கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வு வயது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓய்வு வயது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்படுவதாக வெளியான தகவல் வெறும் வதந்தியே. அப்படி எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...

 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்படுவதாக வெளியான தகவல் வெறும் வதந்தியே. அப்படி எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...


The news that the retirement age of government employees will be increased to 62 is just a rumour. No such resolution was passed. - Tamil Nadu Government Announcement...




அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்த்த பரிசீலனையா - சங்கங்கள் கடும் கொந்தளிப்பு...


 அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்த்த பரிசீலனையா - சங்கங்கள் கடும் கொந்தளிப்பு - நாளிதழ் செய்தி...



தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்பட்டதாகவும், ஜனவரி 5-ம் தேதி அதற்கான அரசாணை வெளியிட உள்ளதாகவும் பரவும் செய்தி - உண்மை என்ன? (What is the truth? - News spread that the retirement age for Tamil Nadu government employees has been reduced to 58 and the government is set to issue an order on January 5)

 தமிழக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்பட்டது அமலுக்கு வருவதாகவும், ஜனவரி 5-ம் தேதி அதற்கான அரசாணை வெளியிட உள்ளதாகவும் புதிய தலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.



உண்மை என்ன ?


2020-ல் கொரோனா பாதிப்பால் நிதிச் சிக்கல்களைச் சந்தித்து வந்த நிலையில், அன்றைய முதல்வர் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி அறிவித்தார். இதன் மூலம், 2020-ல் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வுக் கால பணப் பயன்களை வழங்குவதை அரசு தவிர்த்தது. மேலும், கடந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலையால், ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படும் என  அரசு அறிவித்தது.


அதன்பின் புதிதாகப் பொறுப்பேற்ற அரசால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60-ல் இருந்து 58 ஆக குறைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான கோப்புகள் தயாராகி வருவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக செய்திகளின் வாயிலாக பேசப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.


இந்நிலையில்தான், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆக குறைப்பு அமலுக்கு வருதாக புதியதலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று பரவி வருகிறது. ஆனால், ஓய்வு பெறும் வயது குறித்து புதிய தலைமுறை மட்டுமின்றி எந்தவொரு செய்தி நிறுவனமோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்போ இன்னும் வெளியாகவில்லை. இது எடிட் செய்யப்பட்டது.


இதுகுறித்து, புதியதலைமுறை இணையதளப் பிரிவை தொடர்பு கொண்டு கேட்கையில், இது போலியான நியூஸ் கார்டு. நாங்கள் வெளியிடவில்லை ” எனத் தெரிவித்து இருந்தனர்.


முடிவு : 


நம் தேடலில், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 58 ஆக குறைப்பு அமல் என்றும், 05.01.2022 முதல் அரசாணை வெளியீடு என்றும் பரவும் நியூஸ் கார்டு போலியானது. தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என அறிய முடிகிறது.



அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 59-லிருந்து, 60-ஆக உயர்த்தப்பட்டது - அடிப்படை விதி 56-ல் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு(The Retirement age for Government servants has been raised from 59 to 60 - Amendment to Basic Rule 56 - G.O.Ms.No:92, Dated:13-09-2021)...


 அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 59-லிருந்து, 60-ஆக உயர்த்தப்பட்டது - அடிப்படை விதி 56-ல் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு(The Retirement age for Government servants has been raised from 59 to 60 - Amendment to Basic Rule 56 - G.O.Ms.No:92, Dated:13-09-2021)...


>>> Click here to Download G.O.Ms.No:92, Dated:13-09-2021...

The Superannuation (Retirement Age) Period of Different States in India...



 இந்திய மாநிலங்களில் அரசுப் பணியாளர்கள் & ஆசிரியர்களின்  ஓய்வு வயது...

The Superannuation (Retirement Age) Period of Different States in India...


1.Andhrapradesh. ......60

2.Arunachal Pradesh..58

3.Assam.....................60

4.Bihar........................60

5.Delhi .......................62

(Municipal corporation of delhi60)

6.Goa.........................58

7.Gujarat....................60

8.Hariyana.................60

9.Himachal pradesh..60

10.Jammu.................60

11.Jharkhand............56

12.Karnataka.............60

13.Kasmir...................58

14.Kerala...................56

15.Madhyapradesh.....62

16.Maharastra............58

17.Manipur..................58

18.Meghalaya.............60

19.Mizoram................58

20.Nagaland...............60

21Odissa....................58

22.Punjab...................60

23.Rajasthan..............60

24.Sikkim....................60

25.Tamilnadu..........60

26.Telangana...............58

(CM promised to extend 61)

27.Utterpradesh...........62

28.Uttarakhand............60

29.Chatisgarh..............60

30.West Bengal........... 60

31.Tripura.................60

32.Puducherry...........60

33. Union Government Employees.....60


(இது ஏழாவது ஊதிய குழு அடிப்படையிலான தகவல். தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் ஏழாவது ஊதிய குழுவிற்கு பின் ஓய்வு பெறும் வயதை மாற்றியுள்ளன. அவற்றுள் உறுதிப்படுத்தப்பட்ட  மாற்றங்களை மட்டும் திருத்தியுள்ளோம்.)


அரசு ஊழியர் ஓய்வு வயது குறைக்கப்படுமா? - கோரிக்கை மனு...

 அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை பழையபடி மாற்ற வேண்டும்' என, தமிழ்நாடு வேலையில்லா பட்டதாரிகள் நலச்சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


சங்கத்தின் தலைவர் சோமசுந்தரம், செயலர் முகேஷ் ஆகியோர், தலைமை செயலர் இறையன்புக்கு அனுப்பியுள்ள மனு: வேலைவாய்ப்பற்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படாமல், அ.தி.மு.க., ஆட்சியில், கடைசி நேரத்தில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து 59; பின் 60 என உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. இதனால், அரசு வேலையை எதிர்பார்த்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு தகர்ந்துள்ளது.


ஏற்கனவே, பதவி உயர்வு தேக்க நிலையில் இருந்த அரசு ஊழியர்களின் பதவி உயர்வு பறிபோனதால், அவர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இந்தியாவில் ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்கள் அனைத்திலும், ஓய்வு வயது 58 ஆகவே உள்ளது. தற்போது, 60 வயதில் ஓய்வு என்ற உத்தரவால் 2020, 2021ல் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய, ஆயிரக்கணக்கான ஊழியர்கள், அடுத்த ஆண்டு ஒட்டு மொத்தமாக ஓய்வு பெறுவர். அப்போது, அரசுக்கு கடும் நிதிச்சுமை ஏற்படும். ஓய்வு வயது நீட்டிக்கப்பட்டதால் இரண்டு ஆண்டுகளில் அவர்கள் பெறும் மாத சம்பளத்தை கணக்கு போட்டு பார்த்தால், அவர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதிய பலன்களை விட அதிகமாகவே இருக்கும். எனவே, தாங்கள் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, பழையபடி 58 ஆக குறைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...