கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

19 வயது கல்லூரி மாணவிக்கு ஒரு நாள் முதல்வர் வாய்ப்பு...

 உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதலமைச்சராக  ஸ்ரீஸ்தி கோஸ்வாமி என்ற மாணவி ஜனவரி 24 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

தமிழில் வெளியான முதல்வன் படத்தில் அர்ஜூன் ஒருநாள் முதல்வராகவும், இந்தியில் நாயக் திரைப்படத்தில் அனில்கபூர் ஒரு நாள் முதல்வராகவும் நடித்திருப்பதை பற்றி அறிவோம். அவர்கள் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க படத்தில் போராடுவார்கள். ஆனால், நிஜத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதலமைச்சராக ஸ்ரீஸ்தி கோஸ்வாமி என்ற 19 வயது மாணவி ஜனவரி 24 ஆம் தேதி பொறுபேற்க உள்ளார். தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


ஸ்ரீஸ்தி கோஸ்வாமி யார்?

ஹரித்துவார் மாவட்டத்தில், தவுலதாப்பூர் (Daulatpur ) மாவட்டத்தில் வசிக்கும் 19 வயதான மாணவி ஸ்ரீஸ்தி கோஸ்வாமி, ரூர்கியில் (Roorkee) அமைந்துள்ள BSM PG கல்லூரியில் பி.எஸ்.சி வேளாண்மை பயின்று வருகிறார். தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டமன்ற முதலமைச்சராக (Bal Vidhan Sabha) பணியாற்றி வருகிறார். கோஸ்வாமியின் தந்தை தொழிலதிபராகவும், தாய் இல்லதரசியாகவும் இருக்கின்றனர்.


ஜனவரி 24-ல் ஸ்ரீஸ்தி கோஸ்வாமி மேற்கொள்ளும் பணிகள்:

ஜனவரி 24 ஆம் தேதி ஒருநாள் முதலமைச்சராக பொறுபேற்கும் அவர், அம்மாநிலத்தின் கோடைகால தலைநகரான கெய்சனில் (Gairsain) இருந்து மாநிலத்தை நிர்வாகம் செய்ய இருக்கிறார். அப்போது, அரசின் பல்வேறு திட்டங்களை மதிப்பாய்வு செய்யும் அவர், அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சுற்றுலாத் துறையின் ஹோம்ஸ்டே திட்டம் உள்ளிட்ட  பிற திட்டங்களின் பணிகளையும் மேற்பார்வையிட உள்ளார்.

கோஸ்வாமி பதவியேற்புக்கு முன்பு உத்தரகாண்ட் அரசாங்கத்தின் கீழ் உள்ள பல்வேறு துறைகளின் அதிகாரிகள் தங்களின் திட்டம் குறித்து தலா 5 நிமிடம் காணொளி காட்சி மூலம் விளக்கம் அளிக்க உள்ளனர். குழந்தைகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டப் பணிகளில் பங்கேற்று வருவதற்காக கோஸ்வாமிக்கு, ஒருநாள் முதலமைச்சர் என்ற மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து அம்மாநில அரசாங்கம் கவுரவித்துள்ளது. மேலும், ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் என்பதால், அவர்களை ஊக்குவிக்கவும் மாநில அரசு இத்தகைய முயற்சியை எடுத்துள்ளது.


பதவியேற்பு விழா:

அவர் பதவியேற்று, பொறுப்புகளை கவனிக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோடைகால தலைநகரான கெய்சனில் உள்ள மாநில சட்டசபைக் கட்டிடத்தில் நடைபெறும் என உத்தரகாண்ட் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் உஷா நேகி தெரிவித்துள்ளார். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும் என கூறியுள்ள அவர், மாணவி கோஸ்வாமி பதவியேற்பின்போது அனைத்து அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மாநில முதலமைச்சராக பதவியேற்பது குறித்து பேசிய மாணவி கோஸ்வாமி, இதனை தன்னால் நம்பவே முடியவில்லை எனக் கூறியுள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தன்னால் இயன்றதை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். மக்களின் நலனுக்காக இளைஞர்களால் சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் எனது பணி இருக்கும் என மாணவி கோஸ்வாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பெயர் பட்டியல் (Nominal Roll)தயாரிக்க அனுமதியளித்து அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு...

 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பெயர் பட்டியல் (Nominal Roll)தயாரிக்க அனுமதியளித்து அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை எண்: 58, நாள்: 22-01-2021 வெளியீடு...

G.O. No. : 58 , DATED : 22.01.2021

ORDER : In the letters read above , the Director of Government Examinations has stated that , it is imperative to start collecting the Nominal Roll for School candidates appearing for the SSLC / Higher Secondary First Year and Second Year Public Examinations for the academic year 2020-21. In order to prepare Nominal Roll of school candidates for 10th Standard and Higher Secondary First Year , datas such as Name of candidates ( both in English and Tamil version ) , Date of birth , photo , Parent's name ( both in English and Tamil ) , Mobile number will be collected and based on these Nominal Roll will be prepared. Hence , Nominal Roll plays a vital role as the mark certificates are printed based on these data collected. The above data are collected by means of a declaration form properly filled in by candidates / parents as well as teachers and it is essential to get signatures from all of them. The examination fee will also be collected from the candidates ( except candidates who got exemption ) during this process of work.

>>> Click here to Download Nominal Roll Preparation G.O. No. : 58 , DATED : 22.01.2021...


2020-2021ஆம் நிதியாண்டின் வருமானவரி படிவம் நிரப்பும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

 


2020-2021ஆம் நிதியாண்டின் வருமானவரி படிவம் நிரப்பும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

Things to keep in mind while filling out the Income Tax Form for the Financial year 2020-2021...


பழைய விதிமுறைபடி வரி கணக்கீடு - பிரிவு 115BAC


✍4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். [Bonus, surrender, pay fix arrear if any]


✍நிலையான கழிவு (Standard deduction) ₹50,000/- ஐ மொத்த வருமானத்தில் அனைவரும் கழித்துக் கொள்ளலாம்.


✍Housing Loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.


✍மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.


✍Housing Loan - வட்டி அதிகபட்சமாக ₹2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம். (01.04.1999 க்கு பிறகு வீட்டுக்கடன் பெற்றிருக்க வேண்டும். 01.04.1999 க்கு முன் பெற்றிருந்தால் ₹30,000/- மட்டுமே வரிச்சலுகை பெற முடியும்)


✍Housing Loan - அசல் தொகையை  Under chapter -VI ல் கழித்துக் கொள்ளலாம்.


✍Housing Loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12C படிவம் வைக்க வேண்டும்.


✍CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் Under chapter -VI ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS  தொகையில்  அதிகபட்சமாக ₹50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.


✍School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)


✍LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று,  படிவத்துடன் இணைக்கவும்).


✍80DDB - Medical Treatment - ₹80,000/- வரை காண்பிப்பவர்


10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.


[Citizens - ₹40,000,


Senior Citizens - ₹60,000,


Super Senior Citizens - ₹80,000]


✍மாற்றுத்திறன் ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் Medical treatment க்காக ₹75,000/- ஐ 80DD ல் கழித்துக் கொள்ளலாம்.(₹1,25,000 - In case of severe disability)


✍மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் NHIS தொகையை 80D ல் கழித்துக் கொள்ளலாம்.


✍கல்விக் கடனுக்காக  இந்த நிதியாண்டில் (2020-2021) செலுத்திய வட்டியை முழுவதும் 80E ல் கழித்துக் கொள்ளலாம்.


✍️80EEA - மலிவு வீட்டு வசதிக்கான வீட்டுக் கடனில் கூடுதலாக ₹1,50,000 வரை வட்டியில் வரிச் சலுகை பெறலாம்.


நிபந்தனைகள்


🔹01.04.2019 முதல் 31.03.2020 க்குள் முதல் முறையாக வீட்டுக்கடன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.


🔹வீட்டு சொத்தின் முத்திரை வரி மதிப்பு ₹45,00,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.


🔹வீட்டின் தரை பரப்பளவு பெருநகரங்களில் 645 சதுர அடிக்கு மிகாமல், மற்ற நகரங்களில் 968 சதுர அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


✍️80EEB - 01.04.2019 முதல் 31.03.2023 க்குள் கடன் அனுமதி பெற்று, மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு செலுத்தப்படும் வட்டிக்கு ₹1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.


 ✍நன்கொடை மற்றும்  முதலமைச்சர் நிவாரண நிதி ஏதேனும் வழங்கியிருந்தால், அத்தொகையை 80G ல் கழித்துக் கொள்ளலாம். (10% of Gross Total Income only)


✍வரி விபரம்....


2,50,000 வரை - இல்லை


2,50,001 - 5,00,000 : 5%


5,00,001 - 10,00,000 : 20%


Above 10,00,000 : 30%


✍வருமான வரியில் ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம் செய்ய வேண்டும்.


✍Taxable income ₹5,00,000-க்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ₹12,500/-  வரை 87A ல்  கழித்துக் கொள்ளலாம். (புதிய மற்றும் பழைய வரி விதிமுறைகள் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்)


✍Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ₹10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ₹10 க்கு முழுமையாக்க வேண்டாம்.


புதிய விதிமுறைபடி வரி கணக்கீடு - பிரிவு 115BAC


மொத்த வருமானத்தில்,


2,50,000 - வரி இல்லை


2,50,001 - 5,00,000 : 5%


5,00,001 - 7,50,000 : 10%


7,50,001 - 10,00,000 : 15%


10,00,001 - 12,50,000 : 20%


12,50,001 - 15,00,000 : 25%


Above 15,00,000 : 30%


>>> Click here to Download as PDF FILE...



அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று - பிற ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் பரிசோதனை...

திண்டுக்கல்: பழனி அருகே அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று ஆசிரியைக்கு கொரோனா உறுதியானதால் பிற ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் பரிசோதனை...

பழனி அருகே சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா உறுதியானதால் தற்காலிகமாக பள்ளி மூடல். 

 பள்ளியில் பயிலும் 20 மாணவர்களுக்கும், 9 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை.

கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படும் வரையில் 9, 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு - பள்ளிக்கல்வி இயக்குனர்...

 


கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.


10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. வகுப்பறையில் 25 மாணவர்கள் வீதம், முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்க அரசு பரிசீலனை செய்வதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக திங்கட்கிழமை தலைமை செயலகத்தில் ஆலோசனை செய்வதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பனிடம் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் வருமாறு:-


10 மாதங்களுக்கு பிறகு இப்போது தான் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கியுள்ளது. வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்படுகிறது.


மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்கள் 1000 பேர் உள்ள பள்ளியில் 40 வகுப்புகளாக பிரிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. 10-ம் வகுப்புக்கு 20 வகுப்பறைகளும், 12-ம் வகுப்பிற்கு 20 வகுப்பறைகளும் தனித்தனியாக பிரித்து வகுப்புகள் நடத்தப்படுகிறது.


மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் 10, 20 வகுப்புகள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நெருக்கடி இல்லாமல் காற்றோட்டமாக கல்வி கற்க ஏதுவாக வகுப்பு அறைகள் பல கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் 9, 11-ம் வகுப்புகளுக்கு இப்போது வகுப்புகளை தொடங்க வாய்ப்பு இல்லை. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கே இடம் நெருக்கடி ஏற்படுகின்ற நிலையில் அவர்கள் ஒரு பள்ளிக்கு 300, 500 பேர் வந்தால் பாதிப்பு ஏற்படும்.


அதனால் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படும் வரையில் 9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.


மாணவர்கள் நலன் முக்கியம், கூடுதலாக மாணவர்களை அனுமதித்தால் பள்ளிகளில் இட நெருக்கடி ஏற்பட்டு நோய் தொற்றிற்கு வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


இதற்கிடையில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பணிகளை உரிய விதிகளை பின்பற்றி மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை கூட்டம் சேராத வகையில் தனித்தனியாக வரவழைத்து சேகரிக்க வேண்டும், தேர்வு கட்டணத்தை பெற்றுக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.



பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...

 


தமிழகத்தில் கரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 10 மாதங்களுக்குப் பிறகு கடந்த 19-ஆம் தேதி திறக்கப்பட்டன. பொதுத்தேர்வை எழுத உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப் பட்டுள்ளன.

வகுப்புக்கு 25 மாணவர்கள், கட்டாய முகக்கவசம், தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலைப் பரிசோதனை உள்பட கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவருக்கு 21-ஆம் தேதி கரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் இன்று சென்னையில் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ”98 சதவீதப் பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்துக்கேற்பவே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

ஏதாவது ஒரு மாணவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதை வைத்து, பள்ளிகள் திறப்பைக் குறித்துக் கருத்துக் கேட்பது சரியாக இருக்காது. மாணவர்கள் வீட்டில் இருக்கும்போதும் கரோனா தொற்று வரலாம். விளையாடிக் கொண்டிருக்கும்போதும் வரலாம். ஏன், பள்ளிகள் திறக்காத போதும்கூட தொற்று ஏற்படலாம். தொற்றுப் பரவல் நிலையானது இல்லை.

ஏனெனில் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. தமிழகத்தில் நாம் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளை மட்டுமே திறந்திருக்கிறோம். பள்ளிகள் திறப்புக்கான பாதுகாப்புப் பணிகளை எல்லோரும் பாராட்டும் அளவுக்கு மேற்கொண்டிருக்கிறோம்” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

முதுகலை ஆசிரியர் தேவை - அரசு உதவிபெறும் பள்ளி - நிரந்தர பணியிடம்...

 முதுகலை ஆசிரியர் தேவை - அரசு உதவிபெறும் பள்ளி - நிரந்தர பணியிடம்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 Kalai Thiruvizha Banner

 கலைத் திருவிழா 2024-2025 Kalai Thiruvizha Banner HD >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...