>>> The Nilgiris (Udagamandalam)
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
2001-2002ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு.
செமஸ்டர் தேர்வு நடைபெறும் போது தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்...
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாள்.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கும்.
>>> தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2022 - தகவல் கையேடு (TNEA 2022 - Information Brochure)...
விண்ணப்பிக்க வலைதள முகவரி...👇
>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...
>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...
ஈரோடு, சாலை மற்றும் போக்குவரத்து(IRTT) பொறியியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரியாக மாற்றப்படுகிறது. பணியாளர்களின் பிள்ளைகளுக்கு 35% இடஒதுக்கீடு வழங்கப்படும் - அரசாணை G.O. (Ms) No.165, Dated : 27.08.2021 வெளியீடு...
>>> Click here to Download G.O. (Ms) No.165, Dated : 27.08.2021...
பொறியியல் நேரடி 2ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 10 முதல் விண்ணப்பிக்கலாம்...
பொறியியல் (B.E., B.Tech.,) சேர்க்கை - நாளை (26-07-2021) முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது...
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் குறித்து முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
பொறியியல் படிப்புகளுக்கான நவம்பர் / டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள், பிப்ரவரி / மார்ச் / ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, ஏப்ரலில் தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால் அதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததால், மறுத்தேர்வு நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில் மறுத்தேர்வு மற்றும் ஏப்ரல் / மே மாத செமஸ்டர் தேர்வு (முதுகலை 2வது செமஸ்டர் தவிர்த்து) எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
* தேர்வுகள் பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பு நடைபெற்றதை போல 3 மணி நேரம் ஆஃப்லைன் முறையில், பேனா மற்றும் காகித முறையில் நடைபெறும்.
* வீட்டிலிருந்தே தேர்வு எழுத மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
* முன்னதாக மாணவர்கள் தேர்வுத் தாளைப் பதிவிறக்கம் செய்ய, கணினி / மடிக்கணினி / மொபைல்போன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணைய வசதியுடன் வைத்திருக்க வேண்டும்.
* மாணவர்கள் தேர்வு எழுதத் தேவையான பேனா, பென்சில், அழிப்பான், ஏ4 தாள்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து உபகரணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
* ஹால் டிக்கெட்டை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மேலும் அந்தந்த தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
* தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாகக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக மின்னஞ்சல் / கூகுள் கிளாஸ்ரூம்ஸ் / மைக்ரோசாப்ட் டீம்ஸ் மூலம் வினாத்தாள் அனுப்பப்படும்.
* தேர்வு காலை, பிற்பகல் என 2 பிரிவுகளாக 3 மணி நேரம் நடத்தப்படும். காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்வுகள் இருக்கும்.
* வினாத்தாளைப் பெறுவதற்கு 9 முதல் 9.30 வரையிலும், தேர்வுகளை எழுத 9.30 முதல் 12.30 வரையிலும் விடைத்தாளை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய 12.30 முதல் 1.30 வரையிலும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல பிற்பகல் வேளையில் 2 முதல் 2.30 வரை வினாத்தாளைப் பெறவும் 2.30 முதல் 5 மணி வரை தேர்வு எழுதவும் 5.30 முதல் 6 மணி வரை விடைத்தாள்களை ஸ்கேன் செய்து அனுப்பவும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்து, தனி வெள்ளைத் தாளில் நீலம் மற்றும் கருப்பு நிற மையால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். விடைத்தாளில் காலிப்பக்கம் விடக்கூடாது. ஒருவேளை பக்கம் எழுதப்படாமல் இருந்தால் பேனாவால் கோடிட்டு அடிக்க வேண்டும்.
* ஏ4 தாளில் 30 பக்கங்களுக்கு மிகாமல் மாணவர்கள் தேர்வெழுத வேண்டும்.
* தேர்வு எழுதி முடித்தவுடன் விடைத்தாளை ஸ்கேன் செய்து பிடிஎஃப் வெர்ஷனாக அனுப்பி வைக்க வேண்டும்.
* தேர்வு முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் விடைத்தாளை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். காலதாமதமாக அனுப்பினால் விடைத்தாள் நிராகரிக்கப்படும்.
* விடைத்தாளை எடுத்து நூலில் கட்டி, விரைவுத் தபால், பதிவுத் தபால் அல்லது கொரியர் மூலம் அந்தந்தக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் பெயரில் அன்றைய தினமே அனுப்ப வேண்டும்.
* நேரடியாகக் கல்வி நிறுவனத்திற்குச் சென்று விடைத்தாளைத் தரக்கூடாது.
* ஒவ்வொரு தாளின் மேல்புறத்திலும் மாணவரின் பெயர், பாடக் குறியீட்டு எண், தேர்வின் பெயர், பதிவு எண் ஆகியவற்றை கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்.
* ஒவ்வொரு தாளின் கீழ்ப்புறத்திலும் தேர்வு தேதி, பக்கம் எண், மாணவர்களின் கையொப்பம் ஆகியவை இருக்க வேண்டும். கூடுதல் தகவல் தேவைப்பட்டால் அந்தந்தக் கல்லூரி நிர்வாகத்தை மாணவர்கள் அணுகலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி பெற்ற பாடங்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும்படி, இன்ஜினியரிங் கல்லுாரிகள் கட்டாயப்படுத்துவதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, பிப்ரவரியில் 'ஆன்லைன்' வழி தேர்வு நடந்தது. மாணவர்கள் ஆன்லைனில் இருந்தபடி, மொபைல்போன் மற்றும் 'லேப்டாப்' வாயிலாக தேர்வு எழுதினர்.
ஆன்லைனில் மாணவர்களின் முகம் மற்றும் கண் அசைவுகள், அப்போது கேட்கும் ஒலி ஆகியவை பதிவாகும் வகையில், 'சாப்ட்வேர்' பயன்படுத்தப் பட்டது.
அறிவிப்பு
இந்த தேர்வில், பல மாணவர்களின் கண் அசைவுகள் மற்றும் அருகில் கேட்ட சத்தங்களின் அடிப்படையில், பலர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், காப்பி அடித்ததாகவும், சாப்ட்வேர் பதிவு செய்தது. அதனால், 30 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இது குறித்து, மாணவர்கள் தரப்பில் பரவலாக புகார் எழுந்ததால், மறு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மறு தேர்வு, ஜூன் 14ல் துவங்க உள்ளது.'ஏற்கனவே நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், விருப்பம் இருந்தால், மீண்டும் மறு தேர்வு எழுதலாம்; அவர்களுக்கு மறு தேர்வு கட்டாயமில்லை. மற்ற மாணவர்கள் கட்டாயம் மறுதேர்வில் பங்கேற்க வேண்டும்' என, அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார்.
கோரிக்கை
இந்நிலையில், பல தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள், தங்கள் மாணவர்கள், ஏற்கனவே நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மீண்டும் தேர்வை எழுதும்படி கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.புதிய மாணவர் சேர்க்கை நடக்க உள்ளதால், தங்கள் மாணவர்களின் மதிப்பெண்ணை உயர்த்தி காட்டுவதற்காக, மீண்டும் தேர்வு எழுத வற்புறுத்துவதாக, பெற்றோரும் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, உயர் கல்வித் துறை சார்பில், கல்லுாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மறு தேர்வுக்கு கட்டாயப்படுத்தும் கல்லுாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ் மொழியில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன இதன் காரணமாக பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும். இதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் AICTE தமிழ், இந்தி, தெலுங்கு, குஜாராத்தி, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட 7மொழிகளில் வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பயிலலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
இதன்காரணமாக ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பாடங்கள் தாய் மொழியிலும் இடம்பெறும். பொறியியல் பாடங்களை அந்தந்த பிராந்திய மொழிகளில் மொழி மாற்றவும் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் திட்டமிட்டுள்ளது. மேலும் 11 இந்திய மொழிகளிலும் பொறியியல் பாடங்களை கொண்டு வரவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள் அதிகம் பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு உள்ளது என AICTE தகவல் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும். - உயர்கல்வித்துறை- Reexam Schedule...
அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும்.
2017 ஒழுங்குமுறைப்படி அண்ணா பல்கலைக்கழக முதுகலை, இளங்கலை பட்டபடிப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மற்ற மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 21ம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை தேர்வு எழுதாமலும், கட்டணம் செலுத்தாமல் உள்ள மாணவர்கள் ஜூன் 3ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- உயர்கல்வித்துறை
ஜூன்-ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள பொறியியல் மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்...
கடந்த நவம்பர் - டிசம்பர் மாத தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் வரும் 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே தேர்வுக்கு விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
- அண்ணா பல்கலைக்கழகம்...
பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளதாகவும் அதனை வழக்கமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
தேர்வுக்கு 30 நிமிடங்கள் முன்னதாக அந்த அந்த கல்லூரிகளுக்கு வினாத்தாள்கள் அனுப்பப்படும் தேர்வுக்குப் பிறகு மாணவர்கள் ஸ்கேன் செய்த விடைத் தாள்கள் மற்றும் அசல் விடைத்தாள்களை தங்களுடைய கல்லூரியின் வலைதளத்தில் பதிவேற்றம் வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
💥பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு.
💥கடந்த நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டருக்கு மறு தேர்வு.
💥முறைகேடுகள் நடைபெற்றதன் காரணமாக மறு தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவிப்பு.
செய்தி வெளியீடு எண் : 028, நாள் : 10.05.2021
செய்திக் குறிப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர் | டிசம்பர் 2020 க்குண்டான பருவத் தேர்வுகள் ஒழுங்கு நிகழ்நிலைத் தேர்வாக ( Proctored Online Examination ) 2021 பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் மாணாக்கர்கள் தங்களுக்கு அதிக முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அதனால் தங்களுக்கு அதிக சிரமங்கள் ஏற்பட்டதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது கவனத்துக்கு கொண்டு வந்தனர் . இதில் மாணாக்கர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களது வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தைக் கருதியும் , நன்குப் படிக்கும் சில மாணாக்கர்கள் தங்களுக்கு மதிப்பெண்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக தெரிவித்ததையும் கருத்தில் கொண்டு , மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் , மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் , உயர்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாணாக்கர்களின் நலன் கருதி கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளார்கள் .
1 பிப்ரவரி 2021 - இல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதைக் கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும் .
2. இம்மாணக்கர்கள் இத்தேர்வுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை .
3 . பிப்ரவரி மாதம் நடந்த தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணாக்கர்கள் விரும்பினால் அவர்களும் இத்தேர்வினை எழுதலாம் .
4 . தேர்வு 3 மணிநேரம் நிகழ்நிலைத் தேர்வாக ( Online Examination ) நடைபெறும் . பல்கலைக்கழகம் கொரோனாவிற்கு முன்பு பின்பற்றிய பழைய வினாத்தாட்கள் முறையே கடைபிடிக்கப்படும் . இத்தேர்வுகள் , தமிழகத்திலுள்ள மற்ற பல்கலைக்கழகங்கள் நடத்தியது போலவே நடத்தப்படும் .
5 . எதிர்வரும் ஏப்ரல் / மே 2021 பருவநிலைத் தேர்வுகளும் மேற்கண்ட முறையிலேயே நடத்தப்படும் . பிற பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் தற்போது ஊரடங்குக் காரணமாக் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் மே 25 முதல் தொடர்ந்து நடத்தப்படும் . அதற்கான அறிவுப்புகளை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே வெளியிடும் . மாணாக்கர்கள் ஊரடங்குக் காலத்தைப் பயன்படுத்தி தேர்வுக்குத் தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9
கொரோனா இயல்பு நிலை திரும்பும் வரை கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப குழுவான ஏ.ஐ.சி.டி.இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும், பேராசிரியர்களுக்கான ஊதியத்தை மாதந்தோறும் உரிய நேரத்தில் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முதற்கட்ட கலந்தாய்வையும், செப்டம்பர் 9 ஆம் தேதிக்குள் இரண்டாம் கட்ட கலந்தாய்வையும் நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது.
இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் படிக்க கட்டாயமில்லை என்ற அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) திரும்பப் பெற்றுள்ளது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு 2021-22 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்களுக்கான ஒப்புதல் கையேட்டை ஏஐசிடிஇ வெளியிட்டது. அதில் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கல்வி தகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இயற்பியல், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், உயிரி தொழில்நுட்பம், விவசாயம், தொழிற்படிப்புகள், இன்பர்மேட்டிக்ஸ் ப்ராக்டிசஸ் , இன்ஜியனிரிங் கிராபிக்ஸ் , பிசினஸ் ஸ்டடிஸ் , தொழில்முனைவோர் ஆகிய பாடங்களில் ஏதாவது மூன்றை படித்திருந்தாலே பொறியில் படிப்புகளில் சேரலாம் என ஏஐசிடியூ தெரிவித்துள்ளது. வரும் 2021-22 கல்வி ஆண்டில் இந்த நடைமுறை செயல்பட்டுக்கு வரும் எனவும் ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. கணிதம், இயற்பியல் பாடங்களை தவிர பிற பாடங்களை எடுத்து பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் இணைப்பு படிப்பு ஒன்றை நடத்தும். பிளஸ் டூ தேர்வில் 45 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுப்பவர்கள் பொறியியல் படிப்புகளில் சேரலாம். பட்டியல் இன மாணவர்கள் 40% எடுத்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக ப்ளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியல் ஆகிய பாடங்களை முதன்மை பாடங்களாக எடுத்து படித்தால்தான் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர முடியும். இந்த நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் படிக்க கட்டாயமில்லை என்ற ஏஐசிடிஇ புதிய முடிவுக்கு கல்வியாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தற்காலிகமாக அறிவிப்பை திரும்பப் பெறுவதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. பொறியியல் படிப்புகளுக்கு வழக்கம் போல கணிதம், இயற்பியல் பாடங்கள் முக்கியம் என தெரிவித்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தி வைக்கவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதுமான வகுப்பறைகள், ஆசிரியர்கள் இல்லாததால் செங்கல்பட்டு மாவட்டம், சட்டமங்கலத்தில் உள்ள இரு தனியார் பொறியியல் கல்லூரிகளின் பல்கலைக்கழக இணைப்பை நிறுத்தி வைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில், 2020-21 ஆம் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கை நடத்த தடை விதித்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது.
இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து, கல்லூரிகள் சார்பில் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அண்ணா பல்கலைக்கழக விதிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டது எனக் கூறி, பல்கலைக்கழக உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், இரு கல்லூரிகளுக்கும் புதிதாக நோட்டீஸ் அனுப்பி, நேரில் ஆய்வு செய்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுக்கள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (அக். 20) விசாரணைக்கு வந்தபோது, பல்கலைக்கழக இணைப்பு மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தி வைக்கவும் சட்டப்படி, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் விதிகளின்படியே, தரமான கல்வியை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், இரு கல்லூரிகளின் மனுக்கள் மீது அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, பல்கலைக்கழக இணைப்பு நிறுத்திவைப்பு உத்தரவை அமல்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தி வைக்கவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதுமான வகுப்பறைகள், ஆசிரியர்கள் இல்லாததால் செங்கல்பட்டு மாவட்டம், சட்டமங்கலத்தில் உள்ள இரு தனியார் பொறியியல் கல்லூரிகளின் பல்கலைக்கழக இணைப்பை நிறுத்தி வைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில், 2020-21 ஆம் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கை நடத்த தடை விதித்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது.
இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து, கல்லூரிகள் சார்பில் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அண்ணா பல்கலைக்கழக விதிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டது எனக் கூறி, பல்கலைக்கழக உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், இரு கல்லூரிகளுக்கும் புதிதாக நோட்டீஸ் அனுப்பி, நேரில் ஆய்வு செய்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுக்கள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (அக். 20) விசாரணைக்கு வந்தபோது, பல்கலைக்கழக இணைப்பு மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தி வைக்கவும் சட்டப்படி, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் விதிகளின்படியே, தரமான கல்வியை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், இரு கல்லூரிகளின் மனுக்கள் மீது அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, பல்கலைக்கழக இணைப்பு நிறுத்திவைப்பு உத்தரவை அமல்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...