கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 23.12.2020 (புதன்)...

 


🌹இன்று இருக்கும் இன்பமும் துன்பமும் நிரந்தரமில்லை.

ஆனால்,நீங்கள் செய்யும் நன்மையும் தீமையும் நிரந்தரமானது என்றாவது ஒருநாள் அதற்கான பலன் கிடைக்கும்.!

🌹🌹ஒரு நாள் நாம பேசவில்லையென்றாலும் என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என பதறிப்போற ஒரு உறவையாவது நாம் சம்பாரிச்சி வைக்கனும்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒மாநில அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்ட அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மறு கலந்தாய்வு நடைமுறையை மேற்கொள்ளவும், மறு கலந்தாய்வில் வழக்குத் தொடா்ந்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

🍒🍒ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதேu போதுமானதா? என்ற கேள்விக்கு பணிப்பதிவேட்டில் பதிந்து இருந்தாலே போதுமானது என முதலமைச்சர் தனிப்பிரிவில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

🍒🍒தொடக்கப் பள்ளிகளுக்கும் Smart Class Room திட்டம். 

பள்ளிகள் திறந்ததும், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, தேவையான வசதிகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன - நாளிதழ் செய்தி 

🍒🍒புலம்பெயர்த் தமிழர்களுக்காக மேடைத்தமிழ் பயிற்சிப் படிப்பு அறிமுகம்: தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவிப்பு 

🍒🍒நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பல்கலைக்கழகத்திற்கு வழங்கும் நிதியில் முறைகேடு தொடர்பான வழக்கில் மானியக்குழு தலைவர், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

🍒🍒ஓய்வூதியம் பெறுகிறவர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் சமர்ப்பிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

🍒🍒சாதி வாரி கணக்கெடுப்பு ஆணையம் அமைப்பதற்கான அரசாணை வெளியீடு                                                

🍒🍒பள்ளிக் கல்வி - முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

🍒🍒ஜனவரி 3-ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு.

856 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

OMR விடைத்தாளில் Shade செய்ய Black Ink-ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மீறினால் அந்த விடைத்தாள் செல்லாது.

விண்ணப்பித்தவர்கள் ஆதார் எண் மற்றும் OTP கொடுத்து தேர்வாணைய இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்-TNPSC

🍒🍒பிப்ரவரி மாதம் வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இயலாது மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு

🍒🍒DSE – 01.12.2020 நிலவரப்படி உடற்கல்வி /தையல்/ இசை/ ஓவிய ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு

🍒🍒பொது வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களது கைப்பேசி எண்ணினை www.agae.tn.nic.in என்ற இணையத்தில் பதிவு செய்ய கோருதல் சார்ந்து -  தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு 

🍒🍒தமிழ் 31 மொழிகளுக்கு தாயாக  விளங்குகிறது,'' - தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்

🍒🍒உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களை, தூய்மைப் பணியாளர்கள் (Cleanliness Workers) என அழைப்பது குறித்து அரசாணை வெளியீடு

🍒🍒பள்ளிகளை ஜனவரி 4 ம் தேதி திறப்பது குறித்து-  பள்ளி கல்வித்துறை ஆலோசனை

🍒🌹2018ம் ஆண்டு TET தேர்வே நடக்கவில்லை - ஆசிரியர்கள் நியமனம் குறித்து அமைச்சர் அறிவிப்புக்கு தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் கண்டனம்.                       🍒🍒திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை நிரப்புவதற்கு அனுமதி கேட்டு திரையரங்கு உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை.

மாஸ்டர் வெளியீட்டிற்கு முன் திரையரங்குகளில் முழு தளர்வுகளை பெற நடவடிக்கை.

கோரிக்கை மனு வந்தால் பரிசீலிப்போம் என்று அமைச்சர்  தெரிவித்திருந்தார்.

🍒🍒கொரோனாவை கட்டுப்படுத்த ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு

🍒🍒கொரோனா தொற்று பரவாத வகையில் தேர்தலை நடத்துவதே ஆணையத்தின் நோக்கம்.

கொரோனா சூழலுக்கிடையே பீகார்  சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்.

எதிர்வரும் தேர்தல் குறித்து 6 மாதங்களுக்கு முன்பாக தயாராகிறோம் 

- தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா

🍒🍒இசையமைப்பாளர் இளையராஜாவை நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க தயார்.

-சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் தகவல்

🍒🍒வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய ரக கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கவனமுடன் செயல்பட வேண்டும்

- உலக சுகாதார நிறுவனம்

🍒🍒வரும் ஜனவரி 3-ம் தேதி நடைபெற உள்ள குரூப் 1 தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்.

ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும்.

இதுவரை ஆதாரை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்க வேண்டும்.

- TNPSC

🍒🍒சென்னையில் குப்பை கொட்ட கட்டணம்

👉வீடுகளுக்கு ₨10-₨100,

👉அலுவலகங்களுக்கு ₨300-₨3000 

👉கடைகளுக்கு ₨200-₨1000, 

👉உணவகங்களுக்கு ₨1,000-₨3,000 கட்டணம்

ஜன. 1 முதல் சொத்துவரியுடன் குப்பைக்கான கட்டணம் வசூலிக்கப்படும்

- சென்னை மாநகராட்சி

🍒🍒திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அதிமுகவை நிராகரிப்போம் என நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உறுதிமொழி

🍒🍒OMR விடைத்தாளில் அதிரடி மாற்றம்.

A,B,C,D என்ற 4 விடைகளுடன் கூடுதலாக இனி E பிரிவும் இருக்கும்.

பதில் தெரியவில்லை என்றால் இனி E பிரிவில் Shade செய்ய வேண்டும்.

- TNPSC 

🍒🍒ஐ.பி.எல்லின் போது தந்தையான நடராஜன், டி20 தொடரிலும் சிறப்பாக விளையாடி, நெட் பவுலராக இன்னும் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

கேப்டனோ தொடர் பாதியிலேயே தனது குழந்தையைப் பார்க்கச் செல்கிறார்.

நடராஜனுக்கு ஒரு நியாயம்? கோலிக்கு ஒரு நியாயமா? 

- முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் காட்டம்.

🍒🍒வீடுதேடி வரும் ரூ.2500க்கான டோக்கன் 

பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கனை 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிக்குள் வழங்கப்படும்  

பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் 

- தமிழக அரசு

🍒🍒கிராமக் கோவில் பூசாரிகள் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்ததை அடுத்து அதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

🍒🍒சென்னையில் இன்று முதல் மின்சார ரயில்களில் பொதுமக்களும் பயணிக்கலாம்

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்கலாம்

-தெற்கு ரயில்வே

🍒🍒இணைய வழிக் கல்வி ஆசிரியர்களின் பெரும் முயற்சி காரணமாக வெற்றி பெற்றுள்ளது  

-டாக்டர் ரமேஷ் பொக்ரியால்

🍒🍒நாங்கள் அளித்த புகார்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, 97 பக்க புகார் பட்டியலை ஆளுநரிடம் வழங்கியுள்ளோம். இதனையடுத்து, விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

🍒🍒நியாய விலைக்கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்குவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை விரைவாக வழங்க முடியவில்லை. ஏற்கனவே கடந்த அக்டோபரில் நியாய  விலைக்கடைகளில் பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டபோது சிக்கல் ஏற்பட்டது                            

🍒🍒பிரிட்டனிலிருந்து நவம்பர் 25ஆம் தேதிக்கு பிறகு டிசம்பர் 8ஆம் தேதி வரை வந்தவர்களையும் , அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறியும் பணி தொடக்கம்

அவர்களின் உடல்நிலையை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

🍒🍒பிரிட்டனில் பரவியுள்ள உருமாறிய கொரானா வைரஸை இந்தியாவில் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு

🍒🍒லண்டனில் இருந்து சென்னை வந்த கரோனா தொற்றுக்குள்ளான பயணியின் மாதிரி மரபியல் ஆய்வுக்காக என்ஐவி நிறுவனத்துக்கு அனுப்பப்படும்

தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் தகவல்

🍒🍒புதிய வகை கொரோனா தொற்றுக்கு 6 வாரத்தில் தடுப்பூசி விநியோகிக்கப்படும் என BioNTech நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரிட்டனில் புதிய வகை தொற்று பரவி வரும் நிலையில் BioNTech நிறுவனம் அறிவித்துள்ளது.

🍒🍒தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 27ம் தேதியன்று காலவரையற்ற ஸ்டிரைக் தொடங்குவதால் டிசம்பர் 26ம் தேதி முதல் லாரி புக்கிங் நிறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளன தலைவர் ராஜவடிவேல் சேலத்தில் அறிவித்துள்ளார்.

🍒🍒அமெரிக்க மக்களுக்கு நம்பிக்கையூட்டும்

விதமாக தொலைக்காட்சி நேரலையில்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட

ஜோ பைடன்.

🍒🍒80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு - இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா.

👉பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடமாடும் வாகனங்கள் மூலம் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் 

👉தமிழகத்தில் தேர்தல் தேதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 

👉பணப்பட்டுவாடாவை தடுக்க உறுதியான 

நடவடிக்கைகள் எடுக்கப்படும். பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது.

👉உடல்நலக்குறைவு இருப்போருக்கும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும்.

👉ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற 

கோரிக்கை இந்திய தலைமை தேர்தல் 

ஆணையரிடம் தெரிவிக்கப்படும்.

👉வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் நடைபெறுதல் - ஆசிரியர்கள் பதிவு செய்வதற்கான இணைப்பு (Link)...


முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் நடைபெறுதல் - ஆசிரியர்கள் பதிவு செய்வதற்கான  இணைப்பு (Link)...

AXN-INFOTECH 

PG COMMERCE ONLINE TRAINING REGISTRATION FORM

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSemT9DMZkXyliD838QIiEshDOzbFYI-VbKfruDdTUb1x9QIXQ/viewform

பள்ளிக் கல்வி - முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

 


பள்ளிக் கல்வி - முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு AXN Infotech நிறுவனம் மூலம் Computerised Accounting System - Tally என்ற தலைப்பில் 5 நாட்கள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பிரதமரின் குடியிருப்பு திட்டம் மூலம் ஒரு வீடு கட்ட வழங்கப்படும் தொகை ரூ.275040 ஆக உயர்வு...

 கொரோனா சூழலால் பிரதமமந்திரி குடியிருப்பு திட்டத்தில் (ஊரகம்) எளியோர் வீடுகட்ட இயலாத நிலையில், தமிழக அரசால் மேற்கூரை அமைக்க வழங்கப்பட்ட 50000 ரூபாயை ரூ.1,20,000 ஆக உயர்த்த உத்தரவு. 

ஆக மொத்தம் ஒரு வீட்டிற்கு ரூ.275040 வழங்கப்படும். இதற்காக ரூ.1805.48 கோடி ஒதுக்கப்படும்.







பள்ளிக் கல்வி – 01.12.2020 நிலவரப்படி உடற்கல்வி /தையல்/ இசை/ ஓவிய ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்...



 >>> பள்ளிக் கல்வி – 01.12.2020 நிலவரப்படி உடற்கல்வி /தையல்/ இசை/ ஓவிய ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்...

தேசிய திறனறித் தேர்வு (NTSE) தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் - நாள் 22.12.2020...

 


>>> தேசிய திறனறித் தேர்வு (NTSE) தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்  ந.க.எண்: 025847 /NTSE/2020, நாள் 22.12.2020...



தொடக்கக் கல்வி - பொது வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களது கைப்பேசி எண்ணினை www.agae.tn.nic.in என்ற இணையத்தில் பதிவு செய்ய கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

 


தொடக்கக் கல்வி -  பொது வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களது கைப்பேசி எண்ணினை www.agae.tn.nic.in என்ற இணையத்தில் பதிவு செய்ய கோருதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 10791/ சி2/ 2020, நாள்: 19-12-2020 மற்றும் School Education Secretary Letter No 11016/ SE 1(1)/ 2020-1, Dated: 15-09-2020...

>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 10791/ சி2/ 2020, நாள்: 19-12-2020 மற்றும் School Education Secretary Letter No 11016/ SE 1(1)/ 2020-1, Dated: 15-09-2020...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அதிசயத்தின் விலை - இன்றைய சிறுகதை

  அதிசயத்தின் விலை - இன்று ஒரு சிறு கதை The Price of Miracle - Today's short story அதிசயங்கள் எந்த வடிவில் வேண்டுமானாலும் நடக்கலாம் 🍁🍁...