கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழில் படித்தால்தான் வேலை என்பதால் அரசுப்பள்ளிகளில் உயர்கிறது மாணவர் எண்ணிக்கை - கல்வியாளர்கள் வரவேற்பு...

 


பரீட்சைக்கு பயமேன் (Pariksha Pe Charcha) - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தமிழில்...

 


>>> பரீட்சைக்கு பயமேன் (Pariksha Pe Charcha) - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தமிழில் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஆசிரியர்களுக்கு புகைப்படம், QR கோடுடன் கூடிய அடையாள அட்டை - படிவம்...

 Teachers ID Card Form- PDF FILE...



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2020-21 ம் கல்வியாண்டில் Project Innovations ( Elementary , Secondary & Hr.Secondary ) எனும் தலைப்பின்கீழ் மாவட்டத்திலுள்ள அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு புகைப்படம் , QR கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கிட ஆண்டு வரைவு திட்டத்தில் திட்ட ஏற்பளிப்பு குழு அனுமதி வழங்கியுள்ளது . எனவே , அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை அனைத்து அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். வட்டார வளமையத்தின் மூலமாக பெறப்பட்ட படிவத்தை அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் அடையாள அட்டை இல்லாத ஆசிரியர்களிடம் வழங்கி , அதில் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து , தலைமையாசிரியர் கையொப்பத்துடன் கூடிய பிரதியை தங்கள் பள்ளி சார்ந்த வட்டார வளமையத்தில் வழங்குதல் வேண்டும்.


பள்ளிவாரியாக பெறப்பட்ட படிவங்களை ஒன்றியவாரியாக தொகுத்து , தனிநபர் வாயிலாக இவ்வலுவலகத்தில்  வழங்குமாறு அனைத்து வட்டார வளமைய ( பொ ) மேற்பார்வையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் , ஆசிரியர்களுக்கு படிவம் வழங்கும்போது , புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , பணிமாறுதலில் சேர்ந்துள்ள ஆசிரியர்கள் , பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பழுதடைந்த அட்டையை புதுப்பிக்க வேண்டிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி , இப்பணியினை மேற்கொள்ளவேண்டும் என அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



>>> படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஓய்வு பெற்றவர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) வேலைவாய்ப்புகள்... இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) வேலைவாய்ப்புகள்...

 


இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைகள் 2021, (IOB Indian Overseas Bank Recruitment 2021). Compliance Function பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். IOB Recruitment Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


IOB Indian Overseas Bank Recruitment 2021


நிறுவனத்தின் பெயர்                   - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank)


பதவி          -      Compliance Function


காலியிடங்கள்  -    15


கல்வித்தகுதி       -    The officials should have retired from the Bank in the Scale IV.


சம்பளம்   மாதம் - ரூ.30000/-


வயது வரம்பு  -63 ஆண்டுகள்


பணியிடம்  : பல்வேறு மாநிலங்களில்


தேர்வு செய்யப்படும் முறை  : நேர்காணல்


விண்ணப்ப கட்டணம்  -இல்லை


விண்ணப்பிக்கும் முறை - ஆஃப்லைன்


முகவரி  -THE DEPUTY GENERAL MANAGER, Indian Overseas Bank, Compliance Department, Central Office, 5th Floor, Annexe Building, 763, Anna Salai, Chennai – 600 002.

>>> Notification...

>>> Application...

>>> Website...


தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்கக்கோரி வழக்கு -மார்ச் 8-ம் தேதிக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

 தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களை அவர்கள் பணியமர்த்தப்படும் தொகுதியிலேயே வாக்களிக்க தனி வாக்குச்சாவடி அமைப்பது தொடர்பாக பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் பதிவு செய்வதில் நடைமுறைச் சிக்கல் உள்ளதாக கூறி, தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன், சம்பந்தப்பட்ட தொகுதியில் அவர்கள் வாக்களிக்க ஏதுவாக தனி வாக்குச்சாவடிகளை அமைக்ககோரி தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


அந்த மனுவில், சொந்த தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், தேர்தல் பணி சான்றிதழ் சமர்ப்பித்து வாக்களிக்கவும், பிற தொகுதி அல்லது பிற மாவட்டங்களில் பணியமர்த்தப்படும் ஊழியர்கள் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.


தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான வாக்குச்சீட்டுகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு கடைசி கட்ட பயிற்சியின்போது வழங்கப்படுகிறது எனவும், அந்த வாக்குச் சீட்டில் அதிகாரிகளின் அத்தாட்சியை பெற வேண்டியுள்ளதாகவும், அத்தாட்சி பெற்றாலும் பணியமர்த்தப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு செல்ல வேண்டிய காரணத்தினால் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.


தபால் வாக்குகள் செலுத்தினாலும், சில நேரங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தான், அந்த வாக்குச்சீட்டுகள், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியை சென்றடைவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது 4 லட்சத்து 35 ஆயிரத்து 3 ஊழியர்களில், 3 லட்சத்து 97 ஆயிரத்து 697 பேர் தபால் மூலம் வாக்களித்தனர் என்றும், இதில் 37 ஆயிரத்து 712 பேர் வாக்குகளை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட தாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


வாக்குகளை செலுத்திய 3 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேரில், 24 ஆயிரத்து 912 பேருடைய வாக்குச்சீட்டுகள் அதிகாரிகளின் அத்தாட்சி இல்லாததால் நிராகரிக்கப்பட்டதன் மூலம் மொத்தமாக 62 ஆயிரத்து 624 பேர் வாக்குகள் வீணாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.


தற்போது தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 374 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், கொரோனா தொற்று காரணமாக இந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 90,000 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக தேர்தல் பணிக்கு 6 லட்சம் பேர் அமர்த்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இதன் அடிப்படையில் இவ்வாறு தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களை அவர்கள் பணியமர்த்தப்படும் தொகுதியிலேயே வாக்களிக்க தனி வாக்குச்சாவடி அமைப்பது தொடர்பாக பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




மாணவி மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்டாரா? இல்லையா? - வழக்கில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு...

 மருத்துவ படிப்பில் மகளுக்கு இடம் ஒதுக்கக்கோரி தாய் தொடர்ந்த வழக்கில், சம்பந்தப்பட்ட மாணவி கலந்தாய்வில் கலந்து கொண்டாரா? இல்லையா? என்பது குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்க மருத்துவ கல்வி தேர்வுக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் ரோசனை பகுதியை சேர்ந்த சந்திரலேகா. நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் நேர்காணலுக்கான அழைப்போ அல்லது 7.5% ஒதுக்கீட்டிலான கலந்தாய்விற்கான அழைப்போ வராததால், அண்ணா பல்கலைக் கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. சிவில் என்ஜினியரிங் படிப்பில் தமிழ் வழியில் சேர்ந்துள்ளார்.


இந்நிலையில், சந்திரலேகா மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டதாகவும், அரசு மருத்துவக் கல்லூரியில் 3 இடங்கள் இருந்த போதிலும் அந்த இடங்களை தேர்வு செய்ய விருப்பமின்றி விலகி இருக்கிறீர்கள் எனவும் அவரது முகவரிக்கு மாணவர் தேர்வு குழு மூலமாக கடிதம் வந்துள்ளது.


இந்த கடிதத்தை எதிர்த்து, அவரது தாயார் மகேஷ்வரி, தன் மகளை மருத்துவ படிப்பில் சேர்க்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


இந்த வழக்கு நீதிபதி பி. புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகரன், மருத்துவ கலந்தாய்வில் மாணவி கலந்து கொண்டதால்தான், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், கலந்துகொள்ளவில்லை என்பது தவறான தகவல் என தெரிவித்தார்.


மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜேந்திரன், கல்ந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பே வழங்காத நிலையில், இடத்தை தேர்வு செய்யவில்லை என எப்படி கூறமுடியும் என்றும், மாணவியின் தகுதியை ஆராய்ந்து இடம் வழங்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.


இதையடுத்து வழக்கு குறித்து தமிழக அரசும், தேர்வுக்குழுவும் பதிலளிக்க உத்தரவிட்டும், மாணவியை கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டாரா என்பது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டும் வழக்கை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

சென்னை சிப்காட் நிறுவனத்தில் உதவி பொறியாளர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-03-2021...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Local Holiday in Kanyakumari on 03.12.2024 - Notification of District Collector

03.12.2024 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2...