கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாவட்ட ஆட்சியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாவட்ட ஆட்சியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

PKBFS Name Board Installation | District Collector's order



பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் பெயர் பலகை நிறுவுதல் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் உத்தரவு


PKBFS Name Board Installation | District Collector's order to all BDOs


The Virudhunagar District Collector has issued an order to all Block Development Officers regarding the installation of name boards for the 'Perunthalaivar Kamarajar Breakfast Scheme'.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப்பணத்திற்கு அலுவலக பதிவு முக்கியம் - மாவட்ட ஆட்சியர்



Official records are essential for the cash held by government employees – District Collector


 அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப்பணத்திற்கு அலுவலக பதிவு முக்கியம் -  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப்


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தினமும் தங்களது கைவசம் கொண்டு வரும் சொந்த ரொக்கப் பணம் குறித்த தகவல்கள் "Personal Cash Register" என்ற பிரத்யேகப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.


இந்த ரொக்கப் பதிவேடானது, தினமும் வருகைப் பதிவேட்டுடன் (Attendance Register) சேர்த்து அலுவலகத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளரால் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும்.


அலுவலகத் தலைவரின் மேலதிகாரிகள் மாதம் இருமுறை (Bi-monthly) இந்த ரொக்கப் பதிவேடு முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதை கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.


இந்தப் பதிவேட்டைச் சரியாகப் பராமரிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட அலுவலகத் தலைவர், கண்காணிப்பாளர் மற்றும் வருகைப் பதிவேட்டைப் பராமரிக்கும் பணியாளர் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் சுற்றறிக்கை.


கார்த்திகை தீபத் திருநாளான 03.12.2025 அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



கார்த்திகை மகா தீபத் திருநாளான 03.12.2025 அன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை (Local Holiday) அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Havells Gatik Pro 400mm Pedestal Fan| 120 Ribs Guard for Safety| Smooth Oscillation| Heavy Base| ISI Marked | 2 Year Warranty | Grey


https://amzn.to/49RyLm2




மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்



 மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்


The District Collector informed that students who are interested in enrolling in one-year medical certificate courses can apply.


கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவ / மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



அனைத்து மாவட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.

பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத 35 அரசு அலுவலர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்த மாவட்ட ஆட்சியர்




பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத 35 அரசு அலுவலர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்த மாவட்ட ஆட்சியர் - நாளிதழ் செய்தி 


காஜியாபாத் கலெக்டர் அதிரடி நடவடிக்கையாக, மக்களின் புகார் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளார். இந்த நடவடிக்கை, பொதுமக்களின் குறைகளை உரிய நேரத்தில் தீர்க்காத அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது. 

அதிகாரிகள் மீது நடவடிக்கை: பொதுமக்கள் அளித்த புகார் மனுக்களுக்கு தாமதமாக அல்லது அலட்சியமாக பதிலளித்த அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய காஜியாபாத் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

காரணம்: பொதுமக்களின் குறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது மற்றும் அலட்சியமாக நடந்துகொண்டதே இந்த நடவடிக்கைக்கான காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

நோக்கம்: பொதுமக்களின் குறைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கும், அரசு அதிகாரிகளின் பொறுப்புணர்வை அதிகரிப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



2 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம்


2 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வாலாயம் எண்: 3182, நாள்: 29-08-2025 வெளியீடு


2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 


பெரம்பலூர் ஆட்சியர் அருண்ராஜ், சர்க்கரை துறை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


காஞ்சிபுரம் சார் ஆட்சியர் மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் - மாவட்ட ஆட்சியர்



 ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் - மாவட்ட ஆட்சியர்


“நீலகிரியில் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும்”


- மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு


வார நாட்களில் 6,000 வாகனங்களுக்கும் வார இறுதியில் 8,000 வாகனங்களுக்கும் அனுமதி, உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை


Local Holiday for Tiruvarur District on 13-11-2024 - District Collector


13-11-2024  அன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் செயல்முறைகள்


Local Holiday for Tiruvarur District on 13-11-2024 - District Collector


முத்துப்பேட்டை கந்தூரி 13-11-2024  அன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அந்த விடுமுறை ஈடு செய்திட 07-12-2024 வேலை நாள் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசுப் பள்ளி மாணவிகளின் ஆசையை நிறைவேற்ற தமது இருக்கையில் அமர வைத்த மாவட்ட ஆட்சியர்

அரசுப் பள்ளி மாணவிகளின் ஆசையை நிறைவேற்ற தமது இருக்கையில் அமர வைத்த மாவட்ட ஆட்சியர்


The district collector offer his seat to fulfill the wishes of government school girls


கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் இருக்கையில் அமர ஆசைப்பட்ட அரசு பள்ளி மாணவிகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தமது இருக்கையில் மாணவிகளை அமர வைத்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு.பிரசாந்த்  அவர்களின் செயல் பள்ளி மாணவிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது...





கல்வி ஆய்வுக்கான (District Education Review) மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு - மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்...



 மாவட்டக் கல்வி ஆய்வுக்கான (District Education Review) மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு (DLMC - District Level Monitoring Committee) - திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஒரு ஆசிரியர் தன் பணியை ஆத்மார்த்தமாக செய்தால் எத்தனை நபர்களை அது ஊக்குவிக்கும் என்பதற்கும், அப்படி ஊக்குவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேரின் வாழ்க்கை தரத்தை மாற்றுபவர்களாக அவதாரம் எடுப்பார்கள் என்பதற்கும் ஒரு சிறிய எடுத்துக்காட்டு மாவட்ட ஆட்சியரின் இந்த முகநூல் Facebook பதிவு... ‌

 


ஒரு ஆசிரியர் தன் பணியை ஆத்மார்த்தமாக செய்தால் எத்தனை நபர்களை அது ஊக்குவிக்கும் என்பதற்கும், அப்படி ஊக்குவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேரின் வாழ்க்கை தரத்தை மாற்றுபவர்களாக அவதாரம் எடுப்பார்கள் என்பதற்கும் ஒரு சிறிய எடுத்துக்காட்டு மாவட்ட ஆட்சியரின் இந்த முகநூல் Facebook பதிவு... ‌


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் @jeyaseelan_vp  அவர்கள் பேஸ்புக் பதிவிலிருந்து..


எங்கள் கிராமத்துப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்பு படிக்கும் போது ஒரு டீச்சர் வந்தார், ஜூலியா மிஸ். மற்ற டீச்சர்கள் எல்லாம், "ஏய் கையகட்டி வாயில விரலவை, லைன்ல நில்லு, பேசாம மனசுக்குள்ள படி" இப்படி மர அடிஸ்கேலோடு சுற்றி வர ஜூலியா மிஸ் மட்டும், கண்ணுங்களா வாங்க நம்ம ஸ்கூல சுத்தி இருக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் நான் இங்கிலீஷ் பெயர் சொல்லி தரேன் என்று பள்ளியை சுற்றிக் காட்டி  ஆங்கில வகுப்பு நடத்துவார். நாளைக்கு நம்ம நாட்டுல இருக்கிற எல்லா மாநிலங்கள் பெயர்களையும் எழுதிட்டு வந்தீங்கன்னா உங்களுக்கு சாக்லேட் கொடுப்பேன் என்று மகிழ்விப்பார். ஆங்கில நாளிதழ்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொடுத்து வகுப்பில் வாசிக்கச் செய்வார்.‌ இப்படி, இன்னும் அவர் என்னவெல்லாம் செய்தார் என்று நினைவில் இல்லை, ஆனால் படிப்பதை ஜாலியாகவும் படித்தால் பெருமையும் பாராட்டும் கிடைக்குமென புரிய வைத்தார் என்பது மட்டும்‌ என்  நினைவில் இப்போதும் இருக்கிறது.‌‌ 


என்னை அந்த டீச்சருக்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொண்டு பொது அறிவு கேள்விகளுக்கு நான் தான் அவரிடம் பதில் சொல்லி பரிசும் பாராட்டும் வாங்குவேன். ஒரு நாள் ஏதோ மன்னரின் அரசவைப் பற்றி ஒரு பாடம் இருந்தது. அதை நாடகமாக போடலாம் என்று சொல்லி மாணவர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு ரோல் கொடுத்தார், எனக்கு மந்திரி வந்தது. 'மிஸ் நான் மந்திரியாக எல்லாம் நடிக்க மாட்டேன் எனக்கு ராஜாவா தான் நடிக்கணும்' என்று அவரிடம் அடம் பிடித்தேன். 'இல்லடா மந்திரிக்கு தான் நிறைய டயலாக் இருக்கும் அதனால மந்திரியா நடி' என்று சொன்னார். டேய் டீச்சர் சொன்னால் கேளுடா என்றார், நான் கேட்கவில்லை அடம்பிடித்து ராஜாவாகத்தான் நடித்தேன்.‌‌ ஆனால் கோபிக்காமல் அந்த நாடகத்தை நன்றாக செய்ய வைத்தார்.‌ 


நான்காம் வகுப்பில் ஒரு நாள் எங்கள் வகுப்பை மதுரைக்கு சுற்றுலா அழைத்துச் செல்கிறேன் என்றார். அதுவரை இப்படி எல்லாம் நாங்கள் கேள்வி கூட பட்டதில்லை. ஐந்து ரூபாய் சுற்றுலாக் கட்டணம் தின்பண்டங்கள் வாங்குவதற்கு ஐந்து ரூபாய் என பத்து ரூபாய் கட்டணத்தில் மதுரைக்கு சுற்றுலா சென்றது என் மனதில் மங்கிய காட்சிகளாக சிலவும், அழுத்தமான காட்சிகளாக சிலவும் நினைவில் இன்றும் இருக்கிறது இருக்கிறது. திருமலை நாயக்கர் மஹால், 'இங்கதான் பெரிய அரசர் வாழ்ந்தார் நம்ம கிளாஸ்ல படிச்சிருக்கோம்ல புக்குல அது மாதிரி' என்று சொல்லிவிட்டு காந்தி மண்டபத்திற்கு சென்று காந்தியடிகளை சுட்டுக் கொன்ற போது அவர் அணிந்திருந்த  ரத்தக்கரை படிந்த‌ வேஷ்டியை காண்பித்ததும் நினைவில் இருக்கிறது. கடைசியாக வாங்க வேகமா போகணும் என்று எங்களை வேகமாக அந்த வேனில் ஏற்றிக்கொண்டு மதுரை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.‌ அப்போது தூரத்திலிருந்து அங்கே ஒரு விமானம் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பது சிறிதாக தெரிந்தது, கொஞ்சம் லேட்டா வந்திருந்தா இந்த பிளைட் கிளம்பி இருக்கும் என்று மிஸ் சொன்னார், எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது பிளைட் பாத்தீங்களா நீங்களும் பெரிய பசங்களாகி இதுல பறக்கணும் என்று சொல்லிவிட்டு நிறைய தின்பண்டங்கள் வாங்கித் தந்தார், சாப்பிட்டுவிட்டு இரவு ஊருக்கு திரும்பினோம்.‌‌ 


இப்படி ஜூலியா மிஸ் எப்போதும் ஆக்டிவாக வகுப்பை வைத்திருந்தார்.‌ ஒருநாள் ஆரம்பப் பள்ளி முடிந்து நான் அருகில் உள்ள ஊரில் ஆறாம் வகுப்பு சேர்ந்து விட்டேன். ஜூலியா மிஸ்ஸை கடைசியாக அவர் பஸ் ஏறுவதற்கு பள்ளிக்கு அருகில் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்ததை மட்டும்தான் பார்த்த நினைவு, அந்த ஆண்டே அவர் வேறு ஊருக்கு மாறுதலாகி சென்று விட்டார்.‌ ஆனால் மிஸ் என் நினைவுகளில் அடிக்கடி வந்து கொண்டே இருந்தார். ஆறாம் வகுப்பில் கணக்கு பாடம் மிகவும் கஷ்டமாக இருந்தது அப்போது ஜூலியா மிஸ்ஸை நினைத்துக் கொள்வேன். அப்படி ஒரு மிஸ் வந்து இந்த கணக்கை எளிதாக சொல்லித் தர மாட்டார்களா என்று. 


காலங்கள் உருண்டோடி கடைசியில் ஜூலியா மிஸ் எங்கிருக்கிறார், எந்த ஊரில் என்ன செய்கிறார் என்று எதுவும் எனக்கு தெரியவேயில்லை. யாரிடம் கேட்பது என்றும் புரியவில்லை. பிறகு பள்ளி முடித்து கல்லூரி முடித்து ஐஏஎஸ் தேர்விற்கு தயாரான போதும் இந்த மிஸ்ஸை நினைத்திருக்கிறேன். என்னை பாதித்த உருவாக்கிய சில நல்லாசிரியர்களில் ஜூலியா மிஸ் தான் லிஸ்டில் முதல் இடம். 


ஒரு நாள் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் ஆன பிறகு என் ஆசிரியர்களை எல்லாம் சென்று பார்த்தேன். அதில் ஜூலியா மிஸ்ஸை மட்டும் என்னால் பார்க்க முடியவில்லை. பல ஆண்டுகள் கழித்து பின்னொரு நாள் அவரை சந்தித்தேன், சினிமாக் கதைகளின் சுவாரசியத்தைப் போலிருக்கும் அவரை நான் சந்தித்தது. சிலப்பதிகாரத்தில் காப்பிய முதன்மைக் கதையைவிட சில கிளைக் கதைகள்‌ இன்னும் சுவாரசியமாக இருப்பதைப் போல், அவரை சந்தித்த ஆச்சரியமூட்டும் ‌அந்த கிளைக் கதையை நான் சொல்லியாக வேண்டும்.


ஒரு நாள் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த ‌திரு நடராஜன் அவர்கள் என்னை பல்கலைக்கழகத்திற்கு போட்டி தேர்வுகள் குறித்து மாணவர்களிடம் பேச அழைத்திருந்தார்.‌ அந்த நிகழ்ச்சியில் ஒரு மாணவர் என்னிடம் 'நீங்கள் பள்ளிலிருந்து நன்றாக படிப்பீர்களா' என்று கேட்டார் அதற்கு பதில் சொல்லும் போது எனக்கு படிக்கும் ஆர்வத்தை ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் தான் ஏற்படுத்தினார் என்று ஜூலியா மிஸ்ஸின் பெயரைச் சொல்லி குறிப்பிட்டு பதில் சொன்னேன். அந்த நிகழ்ச்சி முடிந்தபின் அங்கு படித்த முதலாம் ஆண்டு மாணவன் வந்து, சார் நீங்கள் குறிப்பிட்ட ஜூலியா மிஸ்ஸின் மகன் தான் நான், இங்கு தான் படிக்கிறேன் என்று சொன்னவுடன் எனக்கு மிகுந்த ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஆக இருந்தது. அதன் பிறகு ஜுலியா மிஸ்ஸை வீட்டிற்கு சென்று சந்தித்தேன். பிறகு தொலைக்காட்சியிலோ செய்திகளிலோ என்னை பார்த்தால்‌ குறுஞ்செய்தி அனுப்புவார் எப்போதாவது பேசுவார்.


ஜூலியா மிஸ் கடந்த வாரம் போனில் அழைத்து தம்பி நான் மாணவர்களை அப்போதிருந்து இப்போது வரை எங்காவது சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பேன். வெளியிடங்களை பார்க்கின்ற போது அவர்களுக்கு ஒரு உத்வேகமும் நம்மைச் சுற்றி என்னென்ன நடக்கிறது, நாம் எதிர்காலத்தில் எப்படி உருவாக வேண்டும் என்றெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வார்கள், இப்போதும் மதுரை விமான நிலையத்திற்கு மாணவர்களை அழைத்துச் செல்கிறேன், நீ‌ இப்ப கலெக்டரா இருக்கிறதுனால, சொல்லி கொஞ்சம் உள்ளே சென்று பார்ப்பதற்கு அனுமதி வாங்கி தர முடியுமா என்று கேட்டார். விமான நிலைய அதிகாரிகளிடம் பேசி வேண்டுகோள் விடுத்தவுடன் அனுமதி தந்தார்கள். 


ஜூலியா மிஸ் மாணவர்களுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்த அன்று, நானும் உத்தரகாண்ட் மாநிலம் முசெளரியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி அகாடமியில் உரையாற்ற‌ச் செல்வதற்காக விமான நிலையம் வந்தேன். 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலியா மிஸ்ஸை அதே விமான நிலையத்தில் பார்த்தேன்.‌‌ விமான நிலைய அதிகாரிகளிடம் 28 ஆண்டுகளுக்கு முன்பாக இதே விமான நிலையத்திற்கு சிறுவனாக என்னை இந்த டீச்சர் தான் அழைத்து வந்தார் என்று சொன்னவுடன் மிகுந்த ஆச்சரியமாக டீச்சரை பாராட்டினார்கள்.


பல இலக்கிய படைப்புகளில் காலம் ஆச்சரியமானது,இனிமையானது அபூர்வ தருணங்களைத் தரவல்லது என்று பல கவித்துவமான புனைவு எழுத்துக்களில் வருவதைப் போல் நடந்த இந்த நிகழ்வு மகிழ்வையும் நெகிழ்வையும் தருகிறது. 


ஜூலியா மிஸ் தனிப்பட்ட வாழ்வில் நிறைய நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் சந்தித்தவர். ஆனால் தான் விரும்பிய ஆசிரியப் பணியில் மாணவர்களை உருவாக்குவதற்கும் எதிர்காலத்தில் அவர்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் நடக்க வேண்டுமோ அதற்குரிய நாற்றங்காலாய் மாணவப் பருவத்தை பயன்படுத்துவதையும் பக்குவப்படுத்துவதையும் மிகுந்த மெனக்கெடலோடு செய்பவர். 


புறநானூற்றில் சொன்னதைப்போல 'தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர்” உள்ளதால் தான் இவ்வுலகம் நிலைபெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது.‌ ஜூலியா மிஸ்ஸை போன்ற ஆசிரியர்கள் தான்‌ ஏழை எளிய கிராமத்து குழந்தைகளையும், முதல் தலைமுறையாக பள்ளி கல்லூரிகளில்  படிக்க வருபவர்களையும் கரையேற்றிக் கொண்டிருக்கிறார்கள். 


யார் சிறந்த ஆசிரியர் என்று கேள்விக்கு நிறைய பதில் இருக்கலாம் ஆனால் 'கற்கும் விருப்பத்தை தோற்றுவிப்பவரே' சிறந்த ஆசிரியர் என்பேன் நான்.‌ எங்கள் ஜூலியா மிஸ் சிறந்த ஆசிரியர் !


இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும்போது விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறப்பதாக விமானி அறிவிக்கிறார், 28 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலியா மிஸ் மதுரைக்கு அழைத்துச் சென்று காட்டிய போது தூரத்தில் ஓடுதளத்தில் ஓடிய விமானம் இன்று மேலெழும்பி 30 ஆயிரம் அடி உயரத்தில் என் மனதில் பறக்கிறது..



நாடாளுமன்றத் தேர்தல் 2024 - பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்டப் பயிற்சி வழங்குதல் - முன்னேற்பாடுகள் செய்தல் - மாவட்ட ஆட்சியர் கடிதம்...

 

நாடாளுமன்றத் தேர்தல் 2024 - பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்டப் பயிற்சி 07.04.2024 அன்று வழங்குதல் -  முன்னேற்பாடுகள் செய்தல் - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இடைநின்ற 605 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து அசத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்...



இடைநின்ற 605 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து அசத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்...


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு  பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடை நின்ற சுமார் 1898  மாணவர்களை கண்டறிந்து,   இவர்களில் 600 மாணவர்களை   மீண்டும் கல்வி தொடர வழி வகை செய்துள்ளார்  மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.


திருப்பத்தூர் மாவட்டத்தில் 993 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்த நிலையில் இவர்களில் 1,898 மாணவ, மாணவிகள் பள்ளிகளில் இருந்து பல்வேறு காரணங்களால் இடை நின்றது கல்வித்துறையின் கணக்கெடுப்பில் தெரிய வந்திருக்கிறது.


இதனையடுத்து, இடைநின்ற மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் அணுகி, அவர்கள் இடைநின்றதற்கான சமூக காரணிகளை ஆராய்ந்து, இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வி தொடர்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கல்வித்துறை அதிகாரிகளின் வழியே உத்தரவிட்டிருக்கிறார், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.


ஏழை மாணவியின் வீடு தேடி வந்து கதவை தட்டிய கலெக்டர்..!


வெறும் உத்தரவோடு நில்லாமல், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் , வருவாய் துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து அவர்களுடன் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தியிருக்கிறார்.


இதனைத்தொடர்ந்து, களத்தில் இறங்கிய அந்தந்த ஏரியாவின் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையிலான ஆசிரியர்கள், சம்பந்தபட்ட மாணவர்களின் வீடு தேடி சென்று பேசியிருக்கின்றனர். இதன் நேரடி பலனாக முதற்கட்டமாக 176 பெண் பிள்ளைகளும்; 226 ஆண் பிள்ளைகளுமாக ஆக மொத்தம்  402 மாணவர்களை ஒரே நாளில் மீண்டும் பள்ளியில் சேர்த்து அசத்தியுள்ளனர்.


இதோடு நில்லாமல், நாட்றம்பள்ளி அடுத்த தாசரியப்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மாதனூர் ஒன்றியம் , ஆம்பூர் கன்கார்டியா அரசு நிதியுதவி பெரும் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் இடைநின்ற மாணவர்களின் பட்டியலை கையில் எடுத்துக்கொண்டு அவர்களது வீடு தேடி கதவை தட்டியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன். இதன்படி, 53 மாணவ – மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பித்திருக்கிறார், அவர்.


மாணவி ஒருவரின் மருத்துவ செலவை ஏற்றதோடு, மாணவர்கள் சிலரை தனது காரிலேயே பள்ளிவரை கூட்டிச்சென்று இறக்கிவிட்டிருக்கிறார். அம்மாணவர்களுக்குத் தேவையான கற்றல்சார்ந்த உபகரணங்களையும் தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்திருக்கிறார்.


“கல்வி ஒன்று தான் உங்களை கரை சேர்க்கும். கல்வி ஒன்று மட்டுமே தங்கள் குடும்ப பொருளாதார சூழ்நிலையை உயர்த்தும். கல்வி கற்றவர்கள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைவார்கள். கல்வியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தினந்தோறும் பள்ளிக்கு சென்று  நீங்கள் சிறந்த எதிர்காலத்தை பெறுவதற்கு முனைய வேண்டும் என்று விழிப்புணர்வூட்டி  முதல்வரின் முன்னெடுப்பினால் பள்ளி செல்லும்  குழந்தைகளுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று நீங்கள் வாழ்க்கையில் உயர வேண்டும்”  எனவும் அவர்களிடையே விழிப்புணர்வு உரையாற்றியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.


இது குறித்து, மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு பேசியபோது, “பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவிகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வர செய்யும்போது குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்படுகின்றன. இளம் வயது தாய்மார்களின் மரணங்கள் தடுக்கப்படுகின்றன. திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும்  சுமார் ஆயிரம் மாணவர்களை மீண்டும் பள்ளிக்குக்கு கொண்டுவர பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது வரை சுமார் 605   மாணவ, மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்” என்கிறார், பூரிப்போடு...



16 மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Rt.No. 2058, Dated: 16-05-2023) வெளியீடு (Transfer of Collectors of 16 Districts - Tamil Nadu Government Ordinance (G.O.Rt.No. 2058, Dated: 16-05-2023) Issued)...


>>> 16 மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் -  தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Rt.No. 2058, Dated: 16-05-2023) வெளியீடு (Transfer of Collectors of 16 Districts - Tamil Nadu Government Ordinance (G.O.Rt.No. 2058, Dated: 16-05-2023) Issued)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



16 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்...


நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் ஆட்சியராக நியமனம்


அரியலூர் ஆட்சியராக அன்னீ மேரி ஸ்வர்னா நியமனம், 


கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேகப் தஞ்சை ஆட்சியராக நியமனம்


புதுக்கோட்டை ஆட்சியராக மெர்சி ரம்யா நியமனம்,


 நாமக்கல் ஆட்சியராக உமா நியமனம்


காஞ்சி ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம், 


செங்கல்பட்டு ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம்


மதுரை ஆட்சியராக சங்கீதா நியமனம், 


சிவகங்கை ஆட்சியராக ஆஷா அஜித் நியமனம்


ராமநாதபுரம் ஆட்சியராக விஷ்னு சந்திரன் நியமனம்,


 தூத்துக்குடி ஆட்சியராக ராகுல்நாத் நியமனம்


திருப்பூர் ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம்,


 ஈரோடு ஆட்சியராக ராஜகோபால் சுங்கரா நியமனம்


திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி நியமனம், 


நாகை ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம்


கிருஷ்ணகிரி ஆட்சியராக சரயு நியமனம்...















கல்வி - ஆதிதிராவிடர்‌ நலம்‌ - கல்வி உதவித்‌ தொகை - போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டத்தில்‌ - மாணவ/ மாணவியர்களின்‌ வங்கி கணக்கில்‌ வரவு வைக்கப்பட்ட கல்வி உதவித்தொகை திரும்ப வரப்பெற்றது - IPPB (Indian Post Payment Bank) மூலம்‌ அஞ்சலக சேமிப்பு கணக்கை துவக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்‌ தொடர்பாக - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதம் ந.௧.எண்‌. 12099/ 2022/கா-10 , நாள்‌:06.04.2023 (Education - Adi Dravidiar welfare - Educational Scholarship amount - Post matric education scholarship scheme - Education scholarship credited to student's bank account has been returned - In relation to opening post office savings account through IPPB (Indian Post Payment Bank) - Tiruppur District Collector's letter no. RC. No. 12099/ 2022/G-10, Date: 06.04.2023)...



>>> கல்வி - ஆதிதிராவிடர்‌ நலம்‌ - கல்வி உதவித்‌ தொகை - போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டத்தில்‌ - மாணவ/ மாணவியர்களின்‌ வங்கி கணக்கில்‌ வரவு வைக்கப்பட்ட கல்வி உதவித்தொகை திரும்ப வரப்பெற்றது - IPPB (Indian Post Payment Bank)  மூலம்‌ அஞ்சலக சேமிப்பு கணக்கை துவக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்‌ தொடர்பாக - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதம்  ந.௧.எண்‌. 12099/ 2022/கா-10 , நாள்‌:06.04.2023 (Education - Adi Dravidiar welfare - Educational Scholarship amount - Post matric education scholarship scheme - Education scholarship credited to student's bank account has been returned - In relation to opening post office savings account through IPPB (Indian Post Payment Bank) - Tiruppur District Collector's letter no. RC. No. 12099/ 2022/G-10, Date: 06.04.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி - 09-02-2023 அன்று காலை 11மணிக்கு எடுத்தல் - கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் கடிதம் (Abolition of Bonded Labor Day Pledge - Taking on 09-02-2023 at 11 AM - Letter from Karur District Collector)...


>>> கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி - 09-02-2023 அன்று காலை 11மணிக்கு எடுத்தல் - கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் கடிதம் (Abolition of Bonded Labor Day Pledge - Taking on 09-02-2023 at 11 AM - Letter from Karur District Collector)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி - சட்டை மற்றும் சேலை 12.01.2023 & 13.01.2023 ஆகிய நாட்களில் அணிந்து வர கரூர் மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கை (In order to celebrate Pongal festival properly Tamils ​​should wear traditional clothes like Vetti - shirt and saree on 12.01.2023 & 13.01.2023 - Karur District Collector Circular)...



>>> பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி - சட்டை மற்றும் சேலை 12.01.2023 & 13.01.2023 ஆகிய நாட்களில் அணிந்து வர கரூர் மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கை (In order to celebrate Pongal festival properly Tamils ​​should wear traditional clothes like Vetti - shirt and saree on 12.01.2023 & 13.01.2023 - Karur District Collector Circular)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IAS officers transferred - Government Order issued

  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு  IAS officers transferred - Government Order issued 'எல்காட்' நிர்வாக இயக்குந...