கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக் கல்வி – ஆதிதிராவிடர் மாணவிகளை அதிக எண்ணிக்கையில் பள்ளியில் சேர்த்து தொடர்ந்து கல்வி பயிலச் செய்யும் தலைமையாசிரியர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை- புதிய கல்வி மாவட்ட வாரியாக விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...



>>> ஆதிதிராவிடர் மாணவிகளை அதிக  எண்ணிக்கையில்  பள்ளியில் சேர்த்து  தொடர்ந்து கல்வி பயிலச் செய்யும்  தலைமையாசிரியர்களுக்கு  ஊக்குவிப்புத் தொகை- புதிய கல்வி மாவட்ட  வாரியாக விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிக் கல்வி – 2019-20ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்குதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பெயர்ப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு...


 >>> காமராஜர் விருது வழங்குதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட  மாணவர்கள் பெயர்ப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) செயல்முறைகள், அரசு சார்பு செயலாளர் கடிதம் மற்றும் படிவங்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



BT to PG Promotion Panel Preparation - வணிகவியல், பொருளியல் மற்றும் வரலாறு பாடங்களுக்கு தகுதிவாய்ந்தோர் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு...(Three in One)...


 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - வணிகவியல், பொருளியல் மற்றும் வரலாறு பாடங்களுக்கு தகுதிவாய்ந்தோர் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு...(Three in One)...


தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்...

 


தமிழகத்தில் 9 மற்றும் 11ம் மாணவர்களுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், மற்ற வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.


அமைச்சர் விளக்கம்:

கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் தமிழகத்தில் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9, 11ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மற்ற வகுப்புகளுக்கு (1 முதல் 8) பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியிடப்படப்பட்டவுடன் வினா வங்கி கையேடு வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் ஹைடெக் லேப் உள்ளது என கூறிய அமைச்சர், நீட் மற்றும் ஜேஇஇ படத்திட்டங்களை குறைப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் ஏன் கூறியுள்ளார்.


அதுமட்டுமின்றி யூடியூப், கியூஆர் கோடு மற்றும் கல்வி தொலைக்காட்சி என பல்வேறு வழிமுறைகளில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். பின்னர் 9 முதல் 12ம் வகுப்புகள் தவிர்த்து மற்ற மாணவர்களுக்கும் பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என தெரிவித்த அமைச்சர், பிற மாநிலங்களில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது குறித்து முதல்வர் கவனித்து வருவதாக கூறியுள்ளார்.

உயர் படிப்புகள் பயில ஆசிரியர்களுக்கு அனுமதி - முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க இணை இயக்குநர் உத்தரவு...



 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் உயர்படிப்புகளுக்கான அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான அதிகாரம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் எம்.பில், பிஎச்டி போன்ற உயர்படிப்புகளில் சேர்ந்து படித்துக்கொண்டே பகுதி நேரமாக பணியாற்ற அனுமதி வழங்கும்படி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை குறித்து பள்ளிக்கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனர் பொன்னையா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


அவர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை, “அரசு பள்ளி ஆசிரியர்கள் உயர்படிப்புகளை பகுதி நேரமாக படிக்க பள்ளி இயக்குனரகம் சார்பில் உத்தரவுகள் வழங்கப்பட்டன. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட 101 அரசாணையின்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கான பல அதிகாரங்களை அரசு அனுமதித்துள்ளது. அப்போது ஆசிரியர்கள் கூடுதல் கல்வி பெறுவதற்கான அனுமதி வழங்கும் அறிவிப்பை அரசு வழங்கியுள்ளது.


பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு தனித்தனியாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. எனவே இந்த அரசாணைக்கு பின் வந்த கருத்துருக்கள் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு திரும்ப அனுப்பப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக எந்த கருத்துருக்களும் இயக்குனரகத்தில் இல்லை. இது குறித்த புகார்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிடலாம்”, இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்..

பள்ளியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு என தனியாக ஊதியம் வழங்கப்படுவதில்லை - அமைச்சர் செங்கோட்டையன்...



 கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பெரியார் திடலில் கீரிப்பள்ளம் ஓடையில் கான்கிரீட் தளம் அமைத்து ரூ.11.5 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியையும் கொடிவெரி அணையில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்கால்கள் கான்கரீட் தளங்கள் அமைத்து ரூ.140 கோடியில் புனரமைக்கும் பணியையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாவட்ட ஆட்சியா கதிரவன் ஆகியோர் பூமிபூஜையுடன் தொடங்கிவைத்தார்கள்.


இவ்விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கீரிப்பள்ளம் ஓடை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளது. இன்றும் மூன்று மாத காலங்களில் பணிகள் முடிவுற்ற பிறகு பார்த்தோமேயானால் அதன் நிறைவுகள் மக்களுக்கு தெரியவரும் என்றும் அதேபோல் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆர்ச் டூ ஆர்ச் வரையிலும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் ஒரு சிட்டியாக மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் சாலையை கடக்கும் இடங்களில் தானியங்கி இயந்திர நடைபாதைகள் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார்.


அதேபோல் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் போதிய அளவு படித்துறைகள் அமைக்கப்படும் தடப்பள்ளி அரக்கன்கோட்டை கரைகளில் விவசசாயிகள் இளைப்பாற கூடாரங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் போது வழங்கப்படும் என தெரிவித்தார்


நீட், ஜேஇஇ போன்ற தேர்வுக்கான பாடதிட்டங்களை குறைப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் பிப்ரவரியில் பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும், பள்ளியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு என தனியாக ஊதியம் வழங்கப்படுவதில்லை பள்ளி தலைமையாசியரிடம் அதற்கான ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

.

பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.7,700லிருந்து ரூ.10,000 ஆக உயர்வு - அரசாணை வெளியீடு...



வாரத்தில் மூன்று நாட்கள் முழுவதுமாக  பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஊதிய உயர்வு அறிவிப்பு...


12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.7,700 லிருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்பட்டு தமிழக அரசு அரசாணை (நிலை) எண்: 15, நாள்: 01-02-2021 வெளியிட்டுள்ளது.


வருகை பதிவேட்டின் படி, தலைமை ஆசிரியர்கள் மூலமாக சம்பளம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிப்பு...


>>> அரசாணை (நிலை) எண்: 15, நாள்: 01-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Don't trust DEEP FAKE videos circulating like RBI Governor speaking in support of some investment schemes - RBI appeals to public

 ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் முதலீட்டு திட்டங்கள் குறித்து அறிவுரைகள் வழங்குவது போல பரவும் DEEP FAKE வீடியோக்களை நம்பிவிட வேண்டாம்...