கல்வி அஞ்சல்கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...கல்வி அஞ்சல்கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்... கல்வி அஞ்சல்தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...கல்வி அஞ்சல்கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...கல்வி அஞ்சல்கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்... கல்வி அஞ்சல்தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...கல்வி அஞ்சல்
காவேரியில் 75000 கனஅடி நீர் திறப்பு - TNSDMA எச்சரிக்கை
மேட்டூர் அணையிலிருந்து காவேரியில் 75000 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள் - தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் TNSDMA எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு 1 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படவுள்ளது.
கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் - பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை
கேரளா அருகே கடலில் மூழ்கிய கப்பல் - ரசாயனம் பரவும் அபாயம்
திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட சரக்குக் கப்பல் மூழ்கியது.
கப்பலில் 25 பேர் இருந்த நிலையில் லைஃப் ஜாக்கெட் உதவியுடன் 9 பேர் கடலில் குதித்து தப்பித்தனர்.
கப்பலில் சிக்கிய 16 பேரை மீட்கும் பணி தீவிரம்.
கப்பலில் இருந்த கண்டெய்னர்களில் 367 மெட்ரிக் டன் கந்தக எரிபொருள் உள்ளதால், அதனால் ஏதும் ஆபத்து நிகழலாம் என எச்சரிக்கை.
கண்டெய்னர்கள் எங்காவது கரை ஒதுங்கும் போது மக்கள் யாரும் அருகே செல்ல வேண்டாம் என கேரள பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை.
கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடல் அருகே மூழ்கி விபத்துக்குள்ளானது.
கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கப்பலில் லைபீரியா நாட்டின் கொடி இருந்ததாகக் கூறுகின்றனர்.
இந்தக் கப்பல் இன்றிரவு 10 மணிக்கு கொச்சி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கொச்சியை தொடர்ந்து, தூத்துக்குடிக்கும் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த விபத்தின்போது, கப்பலில் 24 பேர் இருந்ததாகவும், அவர்களில் 9 பேர் பாதுகாப்பு உடைகளின் மூலம் தப்பித்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது. மீதமுள்ளவர்களை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் காரணமாக, கடலில் ஏற்பட்ட பாதகமான நிலைமையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி, கப்பலில் இருந்த கன்டெய்னர்களில் 367 மெட்ரிக் டன் அளவில் கந்தக எரிபொருள் இருந்ததாகக் கூறுகின்றனர். ஆகையால், அவை கரை ஒதுங்கும் சமயத்தில், அதனருகே மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை எச்சரித்துள்ளது.
மேலும், கடற்கரையில் அடையாளம் தெரியாத எந்தப் பொருளையும் அணுக வேண்டாம் என்றும், 112 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்
நவம்பர் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கனமழை மற்றும் அதிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் - வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாக ஆணையரின் கடிதம், நாள்: 13-11-2023 (13th to 17th November Heavy and Very Heavy Rainfall Districts - Letter from Commissioner of Revenue and Disaster Management, Dated: 13-11-2023)...
பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை நாளை (20.10.2023) மேற்கொள்ளப்பட உள்ளது - பேரிடர் மேலாண்மை வாரியம் செய்தி வெளியீடு எண்: 2110, நாள்: 19-10-2023 ("Cell Broadcast Alert" trial to improve emergency communication during calamities to be conducted tomorrow - 20.10.2023 - Disaster Management Board Press Release No.: 2110, Dated: 19-10-2023)...
முக்கிய அறிவிப்பு: உங்கள் மொபைலில் எமெர்ஜென்ஸி சூழல் குறித்த டெஸ்ட் மெசேஜை வேறு ஒலி மற்றும் அதிர்வுடன் பெறலாம். தயவுசெய்து பீதி அடைய வேண்டாம், இந்த செய்தி உண்மையான அவசரநிலையைக் குறிக்கவில்லை. இந்தச் செய்தியை இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து திட்டமிட்ட சோதனைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக அனுப்புகிறது.
Advisory: DoT, Govt of India would conduct Cell Broadcast testing with NDMA. You may receive test alerts on mobile with sound/vibration. These alerts are part of testing process, do not indicate an actual emergency and do not require any action at your end.
கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கான நிவாரணத் தொகையை தாமதமின்றி, அந்தந்த துறைத் தலைவர்கள் உடனடியாக வழங்க பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு...
பேரிடர் காலங்களில் பொதுமக்கள் ஆபத்துக்கள் குறித்து தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ்அப் எண் மற்றும் இணையம் வாயிலாக தகவல் பதிவு, புதிதாக அறிமுகம் குறித்து செய்தி வெளியீடு...
பேரிடர் காலங்களில் பொது மக்கள் ஆபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ் அப் எண் அறிமுகம்.
மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு 9445869848 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்...
பொதுமக்கள் 1070 என்ற கட்டணமில்லா தெலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கலாம்.
கொரோனா முன் களப்பணியில் இறந்த வருவாய்த் துறை பணியாளர்களுக்கு, ரூபாய் 25 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கான முன்மொழிவுகளை அனுப்ப மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையரின் கடிதம் நே.மு.க.எண்.வரு.தணி 5(2)/ 18382/ 2020, நாள்: 11-05-2021...