன் அட்டைகள் அச்சிடும் பணிகள் நிறைவுப் பெற்று 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 034333/ எப்/ இ2/ 2019, நாள்: 10-12-2020...

>>> பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு...

 கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது. உரிய கல்வித் தகுதி பெற்றவர்களையே அந்தந்த பணிகளில் நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 11 இளநிலை பொறியாளர் பணியிடத்தை நிரப்புவது தொடர்பாக 1.1.2013-ல் அறிவிப்பு வெளியானது. நான் சிவில் பொறியியல் படித்திருப்பதால் இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தேன். எழுத்துத்தேர்வில் வென்ற நிலையில் அடுத்த கட்டத் தேர்வுக்கு அழைப்புவரவில்லை.

அது குறித்து விசாரித்த போது இளநிலை பொறியாளர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருப்பதாக கூறி என்னை நிராகரித்திருப்பது தெரியவந்தது. இதை ரத்து செய்து எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு:

அரசியலமைப்பு சட்டப்படி அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். டிப்ளமோ படிப்பு தகுதியாக உள்ள வேலைக்கு பட்டதாரி பட்டம் பெற்றவர் தகுதியானவர் அல்ல. நம் நாட்டில் ஒவ்வொரு பணிக்கும் குறைந்த பட்ச, அதிக கல்வித்தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கட்டாய இலவச கல்வி போன்ற நடைமுறைகளால் நாட்டில் கல்வியறிவு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிராமத்தில் இருப்பவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கிறது.

லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்பின்றி தவிக்கின்றனர்.

குறைந்தபட்ச கல்வித் தகுதியுடன் பலர் பொது வேலைவாய்ப்பை பெறுகின்றனர். குறைந்தபட்ச கல்வித் தகுதி கொண்டவர், அதிக கல்வித் தகுதியை பெற்றவருடன் போட்டியிட முடியாது. இருவரையும் சமமாக பார்க்க முடியாது. அப்படி இருவரையும் ஒரே நிலையில் பார்ப்பது என்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது.

கீழ்நிலை பணிகளுக்கு உயர்க் கல்வி பெற்றோர் தகுதியானவர்கள் அல்ல. கீழ்நிலை பணிகளில் உயர்கல்வித் தகுதி பெற்ற பலர் சேர்கின்றனர். இதனால், குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றோருக்கு உரிய வாய்ப்பு கிடைப்பதில்லை. இவர்களுக்கான வாய்ப்பை அவர்கள் தட்டிப் பறிக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

கீழ் நிலை பணிகளுக்கு அதிக தகுதியுடையோரை நியமிப்பதால் பணிகள் பெரிதும் பாதிக்கிறது. இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளும், பொறியியல் பட்டதாரிகளும் அலுவலக உதவியாளர், துப்புரவாளர், தூய்மைப் பணியாளர் போன்ற பணிகளில் சேர்கின்றனர். இவர்களால் அந்தப் பணியை சரிவர கையாளமுடியவில்லை. அதே நேரத்தில் அவர்கள் வரி செலுத்தும் அளவுக்கு சம்பளம் பெறுகின்றனர்.

சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இல்லங்களில் பணியாற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் கல்வித்தகுதியை பார்க்கும் போது மலைப்பாக உள்ளது. அதிக கல்வித்தகுதி கொண்ட அவர்களால் நிர்வாகம் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறது. பலர் உயர் கல்வித் தகுதியை மறைத்து பணியில் சேர்வதால் வேலைவாய்ப்புக்கான நோக்கம் நிறைவேறவில்லை.

இரண்டாம் நிலை காவலர் பணிக்கு முதுகலை பட்டதாரிகள், எம்பிபிஎஸ் படித்தவர்களும் விண்ணப்பித்தனர். உயர்க்கல்வித் தகுதி பெற்ற ஒருவரால் கீழ் நிலை பணியை முறையாக செய்ய முடியாது. அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது தான் சமூக நீதியின் நோக்கம். சமவாய்ப்பு இல்லாத போது எப்படி சமூக நீதி கிடைக்கும்.

எனவே, கீழ் நிலை பணிகளில் கூடுதல் தகுதி பெற்றவர்கள் நியமிப்பதை தவிர்த்து, அந்தந்த பணியின் தகுதிக்கு ஏற்ற உரிய கல்வித் தகுதியை பெற்றவர்கள் மட்டும் நியமிக்கப்படுவதை தலைமை செயலர், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் ஆகியோர் உறுதிப்படுத்த வேண்டும்.

மனுதாரர் இளநிலை பொறியாளர் பணிக்குரிய கல்வித்தகுதியை மனுதாரர் பெறவில்லை. எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

ந.க எண், மூ.மு எண் என்றால் என்ன? - அரசு ஊழியர்களின் கடித எண்கள் குறித்த விளக்கம்

 


ந.க எண், மூ.மு எண் என்றால் என்ன? - அரசு ஊழியர்களின் கடித எண்கள் குறித்த விளக்கம்

அரசூழியர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களென இரண்டு வகையினர் இருக்கிறார்கள்.

 ஆகையால், இவ்விரண்டு வகையினருக்கும் கடித எண்கள் மாறுபடும். நம்மைப் பொறுத்தவரை மாநில அரசு ஊழியர்களின் கடித எண்கள் மிகமுக்கியமானவை என்பதால், அதுகுறித்து முதலில் தெரிந்து கொள்வது கட்டாயமாகும்.

ந.க எண் = நடப்புக் கணக்கு எண்

ஓ.மு. எண் = ஓராண்டு முடிவு எண்

மூ.மு எண் = மூன்றாண்டு முடிவு எண்

நி.மு. எண் = நிரந்தர முடிவு எண்

ப.மு. எண் = பத்தாண்டு முடிவு எண்

தொ.மு எண் = தொகுப்பு முடிவு எண்

ப.வெ எண் = பருவ வெளியீடு எண்

நே.மு.க எண் = நேர்முகக் கடித எண்

இதில் நடப்புக் கணக்கு எண் மட்டுமே அதிகப் பயன்பாட்டில் இருக்கும். நேர்முகக் கடிதம் என்பது, கீழ்மட்ட ஊழியருக்கு, மேல்மட்ட ஊழியர் எழுதும் கடிதம். அதாவது, நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கான பதிலை விரைந்து சொல்லவேண்டும்.

இவ்வெண்களில் எதுவொன்றும் இல்லாமல் எந்தவொரு கடிதம் யாருக்கு வந்தாலும், தனிப்பட்ட முறையில் தங்களைப் பாதிக்கும் என்பதால், சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின் ஊழியப்பதிவேட்டில் பதியாமல் அரசூழியர்கள் அனுப்பிய கடிதம் என்றே பொருள். இதுவே, அவ்வூழியர் தனது ஊழியத்தில் கடமை தவறியுள்ளார் என்பதை நிரூபிக்கப் போதுமானது

அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் - அமைச்சர் செங்கோட்டையன்...

 கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் மூடப்பட்டன. இதுவரையில் திறக்கப்படவில்லை. இதனால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 

தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது; தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம். ஆட்சேபம் இல்லை. அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. அரசு சரியாக செயல்படுவதால் பள்ளிக்கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. 50% பாட குறைப்பு மட்டுமின்றி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும்தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு...

 




அண்ணாமலை பல்கலைக்கழகம் - தொலைநிலைக் கல்வி - தேர்வு முடிவுகள் வெளியீடு...

 


அண்ணாமலை பல்கலைக்கழகம் - தொலைநிலைக் கல்வி - தேர்வு முடிவுகள் வெளியீடு...

>>> Annamalai University - Distance Education - Results....


2019-20 ஆம் கல்வியாண்டின் NTSE இரண்டாம் நிலை (Stage II ) தேர்வு 07-02-2021 அன்று நடைபெறும்...

 2019-20 கல்வியாண்டின் NTSE இரண்டாம் நிலை (Stage II ) தேர்வு 7 பிப்ரவரி 2021 அன்று நடைபெறும்...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC Group 4 Exam Final Answer Key Release

    TNPSC குரூப் 4 தேர்வின் இறுதி விடை குறிப்பு வெளியீடு TNPSC Group 4 Exam Final Answer Key Released 2024 குரூப் 4 தேர்வின், வினாக்களுக்கான...