கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
மழை விடுமுறைக்கு நன்றி தெரிவித்த மாணவருக்கு விருதுநகர் கலெக்டரின் அறிவுரை - சோஷியல் மீடியாவை மூடு, சோஷியல் சயின்ஸைப் படி...
மழை விடுமுறைக்கு நன்றி தெரிவித்த மாணவருக்கு விருதுநகர் கலெக்டரின் அறிவுரை - சோஷியல் மீடியாவை மூடு, சோஷியல் சயின்ஸைப் படி...
பதவி உயர்வு கிடைத்தும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விட்டு ஒரே பதவியில் பணியாற்றுவோருக்கு போனஸ் ஊதிய உயர்வு கிடையாது - தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (No Bonus Increment for those who leave the promotion and work in the same position - CEO Proceedings)...
பதவி உயர்வு கிடைத்தும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விட்டு ஒரே பதவியில் பணியாற்றுவோருக்கு இனி தேர்வு நிலை சிறப்பு நிலை கிடையாது என்ற தூத்துக்குடி CEO உத்தரவு.
இயக்குநரின் செயல்முறைகளின்படி பணித்துறப்பு செய்து விட்டு 30 ஆண்டுகள் ஒரே பதவியில் இருப்பவர்கள் , ஊக்க ஊதிய உயர்வு பெறத் தகுதியற்றவர்கள் ஆகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே , மேற்கண்ட செயல்முறைகளின்படி , அன்னார் பட்டதாரி ஆசிரியர் ( சமூக அறிவியல் ) பதவி உயர்வினை துறப்பு செய்தமையால் போனஸ் ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட இயலாது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய (30-11-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
நவம்பர் 30, 2021
ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்ப்புகளை சாதுர்யமாக வெற்றி கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும். விலகி இருந்தவர்களின் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். இயந்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : இன்னல்கள் குறையும்.
பரணி : அனுகூலம் உண்டாகும்.
கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.
---------------------------------------
ரிஷபம்
நவம்பர் 30, 2021
மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பயணங்களில் இருந்துவந்த காலதாமதம் குறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : காலதாமதம் குறையும்.
ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
மிதுனம்
நவம்பர் 30, 2021
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் புதிய சலுகைகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். செய்கின்ற முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் விருப்பம் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். பொருளாதார நிலை மேம்படும். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
திருவாதிரை : விருப்பம் உண்டாகும்.
புனர்பூசம் : மேன்மையான நாள்.
---------------------------------------
கடகம்
நவம்பர் 30, 2021
மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு மற்றும் குறுந்தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.
பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ஆயில்யம் : சாதகமான நாள்
---------------------------------------
சிம்மம்
நவம்பர் 30, 2021
வியாபார பணிகளில் கொடுக்கல், வாங்கல் சுமூகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். நண்பர்களுடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். பிறமொழி பேசும் நபர்களின் அறிமுகம் சிலருக்கு ஏற்படும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். மதிப்பு அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
பூரம் : உபாதைகள் நீங்கும்.
உத்திரம் : காலதாமதம் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
நவம்பர் 30, 2021
எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறும். மனதிற்கு விரும்பியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத சிலரது சந்திப்பின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளிடம் விழிப்புணர்வு வேண்டும். கனிவான பேச்சுக்கள் பலதரப்பட்ட ஆதரவுகளை ஏற்படுத்திக் கொடுக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : காரியங்கள் நிறைவேறும்.
அஸ்தம் : விழிப்புணர்வு வேண்டும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
துலாம்
நவம்பர் 30, 2021
உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். தொழில் சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக மாறுவார்கள். பலதரப்பட்ட செலவுகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.
சுவாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
நவம்பர் 30, 2021
குடும்ப பெரியோர்களிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் லாபம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பூமி விருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
விசாகம் : மதிப்பு அதிகரிக்கும்.
அனுஷம் : லாபம் மேம்படும்.
கேட்டை : விருத்தி உண்டாகும்.
---------------------------------------
தனுசு
நவம்பர் 30, 2021
இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் உறவுகள் மேம்படும். வீண் செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் மறைமுகமான வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். அலைச்சல்கள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : மந்தத்தன்மை குறையும்.
பூராடம் : உறவுகள் மேம்படும்.
உத்திராடம் : சேமிப்புகள் குறையும்.
---------------------------------------
மகரம்
நவம்பர் 30, 2021
தன்னம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களது எண்ணங்களை புரிந்து ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை சாதுர்யமாக வெற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் ஆதரவால் நட்பு வட்டம் விரிவடையும். புதிய வியாபார பணிகளில் சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். மேன்மையான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : வெற்றிகரமான நாள்.
அவிட்டம் : தடைகள் நீங்கும்.
---------------------------------------
கும்பம்
நவம்பர் 30, 2021
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். தாய்மாமன் வழியில் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முக்கியமான ஆவணங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். சுபமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : சிந்தித்து செயல்படவும்.
பூரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.
---------------------------------------
மீனம்
நவம்பர் 30, 2021
குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளிவட்டார நட்புகள் மேம்படும். புதிய கூட்டாளிகள் இணைவார்கள். குழந்தைகளால் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். நினைத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதில் சஞ்சலமான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். நன்மைகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : நட்பு வட்டம் விரிவடையும்.
ரேவதி : எண்ணங்கள் ஈடேறும்.
---------------------------------------
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-11-2021 - செவ்வாய் - (School Morning Prayer Activities)...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.11.21
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்:அமைச்சியல்
அதிகாரம்:அமைச்சு
குறள் எண்:631
குறள்: கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
பொருள் :ஒரு செயலைச் செய்ய ஏற்ற கருவி,காலம், செயல்வகை,செலவின் அருமை ஆகியவற்றை ஆராய்ந்து செய்பவனே அமைச்சன் ஆவான்.
பழமொழி :
As the fool thing so, the bell clicks.
பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
இரண்டொழுக்க பண்புகள் :
1. உழாத நிலமும், இறைக்காத கிணறும், உழைக்காத உடலும் கெடும் இத்தவறை செய்ய மாட்டேன்.
2. இரக்கமில்லாத மனமும், இயற்கை அழிக்கும் நாடும் கெடும். எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளம் ஒரு நாளும் அழிக்க மாட்டேன்.
பொன்மொழி :
எதிலும் அளவுகடந்த பற்றுக் கொள்வதே எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாகும்.இன்ப துன்பங்களைக் கடந்த நிலையில் மட்டுமே உண்மையான ஆனந்ததை உணர முடியும்.______ பரம ஹம்சர்
பொது அறிவு :
1. சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர் யார்?
பெரியார் ஈ.வெ. ரா.
2. இந்தியாவில் இரும்புபப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?
லக்னோ.
English words & meanings :
Altar - a high table that is the center of a religious ceremony, சமய வழிபாட்டு பீடம்.
Alter - make some changes in the original plan or plot, ஒரு திட்டம் அல்லது காரியத்தில் மாற்றங்களை செய்தல்
ஆரோக்ய வாழ்வு :
வெங்காயம் தொற்றுகள் உருவாக்கும் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும். தொண்டை வறட்சி, இருமல் தடுக்கும்
கணினி யுகம் :
Ctrl+Spacebar - It allows you to change the selected text to the default font size and type.
Ctrl+Home - Its use is to move the cursor to the first slide. For example, if you have 50 slides in your file, and the cursor is on the 45th slide, by pressing Ctrl+Home, you can move the cursor to the first slide.
நவம்பர் 30
சர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள்...
சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.[1] போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.
நீதிக்கதை
கழுதையின் தந்திரம்
கதை :
ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை.
ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது.
ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம், நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது. நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும் என வேண்டிக் கொண்டது.
நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல் என உறுமியது ஓநாய். ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை.
காலில் முள் உள்ள நிலையில் நீ என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உன் தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உன் உயிரையும் வாங்கி விடும். அதற்கு தயவு கூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடு. அதற்குப் பிறகு நீ என்னை அடித்துத் தின்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கழுதை கூறிற்று.
ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது. கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து, ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என தேடும் வேலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்தது.
கழுதையின் உதை தாங்காமல் ஓநாய் துடிதுடித்து சரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது.
நீதி :
கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக செயல்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்றைய செய்திகள்
30.11.21
★வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
★தமிழக அரசு, எஸ்சி- எஸ்டி மற்றும் கிறித்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கான படிப்பு உதவித் தொகைக்கு வருமான வரம்பை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
★புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.
★3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
★ஒமைக்ரான் அச்சம்; வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கிடுக்கிப்பிடி: மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு.
★ஓமைக்ரான் வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
★இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீரர் ஆக்சல்சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
★கான்பூர் டெஸ்ட்: போராடி டிரா செய்தது நியூசிலாந்து.
Today's Headlines
🌸 A magnitude of 3.6 Richter earthquakes was recorded in Vellore and Tirupattur districts yesterday, according to the National Geological Research Centre.
🌸 The Government of Tamil Nadu has increased the income limit for scholarships for SC - ST and Adithravita students who have converted to Christianity from Rs. 2.5 lakhs to Rs. 8 lakhs.
🌸 New Depression: Chances of heavy rain for 2 more days in Tamil Nadu.
🌸 The bill to repeal 3 agricultural laws was passed unanimously in the Rajya Sabha following the Lok Sabha.
🌸 Omicron Fear; New strict restrictions were released for those who come from abroad by Federal Government.
🌸 The World Health Organization has released 5 important pieces of information regarding the omega-3 virus.
🌸 Danish player Axelsen wins the Indonesian Open badminton men's singles title.
🌸 Kanpur Test: Struggling Draw by New Zealand.
Prepared by
Covai women ICT_போதிமரம்
தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர்கள் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) - (2020-2021) - வினாத்தாள் & விடைகள் (Question Paper & Answer Key)...
தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர்கள் திறனாய்வுத் தேர்வு (TRUST Examination) - (2020-2021) - வினாத்தாள் & விடைகள் (Question Paper & Answer Key)...
>>> தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர்கள் திறனாய்வுத் தேர்வு வினாத்தாள் - (தமிழ் வழி )...
>>> TRUST Examination Question Paper (English Medium)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...
Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்... *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...