கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 17.12.2020 (வியாழன்)...

🌹வேண்டியவர்களுக்கு கூட 

வேண்டாதவர்களாய் மாறிவிடுகிறோம்.

அவர்களுக்கு வேண்டியதை செய்ய இயலாத சூழ்நிலையில்.! 

🌹🌹மாற்றத்திற்கும் ஏமாற்றத்திற்கும் பெரிய

வித்தியாசமில்லை

ஒருவரின் மாற்றம்தான் 

மற்றவருக்கு ஏமாற்றம் ஆகிறது.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀சென்னை ஐஐடியில் செவ்வாய்க்கிழமை வரை 183 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் நேற்று புதிதாக 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள், விடுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது  

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

🎀🎀ஐ.ஐ.டி. / ஜே.இ.இ. போட்டி தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச பயிற்சி - 21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித் துறை.

🎀🎀2021 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது TNPSC.                                      👉கொரானா  காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 தேர்வு ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும்

👉தொழில் மற்றும் வர்த்தக உதவி இயக்குனர் பணிக்கான தேர்வு ஜனவரி 9&10ல் நடைபெறும்

👉சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில் துறை (இரசாயன பிரிவு) உதவி கண்காணிப்பாளர் பணிக்கு ஜனவரி 9&10ல் தேர்வு

👉குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும் - TNPSC

👉குரூப் 4 தேர்வு அறிக்கை செப்டம்பர் மாதம் வெளியிடப்படும்.

🎀🎀தமிழ் & தெலுங்கு &  மலையாளம் & கன்னடம் உள்ளிட்ட 13 மொழிகளில் JEE (MAIN) தேர்வு நடத்தப்படும்

👉புதிய கல்விக் கொள்கையின் படி அடுத்த ஆண்டு 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.

👉இந்தி , ஆங்கிலம் , பஞ்சாபி , உருது , வங்கமொழி , குஜராத்தி , ஒடியா உள்ளிட்ட 13 மொழிகளில்  தேர்வு நடத்தப்படும்

👉முதல் அமர்வுக்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

🎀🎀ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - SSA & RMSA ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் காலிப்பணியிட விவரங்கள் கோரி ( மத்திய அரசிடமிருந்து சம்பளம் மானியங்கள் பெறும் பொருட்டு)மாநில திட்ட இயக்குநர் கடிதம்.

🎀🎀1-9ஆம் வகுப்பு வரை 50%; 10- 12 ஆம் வகுப்பு வரை 35% பாடத்திட்டம் குறைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

🎀🎀15-20 நிமிடங்களில் முடிவு தெரியக்கூடிய கொரோனா கிட்: CIP test என்ற பெயரில் அறிமுகப்படுத்துகிறது சிப்லா

🎀🎀அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டுக்கு தடை இல்லை: ஐகோர்ட் உத்தரவு

🎀🎀நீட் பயிற்சியை தொடர்ந்து ஐஐடி, ஜெஇஇக்கு பயிற்சி : டெல்லி நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம்

🎀🎀தமிழகத்தில் 2,391 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல்.

🎀🎀தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு இணைய வழியில் 13 நாட்கள் பயிற்சி 

🎀🎀மாணவா்களை எதிரிகளைப் போன்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்துகிறது என உச்சநீதிமன்றம் கண்டனம

🎀🎀பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் கோருதல் சார்ந்து- இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு

🎀🎀அரசு பள்ளி மாணவர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளாக பார்க்க வேண்டுமே தவிர எதிரியாக பார்க்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

7.5 சதவித இட ஒதுக்கீடு சட்டத்திற்கு   இடைக்கால  தடை  கேட்ட வழக்கில் தடை விதிக்க மறுத்து விட்டனர் 

🎀🎀சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், தற்போது ஆசிரியர்களிடம் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்து ஆலோசிக்க உள்ளார். 

🎀🎀பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் கோருதல் சார்ந்து- பள்ளிக்கல்வி  இயக்குநரின்  செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🎀🎀பள்ளிக் கல்வித்துறையில் நிரப்பபட உள்ள 1500 முதுகலை காலியிடங்களை காத்திருப்போர் பட்டியல் கொண்டு நிரப்ப வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை

🎀🎀மருத்துவம், பொறியியல் தவிர்த்து பிற உயர் படிப்புகளுக்கான பயிற்சி மையங்களை ஏற்படுத்த முன்வர வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் வலியுறுத்தல் 

🎀🎀RTE கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் 2019-20-ம் ஆண்டுக்கான நிலுவைத்தொகை ரூ.375.89 கோடி வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை  சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.        

🎀🎀மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ஒரேமாதத்தில் 100 ரூபாய் உயர்வு; சிலிண்டர் 710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி.

🎀🎀செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை,

வேறு மாநிலத்திற்கு மாற்றக்கூடிய மத்திய

அரசின் முடிவை திமுக கடுமையாக

எதிர்க்கும்: மு.க.ஸ்டாலின்

🎀🎀கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில்

அலட்சியமாக செயல்படும் கல்லூரிகள் மீது

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

🎀🎀ஜனவரி மாதத்தில் முழுமையான பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்த திட்டம் - நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்.

🎀🎀ஜன. 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்கும்படி பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

🎀🎀கொரோனா தடுப்புமருந்து பயன்படுத்துவதற்கான பதிவினை சவுதி அரேபிய அரசு தொடங்கியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முதலில் பயன்படுத்த திட்டம்.

🎀🎀2021 பிப்ரவரி 23 முதல் 26 வரை நடைபெற உள்ள JEE Main தேர்வுக்கான Online Registration தொடங்கியது.

வரும் ஜனவரி 16-ம் தேதி வரை jeemain.nta.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

-தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

🎀🎀தமிழகத்தில் இதுவரை கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியவர்களிடம் இருந்து 9 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

👉செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் நேற்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவது குறித்து அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

🎀🎀தேமுதிக வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

🎀🎀அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற திரு ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி கமலா ஹாரிஸ் ஆகியோர் அடுத்த மாதம் இருபதாம் தேதி பதவியேற்கவுள்ளனர

🎀🎀நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்ய உயர்நீதிமன்றம் கெடு.

சுமார் 2 கோடி வாடகை பாக்கி கேட்டு நில உரிமையாளர்கள் வழக்கில் உத்தரவு

அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது எனவும் தடை.

🎀🎀வரும் 19ஆம் தேதி முதல் அரசியல், விளையாட்டு, கல்வி, கலாசார கூட்டங்களில் 50 % பேர் பங்கேற்க அனுமதி.

-முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

🎀🎀அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து.

தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவுப்பு  

🎀🎀புதுச்சேரியில் ஜனவரி 4ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது.

🎀🎀கரூர் மாவட்டத்தில் 627 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு நேற்று அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

🎀🎀தமிழக தலைமை நீதிபதியாக சஞ்சிப் பேனர்ஜியை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. 

தற்போதைய தலைமை நீதிபதி சாஹி வரும் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார்.

🎀🎀தகவல் தொடர்பு சேவைகளுக்கான, PSLV-C50 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது - இறுதிகட்ட பணிகளுக்கான கவுண்ட் டவுன் தொடங்கியது.

🎀🎀மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரிப்பதாகவும், 3 வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

🎀🎀ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக ராகவேந்திரா கல்வி அறக்கட்டளை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  எதுவும் என் மீது  இல்லை என லதா ரஜினிகாந்த் விளக்கம்  அளித்துள்ளார். 

🎀🎀வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு - இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

🎀🎀விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதிலும் அரசியல் உள்ளது.

அதிர்ஷ்டவசமாக தற்போது கிரிக்கெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வாகியுள்ளார். 

- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  

🎀🎀கோவை வந்த துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு கருப்பு கொடி காட்ட முயற்சி.நாம் தமிழர் கட்சியினர் 15 பேர் கைது. மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம். 

🎀🎀சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை நடத்த சென்னை மாநகராட்சி  முடிவு.

🎀🎀மின்னணு பணப்பரிவர்த்தனைக்காக Dakpay என்ற புதிய App  அஞ்சல் துறை தொடங்கியுள்ளது.

🎀🎀2021ம் ஆண்டு முதல் வாட்ஸ்அப்  செயல்படாத  இயங்குதளங்கள் - அறிவிப்பு வெளியீடு.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

RTI - 2005 - கட்டணம் செலுத்த வேண்டிய புதிய IFHRMS கணக்குத் தலைப்பு குறித்த அரசுக் கடிதம் வெளியீடு...

 


RTI - 2005 - கட்டணம் செலுத்த வேண்டிய புதிய IFHRMS கணக்குத் தலைப்பு குறித்த அரசுக் கடிதம் Letter No: 19963/ AR-III /2020-1, Dated: 11-12-2020 வெளியீடு...

>>> Click here to Download Letter No: 19963/ AR-III /2020-1, Dated: 11-12-2020 


நகர்ப்புற பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் வகையில் திட்டத்தை விரிவாக்கம் செய்து அரசாணை வெளியீடு...

 


G.O.(Ms.)No.543, Dated: 09-12-2020... நகர்ப்புற பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் வகையில் திட்டத்தை  விரிவாக்கம் செய்து அரசாணை எண்: 543, நாள்: 09-12-2020 வெளியீடு...

>>> Click here to Download G.O.(Ms.)No.543, Dated: 09-12-2020...


தேர்தல் பணி படிவம் - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2021...தேர்தல் பணி படிவம் - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2021...


 >>> Click here to Download Election Duty Form...


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - SSA & RMSA ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் காலிப்பணியிட விவரங்கள் கோரி ( மத்திய அரசிடமிருந்து சம்பளம் மானியங்கள் பெறும் பொருட்டு)மாநில திட்ட இயக்குநர் கடிதம்...

 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - SSA & RMSA ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் காலிப்பணியிட விவரங்கள் கோரி ( மத்திய அரசிடமிருந்து சம்பளம் மானியங்கள் பெறும் பொருட்டு)மாநில திட்ட இயக்குநர் கடிதம்...

>>> Click here to Download SPD Proceedings...


2020-21 ஆம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய்.50,000 கல்வி உதவித்தொகை வழங்கும் விண்ணப்பம்...

 


2020-21 ஆம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய்.50,000 கல்வி உதவித்தொகை வழங்கும் விண்ணப்பம்...

>>> கல்வி உதவித் தொகை விண்ணப்பப் படிவம்...


2021ம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் செயலி செயல்படாத இயங்குதளங்கள் - அறிவிப்பு வெளியீடு...


ஐஓஎஸ் 9, ஆண்ட்ராய்ட் 4.0.3 ஆகியவற்றுக்குக் குறைவான இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களில் 2021ம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் செயலி செயல்படாது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...