இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மைய விவரங்கள் சரிபார்ப்பு செயல்முறை...
ITK Illam Thedi Kalvi Volunteers Center details verification procedure...
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மைய விவரங்கள் சரிபார்ப்பு செயல்முறை...
ITK Illam Thedi Kalvi Volunteers Center details verification procedure...
இல்லம் தேடிக் கல்வி - 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவ தன்னார்வலர் பயிற்சிக்கான மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி வழங்குதல் சார்பு - சிறப்புப் பணி அலுவலரின் செயல்முறைகள்...
Illam Thedi Kalvi – Training of ITK Volunteers for Term 1 2024-2025 – Proceedings of the Special Project Officer...
இல்லம் தேடிக் கல்வி - 2024-2025ஆம் ஆண்டு முதல் பருவம் தன்னார்வலர்களுக்கான பயிற்சி - சிறப்புப் பணி அலுவலரின் செயல்முறைகள்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் பள்ளிகளில் பணியாற்றக் கூடாது - தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவு (நாளிதழ் செய்தி)...
கரோனா பரவலால் 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ, மாணவிகளிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித் துறை ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தது.
இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களில் பெரும்பாலானோர் முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்பிப்பதால், அவர்களை சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து, பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பான புகார்கள் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு சென்ற நிலையில், மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலகம், அனைத்து அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.
அதில், “இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் பகல் நேரத்தில் பள்ளிக்கு வரவழைத்து, வகுப்பறையில் பாடங்களை நடத்தச் சொல்வதோ, பள்ளி வேலைகளை செய்யச் சொல்வதோ கூடாது. பள்ளியில் நாங்கள் ஆய்வு செய்ய வரும்போது, இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர் வகுப்பறையில் இருந்தால், தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்காலிக ஆசிரியர்கள்:
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் மட்டும்தான், வகுப்பறையில் இருக்க வேண்டும். இவர்களைத் தவிர வேறு யாரையும் பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம்?:
தன்னார்வலர்கள் பள்ளிப் பணிக்குச் செல்வதன் மூலம், எதிர்காலத்தில் ஆசிரியர் பணியை நிரந்தரமாக பெற வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளி பணிக்குச் செல்கின்றனர். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் ஒன்றியத்துக்கு ஒருவர் வீதம் பணியாற்றும் நிலையில், தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது.
அதே நேரத்தில், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு மாதம் ரூ.1,000 மட்டும் ஊக்கத்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு ITK தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...
⚡1. வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செய்ய வேண்டிய பணிகள்
⚡2. வருவாய் வட்டாட்சியர் செய்ய வேண்டிய பணிகள்...
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - சிறப்பு முகாம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி
விருப்பம் இல்லாத தன்னார்வலர்களை விண்ணப்ப பதிவுக்கு பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தல்
மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு பணியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
தன்னார்வலர்களுக்கு 2 கி.மீ.க்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்கவும், தன்னார்வலர்கள் விருப்பப்பட்டால் 2.கி.மீ தொலைவுக்கு மேல் பணி வழங்கவும் உத்தரவு...
கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப் பதிவு தன்னார்வலர் பணிக்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் விவரங்களைப் பகிர , முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. சில மாவட்டங்களில் தன்னார்வலர்களின் விபரங்கள் பகிரப்பட்டுள்ளன. இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப் பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் இணைக்கப்பட்ட தொகுப்பு விரைவில் மாநில அலுவலகத்திலிருந்து மாவட்டங்களுக்குப் பகிரப்படும்.
இப்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு எவ்வித பணி ஒதுக்கீடுகளும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநில அலுவலகத்திலிருந்து தகவல்கள் பகிரப்படும் பொழுது கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அனைத்து தன்னார்வலர்களுக்கும் வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻
🌸🌸🌸தமிழக அரசின் புதிய திட்டமான 💐💐💐 *கலைஞர் மகளிர் உரிமை திட்டம்* 💐💐💐நடைமுறைக்கு வர உள்ளது. இந்த திட்டத்தில் பயனாளர்களை பதிவு செய்யும் முழு பணியும், நமது இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட உள்ளது. எனவே இந்தப் பணியை மேற்கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் தங்களது விருப்பத்தையும், தங்களது விபரங்களையும் மேற்கண்ட *Google form* ல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
*இந்த திட்டத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்த விபரங்கள்*
📌 குறைந்தபட்சம் *10 நாட்களுக்கு* முகாம்களில் அமர்ந்து பயனாளிகளின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
📌 வேலை நேரம் ஆனது *காலை 9:30 முதல் மாலை 5 மணி* வரை .
📌இந்தப் பணியை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் குறிப்பிட்ட *ஊக்கத்தொகை* வழங்கப்படும்.
📌 ஒவ்வொரு தன்னார்வலரும் அதிகபட்சம் *பத்து நாட்களில் 500 பயனாளர்களை* பதிவுகள் வரை செய்ய வேண்டும்.
📌முகாமானது உங்கள் பகுதியில் உள்ள *அரசு பள்ளி கட்டிடம்* அல்லது *ஊராட்சி மன்ற அலுவலகம்* அல்லது *பொதுவான ஒரு அரசு கட்டிடத்தில்* நடைபெறும்.
📌 இந்த முகாம்களில் உங்களுக்கு போதுமான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும்.
📌 இந்தத் திட்டமானது *உயர்திரு.மாவட்ட ஆட்சியரின்* நேரடி கட்டுப்பாட்டில் நடைபெற உள்ள திட்டம். எனவே தங்களுக்கு தகவல் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் மூலமாக வழங்கப்படும்.
📌 இந்த பதிவை மேற்கொள்வதற்கு தங்களுக்கு வேண்டிய உபகரணங்கள் அரசின் மூலமாக வழங்கப்படும். இதில் தங்களது கைபேசியை இணைத்து பதிவை மேற்கொள்ள வேண்டும். எனவே தங்களது கைபேசியில் பயன்படுத்தப்படும் சார்ஜரின் அமைப்பு *B-TYPE or C-TYPE* என்பதை பதிவு செய்ய வேண்டும்.
*இல்லம் தேடிக் கல்வி*
*மாவட்டக் குழு. திருப்பூர்*
இல்லம் தேடிக் கல்வி (ITK) மையங்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு (Summer Vacation Notification for Illam Thedi Kalvi Centers)...
இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறை!
மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விருப்பத்திற்கு இணங்க இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
கோடை விடுமுறை காலத்தில் விருப்பப்படும் குழந்தைகள் மற்றும் தன்னார்வலர்கள் மையங்களுக்கு வருகை புரிந்து படிக்கலாம்.
பொது நூலகங்களில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும் மாணவர்களின் தனித்திறனை வளர்க்கவும் இந்த விடுமுறையைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம்கள் அருகில் உள்ள பொது நூலகங்களில் நடைபெறுகின்றன. அங்கு குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். நூலகங்களில் குழந்தைகளை உறுப்பினர்களாக சேர்த்து நூலகங்களிலிருந்து நூல்களை எடுத்துச் செல்லும் பழக்கத்தை ஊக்கப்படுத்துங்கள்.
இக்கோடை விடுமுறை காலத்தில் தன்னார்வலர்கள் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! மாணவர் சேர்க்கை குறித்த பதிவை இல்லம் தேடிக் கல்வி மொபைல் செயலியில் தவறாது பதிவு செய்யவும். அதிக குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் தன்னார்வலர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்!
அனைவருக்கும் வாழ்த்துகள்!
- திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
2023-2024ஆம் கல்வியாண்டில் இல்லம் தேடிக் கல்வி (ITK) திட்டத்துக்கு ₹226.27 கோடி நிதி ஒதுக்கீடு - அடுத்த கல்வியாண்டிலும் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடர்ந்து செயல்படும் (Allocation of ₹ 226.27 crore for Illam Thedi Kalvi Scheme in the academic year 2023-2024 - Illam Thedi Kalvi Scheme will continue in the next academic year)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி - தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தல் - இதற்காக தேவைப்படும் நிதியினை 38 மாவட்டங்களுக்கும் விடுவித்தல் தொடர்பாக SPD அவர்களின் செயல்முறைகள்...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...