கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஏப்ரல் 11 முதல் பணியிடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் - மத்திய அரசு...

மத்திய அரசு நாடு முழுவதும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் பணியிடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்துள்ளது. 



ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 11 முதல் பணியிடங்களிலேயே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 



இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மையம் அமைத்து ஏப்ரல் 11 முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தடுப்பூசி செலுத்த தகுதியான 100க்கும் அதிகமான பயனாளிகளை கொண்ட அலுவலகம் அருகில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்தை அணுக வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 8.7 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை...

 கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 



கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுஇடங்களில் முக கவசம் அணிவது தனிநபர் இடைவெளியை கட்டாயம் பின்பற்றுவது என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் ஏதேனும் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நாளை மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . 

தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் எனப் பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது. தேர்தலுக்குப் பிறகு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவுவது வதந்தியே. கொரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். 

ஆனால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது என்று சுகாதாரத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், பொது இடங்களில் மக்களின் நடமாட்டத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கை மற்றும் அத்தியாவசியமற்றப் பணிகளுக்குத் தடை விதிப்பது போன்றவை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஜூன் 14-ல் என்இஎஸ்டி(NEST) தேர்வு : மே 20-ல் ஹால் டிக்கெட் வெளியீடு...

 தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நுழைவுத் தேர்வு, ஜூன் 14-ம் தேதி நடைபெறும். இதற்கான ஹால் டிக்கெட் மே 20-ல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. 



தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில் உள்ள அணுசக்தி அறிவியல் பாடப்பிரிவுகளுக்குத் தேசிய நுழைவுத் தேர்வு (என்இஎஸ்டி) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான என்இஎஸ்டி தேர்வு எழுத விண்ணப்பப்பதிவு https://www.nestexam.in/ என்ற இணையதளத்தில் கடந்த மாதம் தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.30 என அறிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் என்இஎஸ்டி தேர்வு ஜூன் 14-ம் தேதி நடைபெறும் என்று அத்தேர்வை நடத்தும் அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட நாட்டின் 90 முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. ஹால்டிக்கெட் மே 20-ம்தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.4.2021...

 மத்திய ரயில்வே அமைச்சகத் தின் கீழ் செயல்படும் இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலியிடம்

சிவில் இன்ஜினியர் பிரிவில் சிவில் இன்ஜினியர் 60, எஸ் அண்டு டி 14 என மொத்தம் 74 இடங்கள் உள்ளன. 



கல்வித்தகுதி

சிவில் இன்ஜினியர் பதவிக்கு குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., சிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். எஸ் அண்டு டி பிரிவுக்கு எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / இ.இ.இ., / இ.சி.இ. / இன்ஸ்ட்ருமென்டேசன் / கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும். 


வயது: 1.3.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 


முகவரி

DGM/HRM, Ircon International Ltd., Ltd., 

C4, C4, District Centre, Saket, 

New Delhi 110017. 

கடைசி தேதி: 

விண்ணப்பிக்க 18.4.2021. 

விண்ணப்பம் சென்று சேர 28.4.2021. 


மேலும் விவரங்களுக்கு: 

>>> இங்கே சொடுக்கவும்...


மாணவர்களுக்காக ஆன்லைனில் கோடைகால பயிற்சி முகாம் - அஞ்சல் துறை நடத்துகிறது...

 குழந்தைகளின் மத்தியில் தபால்தலை சேகரிப்பை ஒரு பொழுதுபோக்காக விதைக்க, அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் சார்பில், வரும் மே மாதத்தில் ஆன்லைன் மூலம், கோடைகால முகாம் நடத்தப்பட உள்ளது.



இந்த முகாமின் ஒரு பகுதியாக, சிறப்பு தபால் தலையை பொழுதுபோக்காக சேகரிப்பதை அறிமுகம் செய்தல், கடிதம் எழுதும் பயிற்சிகள், தபால் நிலையத்துக்கு களப்பயணம் ஆகியவை நடத்தப்பட உள்ளன. 8 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ரூ.250 கட்டணமாக செலுத்தி இந்த முகாமில் சேரலாம். 


நுழைவுக் கட்டணத்தை, காசோலை மற்றும் டிமான்ட் டிராப்ட் மூலம், 


தலைமை அஞ்சலக அதிகாரி, 

அண்ணா சாலை தலைமை அலுவலகம், 

சென்னை 600002 


என்ற முகவரிக்கு தபால் மூலமாக வரும் 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இம்முகாம் 4 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் தொகுதி மே 5 முதல் 7-ம் தேதி வரையிலும், 2-ம் தொகுப்பு மே 11 முதல் 13 வரையிலும், 3-வது தொகுதி மே 19 முதல் 21 வரையிலும், 4-ம் தொகுதி மே 26 முதல் 28-ம் தேதி வரையிலும் காலை 10.30 முதல் நண்பகல் 12.30 மணி வரையில் நடைபெறும். பங்கேற்பாளருக்கு தபால் மூலம் சான்றிதழ் அனுப்பப்படும். அண்ணா சாலை தலைமை அஞ்சலக, தலைமை அஞ்சலக அதிகாரி சு.குமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதை தெரிவித்துள்ளார்.

கார் ஓட்டும் போது தூங்கினால் டிரைவரை எழுப்பும் கருவி...

 வாகனம் ஓட்டிச் செல்லும் போது துாங்கினால், டிரைவரை எழுப்பும் வகையிலான கருவியை, ஐதராபாதில் உள்ள, ராணுவ மின்னணு மற்றும் மெகானிகல் பொறியியல் கல்லுாரி கண்டுபிடித்துள்ளது.



நாட்டில் நடக்கும் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு, வாகனத்தை ஓட்டும் போது, டிரைவர் துாங்கிவிடுவது, முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதை தடுக்க, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் உள்ள, எச்.சி.இ.எம்.இ., எனப்படும், ராணுவ மின்னணு மற்றும் மெகானிகல் பொறியியல் கல்லுாரி, கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இது குறித்து, கல்லுாரியின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:


வாகனம் ஓட்டும் போது, துாக்கத்தில், டிரைவரின் இமைகள் மூடினால், ஒலி எழுப்பி, அவரை விழிப்படையச் செய்யும் கருவியை வடிவமைத்துள்ளோம். டிரைவர் இருக்கைக்கு அருகே, அவரது விழிகளை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில், இரண்டு கேமராக்கள் பொருத்தப்படும். இமைகள் மூடும் போது, கம்ப்யூட்டர் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்ட, 'ஐ ட்ராக்கர்' எனப்படும் கருவி, ஒலி எழுப்பி, டிரைவரை விழிப்படையச் செய்யும். 


பகல், இரவு என, எல்லா நேரங்களிலும், இந்த கருவி செயல்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கருவியை, தெலுங்கானா மாநில, தகவல் தொழில்நுட்பம், வர்த்தகத்துறை முதன்மை செயலரிடம், கல்லுாரி நிர்வாகம் சமீபத்தில் வழங்கியது. போக்குவரத்து அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தி, வாகனங்களில் இந்த கருவியை பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாக, முதன்மை செயலர் தெரிவித்துள்ளார்.

டெலிகிராம் (Telegram) செயலி புதிய பதிப்பு - சிறப்பம்சங்கள்...

 புதிய புதுப்பிப்புடன் சில புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. ஒருவருக்கொருவர் டெலிகிராம் அரட்டைகள், குழுக்கள் மற்றும் சேனல்களுக்கான தானாக நீக்குதல் செயல்பாடு இதில் அடங்கும். நேரடி வாய்ஸ் சாட்டுக்கு ஆதரவுடன் டெலிகிராம் ஒளிபரப்பு குழுக்களையும் சேர்க்கிறது. இது தவிர, பயனர்கள் எந்த ஸ்பேம் உள்ளடக்கம் அல்லது போலிக் கணக்குகளையும் புகாரளிப்பதை இப்போது பயன்பாடு எளிதாக்கியுள்ளது. அனைத்து புதிய டெலிகிராம் அம்சங்களையும் விரிவாகக் காணலாம். 



 செய்திகளைத் தானாக நீக்கு டெலிகிராம் பயனர்கள் இப்போது எந்த நேரத்திலும் உரையாடலின் பங்கேற்பாளர்களின் செய்திகளை நீக்க முடியும். இது முந்தைய ரகசிய அரட்டைகளில் மட்டுமே அவர்கள் செய்ய முடியும். பயனர்கள் இப்போது செய்திகளை அனுப்புவதற்கு முன்பு எந்த சாட்டிலும் 24 மணிநேரம் அல்லது 7 நாட்கள் நேரத்தை அமைக்கலாம். அதன் பிறகு செய்திகள் மறைந்துவிடும். 


இந்த அம்சம் குழுக்கள் மற்றும் சேனல்களிலும் உருவாக்கும். அங்கு நிர்வாகிகளால் மட்டுமே அம்சத்தை இயக்கவோ அல்லது திருத்தவோ முடியும். செய்திகள் இப்போது அவர்களுக்கு அடுத்ததாக ஒரு கவுண்ட் டவுனைக் காண்பிக்கும். டைமர் அமைக்கப்பட்ட பிறகு அனுப்பப்பட்ட செய்திகளுக்கு மட்டுமே தானாக நீக்குதல் பொருந்தும் என்பதை நினைவில் கொள்க. முந்தைய செய்திகள் அரட்டை வரலாற்றில் இருக்கும். 


ஒளிபரப்பு குழுக்கள் மற்றும் மேம்பட்ட அறிக்கை முறை டெலிகிராம் ஒளிபரப்பு குழுக்கள் என்பது ஒரு புதிய வகை குழுக்கள். அங்கு நிர்வாகி மட்டுமே உரை செய்திகளை அனுப்ப முடியும். இருப்பினும், ஒலிபரப்பு குழுவில் உள்ள அனைத்து பயனர்களும் ஆடியோ அடிப்படையிலான விவாதங்களுக்கான பயன்பாட்டில் நேரடி வாய்ஸ் அரட்டையில் சேர முடியும். 


மேலும், நீங்கள் எத்தனை பயனர்களைச் சேர்க்கலாம் என்பதற்கு ஒளிபரப்புக் குழுக்களுக்கு வரம்பு இல்லை. டெலிகிராம் ஒரு புதிய அறிக்கையிடல் முறையையும் சேர்த்தது. இது உள்ளடக்கத்தை அதிக சூழலுடன் புகாரளிக்க அனுமதிக்கும். ஸ்பேம் உள்ளடக்கம், போலி கணக்குகள், வன்முறை உள்ளடக்கம் அல்லது சிறுவர் துஷ்பிரயோகம் அல்லது ஆபாசமாக அடையாளம் காணக்கூடிய உள்ளடக்கம் உள்ளிட்டவை இப்போது ஒரு குறுகிய கருத்துடன் புகாரளிக்கப்படலாம். 


காலாவதியான குழு அழைப்பு இணைப்புகள் மற்றும் ஸ்கேன் செய்யக்கூடிய QR குறியீடுகள் டெலிகிராமில் குழு நிர்வாகிகள் இப்போது புதிய டெலிகிராம் குழுவில் சேரக் கூடுதல் வரையறுக்கப்பட்ட கால இணைப்புகளை உருவாக்க முடியும். காலாவதியானதும், இணைக்கும் இணைப்பு எங்காவது கசிந்தால், இந்த இணைப்புகள் குழு அரட்டையில் அங்கீகரிக்கப்படாத அந்நியர்களை அனுமதிக்காது. 


கூடுதலாக, இந்த புதிய இணைப்புகளைப் பயன்பாடுகளின் எண்ணிக்கையிலும் அமைக்கலாம். இது தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே இணைப்பிலிருந்து சேர அனுமதிக்கிறது. குழு அழைப்பிதழ் இணைப்புகளை இப்போது ஸ்கேன் செய்யக்கூடிய QR குறியீடுகளாக மாற்றலாம். அவற்றை எங்கு வேண்டுமானாலும் பகிரலாம். ஆண்டிராய்டு, iOS-க்கான ஹோம் ஸ்க்ரீன் விட்ஜெட்டுகள் பயனர்கள் இப்போது தங்கள் ஆண்டிராய்டு அல்லது iOS ஹோம் ஸ்க்ரீனில் டெலிகிராம் விட்ஜெட்களைச் சேர்க்க முடியும். சாட் விட்ஜெட்டுகள் பெறப்பட்ட செய்திகளின் முன்னோட்டத்தை உங்களுக்குக் காண்பிக்கும். 


மேலும், மிகச் சிறிய ஷார்ட்கட் விட்ஜெட், பெயர்கள் மற்றும் சுயவிவரப் படங்களை மட்டுமே காண்பிக்கும். இரண்டு விட்ஜெட்களும் பயனர்கள் செயலில் உள்ள அரட்டைகளுக்கு விரைவாக செல்ல அனுமதிக்கும். அனிமேஷன் செய்யப்பட்ட ஈமோஜிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சாட் இறக்குமதி அனிமேஷன் செய்யப்பட்ட ஈமோஜிகளை டெலிகிராம் சேர்த்திருக்கிறது. 


இது அனிமேஷன் செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் மற்றும் GIF-களுடன் வரும். மேலும், வாட்ஸ்அப் போன்ற பிற பயன்பாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரட்டைகளை இப்போது தேதிக்கு ஏற்ப வரிசைப்படுத்தலாம். அரட்டையில் 1,000-க்கும் குறைவான செய்திகள் உள்ளன. இந்த அம்சம் இப்போது ஒருவருக்கொருவர் சாட்டுக்கு மட்டுமே கிடைக்கிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...