கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (30-01-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

ஜனவரி 30, 2021


தை 17 - சனி

மனை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். பூர்வீக சொத்துக்களால் சில விரயங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : தீர்வு கிடைக்கும்.


பரணி : ஆர்வம் அதிகரிக்கும்.


கிருத்திகை : சிந்தனைகள் தோன்றும்.

---------------------------------------




ரிஷபம்

ஜனவரி 30, 2021


தை 17 - சனி

தொழில் சம்பந்தமான புதிய நுணுக்கங்களை கற்பீர்கள். வாகன வசதிகள் மேம்படும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவருவீர்கள். உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



கிருத்திகை : வசதிகள் மேம்படும்.


ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

---------------------------------------





மிதுனம்

ஜனவரி 30, 2021


தை 17 - சனி

உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். விடாப்பிடியாக செயல்பட்டு திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஒப்பந்தம் சம்பந்தமான முடிவுகளை பெரியோர்களிடம் ஆலோசித்து எடுப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும்.


திருவாதிரை : ஈடுபாடு உண்டாகும்.


புனர்பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

ஜனவரி 30, 2021


தை 17 - சனி

குடும்பத்தில் புதிய நபர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். தனம் சார்ந்த இடர்பாடுகள் குறையும். வாக்குவன்மையால் பொருள் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின்  மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.


பூசம் : தெளிவு கிடைக்கும்.


ஆயில்யம் : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

ஜனவரி 30, 2021


தை 17 - சனி

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். மனை சம்பந்தமான பேச்சுக்களில் அமைதி வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : ஈடுபாடு உண்டாகும்.


பூரம் : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.


உத்திரம் : சிந்தனைகள் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

ஜனவரி 30, 2021


தை 17 - சனி

தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திரம் : திருப்தியான நாள்.


அஸ்தம் : புரிதல் ஏற்படும்.


சித்திரை : பொறுமை வேண்டும்.

---------------------------------------




துலாம்

ஜனவரி 30, 2021


தை 17 - சனி

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புனித தல யாத்திரைக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். வாக்குவன்மையால் இலாபம் அதிகரிக்கும். செலவுகளை குறைத்து சேமிப்பதில் நாட்டம் உண்டாகும். இணையதள பணிகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.


சுவாதி : இலாபம் அதிகரிக்கும்.


விசாகம் : சாதகமான நாள்.

---------------------------------------




விருச்சகம்

ஜனவரி 30, 2021


தை 17 - சனி

எண்ணிய செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சேமிப்புகளில் சிற்சில தடைகள் ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.


அனுஷம் : சிந்தனைகள் தோன்றும்.


கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




தனுசு

ஜனவரி 30, 2021


தை 17 - சனி

புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், அதற்கான பாராட்டுகளும் கிடைக்கும். பிரிந்தவர்கள் ஒன்றிணைவதற்கான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மூலம் : சாதகமான நாள்.


பூராடம் : சிந்தனைகள் ஏற்படும்.


உத்திராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

ஜனவரி 30, 2021


தை 17 - சனி

பணிபுரியும் இடங்களில் நிதானத்துடன் செயல்படவும். பிறருடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத செய்திகளின் மூலம் சேமிப்புகள் குறையும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் உடல் சோர்வு உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : நிதானத்துடன் செயல்படவும்.


திருவோணம் : சேமிப்புகள் குறையும்.


அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




கும்பம்

ஜனவரி 30, 2021


தை 17 - சனி

பணியில் உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சுபச்செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்தில் இருந்துவந்த தடைகள் அகலும். வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



அவிட்டம் : அனுகூலமான நாள்.


சதயம் : மகிழ்ச்சி உண்டாகும்.


பூரட்டாதி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

---------------------------------------




மீனம்

ஜனவரி 30, 2021


தை 17 - சனி

செய்தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி தொடர்பான பொறுப்புகள் அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்களிடம் நிதானம் வேண்டும். இறைவழிபாடு மேற்கொள்வதன் மூலம் எண்ணங்களில் தெளிவு உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.


உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


ரேவதி : நிதானம் வேண்டும்.

---------------------------------------

பள்ளிக் கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 2% ஒதுக்கீட்டின்படி அமைச்சுப் பணியில் இருந்து முதுகலை ஆசிரியராக பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய பணியாளர்களின் பட்டியல் அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள்... குறிப்பு: அரசிதழ் 36, நாள்: 30.01.2020 ஐ பின்பற்றி செயல்பட உத்தரவு...

 


பள்ளிக் கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 2% ஒதுக்கீட்டின்படி அமைச்சுப் பணியில் இருந்து முதுகலை ஆசிரியராக பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய பணியாளர்களின் பட்டியல் அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 6451/ W3/ S1/ 2021, நாள்: 29-01-2021...

குறிப்பு: அரசிதழ் 36, நாள்: 30.01.2020 ஐ பின்பற்றி செயல்பட உத்தரவு...

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பெயர்ப்பட்டியல்  - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறவேண்டிய நிலுவையில் உள்ள பணியாளர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...

 பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறவேண்டிய நிலுவையில் உள்ள பணியாளர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க. எண்: 4653/அ4/ இ3/ 2021, நாள்: 25-01-2021...

>>> பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க. எண்: 4653/அ4/ இ3/ 2021, நாள்: 25-01-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஓராண்டாக ஊதியம் வழங்கப்படாததால் அரசு பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் அவதி...

 


ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி – மாணவிகளை தனிமைப்படுத்த உத்தரவு...

 


தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரது வகுப்பறை மாணவிகளை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளது. பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் சேலம், திண்டுக்கல், திருப்பூர் என பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் அந்த பள்ளிகள் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன.

தற்போது தருமபுரி மாவட்டத்திலும் பள்ளி ஆசிரியை ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலக்கோடு அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் கடந்த ஜனவரி 21ம் தேதி பணிக்கு வந்துள்ளார். பின்னர் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அடுத்த 2 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை. அந்த ஆசிரியைக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

அதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது வகுப்பை சேர்ந்த 42 மாணவிகளை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முடிவுகள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களின் சம்பள பதிவு இணையதள மேம்பாடு – நிதித்துறைக்கு கோரிக்கை...

 தமிழக அரசு ஊழியர்களுக்கான சம்பள பதிவு இணையதளமான ‘ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்.,’ (IFHRMS) என்ற இணையதளம் பல மாதங்களாக கோளாறாக உள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிதித்துறை இணையதளத்தை பயன்படுத்த முடியாமல் பெரும் சிக்கலில் உள்ளனர். மேலும் அதனை மேம்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் போன்றோருக்கு அரசின் கருவூலம் மற்றும் சார் கருவூலம் மூலமாக சம்பளம் வழங்கப்படும். இந்த செயலில் எந்த முறைகேடுகளும் நடைபெறாமல் தடுக்க அரசு சம்பள பதிவு இணையதளம் ‘ஐ.எப்.ஹெச்.ஆர்.எம். எஸ்.,’ உருவாகியுள்ளது. இதன் செயல்பாடுகளை விப்ரோ நிறுவனம் கண்காணித்து வருகிறது.

மாதந்தோறும் அரசு ஊழியர்கள் தங்களது சம்பளம் குறித்த பதிவை இந்த இணையதளம் மூலமாக பதிவு செய்த பின் அதனை சரி செய்து கணக்கு அதிகாரிகள் சம்பளம் வழங்குவார்கள். ஆனால் இந்த இணையதளம் மிகவும் மெதுவாகவும், திறன் இல்லாமலும் உள்ளதால் ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் சம்பள பதிவு செய்ய பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதனால் அந்த இணையதளத்தில் விரைவில் சர்வர் செயல்திறனை அதிகரிக்கவும், அனைத்து வகை தகவல்களையும் ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்யவும் இந்த இணையதளத்தில் மேம்பாடுகள் செய்ய தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நிதித்துறை அதிகாரிகள் சரி செய்யாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த பிரச்சனை காரணமாக கணக்கு தணிக்கை வரை பிரச்சனை உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் அரசு விரைந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

CSR மூலமாக 2016 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை பெறப்பட்ட நிதி மற்றும் பயனடைந்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...

 பள்ளிக் கல்வி – அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் – அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அருகாமையிலுள்ள – முன்னாள் மாணவர்கள், பல்வேறு நிறுவனங்கள் மூலம் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் உள்கட்டமைப்பு, சுற்றுச் சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் – 2016  ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை பெறப்பட்ட நிதி மற்றும் பயனடைந்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி (இணை இயக்குநர் இடைநிலைக் கல்வி) உத்தரவு...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Local Holiday in Kanyakumari on 03.12.2024 - Notification of District Collector

03.12.2024 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2...