கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மின்னணு பணப்பரிவர்த்தனைக்காக Dakpay என்ற புதிய செயலியை(App) இந்திய அஞ்சல் துறை தொடங்கியுள்ளது...


 தபால் துறை (இந்தியா போஸ்ட்) மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (ஐபிபிபி) ஆகியவற்றின் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி சேவையை டக்பே என்ற பயன்பாட்டின் மூலம் இயக்க முடியும், இது தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களால் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

இந்தியா போஸ்ட் மற்றும் ஐபிபிபி வழங்கும் டிஜிட்டல் நிதி உதவி வங்கி சேவைகளை நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நெட்வொர்க் மூலம் டக்பே வழங்கும். இது பணம் அனுப்புதல், கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தல் மற்றும் சேவைகள் மற்றும் வணிகர்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் போன்ற சேவைகளை எளிதாக்கும். இது நாட்டின் எந்தவொரு வங்கியுடனும் வாடிக்கையாளர்களுக்கு இயங்கக்கூடிய வங்கி சேவைகளை வழங்கும்.

"டக்பேயின் துவக்கம் இந்தியா போஸ்டின் மரபுரிமையைச் சேர்க்கிறது, இது ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடையும்.

"இந்த புதுமையான சேவை ஆன்லைனில் வங்கி சேவைகள் மற்றும் தபால் தயாரிப்புகளுக்கான அணுகலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வீட்டு வாசல்களில் அஞ்சல் நிதி சேவைகளை ஆர்டர் செய்து பெறக்கூடிய ஒரு தனித்துவமான கருத்தாகும்" என்று பிரசாத் பயன்பாட்டை அறிமுகப்படுத்தும்போது கூறினார்.

10,11,12 தேர்வு நடத்துவது குறித்து, பின்னர் தான் முடிவு செய்யப்படும் - பள்ளிக் கல்வி அமைச்சர்...

 


அனைத்து வகுப்புகளுக்கும், அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் விரும்பினால், 'ஆன்லைன்' மூலமாக, அரையாண்டு தேர்வை நடத்துவதில், எந்த ஆட்சேபனையும் இல்லை. இன்றைய கொரோனா சூழலில், அனைத்து வகுப்புக்கும், பாடத்திட்டங்கள், 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த பாடங்களை ஆசிரியர்கள் போதிக்கின்றனரோ, அந்த பாடங்களில் இருந்து தான், தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும். பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அட்டவணை மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும்.

மத்திய தேர்வு வாரியம், சி.பி.எஸ்.இ., 10 முதல் பிளஸ் 2 வகுப்புக்கு, இறுதியாண்டு தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.

ஆனால், மாநில அரசின் தேர்வு வாரியம், இந்த வகுப்புகளுக்கு, தேர்வு நடத்துவது குறித்து, பின்னர் தான் முடிவு செய்யும். இவ்வாறு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்கள் கூறினார்

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் மாணவி தீக்சா மற்றும் அவரது தந்தைக்கு போலீசார் 2ஆவது முறையாக சம்மன்...

 


நீட் தேர்வு போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து மருத்துவ படிப்பு கலந்தாய்வில் பங்கேற்றது தொடர்பான விவகாரத்தில் சிக்கிய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மாணவி மற்றும் அவரது தந்தைக்கு 2ஆவது முறையாக போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் சென்னை பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் நேற்று காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகக் கோரி மாணவி தீக்சா, அவருடைய தந்தையும் பல்மருத்துவருமான பாலசந்திரன் ஆகியோருக்கு  சம்மன் அனுப்பியிருந்தனர்.

ஆனால் அவர்கள் நேரில் ஆஜராகாததுடன், இருவரிடம் இருந்தும் எந்த தகவல் வரவில்லை. இதைத் தொடர்ந்து 2ஆவது முறையாக மீண்டும் அவர்களுக்கு பெரியமேடு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அதில் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜனவரி முதல் ஜூலை கல்வியாண்டு வரை கோடை விடுமுறையை தவிர்க்க கல்வி இயக்குனரகம் கர்நாடகாவில் முடிவு...

 


கர்நாடகாவில் நடப்பு கல்வியாண்டு தொடங்கி இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்காமல் இருப்பதால் வரும் ஜனவரி முதல் ஜூலை வரை கல்வியாண்டை நிர்ணயம் செய்வதுடன் வரும் கோடைகால விடுமுறையை தவிர்க்க மாநில கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

நடப்பு கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் திறக்கவில்லை. பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பாக பெற்றோர்களுடன் அரசு தரப்பில் நடத்திய ஆலோசனையில் பெரும்பான்மையான பெற்றோர்கள் முழுமையாக கொரோனா முடிவுக்கு வந்தபின் தான் திறக்க வேண்டும் என்று உறுதியாக வெளிப்படுத்தினர்.

மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கவில்லை என்றாலும் பெரும்பான்மையான தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் ஆன்லைன் வகுப்பு நடத்தி வருகிறார்கள். ஆனால் அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடைக்காமல் வஞ்சித்து வருகிறார்கள். தனிடையில் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு வெளியிட்ட கோவிட்-19 வழி காட்டுதலில் 9, 10ம் வகுப்புகள் மற்றும் முதல். இரண்டாமாண்டு முதல்நிலை கல்லூரிகள் திறக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது. 

ஆனால் கொரோனா தொற்று அதிகமிருப்பதால் பள்ளி, கல்லூரிகள் திறக்கவில்லை. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டின் 6 மாதங்கள் முடிந்துள்ளதால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்காமல் இருக்க வேண்டும். அதே சமயத்தில் கொரோனா தொற்று பரவல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து 9 மற்றும் 10ம் வகுப்பு பள்ளிகள் மற்றும் முதல் மற்றும் இரண்டாண்டு முதல்நிலை கல்லூரிகள் திறக்கும் யோசனையை முதல்வர் எடியூரப்பாவிடம் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாநில கல்வி இயக்குனரக ஆணையர் அன்புகுமார், மாநில கல்வி அமைச்சக முதன்மை செயலாளர் உமாசங்கர் ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதில் வரும் ஜனவரி 4ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான அதிகாரப்பூர்வமாக முடிவெடுத்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று அரசு வட்டாரம் மூலம் தெரியவருகிறது. பள்ளி, கல்லூரிகள் திறக்கும் பட்சத்தில் மாணவர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு என்னென்ன வழிகாட்டுதல் முறைகள் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விரிவாக அரசாணை வெளியிடப்படும் என்றும் தெரியவருகிறது.

நடப்பு கல்வியாண்டின் முதல் 6 மாதங்கள் முடிந்துள்ளதால், வரும் ஜனவரி தொடங்கி ஜூலை இறுதி வரை 2020-21ம் கல்வியாண்டாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பியூசி இரண்டாமாண்டு தேர்வுகளை இந்த கால கட்டத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மாணவர்களின் வகுப்பு பாதிக்காமல் தவிர்க்க வரும் கோடை காலத்தில் வழக்கமாக விடப்படும் விடுமுறை ரத்து செய்யும் யோசனையில் கல்வி இயக்குனரகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி 4ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான அதிகாரபூர்வ முடிவெடுத்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று அரசு வட்டாரம் மூலம் தெரியவருகிறது.

மறுபரிசீலனை செய்ய வேண்டும்

நடப்பு கல்வியாண்டை வரும் 2021 ஜூலை வரை நீடிப்பது நல்ல முடிவு என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் கோடை விடுமுறையை முழுமையாக தவிர்க்ககூடாது. குறைந்தது 15 முதல் 20 நாட்கள் கோடை விடுமுறை விட வேண்டும். வெயில் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது சரியாக இருக்காது. விடுமுறை ரத்து செய்யும் யோசனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக மாநில ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் வி.எம்.நாராயணசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் அடுத்த 5 மாதங்களுக்குப் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என தகவல்...

 





புதுச்சேரி -ஜனவரி 4ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு...

 


புதுச்சேரி - ஜனவரி 4ல் பள்ளிகள் திறப்பு.

புதுச்சேரியில் ஜனவரி 4ந் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது.

புதுச்சேரியில் ஜனவரி 4ந் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்படும்.

கொரோனாவால் மூடப்பட்டு கிடக்கும் பள்ளிகள் ஜனவரி 4 முதல் திறக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு.

ஜனவரி 4ந் தேதி முதல் காலை 10மணி முதல் பிற்பகல் 1மணி வரை வகுப்புகள் நடைபெறும் - புதுச்சேரி அரசு.

ஜனவரி 18ந் தேதி முதல் வழக்கமான நேரத்தில் முழுமையாக பள்ளிகள் இயங்கத் தொடங்கும் - புதுச்சேரி அரசு.

எந்தெந்த வகுப்புகளுக்கு எவ்வளவு பாடத்திட்டம் குறைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு...

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் பள்ளிகள் கூட்டமைப்பு நடத்திய விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற 23 பேருக்கு 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அளவுக்கு பரிசுகளை வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்தார்.

தனியார் பள்ளிகள் வேண்டுமானால் ஆன்லைன் மூலமாக அரையாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.

நடப்பு கல்வியாண்டில், 9 ம் வகுப்பு வரை 50 சதவீதமும்,10, 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் 65 சதவீதமும் பாடங்களை நடத்த அறிவுறுத்தியுள்ளதாக செங்கோட்டையன் கூறினார்.

முன்னதாக ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சந்திப்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலையை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...