கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-10-2021 - செவ்வாய் (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.10.21

 திருக்குறள் :

அதிகாரம்: கல்லாமை. 

குறள் : 410

விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.

பொருள்:
மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.

பழமொழி :

Good face needs no paint.


அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்

பொன்மொழி :

பகை ,தீமை இவற்றை எந்த அளவுக்கு நாம் விதைக்கிறோமோ அவை வட்டியுடன் திரும்பி வந்து நம்மையே சேரும்....சுவாமி விவேகானந்தர்.

பொது அறிவு :

1.பெருங்கடல்களில் மிகப் பெரியது எது?

பசுபிக் பெருங்கடல்.

2.குளிர் சாதனப் பெட்டியில் செலவிடப்படும் மின்திறன் எவ்வளவு வாட் ஆகும்?

500 வாட்

English words & meanings :

Principal - head of the School. பள்ளியின் தலைமை ஆசிரியர். 

Principal - most important. மிக முக்கியமான நபர்

ஆரோக்ய வாழ்வு :

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

1)எடை குறைப்பு

தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உங்கள் மூளை விரைவிலேயே வயிறு நிறைந்து விட்ட உணர்வை ஏற்படுத்திவிடும். அதனால் நீங்கள் அதிகமாக சாப்பிட தேவையில்லை.மேலும் நீங்கள் தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உங்கள் நரம்பு மண்டலம் சீராக இருப்பதால் உணவில் உள்ள சத்துக்கள் நேரடியாக உடலுக்கு கிடைப்பதுடன் முழுமையாக செரிமானமடையும். எனவே உங்கள் எடை கூடுவது தடுக்கப்படுகிறது.

2)வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கிறது

நீங்கள் தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உங்களுடைய கீழ் முதுகு, இடுப்பு, வயிறு என அனைத்தும் நேராக இருக்கும். இது வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கும். இது உங்களின் தசைகளை வலுவாக்குவதுடன் செரிமான மண்டலத்தை சரியாக செய்லபட வைக்கும்.

3)முழங்கால் மற்றும் இடுப்பு ஆரோக்கியம்

தரையில் அமர்ந்து சாப்பிடுவது இடுப்பை சுற்றியுள்ள பகுதிகளை வலுவாக்குகிறது மேலும் முதுகு வலியை குறைக்கிறது. இந்த நிலை இடுப்பு எலும்புகளை திறந்த நிலையில் வைப்பதுடன் கால்களை நெகிழ்வாக்குகிறது. கணுக்கால் மற்றும் கால் தசைகள் வலுப்படுகிறது. முழங்காலை மடக்கி வைத்திருப்பது அந்த பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

4)இதய ஆரோக்கியம்

உங்கள் கால்கள் உங்கள் இதயத்திற்கு கீழ் நோக்கி இருக்கும் போது உடலில் இரத்த ஓட்டம் கால்களை நோக்கி அதிகமாய் இருக்கும். அதே நேரம் நீங்கள் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருக்கும் போது இரத்த ஓட்டம் இதயத்தை நோக்கி அதிகரிக்கும். இது இதய ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.

கணினி யுகம் :

Ctrl + 5 - 1.5 line spacing. 

Ctrl + Alt + 1 - Change text to heading 1

அக்டோபர் 5

சர்வதேச ஆசிரியர் நாள் 





சர்வதேச ஆசிரியர் நாள் (World Teachers' Day) உலக ஆசிரியர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆண்டுதோறும் அக்டோபர் 5 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் நிலை குறித்து 1966 யுனெஸ்கோ / பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு பரிந்துரையில் கையெழுத்திட்டதை நினைவுகூறும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது. [1] [2] சர்வதேச ஆசிரியர் நாள் "உலகின் கல்வியாளர்களைப் பாராட்டுதல், மதிப்பீடு செய்தல் மற்றும் மேம்படுத்துதல்" ஆகியவற்றில் கவனம் செலுத்துவதையும் ஆசிரியர்களுக்கான சிக்கல் மற்றும் கற்பித்தல் தொடர்பான சிக்கல்களைக் கருத்தில் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஸ்டீவ் ஜொப்ஸ் அவர்களின் நினைவுநாள்  




ஸ்டீவ் ஜொப்ஸ் (தமிழக வழக்கு: ஸ்டீவ் ஜாப்ஸ்) (Steve Jobs, பிறப்பு பெப்ரவரி 241955- அக்டோபர் 5, 2011ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.

நீதிக்கதை

  குருவி கொடுத்த விதை


ஓர் ஊரில் பண்ணையார் ஒருவருக்கு அந்த ஊரில் இருந்த அனைத்து நிலங்களும் சொந்தமாக இருந்தது. அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்தான். அவனுக்கு சிறிய குடிசையும், கொஞ்ச நிலமும் இருந்தது. 

பண்ணையாரிடம் முனியன், ஐயா! உங்கள் அனைத்து நிலங்களில் உழுது விதை நட்டுவிட்டார்கள். என் நிலம் மட்டும் காலியாக உள்ளது. என் நிலத்தில் விதைப்பதற்கு சிறிது தானியம் தாருங்கள் என்றான். 

சொந்தமாகப் பயிரிட வேண்டாம், என் நிலத்திலேயே உழுது பயிரிடு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும் என்று கோபத்துடன் சொன்னார் அவர். சோகத்துடன் வீட்டுக்கு சென்று தன் மனைவியிடம், நமக்கு தானியம் தரவில்லை. நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி என்று சொல்லி வருத்தப்பட்டான். 

அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியதை முனியனும், அவன் மனைவியும் பார்த்தனர். பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நாம் அதற்குத் தொல்லை செய்யக்கூடாது என்றான் முனியன். கூட்டில் அந்தக் குருவி நான்கு குஞ்சுகள் பொறித்தது. 

திடீரென்று அந்தக் குருவிக்கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்ததை பார்த்த குருவிக்குஞ்சுகள் கத்தியது, அதைக்கேட்ட உழவன் பாம்பை பிடித்துக் கொல்வதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் கால் ஒடிந்து இருந்தது. அதை அன்போடு எடுத்து அதற்குக் கட்டுப்போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்து உணவு கொடுத்து நன்கு பார்த்துக்கொண்டான். 

அந்தக் குருவியின் கால்கள் சரியானதும், அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் இருந்தனர். அச்சமயம் அவர்கள் வீட்டுக்கு அவன் வளர்த்த குருவி வந்தது. அவன் கையில் 3 விதையை கொடுத்து இதை உன் வீட்டுத் தோட்டத்தில் ஒன்றும், வீட்டின் முன்புறத்தில் ஒரு விதையையும், மற்றொரு விதையை வீட்டின் ஜன்னல் ஓரத்திலும் நட்டு வை. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி என்று சொல்லிவிட்டுப் பறந்தது. குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான். 

மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்தன. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின்பு, அந்த பூசணிக்காயை இரண்டு துண்டாக வெட்டிப்பார்த்தான். அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசணிக்காயை ஒன்று சேர்த்ததும். பழையபடி அது முழுப் பூசணிக்காய் ஆனது. 

இது மந்திரப் பூசணிக்காய். நமக்கு உணவு வேண்டும் என்றால் பிளந்தால் உணவு கிடைக்கும் என்றான். இதேபோல், மீதமுள்ள 2 பூசணிக்காயையும் பிளந்து பார்த்தனர். அதில், ஒன்றில் அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகளும், மற்றொன்றில் பொற்காசுகளும் இருந்தன. 

அதன் பிறகு முனியன் குடும்பம் பெரும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தனர். இதனை அறிந்த பண்ணையார், உழவனிடம் முனியா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல் என்று கேட்டார். 

அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான். அதை கேட்ட அவர் வீட்டில் மேல் பகுதியில் குருவிக்கூடு ஒன்றை அவரே செய்தார். ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கி நான்கு குஞ்சுகள் பொறித்தது. பாம்பு வரவே இல்லை. அதனால் அவரே, அந்த குருவிக்கூட்டை கலைத்து மூன்று குஞ்சுகளை கொன்றார். ஒரு குருவியின் காலை உடைத்துக் கீழே எறிந்தார். 

பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்து வேளை தவறாமல் உணவு அளித்தார். கால் சரியான அந்தக் குருவி கூட்டைவிட்டுப் பறந்து போனது. அவர் குருவி விதை கொடுக்கும் என்று எதிர்பார்த்தபோது, கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. ஒன்றை வீட்டின் பின்புறமும், இரண்டாவதை வீட்டின் முன்புறமும், மூன்றாவதைக் கிணற்றோரமும் நடு என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது. மூன்று தானியங்களையும் நட்டார். 

மறுநாளே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்து இருந்தன. மூன்று பூசணிக்காயையும் வெட்டினார். அதில் ஒன்றில் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் வீணாக்கியது. பின்பு இரண்டாவதில் இருந்து தீ வெளிப்பட்டு அவரையும் அந்த மாளிகையையும் ஒரு நொடிக்குள் சாம்பல் ஆக்கியது. மூன்றாவதில் பாம்பு, தேள், பூரான் போன்றவை இருந்தன. அதன்பிறகு, தனது பேராசை தவறு என உணர்ந்தார் பண்ணையார். 

நீதி :
பொறாமை குணம் இருத்தல் கூடாது.

இன்றைய செய்திகள்

05.10.21

 📰  கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டுமெனக் கோரியும், 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

📰  கைவிடப்பட்ட பிளாஸ்டிக் சாலை திட்டம்: மாநகராட்சி அலட்சியத்தால் பாழாகும் மதுரை வைகை ஆறு.

📰  திருப்பத்தூர் அடுத்த மூக்கனூர் கிராமத்தில் வைணவக் கோயில்களுக்கு நிலக்கொடை வழங்கியதற்கான குறியீடுகள் அடங்கிய பாறை கண்டெடுக்கப்பட்டுள்ளது.


📰   புவி கண்காணிப்புக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 3 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

📰  உலக நாடுகளின் மருந்தகமாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

📰  2021ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

📰  ஷாஹீன் புயலால் கொட்டித்தீர்த்த பெருமழை: வெள்ளக்காடானது மஸ்கட்.


📰  ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு மேலும் இரண்டு வெண்கலம்.

📰  ஐக்கிய அரபு அமீரத்துக்கு எதிரான நட்புறவு கால்பந்து ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது.
Today's Headlines

📃Tamil Nadu Chief Minister MK Stalin has written a letter to 12 state chief ministers stressing the need to restore the primacy of state governments in managing the education sector and calling for a concerted effort to do so.

 📃  Abandoned Plastic Road Project: Madurai Vaigai River ruined by corporation negligence.

 📃  A rock containing symbols for donating land to Vaishnava temples has been found in Mookkanur village next to Tirupati.

 📃  ISRO plans to launch 3 satellites for Earth observation by the end of this year.

 📃  "India is emerging as the world's pharmacy," said Sawmiya Swaminathan, chief scientist at the World Health Organization.

 📃  The Nobel Prize in Medicine 2021 is shared between two American scientists, David Julius and Artem Fattahoudian.

📃  Heavy rains caused by Shahaheen storm: The floodplain is Muscat.

📃  Asian Table Tennis Championship: Two more bronze for India.

📃   Indian women's team wins friendly football match against United Arab Emir
Prepared by
Covai women ICT_போதிமரம்

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-10-2021 - வெள்ளி (School Morning Prayer Activities)...



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.10.21

 திருக்குறள் :

அதிகாரம்: கல்லாமை

குறள்:409

மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் 
கற்றா ரனைத்திலர் பாடு.

பொருள்: கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டை போக்கிவிடும்.

பழமொழி :

Brevity is the soul of wit


சுருங்கச் சொல்லி விளங்க வை

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்

பொன்மொழி :

என்னை விரும்புகிறவர் இவ்வுல உயிர்களையும் விரும்புபவர்களாக இருப்பர்.தானம் தான் பக்தியின் வழி என்றிருப்பார்... சீரடி சாய்பாபா

பொது அறிவு :

1.புது தில்லி தேசிய தலைநகராக அறிவிக்கப்பட்ட ஆண்டு எது? 

1991.

2.இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் எது? 

ஏப்ரல் 1,2010.

English words & meanings :

Storey - level of a building. கட்டிடத்தின் அடுக்கு. 

Story - tale. கதை.

ஆரோக்ய வாழ்வு :

நின்று கொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

1)செரிமானக்கோளாறு

சாப்பிடும்போது நீங்கள் இருக்கும் நிலை உங்கள் செரிமானத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி நின்றுகொண்டு சாப்பிடும்போது உணவுகள் செரிமான மண்டலத்திற்குள் செல்லும் வேகம் அதிகரிக்கிறது. இதனால் அவை நுண்துகள்களாக உடைக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இது குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கி செரிமானத்தில் பிரச்சினையை உண்டாக்குகிறது.

2)அதிகமாக சாப்பிட தூண்டுதல்

மேலே கூறியதன் தொடர்ச்சியாக நின்று கொண்டு சாப்பிடும்போது உணவு வேகமாக கீழே சென்று விடுவதால் நீங்கள் போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்களா என்று உங்களுக்கே தெரியாது. இதன் விளைவாக நீங்கள் அதிகம் சாப்பிட நேரிடும். அதனால்தான் எப்பொழுதும் அமர்ந்து நிதானமாக சாப்பிடுவதே ஆரோக்கியமானது என்று கூறப்படுகிறது. இது நிறைவான உணர்வை தருவதோடு கலோரிகளையும் எளிதாக எரிக்கும்.

3)பசி எடுத்தல்

நீங்கள் பசியாக உணருகிறீர்களா இல்லையா என்பதை எளிதில் கண்டறியும் வழி உங்கள் வயிற்றில் எவ்வளவு உணவு உள்ளது என்பதை கண்டறிவதுதான். மருத்துவரீதியாக நின்று கொண்டு சாப்பிடுவது உணவு செரிப்பதை 30 சதவீதம் அதிகரிக்கிறது. இதனால் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் உங்களுக்கு பசி எடுக்க தொடங்கிவிடும்.

4)வீக்கம்

விரைவான செரிமானம் என்பது ஆபத்தானது. ஏனெனில் உணவிலிருந்து முழுமையாக சத்துக்களை உறிஞ்சும் முன் உணவு செரித்து விடுவதால் மீதமுள்ள சத்துக்கள் வாயுவாகி உடலில் தங்கிவிடுகிறது. இது குடல் வீக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் முழுமையாக செரிக்காத போது அது வீக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கணினி யுகம் :

Ctrl + 1 - Single -space lines. 

Ctrl + 2 - Double -space lines

அக்டோபர் 4

திருப்பூர் குமரன் அவர்களின்  பிந்தநாள் 




திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran, அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,சனவரி 11 இல் உயிர் துறந்தார்.இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

உலக விலங்கு நாள்




உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக விண்வெளி வாரம்


உலக விண்வெளி வாரம்(World Space Week (WSWஅக்டோபர் 4 ஆம் நாள் முதல் - அக்டோபர் 10 நாளில் முடிய,இந்த இடைப்பட்ட நாட்களை உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது.1957 ஆம் ஆண்டு, அக்டோபர் 4 இல் ஸ்புட்னிக் 1 (Sputnik 1) என்ற செயற்கைகோள் உலகின் முதன்முதலாக செலுத்தப்பட்ட செயற்கைகோளாகும். 1967 இல் அக்டோபர் 10 ஆம் நாளில் புற விண்வெளி அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டு, உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆனதாக அறியப்படுகிறது.



நீதிக்கதை

 அன்பின் மதிப்பு


அக்பர் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்தப்படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர். 

அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே சென்றான். அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அக்பர் அறிந்து கொண்டார்.

அவன் மன்னனிடம், அரசே உங்கள் உடல்நிலை சரியாக வேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் வைத்து அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றான். 

அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப்போயிருந்தது. அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கழற்றி அந்த விவசாயிக்கு பரிசாகக் கொடுத்து அனுப்பினான். 

மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், அரசே, கெட்டுப்போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு? என்று கேட்டார். மன்னனோ, அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். 

அவனது அன்பு உண்மையானது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலை கூட அவனது அன்புக்கு ஈடாகாது என்று கூறினான். 

நீதி :
நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.

இன்றைய செய்திகள்

04.10.21

 ✒️வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

✒️எம்.எட். படிப்பு: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் - கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அறிவிப்பு.

✒️சென்னையில் மீண்டும் 100 ரூபாயை தாண்டியது பெட்ரோல் விலை.

✒️ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிங்பம் மாவட்டத்தில்  மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


✒️இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாக ஐ.நா. பொதுச்சபை தலைவர் அப்துலா சாஹீத் தெரிவித்துள்ளார்.

✒️உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

✒️உலக மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது.

Today's Headlines

📃The Chennai Meteorological Department has forecast heavy rains in 11 districts due to the upper air circulation of the atmosphere. 

 📃M.Ed.  Course: Online application is available from today onwards - Notice by the Directorate of College Education.

 📃Petrol price in Chennai has crossed 100 rupees again.

 📃A moderate earthquake was felt in the Singhbhum district of Jharkhand.  The National Epicenter for Earthquake recorded, below 4.1 on the Richter scale.

 📃  General Assembly Speaker Abdullah Saheed said he was vaccinated with Indian make Covishield. 

📃India tops the World Sniper Championship Series

 📃India won silver at World Women's Chess Championship
Prepared by
Covai women ICT_போதிமரம்

இன்றைய (04-10-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

அக்டோபர் 04, 2021



உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். சுபிட்சமான நாள்.



அதிர்ஷ்ட திசை  :  வடகிழக்கு


அதிர்ஷ்ட எண்  :  9


அதிர்ஷ்ட நிறம்  :  இளம் மஞ்சள்


அஸ்வினி :  அறிமுகம் கிடைக்கும். 


பரணி :  சிக்கல்கள் குறையும்.


கிருத்திகை :  ஆசைகள் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

அக்டோபர் 04, 2021



புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சிலரது சந்திப்பின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பும், ஆதரவுகளும் உண்டாகும். பழமையான விஷயங்களின் மீது ஈடுபாடு ஏற்படும். அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை  :  தென்மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  1


அதிர்ஷ்ட நிறம்  :  வெளிர் நீலம்


கிருத்திகை :  மாற்றங்கள் உருவாகும். 


ரோகிணி :  பொறுப்புகள் மேம்படும். 


மிருகசீரிஷம் :  ஆதரவுகள் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

அக்டோபர் 04, 2021



புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். பணிபுரியும் இடத்தில் ஆதரவான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். பொன், பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  வடக்கு


அதிர்ஷ்ட எண்  :  7


அதிர்ஷ்ட நிறம்  :  காவி நிறம்


மிருகசீரிஷம் :  எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


திருவாதிரை :  இன்னல்கள் குறையும்.


புனர்பூசம் :  வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





கடகம்

அக்டோபர் 04, 2021



சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். சுயதொழிலில் லாபங்கள் மேம்படும். தோற்றப்பொலிவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். ஒத்துழைப்புகள் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  தெற்கு


அதிர்ஷ்ட எண்  :  8


அதிர்ஷ்ட நிறம்  :  சந்தன நிறம்


புனர்பூசம் :  முயற்சிகள் அதிகரிக்கும். 


பூசம் :  ஆரோக்கியம் மேம்படும்.


ஆயில்யம் :  முன்னேற்றமான நாள்.

---------------------------------------




சிம்மம்

அக்டோபர் 04, 2021



வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். புதிய மனை மற்றும் அதை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். சிறு வியாபாரங்களின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். குழப்பமான நாள்.



அதிர்ஷ்ட திசை  :  தென்மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  9


அதிர்ஷ்ட நிறம்  :  கருஞ்சிவப்பு 


மகம் :  ஒத்துழைப்பு மேம்படும்.


பூரம் :  மாற்றங்கள் ஏற்படும்.


உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------





கன்னி

அக்டோபர் 04, 2021



உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆடம்பர பொருட்களின் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். சுதந்திரமான நாள்.



அதிர்ஷ்ட திசை  :  வடக்கு


அதிர்ஷ்ட எண்  :  9


அதிர்ஷ்ட நிறம்  :  நீலநிறம்


உத்திரம் :  ஆதரவுகள் கிடைக்கும்.


அஸ்தம் :  திறமைகள் வெளிப்படும்.


சித்திரை :  ஈர்ப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

அக்டோபர் 04, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள்  சாதகமாக அமையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களின் நட்பும் மாற்றத்தை ஏற்படுத்தும். புரிதல் அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  6


அதிர்ஷ்ட நிறம்  :  பச்சை நிறம்


சித்திரை :  சாதகமான நாள். 


சுவாதி :  உதவிகள் கிடைக்கும். 


விசாகம் :  பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




விருச்சிகம்

அக்டோபர் 04, 2021



கூட்டு வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் மேம்படும். சந்திப்புகள் உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  2


அதிர்ஷ்ட நிறம்  :  வெளிர் மஞ்சள்


விசாகம் :  முன்னேற்றமான நாள். 


அனுஷம் :  சிந்தனைகள் அதிகரிக்கும்.


கேட்டை :  மதிப்புகள் மேம்படும்.

---------------------------------------





தனுசு

அக்டோபர் 04, 2021



நெருக்கமானவர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  தென்மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  1


அதிர்ஷ்ட நிறம்  :  பொன் நிறம்


மூலம் :  ஒற்றுமை அதிகரிக்கும்.


பூராடம் :  பொருட்சேர்க்கை உண்டாகும்.


உத்திராடம் :  எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------





மகரம்

அக்டோபர் 04, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாலின மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை  :  வடக்கு


அதிர்ஷ்ட எண்  :  7


அதிர்ஷ்ட நிறம்  :  வெளிர் பச்சை


உத்திராடம் :  நிதானம் வேண்டும்.


திருவோணம் :  தலையீட்டை தவிர்க்கவும். 


அவிட்டம் :  ஞாபக மறதி ஏற்படும்.

---------------------------------------




கும்பம்

அக்டோபர் 04, 2021



எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவுகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். புத்துணர்ச்சியான நாள். 



அதிர்ஷ்ட திசை  :  தென்மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  6


அதிர்ஷ்ட நிறம்  :  அடர் நீலம்



அவிட்டம் :  சுறுசுறுப்பான நாள். 


சதயம் :  முயற்சிகள் ஈடேறும்.


பூரட்டாதி :  அனுகூலமான நாள்.

---------------------------------------




மீனம்

அக்டோபர் 04, 2021



பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். இழுபறிகள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  கிழக்கு


அதிர்ஷ்ட எண்  :  1


அதிர்ஷ்ட நிறம்  :  இளம் மஞ்சள்



பூரட்டாதி :  பிரச்சனைகள் குறையும்.


உத்திரட்டாதி :  லாபம் மேம்படும்.


ரேவதி :  தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------


பேரிடர் மேலாண்மை - மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்(Disaster Management - Precautions to be taken during monsoons)...

 பேரிடர் மேலாண்மை - மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்(Disaster Management - Precautions to be taken during monsoons)...



>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

இன்றைய (03-10-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

அக்டோபர் 03, 2021



கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். மனதில் குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆதாயம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  தெற்கு


அதிர்ஷ்ட எண்  :  4


அதிர்ஷ்ட நிறம்  :  பொன் நிறம்



அஸ்வினி :  லாபம் உண்டாகும்.


பரணி :  சிந்தனைகள் அதிகரிக்கும். 


கிருத்திகை :  ஆதரவான நாள்.

---------------------------------------




ரிஷபம்

அக்டோபர் 03, 2021



எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் விரயங்கள் ஏற்பட்டாலும் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். கால்நடை தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். சுகங்கள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  தென்மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  6


அதிர்ஷ்ட நிறம்  :  இளநீலம்



கிருத்திகை :  உற்சாகமான நாள். 


ரோகிணி :  பொறுமையை கையாளவும்.


மிருகசீரிஷம் :  ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

அக்டோபர் 03, 2021



உடன்பிறந்தவர்களின் வழியில் சாதகமான சூழல் ஏற்படும்.  சங்கீதம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு தனவரவுகள் மேம்படும். வழக்குகள் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி தரும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  வடக்கு


அதிர்ஷ்ட எண்  :  9


அதிர்ஷ்ட நிறம்  :  கருஞ்சிவப்பு



மிருகசீரிஷம் :  சாதகமான நாள். 


திருவாதிரை :  வரவுகள் மேம்படும்.


புனர்பூசம் :  வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

அக்டோபர் 03, 2021



தனவரவுகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் மேம்படும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். கால்நடைகளின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எண்ணிய காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவேறும். வரவுகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  1


அதிர்ஷ்ட நிறம்  :  அடர் மஞ்சள்



புனர்பூசம் :  இலக்குகள் பிறக்கும்.


பூசம் :  அனுகூலமான நாள். 


ஆயில்யம் :  எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------




சிம்மம்

அக்டோபர் 03, 2021



இருப்பிடம் தொடர்பான பிரச்சனைகள் சற்று குறையும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்பட்டால் லாபங்கள் மேம்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். காலதாமதமான நாள்.



அதிர்ஷ்ட திசை  :  தெற்கு 


அதிர்ஷ்ட எண்  :  5


அதிர்ஷ்ட நிறம்  :  வெளிர் சிவப்பு



மகம் :  பிரச்சனைகள் குறையும். 


பூரம் :  மாற்றமான நாள். 


உத்திரம் :  ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





கன்னி

அக்டோபர் 03, 2021



பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். மனதில் இருக்கக்கூடிய பல விஷயங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படலாம். ரகசியமான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். முதலீடுகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  வடமேற்கு


அதிர்ஷ்ட எண்  :  9


அதிர்ஷ்ட நிறம்  :  வெண் மஞ்சள் 



உத்திரம் : முன்னேற்றமான நாள். 


அஸ்தம் :  தெளிவுகள் பிறக்கும். 


சித்திரை :  நெருக்கடியான நாள்.

---------------------------------------




துலாம்

அக்டோபர் 03, 2021



பாசனம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். சுபகாரியம் தொடர்பான செயல்களை முன்னின்று நடத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். புத்துணர்ச்சியான நாள். 



அதிர்ஷ்ட திசை  :  கிழக்கு


அதிர்ஷ்ட எண்  :  1


அதிர்ஷ்ட நிறம்  :  சிவப்பு நிறம்



சித்திரை :  தடைகள் நீங்கும். 


சுவாதி :  உதவிகள் சாதகமாகும்.


விசாகம் :  அபிவிருத்தியான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

அக்டோபர் 03, 2021



வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த துணிகளை வாங்கி மகிழ்வீர்கள். காதில் அணியும் ஆபரணங்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சுறுசுறுப்பான நாள்.



அதிர்ஷ்ட திசை  :  கிழக்கு


அதிர்ஷ்ட எண்  :  3 


அதிர்ஷ்ட நிறம்  :  ஊதா நிறம்



விசாகம் :  தடைகளை அறிவீர்கள்.


அனுஷம் :  முன்னேற்றமான நாள். 


கேட்டை : பிரச்சனைகள் நீங்கும்.

---------------------------------------





தனுசு

அக்டோபர் 03, 2021



தந்தைவழி உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் புதுவிதமான சூழ்நிலைகள் உருவாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவமும், லாபமும் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  தெற்கு 


அதிர்ஷ்ட எண்  :  5


அதிர்ஷ்ட நிறம்  :  சில்வர் நிறம்



மூலம் : ஆதரவுகள் கிடைக்கும்.


பூராடம் : மாற்றங்கள் உண்டாகும்.


உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

அக்டோபர் 03, 2021



உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். கலை சார்ந்த துறைகளில் இழுபறியான சூழல் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை  :  தென்மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  8


அதிர்ஷ்ட நிறம்  :  சந்தன நிறம்



உத்திராடம் : பொறுமை வேண்டும்.


திருவோணம் :  குழப்பங்கள் உண்டாகும். 


அவிட்டம் :  அனுசரித்து செல்லவும்.

---------------------------------------





கும்பம்

அக்டோபர் 03, 2021



மருத்துவ பொருட்கள் தொடர்பான விஷயங்களில் லாபங்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், சாதகமான சூழ்நிலைகளும் உருவாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை  :  வடக்கு


அதிர்ஷ்ட எண்  :  7


அதிர்ஷ்ட நிறம்  :  வெளிர் நீலம்



அவிட்டம் :  லாபங்கள் உண்டாகும்.


சதயம் :  தடைகள் குறையும். 


பூரட்டாதி :  சாதகமான நாள். 

---------------------------------------




மீனம்

அக்டோபர் 03, 2021



இழுபறியாக இருந்துவந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் தொழில் சார்ந்த முன்னேற்றங்கள் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். காப்பகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சஞ்சலமான நாள்.



அதிர்ஷ்ட திசை  :  மேற்கு


அதிர்ஷ்ட எண்  :  6


அதிர்ஷ்ட நிறம்  :  வெளிர் பச்சை



பூரட்டாதி :  தீர்வு கிடைக்கும். 


உத்திரட்டாதி :  அதிர்ஷ்டகரமான நாள்.


ரேவதி : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.

புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30)  வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த  ...