கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இல்லம் தேடிக் கல்வி மையங்கள் _கோவிட்-19 தடுப்பு - நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (Illam Thedi Kalvi Centers _COVID-19 Prevention - Standard Operating Procedures)...

 


இல்லம் தேடிக் கல்வி மையங்கள் _கோவிட்-19 தடுப்பு நிலையான வழிகாட்டு நடைமுறைகள்


இல்லம் தேடிக் கல்வி மையங்கள் செயல்படும் பொழுது கோவிட்-19 நோய்ப் பரவல் தடுப்பிற்காக கீழ்க்கண்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும். 


1) மையங்களுக்கு வரும் குழந்தைகள், தன்னார்வலர்கள், பெற்றோர் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். 


2) மையங்களில் குழந்தைகள் அமர்வதற்கு தவறாமல் சமூக இடைவெளி வட்டங்கள் வரைந்து இருக்கவேண்டும். 


3) குழந்தைகள் மையங்களுக்கு வரும்பொழுது கைகளை முழுவதும் சுத்தம் செய்துகொள்ள சோப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். இவற்றில் கைகளை சுத்தம் செய்து கொண்ட பிறகு குழந்தைகள் மையங்களுக்கு வர ஏற்பாடு செய்தல் வேண்டும்.


4) கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி ( Hand sanitizer) பயன்படுத்தலாம்.


5) குழந்தைகள் வகுப்பில் நெருக்கமாக அமர்வதை தவிர்க்க வேண்டும். மேலும், பாடல் மற்றும் செயல்வழிக்கற்றல் நடைபெறும் பொழுது கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். 


6) இல்லம் தேடி கல்வி மையங்களை பார்வையிடும் அலுவலர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் முழுமையான முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.


7) தன்னார்வலர்கள் எப்பொழுதும் முகக்கவசம் அணிந்து வகுப்புகள் நடத்த வேண்டும்.


8) குழந்தைகளை கையாள வேண்டி உள்ளதால் தன்னார்வலர்கள் தவறாமல் _தடுப்பூசி_ செலுத்திக் கொண்டு இருத்தல் வேண்டும். 


9) குழந்தைக்கு ஏதேனும் சளி அல்லது காய்ச்சல் தென்பட்டால் உடனடியாக மருத்துவ துறையின் உதவியை பெற்றோர்கள் நாடுவதற்கு தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்தல் வேண்டும். 


10) இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு தேவைப்படும் கிருமி நாசினி மற்றும் சோப்பு ஆகியவற்றை நன்கொடையாகப் பெறுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் உதவியை கல்வித்துறை அலுவலர்கள் பெறலாம்.


11) இல்லம் தேடி கல்வி மையம் செயல்படும் இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அவ்விடங்களை அவ்வபோது கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தல் வேண்டும்.


12) தன்னார்வலர்கள் வீட்டில் யாருக்கும் சளி, காய்ச்சல் போன்ற நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் தன்னார்வலர்கள் மையங்களுக்கு வருதல் கூடாது. மருத்துவத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்பட்டதாகவும், ஜனவரி 5-ம் தேதி அதற்கான அரசாணை வெளியிட உள்ளதாகவும் பரவும் செய்தி - உண்மை என்ன? (What is the truth? - News spread that the retirement age for Tamil Nadu government employees has been reduced to 58 and the government is set to issue an order on January 5)

 தமிழக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்பட்டது அமலுக்கு வருவதாகவும், ஜனவரி 5-ம் தேதி அதற்கான அரசாணை வெளியிட உள்ளதாகவும் புதிய தலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.



உண்மை என்ன ?


2020-ல் கொரோனா பாதிப்பால் நிதிச் சிக்கல்களைச் சந்தித்து வந்த நிலையில், அன்றைய முதல்வர் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி அறிவித்தார். இதன் மூலம், 2020-ல் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வுக் கால பணப் பயன்களை வழங்குவதை அரசு தவிர்த்தது. மேலும், கடந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலையால், ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படும் என  அரசு அறிவித்தது.


அதன்பின் புதிதாகப் பொறுப்பேற்ற அரசால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60-ல் இருந்து 58 ஆக குறைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான கோப்புகள் தயாராகி வருவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக செய்திகளின் வாயிலாக பேசப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.


இந்நிலையில்தான், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆக குறைப்பு அமலுக்கு வருதாக புதியதலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று பரவி வருகிறது. ஆனால், ஓய்வு பெறும் வயது குறித்து புதிய தலைமுறை மட்டுமின்றி எந்தவொரு செய்தி நிறுவனமோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்போ இன்னும் வெளியாகவில்லை. இது எடிட் செய்யப்பட்டது.


இதுகுறித்து, புதியதலைமுறை இணையதளப் பிரிவை தொடர்பு கொண்டு கேட்கையில், இது போலியான நியூஸ் கார்டு. நாங்கள் வெளியிடவில்லை ” எனத் தெரிவித்து இருந்தனர்.


முடிவு : 


நம் தேடலில், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆக குறைப்பு அமல் என்றும், 05.01.2022 முதல் அரசாணை வெளியீடு என்றும் பரவும் நியூஸ் கார்டு போலியானது. தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என அறிய முடிகிறது.



மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் சார்ந்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Proceedings of Vellore District Chief Educational Officer regarding Vaccination of Students) ந.க.எண்: 4296/ஆ1/2021, நாள்: 01-01-2022...

 


>>> மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் சார்ந்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Proceedings of Vellore District Chief Educational Officer regarding Vaccination of Students) ந.க.எண்: 4296/ஆ1/2021, நாள்: 01-01-2022...

1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 10-01-2022 வரை விடுமுறை - ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வருகைபுரிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் - திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Holidays for 1st to 8th Standard students only - Teachers must attend school as usual - Dindigul District Chief Educational Officer Proceedings) ஓ.மு.எண்: 86/அ1/2021, நாள்: 02-01-2022...



>>> 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 10-01-2022 வரை விடுமுறை - ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வருகைபுரிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் - திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Holidays for 1st to 8th Standard students only - Teachers must attend school as usual - Dindigul District Chief Educational Officer Proceedings) ஓ.மு.எண்: 86/அ1/2021, நாள்: 02-01-2022...



>>> திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 1731/ஆ3/2020, நாள்: 02-01-2022...



>>> 1 முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை - ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் - இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் வழக்கம் போல நடைபெறும் - மாவட்ட ஆட்சியர் கடிதம்...


1 முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை - ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் - இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் வழக்கம் போல நடைபெறும் - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கடிதம் (Prohibition of direct classes from 1st to 8th Standard - Teachers should come to school - Illam Thedi Kalvi Scheme classes will be held as usual - Tiruvannamalai District Collector's letter)...



>>> 1 முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை - ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் - இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் வழக்கம் போல நடைபெறும் - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கடிதம் (Prohibition of direct classes from 1st to 8th Standard - Teachers should come to school - Illam Thedi Kalvi Scheme classes will be held as usual - Tiruvannamalai District Collector's letter)...


>>> 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை - ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் -  முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...


இன்றைய (02-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜனவரி 02, 2022





எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகள் மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். நிர்வாகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. தந்தையின் ஆரோக்கியம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நன்மையான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



அஸ்வினி : முயற்சிகள் அதிகரிக்கும்.


பரணி : பொறுப்புகள் கிடைக்கும். 


கிருத்திகை : கவனம் வேண்டும். 

---------------------------------------

 




ரிஷபம்

ஜனவரி 02, 2022




வாழ்க்கைத்துணைவர்களுக்கிடையே சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் நிமிர்த்தமான பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். கனிவு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.


ரோகிணி : விவாதங்களை தவிர்க்கவும்.


மிருகசீரிஷம் : கவனம் வேண்டும். 

---------------------------------------

 





மிதுனம்

ஜனவரி 02, 2022





உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் போது நபரின் தன்மையை அறிந்து செயல்படவும். நீண்ட நாட்களாக செயல்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். வர்த்தகம் தொடர்பான சிந்தனைகளில் புதுவிதமான உத்திகளின் மூலம் லாபம் பெறுவீர்கள். மதிப்பு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மிருகசீரிஷம் : பொறுப்பு அதிகரிக்கும்.


திருவாதிரை : மகிழ்ச்சியான நாள். 


புனர்பூசம் : லாபம் பெறுவீர்கள். 

---------------------------------------

 




கடகம்

ஜனவரி 02, 2022




மனதில் உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பங்காளி வகை உறவுகளிடத்தில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். நெருக்கமானவர்களின் ஆதரவுகளால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்திருந்த ஆதாயம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். சிக்கல் நிறைந்த நாள்.



அதிஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும். 


பூசம் : ஆதரவு கிடைக்கும்.


ஆயில்யம் : மாற்றங்கள் ஏற்படும். 

---------------------------------------

 




சிம்மம்

ஜனவரி 02, 2022




தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாகனம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மகம் : நெருக்கடிகள் குறையும். 


பூரம் : சாதகமான நாள். 


உத்திரம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 

---------------------------------------

 





கன்னி

ஜனவரி 02, 2022




உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஒத்துழைப்பு உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். பத்திரம் தொடர்பான பணிகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தனவிரயம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திரம் : விழிப்புணர்வு வேண்டும். 


அஸ்தம் : ஆதரவு கிடைக்கும். 


சித்திரை : வாய்ப்புகள் அமையும். 

---------------------------------------

 





துலாம்

ஜனவரி 02, 2022




பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்துவந்த இடையூறுகள் நீங்கும். வியாபாரம் ரீதியான பயணங்களில் சாதகமான சூழல் அமையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



சித்திரை : நெருக்கடிகள் குறையும். 


சுவாதி : சாதகமான நாள். 


விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

---------------------------------------

 




விருச்சிகம்

ஜனவரி 02, 2022




குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் காணப்படும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



விசாகம் : கலகலப்பான நாள். 


அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


கேட்டை : நம்பிக்கை பிறக்கும். 

---------------------------------------

 




தனுசு

ஜனவரி 02, 2022




பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். துரித வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரப் பணிகளில் செய்யும் சிறு சிறு மாற்றங்களால் லாபத்தை மேம்படுத்த முடியும். நண்பர்களின் மூலம் சாதகமான உதவிகள் கிடைக்கும். தடைகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு



மூலம் : குழப்பங்கள் நீங்கும். 


பூராடம் : மாற்றங்கள் பிறக்கும். 


உத்திராடம் : உதவிகள் கிடைக்கும். 

---------------------------------------

 



மகரம்

ஜனவரி 02, 2022




கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். புதுவித பயணங்களின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்களில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் விலகும். நன்மைகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திராடம் : தெளிவு ஏற்படும்.


திருவோணம் : இழுபறிகள் குறையும்.


அவிட்டம் : கட்டுப்பாடுகள் விலகும். 

---------------------------------------

 



கும்பம்

ஜனவரி 02, 2022




வியாபார பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சொந்த ஊருக்கு செல்வது தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். ஆதாயம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


சதயம் : வாய்ப்புகள் கைகூடும். 


பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள். 

---------------------------------------

 




மீனம்

ஜனவரி 02, 2022




வியாபாரம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



பூரட்டாதி : ஈடுபாடு உண்டாகும்.


உத்திரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.


ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும். 

---------------------------------------

இன்றைய (01-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜனவரி 01, 2022




உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் வேலையாட்களால் அலைச்சல் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட  திசை  :   மேற்கு


அதிர்ஷ்ட எண்  :   8


அதிர்ஷ்ட நிறம்  :   பழுப்பு நிறம் 



அஸ்வினி  :   பொறுமை வேண்டும்.


பரணி  :   அலைச்சல் அதிகரிக்கும். 


கிருத்திகை  :   சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------

 



ரிஷபம்

ஜனவரி 01, 2022




பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். சுகமான நாள். 



அதிர்ஷ்ட  திசை  :   கிழக்கு


அதிர்ஷ்ட  எண்  :   9


அதிர்ஷ்ட  நிறம்  :   பச்சை நிறம்



கிருத்திகை  :   அனுகூலமான நாள். 


ரோகிணி  :   புரிதல் உண்டாகும்.


மிருகசீரிஷம்  :   அனுபவம் கிடைக்கும். 

---------------------------------------

 



மிதுனம்

ஜனவரி 01, 2022




உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கடந்த கால நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மேம்படும். பழைய சிக்கல்கள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். வியாபாரம் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். ஆதரவு நிறைந்த  நாள்.



அதிர்ஷ்ட  திசை  :   மேற்கு


அதிர்ஷ்ட  எண்  :   3


அதிர்ஷ்ட  நிறம்  :   வெளிர் சிவப்பு



மிருகசீரிஷம்  : பொறுப்புகள் கிடைக்கும்.


திருவாதிரை  :   ஒத்துழைப்பு மேம்படும். 


புனர்பூசம்  :   மாற்றம் உண்டாகும். 

---------------------------------------

 



கடகம்

ஜனவரி 01, 2022




வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பத்திரம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். இன்பமான நாள்.



அதிர்ஷ்ட  திசை  :   தெற்கு


அதிர்ஷ்ட  எண்  :   4


அதிர்ஷ்ட  நிறம்  :   பிரவுன் நிறம்



புனர்பூசம்  :  கருத்து வேறுபாடுகள் குறையும்.


பூசம்  :   உதவிகள் கிடைக்கும்.


ஆயில்யம்  :   மேன்மையான நாள். 

---------------------------------------

 



சிம்மம்

ஜனவரி 01, 2022




நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வித்தியாசமான புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உடலில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட  திசை  :   மேற்கு


அதிர்ஷ்ட  எண்  :   9


அதிர்ஷ்ட  நிறம்  :   மஞ்சள் நிறம்



மகம்  :   கருத்து வேறுபாடுகள் குறையும்.


பூரம்  :   திறமைகள் வெளிப்படும்.


உத்திரம்  :   புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------

 



கன்னி

ஜனவரி 01, 2022




சகோதரர் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். கவிதை மற்றும் இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட  திசை  :   கிழக்கு


அதிர்ஷ்ட  எண்  :   5


அதிர்ஷ்ட  நிறம்  :   ஊதா நிறம்



உத்திரம்  :   ஆதரவான நாள். 


அஸ்தம்  :   இழுபறிகள் குறையும்.


சித்திரை  :   முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------

 


துலாம்

ஜனவரி 01, 2022




தந்தைவழி வியாபாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். தானியம் மற்றும் ஆபரணம் தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட  திசை  :   வடக்கு


அதிர்ஷ்ட  எண்  :   2


அதிர்ஷ்ட  நிறம்  :   வெளிர் பச்சை



சித்திரை  :   முன்னேற்றம் உண்டாகும். 


சுவாதி  :   மகிழ்ச்சியான நாள். 


விசாகம்  :   லாபம் ஏற்படும். 

---------------------------------------

 


விருச்சிகம்

ஜனவரி 01, 2022




உத்தியோகத்தில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். காது தொடர்பான உபாதைகள் அகலும். உயர்வான நாள்.



அதிர்ஷ்ட  திசை  :   வடக்கு 


அதிர்ஷ்ட  எண்  :   3


அதிர்ஷ்ட  நிறம்  :   வெளிர் நீலம்



விசாகம்  :   துரிதம் உண்டாகும்.


அனுஷம்  :   ஒத்துழைப்பு கிடைக்கும். 


கேட்டை  :   வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------

 


தனுசு

ஜனவரி 01, 2022




நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை குறைத்து கொள்ளவும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட  திசை  :   வடக்கு


அதிர்ஷ்ட எண்  :   2


அதிர்ஷ்ட நிறம்  :   வெள்ளை நிறம்



மூலம்  :  விவாதங்களை தவிர்க்கவும்.


பூராடம்  :  காரியசித்தி உண்டாகும்.


உத்திராடம்  :  வரவுகள் கிடைக்கும்.

---------------------------------------

 


மகரம்

ஜனவரி 01, 2022




உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கு ஏற்ற பாராட்டுகள் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மை ஏற்படும். இனிமை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட  திசை  :   வடக்கு


அதிர்ஷ்ட  எண்  :   5


அதிர்ஷ்ட  நிறம்  :   கருநீலம்



உத்திராடம்  :   பொறுப்புகள் அதிகரிக்கும்.


திருவோணம்  :   எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


அவிட்டம்  :   வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------

 


கும்பம்

ஜனவரி 01, 2022




வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். பணிவு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட  திசை  :   தெற்கு


அதிர்ஷ்ட  எண்  :   1


அதிர்ஷ்ட  நிறம்  :   மஞ்சள் நிறம்



அவிட்டம்  :   முதலீடுகள் அதிகரிக்கும்.


சதயம்  :   புரிதல் உண்டாகும்.


பூரட்டாதி  :   மேன்மையான நாள். 

---------------------------------------

 


மீனம்

ஜனவரி 01, 2022




உத்தியோகத்தில் நிர்வாகத் திறமைகள் வெளிப்படும். நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் திரும்ப கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். வரவுகள் மேம்படும் நாள்.  


 

அதிர்ஷ்ட  திசை  :   மேற்கு


அதிர்ஷ்ட  எண்  :   7


அதிர்ஷ்ட  நிறம்  :   நீலநிறம்



பூரட்டாதி  :   திறமைகள் வெளிப்படும்.


உத்திரட்டாதி  :  வாய்ப்புகள் கிடைக்கும்.


ரேவதி  :   லாபம் மேம்படும்.

---------------------------------------

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள்  - தமிழ்...