இடுகைகள்

தனி வாக்குச் சாவடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்கக்கோரி வழக்கு -மார்ச் 8-ம் தேதிக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

படம்
 தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களை அவர்கள் பணியமர்த்தப்படும் தொகுதியிலேயே வாக்களிக்க தனி வாக்குச்சாவடி அமைப்பது தொடர்பாக பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் பதிவு செய்வதில் நடைமுறைச் சிக்கல் உள்ளதாக கூறி, தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன், சம்பந்தப்பட்ட தொகுதியில் அவர்கள் வாக்களிக்க ஏதுவாக தனி வாக்குச்சாவடிகளை அமைக்ககோரி தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், சொந்த தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், தேர்தல் பணி சான்றிதழ் சமர்ப்பித்து வாக்களிக்கவும், பிற தொகுதி அல்லது பிற மாவட்டங்களில் பணியமர்த்தப்படும் ஊழியர்கள் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். தபால் வாக்குகள் பதிவு செய்வதற்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...