கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலர் / வட்டாரக் கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் மேற்படிப்புகள் படித்து இருந்தாலும் அவர்களுக்கு உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு - JUDGEMENT COPY - PDF FILE AVAILABLE...

அரசு உதவிபெறும்  பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலர் / வட்டாரக் கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல்  மேற்படிப்புகள் படித்து இருந்தாலும் அவர்களுக்கு உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு...




இன்றைய செய்திகள் தொகுப்பு... 19.12.2020 (சனி)...


 🌹கோபத்திலும் வார்த்தைகளில் நிதானம் தேவை 

கோபம் தீர்ந்து விடும் 

ஆனால் பேசிய வார்த்தைகள் வாழ்ந்து கொண்டே இருக்கும் பிறர் மனதில் ஆறாத வலிகளாய்.!

🌹🌹 இல்லாதவர்கள்  சொல்லும் உண்மையை விட 

இருப்பவர்கள் கூறும் பொய்க்கு சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.!!

🌹🌹🌹வாழ்க்கையில் அடிபட்ட பிறகு தான் 

அனைவரின் உண்மையான முகத்தை புரிந்து கொள்ள முடிகிறது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑⛑பள்ளிக் கல்வி - Fit India Movement - பதிவு செய்த பள்ளிகள் போக மீதம் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் www.fitindia.gov.in இணையதளத்தில் உடனடியாக பதிவுசெய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

⛑⛑கொரோனோ தோற்று நன்கு குறைந்த  பிறகு பெற்றோர்களிடம் கருத்து கேட்டறிந்து பள்ளி திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு 

⛑⛑TRB - ஆசிரியர் தேர்வில் முறைகேடு ஆணையம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு. 814 கணினி ஆசிரியர் தேர்வில் 3 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது 

⛑⛑2 ஆண்டுகள் பிஎஸ்சி கணிதம், 3ஆம் ஆண்டு பிஎ வரலாறு படித்தவருக்கு வழங்கிய ஆசிரியர் பணி நியமனத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பணி நியமனம் வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.  

⛑⛑மாணவர் பாதுகாப்பு பயிற்சியில் சர்வர் பிரச்சனையால் ஆசிரியர்கள் அதிருப்தி - நாளிதழ் செய்தி 

⛑⛑தமிழகத்தில் செயல்படும், 2,900 நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார உத்தரவுகள் வழங்கும் பணி துவங்கியுள்ளது.

⛑⛑PGTRB - முதுகலை வேதியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது - TRB - Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I - 2018-2019 - Provisional Selection List Published - Dated: 18.12.2020

⛑⛑புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: 

திமுக வலியுறுத்தல்

⛑⛑கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகும் மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப கொடுங்கள் : யூஜிசி உத்தரவு.

⛑⛑27.12.2020 அன்று நடைபெற உள்ள NTSE தேர்வுக்கான அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

👉NTSE - தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை 21.12.2020 முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு

⛑⛑அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத  பணியிடங்களை  (மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ) நிரப்ப அரசாணை வெளியீடு, GO NO : 125, DATE : 16.12.2020

⛑⛑ஊரகத் திறனாய்வுத்  தேர்வுக்கு (TRUST) ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த முடியாத பள்ளிகள் வங்கி வரைவோலையாக செலுத்தலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு

⛑⛑சுங்கசாவடிகளில் ஜிபிஎஸ் மூலம் கட்டணம் வசூலிக்கும் தொழில்நுட்பத்தை அரசு இறுதி செய்துள்ளது -மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுங்சாலை துறை அமைச்சர் திரு நிதின்கட்கரி 

⛑⛑டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சியினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு  மட்டுமே 

மத்திய அரசு ஆதரவாக செயல்படுவதாக

ஸ்டாலின் குற்றச்சாட்டு.

⛑⛑இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மேலும் 2400 வீடுகள் இந்திய அரசு சார்பாக கட்டி தர நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

⛑⛑ஜாதியில்லா சமுதாயத்தை நோக்கி செல்லும் போது ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் நடத்த வேண்டும்?

போராட்டங்கள் மூலம் எதையும் அடைந்து விட முடியாது...

சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி.

⛑⛑"நான் முதலமைச்சர் அல்ல"

நான் என்னை முதலமைச்சராக எப்போதும் நினைத்துக் கொண்டதே இல்லை, இனியும் நினைக்கப் போவதில்லை

மக்களையே முதலமைச்சராக நினைத்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்

- சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

⛑⛑அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணி தொய்வின்றி நடக்கவும், நிர்வாகம் & அலுவல் பணிகளை மேற்கொள்ளவும் ரூ.13 கோடி செலவில் 484 பணியிடங்கள் புதிதாக உருவாக்கம்.

389 இளநிலை உதவியாளர், 95 பதிவறை எழுத்தர் பணியிடங்கள் உருவாக்கம்.

TNPSC மூலம் விரைவில் பணி நியமனம் மேற்கொள்ளவும் ஏற்பாடு.

⛑⛑குறைந்த பட்ச ஆதார விலை வழங்கும் முறை தொடரும்.  இதை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் மோடி உறுதி

⛑⛑மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பெயின்ட்யினை  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்து வைத்தார்

⛑⛑18 அரியர் வைத்துள்ளவர்களை தெய்வத்தால் கூட பாஸ் பெற வைக்க முடியாது.ஆனால் முதல்வர் பழனிசாமி பாஸ் பெற வைத்துள்ளார்.

'ஆல் பாஸ் முதல்வர்' என மாணவர்கள் அன்பாக அழைக்கின்றனர்.

- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

⛑⛑வேளாண் சட்ட விவகாரத்தில் விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசுக்கு மனமில்லை என கனிமொழி தெரிவித்துள்ளார்.

வயல்வெளியில் இறங்கி வேலை பார்க்க மாட்டோம் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டால் என்னவாகும்? என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

⛑⛑தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் பரப்புரை அனல் பறக்கும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.*

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பரப்புரை ஆட்சி மாற்றத்திற்கானதாக இருக்கும் எனவும் தங்க தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி இப்போதே பரப்புரை தொடங்குவது அதிசயமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

⛑⛑அதிமுக முதற்கட்ட தேர்தல் பிரசாரம் இன்று தொடக்கம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது தொகுதியான எடப்பாடியில் இருந்து பிரச்சாரத்தை துவங்குகிறார்.

⛑⛑விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்த ஸ்டாலினுக்கு பஞ்சாப் கட்சிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, குருநானக் சத் சங்க் சபா, சிரோமணி அகாலி தளம் கட்சிகளின் தமிழக தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

⛑⛑7 பேர் விடுதலை விவகாரத்தில் அதிமுக நாடகமாடுகிறது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் பரோல் நீட்டிக்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தை நாடிய போது அதனை தமிழக அரசு தடுத்தது என வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.

⛑⛑திருநள்ளாறு கோவிலில் வருகிற 27 ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா... ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி.

👉சனிப்பெயர்ச்சியில் இருந்து 48 நாட்களுக்கு திருநள்ளாறு கோவிலில் சனீஸ்வரரை தரிசனம் செய்யலாம் என அறிவிப்பு.

⛑⛑தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த

சூழ்நிலையிலும் தனியார் மயமாக்கப்படாது; எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி.

⛑⛑அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள பிடெனின் பதவியேற்பு விழா, மிகவும் எளிமையாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.⛑⛑அரையாண்டு தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில்,  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு  அரையாண்டு தேர்வும்

ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். 

ஆனால் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை நடத்தி கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார் .இதனையடுத்து தனியார் பள்ளிகள், ஆன்லைனில் தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.

அதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களை பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ளது. அதன்படி  நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும், அரையாண்டு தேர்வில்  வரும் மதிப்பெண்களை வைத்து, மாணவர்களின் தேர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்கக்கூடாது என்றும்  பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தேர்வுக்கு தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                              

  என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

27.12.2020 அன்று நடைபெற உள்ள NTSE தேர்வுக்கான அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் செயல்முறைகள்...

 


>>>27.12.2020 அன்று நடைபெற உள்ள NTSE தேர்வுக்கான அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் செயல்முறைகள் தரவிறக்க இங்கே சொடுக்கவும்...


DIKSHA செயலி மூலம் Safety and Security Training ல் கலந்து கொள்ளும் முறை...


 >>> DIKSHA செயலி மூலம் Safety and Security Training ல் கலந்து கொள்ளும் முறை தரவிறக்க இங்கே சொடுக்கவும்...


முதுகலை வேதியியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது...

 


முதுகலை வேதியியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது...

TEACHERS RECRUITMENT BOARD,CHENNAI-6

Direct Recruitment for the post of Post Graduate Assistants (Chemistry) / Physical Education Directors Grade-I - 2018-2019

PROVISIONAL SELECTION LIST

>>> Click here to Download Provisional Selection List...

250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 484 ஆசிரியரல்லா பணியிடங்கள் (389 இளநிலை உதவியாளர் + 95 பதிவறை எழுத்தர்) தோற்றுவித்து அரசாணை வெளியீடு...

 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 484 ஆசிரியரல்லா பணியிடங்கள் (389 இளநிலை உதவியாளர் + 95 பதிவறை எழுத்தர்) தோற்றுவித்து அரசாணை (நிலை) எண்: 125, நாள்: 16-12-2020 வெளியீடு...

>>> அரசாணை (நிலை) எண்: 125, நாள்:16-12-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழகத்தில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை...

 ஐஐடி சென்னையில் பயிலும் மாணவர்களுக்குக் கரோனா தொற்று  பரவியுள்ளதைக் கண்டறிந்ததால், மாநிலம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியருக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்படும் எனச் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இன்று (17-ம் தேதி) சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் ஆய்வுப் பணி மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் உள்ள காது, மூக்கு தொண்டைப் பிரிவு, பிரசவ வார்டு, கேன்டீன்களில் ஆய்வு செய்தார்.

கேன்டீனில் மக்கள் கூட்டமாகவும், முகக்கவசம் அணியாமல் இருந்ததையும் பார்வையிட்ட ராதாகிருஷ்ணன், அனைவரும் முகக்கவசம் அணியவும், கட்டாயம் தனிமனித இடைவெளியைப் பின்பற்றிட வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

''கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் குறித்து மூத்த மருத்துவர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. தினமும் 75 ஆயிரம் பேருக்கு நடத்தப்படும் பரிசோதனையில், கரோனா தொற்று  எண்ணிக்கை ஆயிரத்து 100 என்ற எண்ணிக்கையில்தான் உள்ளது.

2 ஆயிரம் பேருக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்வதில், பத்து முதல் 20 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதியாகிறது. சேலத்தில் இதுவரை 767 பேருக்குக் கரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளித்துவந்த நிலையில், தற்போது, 83 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

மாநிலம் முழுவதும் கரோனா தொற்று  உயிரிழப்பு ஒரு சதவீதமாக உள்ளது. கரோனா பாதிப்பு இரண்டு சதவீதமாக உள்ளது. இதனைப் பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் விடுதிகள், கேன்டீன்கள், மேன்ஷன்கள், மெஸ்களில் மாணவ, மாணவியர்கள் கூட்டமாக இருக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்.

மூடிய அறையில் 20க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது. முகக்கவசம் அணிவதைக் கைவிடக்கூடாது. தடுப்பூசி, பயன்பாட்டுக்கு வரும்வரை களப்பணியாளர்கள் உள்பட அனைவரும் கரோனா தொற்று  விதிமுறைகளைப் பின்பற்றிட வேண்டும்.

சென்னை ஐஐடியில் மாணவர்களுக்குக் கரோனா தொற்று  கண்டறியப்பட்டதை அடுத்து, இரண்டு பிளாக்கில் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இறுதியாண்டு மற்றும் முதுநிலை மாணவ, மாணவியர்கள் கல்லூரிகளுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

எனவே, மாநிலம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியருக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்படும். அதனால், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை. பல கல்லூரிகளில் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அதனை மாணவர்கள் பின்பற்றலாம்.

கரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளவர்களுக்கு மனநல பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மனநல நிபுணர்களைக் கொண்டு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகப் பொதுமக்கள் புகார் அளித்தால், உடனடியாக ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்''

இவ்வாறு முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இந்த ஆய்வுப் பணியில் டீன் பாலாஜிநாதன், கண்காணிப்பாளர் தனபால், சேலம் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி நிறுவன இயக்குனர் பூங்கொடி மற்றும் மருத்துவக் கல்லூரித் துறைத் தலைவர்கள் சுமதி, சுரேஷ்கண்ணா, சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report

  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்...