கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நீட் தேர்வு 2021 - தேதி அறிவிப்பு...

 NEET EXAM 2021 - DATE ANNOUNCED...





உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள சமையலர், உதவியாளர், நூலக உதவியாளர் பணிக்கான NOTIFICATION & APPLICATION...

 






>>> விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் தேவையான சான்றிதழ்கள்...


Ford India Recruitment 2021-Apply here for Various Posts...

 Ford Indiaல் பல்வேறு பணியிடங்கள்


Ford Indiaலிருந்து காலியாக உள்ள OTX Authoring Engineer, Software Engineer, Software Engineer – IT Data Hub, NA PFM PV Analyst, IT Research Specialist, Volume Planning Analyst, Software Engineer, Product Manager & Other Posts பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


நிறுவனம்: Ford India


பணியின் பெயர்: OTX Authoring Engineer, Software Engineer, Software Engineer – IT Data Hub, NA PFM PV Analyst, IT Research Specialist, Volume Planning Analyst, Software Engineer, Product Manager & Other Posts


தகுதி: MBA Degree/ MSW Degree/ BE/ B Tech/ Diploma in Engineering/ MSc/ MCA/ BA/ BBA/ BBM/ B Com


தேர்ந்தெடுக்கும் முறை:

Written Test

Group Discussion

Interview


விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் online விண்ணப்பிக்க வேண்டும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு: >>> Click Here...


அரசு உதவிபெறும் பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி - மேலும் அதிகரிக்க வாய்ப்பு...


தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனாவால் மேலும் 36 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாபேட்டை மேல்நிலைப் பள்ளியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 56 ஆக  உயர்ந்துள்ளது. நேற்று 20 மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 36 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பரிசோதனை மேற்கொண்ட 200 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் அம்மாப்பேட்டையில் உள்ள பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 



அவரை அடுத்து அம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ ஆய்வாளர்கள், அம்மாப்பேட்டை ரெட் கிராஸ் நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதையடுத்து பள்ளி இருக்கும் பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் 20 பேரில் 16 மாணவிகள் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 4 பேர் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஏப்ரல் 1 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மார்ச் 31க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவு...

 பருவத் தேர்வுகளை மார்ச் 31க்குள் முடிக்கும்படி, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


ஏப்., 1 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது.


 கொரோனா தொற்றால், இந்த கல்வி ஆண்டு முழுதும் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. 


கொரோனா தாக்கம் குறைந்ததால், ஜன., 19 முதல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கும்; பிப்., 8 முதல், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1க்கும் நேரடி வகுப்புகள் துவங்கின.


இந்நிலையில், பிளஸ் 2வுக்கு மட்டும், மே 3ல் பொதுத் தேர்வு துவங்கும் என, அறிவிக்கப்பட்டது.


ஒன்பது முதல், பிளஸ் 1 வரை, பொதுத் தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைவருக்கும், 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது.


தேர்வு ரத்தானாலும், பாடங்களை நடத்தி முடிப்பதற்காக, வாரத்தின் ஆறு நாட்களும் பள்ளிகள் இயங்குகின்றன.


ஒன்று முதல், எட்டு வரையிலான வகுப்புகளுக்கு மட்டும், ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.


இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் ஏப்., 6ல் நடக்க உள்ளதால், அனைத்து பள்ளி வளாகங்களும் ஓட்டுச் சாவடி பணிக்கு, தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.


இதன் காரணமாக, அனைத்து பள்ளிகளிலும், மார்ச் 31க்கு பின், கோடை விடுமுறையை அறிவிக்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது.


 இதற்காக, வரும் 22ம் தேதி முதல், பிளஸ் 2 தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும், பருவ தேர்வுகளை நடத்தி முடிக்குமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், தேர்தலுக்கு பின் பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.


 மற்ற வகுப்புகளுக்கு ஏப்., 1 முதல் கோடை விடுமுறை விடுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.



பொறியியல் படிப்புகளுக்கு வழக்கம் போல கணிதம், இயற்பியல் பாடங்கள் முக்கியம் : பல்டி அடித்த ஏஐசிடிஇ - குழப்பத்தில் மாணவர்கள்...

 



இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் படிக்க கட்டாயமில்லை என்ற அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) திரும்பப் பெற்றுள்ளது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு 2021-22 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்களுக்கான ஒப்புதல் கையேட்டை ஏஐசிடிஇ வெளியிட்டது. அதில் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கல்வி தகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.


அதன்படி, இயற்பியல், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், உயிரி தொழில்நுட்பம், விவசாயம், தொழிற்படிப்புகள், இன்பர்மேட்டிக்ஸ் ப்ராக்டிசஸ் , இன்ஜியனிரிங் கிராபிக்ஸ் , பிசினஸ் ஸ்டடிஸ் , தொழில்முனைவோர் ஆகிய பாடங்களில் ஏதாவது மூன்றை படித்திருந்தாலே பொறியில் படிப்புகளில் சேரலாம் என ஏஐசிடியூ தெரிவித்துள்ளது. வரும் 2021-22 கல்வி ஆண்டில் இந்த நடைமுறை செயல்பட்டுக்கு வரும் எனவும் ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. கணிதம், இயற்பியல் பாடங்களை தவிர பிற பாடங்களை எடுத்து பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் இணைப்பு படிப்பு ஒன்றை நடத்தும். பிளஸ் டூ தேர்வில் 45 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுப்பவர்கள் பொறியியல் படிப்புகளில் சேரலாம். பட்டியல் இன மாணவர்கள் 40% எடுத்தால் போதும் என்றும்  கூறப்பட்டுள்ளது.


பொதுவாக ப்ளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியல் ஆகிய பாடங்களை முதன்மை  பாடங்களாக எடுத்து படித்தால்தான் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப  படிப்புகளில் சேர முடியும். இந்த நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் படிக்க கட்டாயமில்லை என்ற ஏஐசிடிஇ புதிய முடிவுக்கு கல்வியாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தற்காலிகமாக அறிவிப்பை திரும்பப் பெறுவதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. பொறியியல் படிப்புகளுக்கு வழக்கம் போல கணிதம், இயற்பியல் பாடங்கள் முக்கியம் என தெரிவித்துள்ளது.

இன்றைய செய்திகள் தொகுப்பு... 14.03.2021(ஞாயிறு)...

 


🌹அன்பும் மகிழ்ச்சியும் விலை மதிப்பில்லாதது.

அதை கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் மட்டுமே அதன் மதிப்பு தெரியும்.!

🌹🌹யாரிடமும் எப்போதும் எதையும் எதிர் பார்க்க வேண்டாம்.ஏனென்றால்

எதிர்பார்ப்புகள் அதிக வலியை கொடுக்கும்.!!

🌹🌹🌹உண்மையான அன்புக்கு போலி உறவும்,

போலியான அன்பிற்கு உண்மையான உறவும்

கிடைப்பதால்தான் 

அன்பு இன்றும் யாரோ ஒருவரிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறது.

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒திமுக தேர்தல் அறிக்கை, 2021 வெளியிடப்பட்டுள்ளது.


👉த.நா. அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்திலும், கடந்த ஜனவரி மதுரை த.நா.அரசு ஊழியர் சங்க  மாநாட்டிலும் திமுக தலைவர் உறுதியளித்தவாறு புதிய ஓய்வூதியத்திட்டம் கைவிடப்பட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

👉மேலும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்றும், 

👉உயர்கல்விக்கு பயில்வோருக்கு அண்ணா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, கடந்த ஆட்சியில் ரத்துசெய்யப்பட்ட ஊக்க ஊதியம் மீண்டும் வழங்கப்படும், என்றும்  

👉பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர்கள் குடும்ப நல நிதி ரூ.5 இலட்சமாக உயர்த்தப்படும்,  

👉இடைநிலை ஆசிரியர்களின் பிரச்சினை தீர்க்கப்படும்,

👉தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பணி தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைக்க நிர்வாகத்தீர்ப்பாயம் (Administrative Tribunal) அமைக்கப்படும்,

👉பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடிய ஆசிரியர்கள் மீது 17ஆ பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆசிரியருக்கு பாதிப்பில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்க ஆவண செய்யப்படும்.

👉அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம், கூடுதல் பலனளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில்  அறிவிக்கப்பட்டுள்ளது.

🍒🍒G.O. 2D. NO. 24 Dt: February 26, 2021 - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சட்ட்மன்ற விதி 110 – இன் கீழான அறிவிப்பு 10 ஆண்டுகளுக்கு மேலன 80 ஆதி திராவிடர் நல விடுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் - ரூ.14,73,80,605-க்கு நிர்வாக அனுமதி – ஆணை வெளியீடு.

🍒🍒ஆகஸ்ட் 1-ஆம் தேதி நீட் தேர்வு -  11 மொழிகளில் ஆகஸ்ட் 1-ஆம்  தேதி நீட் தேர்வு நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

🍒🍒+2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் 

16.04.2021 முதல் 23.04.2021 வரை நடத்தப்பட உள்ளது. -அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

🍒🍒நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் BE மற்றும் B.Tech பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க கணிதமும் இயற்பியலும் கட்டாயமில்லை -  அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சில்  (AICTE) அறிவிப்பு.

🍒🍒கணினி ஆசிரியர்கள் பிரச்னை தீர்க்க 3 ஆண்டுக்கு பின் குழு அமைக்க தமிழக அரசுக்கு  மத்திய அரசு ஆலோசனை.

🍒🍒புதுச்சேரியில் 1ம் முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் : 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து : ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அறிவிப்பு.

🍒🍒10% இட ஒதுக்கீடு அமல்படுத்த கூடாது- உயர்நீதிமன்றம் உத்தரவு.  தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முன்னேறிய வகுப்புக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அண்ணாபல்கலைக்கழகம் அமல்படுத்த கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு.

🍒🍒பாட வல்லுநர் தொகுப்பு உருவாக்குதல் - ஆசிரியர்கள் விவரங்களை அனுப்பி வைக்கக் கோரி SCERT இணை இயக்குநர் உத்தரவு . ஒரு வகுப்பிற்கு ஒரு பாடத்திற்கு மூன்று ஆசிரியர்கள் வீதம் பெயர் பட்டியல் அனுப்ப உத்தரவு.

🍒🍒இன்று தேர்தல் பயிற்சிக்கு செல்பவர்கள் தங்களுடைய Voter id xerox மற்றும் தேர்தல் பயிற்சி ஆணையின் xerox கொண்டு செல்லவும்.

🍒🍒இது வெறும் தேர்தல் அறிக்கையல்ல தமிழகத்தை திருத்தி எழுதுவதற்கான தீர்வுப்பெட்டகம்: உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

நீட் தேர்வை ரத்து செய்ய சட்டம்-மகளிருக்கு  இலவசப்பேருந்து பயணம்- சிலிண்டருக்கு ரூ.100 மானியம்- தமிழகத்து வேலைகள் தமிழக இளைஞருக்கே-பள்ளிகளில் பால் வழங்கப்படும்- -கல்விக்கடன் ரத்து.. இப்படி எழுச்சிமிகு வாக்குறுதிகளை தாங்கி வந்துள்ளது கழகத்தின் தேர்தல் அறிக்கை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கை தான் தேர்தலில் கதாநாயகனாக இருக்கும். இம்முறை தலைவர் 

மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்துள்ள ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதியும் தனித்தனி கதாநாயகன்களாக வெளிப்பட்டுள்ளன. இது வெறும் தேர்தல் அறிக்கையல்ல தமிழகத்தை திருத்தி எழுதுவதற்கான தீர்வுப்பெட்டகம். நன்றி எனவும் கூறினார்.

🍒🍒தமிழக அமைச்சர்களின் ஊழல் குறித்து தினமும் ஒரு பட்டியலை ஆதாரத்துடன் வெளியிடுவேன் என்று கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

🍒🍒உன்னுடைய சுற்று வரும் வரை நீ காத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும்

அண்ணா கூறியதை மேற்கோள் காட்டி சீட் கிடைக்காத திமுகவினருக்கு அக்கட்சியினருக்கு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

🍒🍒தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க தந்திரம், சதி, சூழ்ச்சிகளை செய்வார்கள் 

அதிகார பலம் கொண்டவர்கள் திமுகவை எளிதாக வெற்றி பெற விடமாட்டார்கள். 

தேர்தலில் தந்திரங்கள், சதிகள், சூழ்ச்சிகளை முறியடிக்க திமுகவினரின் உழைப்பு, ஒத்துழைப்பு தேவை.

தமிழகம் முழுவதும் கலைஞரே வேட்பாளர் 

விருப்ப மனு அளித்த அனைவரையும் வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என கடலளவு ஆசை இருந்தாலும், தொகுதிகளின் எண்ணிக்கை கையளவு தானே 

தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்.

🍒🍒நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால்

கல்வியும் மருத்துவமும் இலவசமாக

வழங்கப்படும்; சேலத்தில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் சீமான் அறிவிப்பு

🍒🍒அமெரிக்க சுதந்திர தினமான வரும் ஜூலை 4-ஆம் தேதிக்குள் கரோனா நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.

🍒🍒சுவிட்சர்லாந்து நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 21 பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

🍒🍒திபெத்தின் பிரம்மபுத்ரா நதியில் சர்ச்சைக்குரிய நீர்மின் திட்டம் உள்பட 60 திட்டங்களுக்கு சீனா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

🍒🍒பொது சுகாதார நெறிமுறைகளை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் கனட மருத்துவர் போனி தெரிவித்துள்ளார்.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹திமுக தேர்தல் அறிக்கையில் முக்கியமானவை


👉மலைக்கோயில்கள் அனைத்திலும் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்

👉இந்து ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் சீரமைக்கப்படும்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் படி பணி நியமனம்

👉சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழயர்களாக நியமனம் செய்யப்படுவர் 

- திமுக அறிக்கை

👉ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.

👉அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதிக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும்

👉நியாய விலைக் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை

- திமுக தேர்தல் அறிக்கை

👉வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்

👉பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்கு பால் வழங்கப்படும்

👉உள்ளூர் டவுன் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்

👉கூட்டுறவு நகை கடன் 5பவுன் வரை தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி

- திமுக தேர்தல் அறிக்கை

👉பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும். 

திமுகதேர்தல்அறிக்கை2021

👉அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டேப் ( TAB) வழங்கப்படும்.

-திமுக தேர்தல் அறிக்கை.

👉ஒவ்வொரு மாதம் மின் கணக்கீடு செய்யப்படுமென மின்கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம். ஏற்கனவே 2016 திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் தீர்மானம் - மு.க.ஸ்டாலின்

👉பெட்ரோல் விலை லிட்டருக்கு ரு.5ம், டீசல் விலை ரூ.4ம் குறைக்கப்படும் - மு.க.ஸ்டாலின்

👉கூட்டுறவு வங்களில் 5 சவரன் வரையான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் 

👉மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கூட்டுறவுக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்

-திமுக தேர்தல் அறிக்கை

👉மகளிர் பேறுகால உதவித்தொகை ரூ.24000 ஆக உயர்த்தப்படும் 

-மு.க.ஸ்டாலின்

👉அனைத்து ரேஷன் (அரிசி) அட்டைதாரர்களுக்கும் 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் வழங்கப்படும்.

- திமுக தேர்தல் அறிக்கை

👉100 நாள் வேலை 150 நாளாக 

உயர்த்தப்படும்  

- திமுக தேர்தல் 

அறிக்கை

👉திருச்சி, சேலம், கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் வசதி கொண்டுவரப்படும்

மசூதி, தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கப்படும்

குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்

-திமுக தேர்தல் அறிக்கை                          

👉கரூர், ஒசூர், வேலூர், 

ராமநாதபுரத்தில் ஏர்போர்ட் அமைக்கப்படும் 

- திமுக தேர்தல் அறிக்கை

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School Education Minister Anbil Mahes paid tribute to murdered teacher Ramani and condoled with her family.

  தஞ்சாவூர்: மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது க...