கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆன்லைன் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்லைன் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேர்ச்சி பெற்றவர்களுக்கும் மறுதேர்வு இன்ஜினியரிங் கல்லூரிகள் மீது புகார்...

 


தேர்ச்சி பெற்ற பாடங்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும்படி, இன்ஜினியரிங் கல்லுாரிகள் கட்டாயப்படுத்துவதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, பிப்ரவரியில் 'ஆன்லைன்' வழி தேர்வு நடந்தது. மாணவர்கள் ஆன்லைனில் இருந்தபடி, மொபைல்போன் மற்றும் 'லேப்டாப்' வாயிலாக தேர்வு எழுதினர்.

 

ஆன்லைனில் மாணவர்களின் முகம் மற்றும் கண் அசைவுகள், அப்போது கேட்கும் ஒலி ஆகியவை பதிவாகும் வகையில், 'சாப்ட்வேர்' பயன்படுத்தப் பட்டது.



அறிவிப்பு

இந்த தேர்வில், பல மாணவர்களின் கண் அசைவுகள் மற்றும் அருகில் கேட்ட சத்தங்களின் அடிப்படையில், பலர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், காப்பி அடித்ததாகவும், சாப்ட்வேர் பதிவு செய்தது. அதனால், 30 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.


இது குறித்து, மாணவர்கள் தரப்பில் பரவலாக புகார் எழுந்ததால், மறு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மறு தேர்வு, ஜூன் 14ல் துவங்க உள்ளது.'ஏற்கனவே நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், விருப்பம் இருந்தால், மீண்டும் மறு தேர்வு எழுதலாம்; அவர்களுக்கு மறு தேர்வு கட்டாயமில்லை. மற்ற மாணவர்கள் கட்டாயம் மறுதேர்வில் பங்கேற்க வேண்டும்' என, அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார்.


கோரிக்கை

இந்நிலையில், பல தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள், தங்கள் மாணவர்கள், ஏற்கனவே நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மீண்டும் தேர்வை எழுதும்படி கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.புதிய மாணவர் சேர்க்கை நடக்க உள்ளதால், தங்கள் மாணவர்களின் மதிப்பெண்ணை உயர்த்தி காட்டுவதற்காக, மீண்டும் தேர்வு எழுத வற்புறுத்துவதாக, பெற்றோரும் குற்றம் சாட்டுகின்றனர்.


இது குறித்து, உயர் கல்வித் துறை சார்பில், கல்லுாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மறு தேர்வுக்கு கட்டாயப்படுத்தும் கல்லுாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு - தமிழக அரசு...

 💥பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு.


💥கடந்த நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டருக்கு மறு தேர்வு.


💥முறைகேடுகள் நடைபெற்றதன் காரணமாக மறு தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவிப்பு.


செய்தி வெளியீடு எண் : 028, நாள் : 10.05.2021 


செய்திக் குறிப்பு 


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர் | டிசம்பர் 2020 க்குண்டான பருவத் தேர்வுகள் ஒழுங்கு நிகழ்நிலைத் தேர்வாக ( Proctored Online Examination ) 2021 பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் மாணாக்கர்கள் தங்களுக்கு அதிக முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அதனால் தங்களுக்கு அதிக சிரமங்கள் ஏற்பட்டதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது கவனத்துக்கு கொண்டு வந்தனர் . இதில் மாணாக்கர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களது வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தைக் கருதியும் , நன்குப் படிக்கும் சில மாணாக்கர்கள் தங்களுக்கு மதிப்பெண்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக தெரிவித்ததையும் கருத்தில் கொண்டு , மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் , மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் , உயர்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாணாக்கர்களின் நலன் கருதி கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளார்கள் . 




1 பிப்ரவரி 2021 - இல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதைக் கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும் . 


2. இம்மாணக்கர்கள் இத்தேர்வுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை . 


3 . பிப்ரவரி மாதம் நடந்த தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணாக்கர்கள் விரும்பினால் அவர்களும் இத்தேர்வினை எழுதலாம் . 


4 . தேர்வு 3 மணிநேரம் நிகழ்நிலைத் தேர்வாக ( Online Examination ) நடைபெறும் . பல்கலைக்கழகம் கொரோனாவிற்கு முன்பு பின்பற்றிய பழைய வினாத்தாட்கள் முறையே கடைபிடிக்கப்படும் . இத்தேர்வுகள் , தமிழகத்திலுள்ள மற்ற பல்கலைக்கழகங்கள் நடத்தியது போலவே நடத்தப்படும் .


 5 . எதிர்வரும் ஏப்ரல் / மே 2021 பருவநிலைத் தேர்வுகளும் மேற்கண்ட முறையிலேயே நடத்தப்படும் . பிற பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் தற்போது ஊரடங்குக் காரணமாக் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் மே 25 முதல் தொடர்ந்து நடத்தப்படும் . அதற்கான அறிவுப்புகளை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே வெளியிடும் . மாணாக்கர்கள் ஊரடங்குக் காலத்தைப் பயன்படுத்தி தேர்வுக்குத் தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9






ஆன்லைன் தேர்வு முடிவுகள் முறைகேடு குறித்து முதல்வர் இன்று மாலை அறிவிப்பு - அமைச்சர் பொன்முடி...

 


கல்லூரி மாணவர்களின் ஆன்லைன் தேர்வு, அரியர் தேர்வு உள்ளிட்ட தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் தொடர்ந்து 100க்கு மேற்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் இன்று மாலை முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் முக்கிய முடிவு எட்டப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


 

கொரோனா காலமாக கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த 2 வருடங்களாக கல்லூரி மாணவர்களுக்கான பருவ தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் தேர்தலுக்கு முன் நடைபெற்று முடிந்த கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வு முடிவுகளில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் தரப்பில் தொடர்ந்து அரசுக்கு புகார் வந்துள்ளது.



இந்நிலையில் புதிதாக உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் நடைபெற்று முடிந்த கல்லூரி தேர்வுகள் பிரச்சினை தொடர்பாக இன்று ஆலோசனை மேற்கொண்டார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடைபெற்று முடிந்த கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளில் பலவித பிரச்சனைகள், பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து மாணவர்கள் தரப்பில் புகார் வந்துள்ளதாகவும், இதுகுறித்து துணைவேந்தர்கள் மற்றும் தேர்வு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.



தொடர்ந்து மாணவர்கள் தரப்பிடம் அவர்களது கருத்துக்களை கேட்டறியப் பெற்று இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

ஆன்லைன் தேர்வில் 10 சதவீதம் மதிப்பெண்கள் - கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி...

அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட, 'ஆன்லைன்' தேர்வில், மாணவர்கள் வெறும், 10 சதவீத மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளதால், கற்பித்தலை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், கொரோனா பிரச்னையால், 10 மாதங்களாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு இருந்தன. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் துவங்கின. பொதுத்தேர்வு எழுதும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜன., 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படாமல், ஆன்லைன் வகுப்பு மற்றும் கல்வி, 'டிவி' வழியே பாடங்கள் கற்பிக்கப்பட்டதை, மாணவர்கள் எந்த அளவுக்கு படித்துள்ளனர் என்பதை அறிய, ஆன்லைன் வழி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில், மாணவர்களின் விடைகளை ஆய்வு செய்ததில், பெரும்பாலானவர்கள், 10 சதவீதத்துக்கும் குறைவாகவே மதிப்பெண் பெற்றதை, மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும், காலை முதல் மாலை வரை, நேரத்தை வீணடிக்காமல் பாடங்களை நடத்த வேண்டும்.சிறு தேர்வுகளை தினமும் நடத்தி, மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தவும், தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடு...

 அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது. மேலும், எஞ்சிய ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகளும் ஆன்லைனில் நடந்து வருகிறது.


இந்த நிலையில், தொலைதூர கல்வி மூலம் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஜனவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடக்கும் என்றும், இதற்கு கடந்த மாதம் 30ம் தேதி முதல் தேர்வு எழுத பதிவு செய்து வந்தனர்.


இதனையடுத்து, தற்போது பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:


* ஒரு மணி நேரம் ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.


* தொழில்நுட்ப கோளாறு காரணமாக பங்கேற்க இயலாமல் போனால், நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும்.


* லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், கணினியில் தேர்வு எழுதலாம்.


* 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அது 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும்.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழி தேர்வு நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவு...



 கல்வி தொலைக்காட்சியில் படித்த மாணவர்களின் கற்றல் திறனை அறிய, பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று முதல், 'ஆன்லைன்' வழி தேர்வு நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, 10 மாதங்களாக, பள்ளிகள் இயங்கவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வழியாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழியாகவும், பாடங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், 10 மற்றும்பிளஸ் 2 மாணவர்களுக்கு, 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன; நேற்று முதல் பாடங்கள் நடத்தப்படும் நிலையில், மாணவர்களின் கற்றல் திறனை அறிய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, 'ஆன்லைன்' தேர்வை, இன்று முதல் நடத்த உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'அரசு பள்ளிகளில் உள்ள, 'ஹைடெக் லேப்' வழியாக, இந்த தேர்வை நடத்த வேண்டும். 'இந்த மதிப்பீட்டின்படி, மாணவர்களின் கற்றல் திறனை தெரிந்து, வரும் நாட்களில் பாடங்கள் நடத்த வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.


பொது தேர்வு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே, 15ம் தேதிக்கு பின், பொதுத்தேர்வு நடத்த, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.புதிய கல்வி ஆண்டு பிறந்து, ஏழு மாதங்களுக்கு பின், தற்போது தான் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எனவே, பாடங்களை முழுமையாக முடிக்காத நிலையில், மார்ச்சில் பொதுத்தேர்வை நடத்தினால், மாணவர்களால் சரியாக எழுத முடியாது.

எனவே, இரண்டு மாதங்களுக்கு பின், தேர்வு நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்து உள்ளது. இதன்படி, இனி வரும் காலங்களில், வாரம், ஆறு நாட்கள் பள்ளிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மே, 15க்கு பின் அல்லது ஜூனில், பொது தேர்வு நடத்தலாம் என, முடிவு செய்துள்ளனர்.

>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,  வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் Group Code ANNEXURE தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் - அமைச்சர் செங்கோட்டையன்...

 கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் மூடப்பட்டன. இதுவரையில் திறக்கப்படவில்லை. இதனால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 

தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது; தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம். ஆட்சேபம் இல்லை. அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. அரசு சரியாக செயல்படுவதால் பள்ளிக்கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. 50% பாட குறைப்பு மட்டுமின்றி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும்தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்‌ உள்ள 13 பல்கலைக்கழகங்களில் நடப்பு செமஸ்டருக்கான ஆன்லைன் தேர்வு கால அட்டவணை வெளியீடு...

 தமிழகத்தில்‌ உள்ள 13 பல்கலைக்கழகங்களில் நடப்பு செமஸ்டருக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த தேர்வுகள்‌ அனைத்தும்‌ ஆன்லைன்‌ மூலமாகவே நடக்க இருக்கிறது.

தேதிகளை பயிலும் கல்லூரியில் உறுதிப்படுத்திக் கொள்ளவும்...


🎯அண்ணா பல்கலைக்கழகம்‌ -

02.1.2021 முதல்‌ 20.1.2021 வரை,


🎯அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ - 10.12.2020 முதல்‌ 26.12.2020 வரை,


🎯அழகப்பா பல்கலைக்கழகம்‌ - 12.12.2020 முதல்‌ 20.12.2020 வரை,


🎯பாரதியார்‌ பல்கலைக்கழகம்‌ - 23.12.2020 முதல்‌ 31.12.2020 வரை,


🎯பாரதிதாசன்‌ பல்கலைக்கழகம்‌ -09.12.2020 முதல்‌ 24.12.2020 வரை,


🎯சென்னை பல்கலைக்கழகம்‌ - 21.12.2020 முதல்‌ 6.1.2021 வரை,


🎯மதுரை காமராஜர்‌ பல்கலைக்கழகம்‌ -14.12.2020 முதல்‌ 31.12.2020 வரை,


🎯மனோன்மணியம்‌ சுந்தரனார்‌ பல்கலைக்கழகம்‌ - 14.12.2020 முதல்‌ 31.12.2020 வரை,


🎯அன்னை தெரசா மகளிர்‌ பல்கலைக்கழகம்‌ - 16.12.2020 முதல்‌ 23.12.2020 வரை,


🎯பெரியார்‌ பல்கலைக்கழகம்‌ - 21.12.2020 முதல்‌ 31.12.2020 வரை,


🎯திருவள்ளுவர்‌ பல்கலைக்கழகம்‌ - 14.12.2020 முதல்‌ (அனைத்து தேர்வுகளையும்‌ முடிக்க 23 வேலை நாட்கள்‌ தேவை) 


🎯தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்‌ - 17.12.2020 முதல்‌ 31.12.2020 வரை,


🎯தமிழ்நாடு ஆசிரியர்‌ கல்வியியல்‌ பல்கலைக்கழகம்‌ - 16.12.2020 முதல்‌ 31.12.2020 வரை.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...