டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா தற்காலிகமாக ஒத்திவைப்பு - தேதி பின்னர் அறிவிக்கப்படும் - முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்லூரிகளில் நிகழ்ச்சிகளை நடத்த முன் அனுமதி: அனைத்துக் கல்லூரிகளுக்கும் உத்தரவு...
கலை, அறிவியல் கல்லூரிகளில் கருத்தரங்கம், கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன் அனுமதி பெறவேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் திறக்கப்பட்டன. இந்நிலையில், கல்லூரிகளில் கருத்தரங்கு, கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாகப் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.பூர்ணசந்திரன் அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''கரோனா பாதிப்புக்கிடையே தமிழக அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளின் வளாகத்துக்குள் கலாச்சார நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் உள்ளிட்ட அதிகமான நபர்கள் கூடும் நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைக் கல்லூரி வளாகத்துக்குள் நடத்த இயக்குநரகத்தின் முன் அனுமதி பெறவேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது இந்தச் சுற்றறிக்கை மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே, கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் முன் அனுமதியுடன் நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரங்களை இயக்கத்துக்கு உடனே அனுப்ப வேண்டும்''.
இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NIIT - கல்லூரியில் 92 உதவி பேராசிரியர் பணியிடங்கள் - அறிவிப்பு வெளியீடு...
திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னலாஜி (என்.ஐ.ஐ.டி) கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்
திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.ஐ.டி)
மொத்த காலியிடங்கள்
மொத்தம் 92 இடங்கள் உள்ளன.
காலிப்பணியிட விவரம் :
- சிவில் - 13
- இ.சி.இ - 10
- உற்பத்தி - 9
- மெட்டீரியல் - 8
- கம்ப்யூட்டர் அப்ளிகேசன் - 7
- இ.இ.இ., - 5
- கணிதம் - 5
- வேதியியல் - 5
- கம்ப்யூட்டர் சயின்ஸ் - 5
கல்வித்தகுதி
பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
வயது
35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன். பின் அதை பிரின்ட் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 4.10.2021 மாலை 5:30க்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்
ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500. பெண்கள் /மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்
24.9.2021 மாலை 5:30 மணி.
முகவரி
The Registrar, NIIT, Trichy - 620 015.
நாளிதழில் இது தொடர்பாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விவரங்களுக்கு:
https://recruitment.nitt.edu/faculty2021/index.php
தமிழ்நாடு அரசில் 1,095 பின்னடைவு காலிப்பணியிடங்கள்(Backlog Vacancies ) – சிறப்பு தேர்வு மூலம் நியமனம்...
1,095 மாற்றுத் திறனாளர் பணியிடங்களுக்கு, சிறப்பு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பட்ஜெட் தாக்கல் செய்ததை அடுத்து சட்டப்பேரவையில் துறை வாரியான விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற விவாதங்களில் அமைச்சர்கள் தாக்கல் செய்த அறிக்கைகள் மக்கள் வரவேற்கத்தக்க புதிய சிறப்பு திட்டங்கள் இடம் பெற்றுள்ளது. இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. நேற்று நடைபெற்ற விவாதத்தில் 4 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுவதன் மூலம் சுமார் 7000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் அன்பரசன் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கும் முக்கிய சிறப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. சட்டசபையில் கேள்வி நேரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பணியில் 4 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்பட, அவர்களுக்கான பணியிடங்களை முதலில் கண்டறிய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் கூறினார். அப்போது பதிலளித்த சமூக நலத்துறை அமைச்சர், மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டப்படி, அவர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டின் படி பணிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1,095 பின்னடைவு பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். அரசுப் பணிகளில் சி, டி பிரிவில் அனைத்து பணியிடங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ, பி பிரிவிலும் 559 பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்தவை என கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சர் சட்டசபையில் தகவல் வெளியிட்டுள்ளார்.
டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மற்றவர்களுக்கு மாவட்ட அளவில் 5 ம் தேதி வழங்கப்படும்...
டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மற்றவர்களுக்கு மாவட்ட அளவில் 5 ம் தேதி வழங்கப்படும்...
கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 03-09-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு(I - V Standard) வரையிலான சமூக அறிவியல் பாடக் காணொளிகள்(Social Science Videos)...
கல்வித் தொலைக்காட்சியில் 03-09-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடக் காணொளிகள்...
💥 முதலாம் வகுப்பு - பேசும் ஓவியம் - கதை - நேர்மையான பூஜா - https://youtu.be/5iHcGWaf24E
💥 இரண்டாம் வகுப்பு - பேசும் ஓவியம் - கதை - காகமும் மானும் - https://youtu.be/jAsrKx5rjuw?t=1739
💥 மூன்றாம் வகுப்பு - அலகு 2 - நமது நண்பர்கள் - சமூகப் பணியாளர்கள் - பகுதி 2 - https://youtu.be/F66jjviTcxo
💥 நான்காம் வகுப்பு - அலகு 3 - நகராட்சி மற்றும் மாநகராட்சி - https://youtu.be/oLOAT1VXS-s
💥 ஐந்தாம் வகுப்பு - அலகு 1 - நமது பூமி - பகுதி 2 - https://youtu.be/gAqIPhsfBaA
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Type 2 diabetes நோய்க்கு சிகிச்சையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்
டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள் ஆம், சமீபத்தில் சீன விஞ்ஞானிகள் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க ஒர...
