கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜாக்டோ- ஜியோ- போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் - பணிநிறைவு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்குதல் - அமைச்சர் செங்கோட்டையன் பதில்...

ள்


 அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் "பொங்கல் பண்டிகைக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்" என தெரிவித்தார். 

மேலும் "ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணிக் காலம் முடிவுற்றவர்களுக்கு பணப்பலன் வழங்குவது குறித்து அனைத்துத் துறை செயலாளர்களின் கருத்துகள் அறிந்து முதல்வர் முடிவெடுப்பார்" எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கல்வி கடன் ரத்து செய்யப்படுமா? - அமைச்சர் செங்கோட்டையன்...

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; 

மாணவர்கள் கல்வி கடன் ரத்து செய்வது குறித்து தேர்தல் வரும் போது தான் தெரியும். 10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் செய்முறை தேர்வு நடைபெறும்.

தமிழகத்தை பொறுத்த வரை பள்ளிகளில் குறிப்பிட்ட வகுப்புகளை திறப்பது குறித்து மக்கள் நல்வாழ்வு துறை, பள்ளி கல்வித்துறை என இரு துறை கருத்துகளை அறிந்த பிறகு முதலமைச்சர் தான் முடிவெடுப்பார். பள்ளி திறப்பு குறித்து பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்கள் கருத்து இந்த வார இறுதிக்குள் கேட்கப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்

பொறுப்பு தலைமையாசிரியராக பணியாற்றும் ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான தகவல்கள் - அரசாணைகள் - செயல்முறைகள்...

 

>>> பொறுப்பு தலைமையாசிரியராக பணியாற்றும் ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான தகவல்கள் - அரசாணைகள் - செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடைபெறுதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

 


பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடைபெறுதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 34462/ பிடி1/இ1/2020, நாள்:-04-01-2021...

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் மீண்டும் கருத்து கேட்பு

தமிழக அரசு அறிவித்ததற்கிணங்க நவம்பர் 16 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு பெற்றோர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு தற்காலிகமாக பள்ளி திறப்பது தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்விநலன் கருதி பொதுதேர்வு எதிர்கொள்ள ஏதுவாக மாணவர்களை தயார் செய்யவேண்டும் என்பதால், பள்ளி திறந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்கள் கற்பிப்பது இன்றியமையாதது ஆகும். எனவே 08.01.2021 வரை அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர் இத்துடன் இணைக்கப்பபட்டுள்ள COVID-19 க்கான வரைவு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறப்பது சார்ந்து கருத்துகேட்பு கூட்டம் பள்ளிகளின் வசதிக்கேற்ப நடத்தப்பட வேண்டும் என அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கிட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரம் தெரிந்து கொள்ள...

>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாணவர்களுக்கு TAB வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...

 


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'டேப்' வழங்கப்படும் என்றும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் பள்ளிகள் திறந்த உடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 'டேப்' (Tab) வழங்கப்படும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் நடைபெறும் . அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றார். பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முதல் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும். கருத்துகேட்பு கூட்டம் இன்று தொடங்கி இந்த வார இறுதி வரை நடைபெறும் .பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர்தான் இறுதி முடிவு எடுப்பார் என தெரிவித்தார். 

மேலும், பொங்கல் பண்டிகைக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தில் (Level-10, Cell-40) உச்ச நிலையை (₹.65,500) அடைந்தவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட பதில் கடிதம்...

 


இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தில் (Level-10, Cell-40) உச்ச நிலையை (₹.65,500) அடைந்தவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட நிதித்துறை சார்பு செயலாளர் பதில் கடிதம் எண்: 26685/ நிதித் (சிஎம்பிசி)துறை /2020, நாள்: 20-08-2020...

>>> நிதித்துறை சார்பு செயலாளர் கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...