கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்திய அரசின் பல்வேறு ஆணையங்களின் தலைவர்கள் (Chairpersonserson/ Chairmans of various Commissions of Government of India)...



இந்திய அரசின் பல்வேறு ஆணையங்களின் தலைவர்கள் (Chairpersonserson/ Chairmans of various Commissions of Government of India)...


💎 தலைவர் 💎

 ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ 

நிதி ஆயோக் தலைவர் = *நரேந்திர மோடி* 

நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் = *சுமன் பெர்ரி* 

நிதி ஆயோக்கின் CEO = *பரமேஸ்வரன் ஐயர்* 

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் = *அருண் குமார் மிஸ்ரா* 

சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர்= *சர்தார் இக்பால் சிங் லால்புரா* 

பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் = *விஜய் சாம்ப்லா* 

பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர்= *ஹர்ஷ் சவுகான்*

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர்= *பகவான் லால் சாஹ்னி* 

துணைத் தலைவர் = *டாக்டர். லோகேஷ் குமார் பிரஜாபதி* 

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் = *ரேகா ஷர்மா* 

குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் = *பிரியங்க் கனுங்கோ* 

மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் தலைவர்= * ரஞ்சித் வசந்தராவ்* 

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (NGT) தலைவர்= *நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல்* 

மத்திய விஜிலென்ஸ் கமிஷன் தலைவர்= *சுரேஷ் என். படேல்* 

மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் = *யஷ்வர்தன் குமார் சின்ஹா* 

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர்= *நிதின் குப்தா* 

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் = *விவேக் ஜோஹ்ரி* 

மத்திய தகவல் ஆணையர் தலைவர்= *யஷ்வர்தன் குமார் சின்ஹா* 

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் தலைவர்= *ரவீந்தர் பாகர்* 

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் தலைவர் = *நிதி சிப்பர்* 

ரயில்வே வாரியத்தின் தலைவர் = *விவேக் குமார் திரிபாதி* 

தேசிய வன ஆணையத்தின் தலைவர் = *பூபிந்தர் நாத் கிர்பால்* 

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர்= *ஆதர்ஷ் குமார் கோயல்* 

அணுசக்தி ஆணையத்தின் தலைவர்= *கமலேஷ் நீலகாந்த் வியாஸ்* 

விண்வெளித் துறையின் பொதுச் செயலாளர்= *எஸ் சோமநாத்* 

பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர்= *எம் ஜெகதேஷ் குமார்* 

இந்திய போட்டி ஆணையத்தின் தலைவர்= *அசோக் குமார் குப்தா* 

மத்திய நீர் ஆணையத்தின் தலைவர்= *ஆர் கே குப்தா* 

தலைவர் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) = *S கிஷோர்* 

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) = *தினேஷ் பிரசாத் சக்லானி* 




>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

    💎 Chairperson/ Chairman 💎

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖


🟢Chairperson NITI Aayog = *Narendra Modi*


🟢Vice-Chairman of NITI Aayog = *Suman Bery*


🟢CEO of NITI Aayog = *Parameswaran Iyer*


🟢Chairperson of the National Human Rights Commission = *Arun Kumar Mishra*


🟢Chairperson of the National Commission for Minorities= *Sardar Iqbal Singh Lalpura*


🟢Chairperson of the National Commission for Scheduled Castes = *Vijay Sampla*


🟢Chairperson of the National Commission for Scheduled Tribes= *Harsh Chouhan*


🟢Chairperson of the National Commission for Backward Classes= *Bhagwan Lal Sahni*


Vice Chairman = *Dr. Lokesh Kumar Prajapati*


🟢Chairperson of the National Commission for Women = *Rekha Sharma*


🟢Chairperson of the National Commission for Protection of Child Rights = *Priyank Kanungo*


🟢Chairperson of the Central Administrative Tribunal= * Ranjit Vasantrao More*


🟢Chairperson of the National Green Tribunal (NGT)= *Justice Adarsh Kumar Goel*


🟢Chairperson of the Central Vigilance Commission=  *Suresh N. Patel*


🟢Chairperson of the Central Information Commission  = *Yashvardhan Kumar Sinha*


🟢Chairperson of the Central Board of Direct Taxes= *Nitin Gupta*


🟢Chairperson of the Central Board of Indirect Taxes and Customs = *Vivek Johri*


🟢Chairperson of the Central Information Commissioner= *Yashvardhan Kumar Sinha*


🟢Chairperson of the Central Board of Film Certification= *Ravinder Bhakar*


🟢Chairperson of the Central Board of Secondary Education = *Nidhi Chibber*


🟢Chairperson of the Railway Board = *Vivek Kumar Tripathi*


🟢 Chairperson of National Forest Commission = *Bhupinder Nath Kirpal*


🟢 Chairperson of National Green Tribunal= *Adarsh Kumar Goel*


🟢 Chairman of Atomic Energy Commission= *Kamlesh Nilkanth Vyas*


🟢 Secretary General of Department of Space= *S Somanath*


🟢 Chairman of University Grants Commission= *M Jagadesh kumar*


🟢 Chairperson of Competition Commission of India= *Ashok Kumar Gupta*


🟢 Chairperson of Central Water Commision= *R K Gupta*


🟢 Chairman Staff Selection commission( SSC) = *S Kishore*


🟢National Council of Educational Research and Training ( NCERT) = *Dinesh Prasad Saklani*


➖➖➖➖➖➖➖➖➖➖➖➖



>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கிராம உதவியாளரை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு 30-11-2022 இல் நடைபெற இருந்தநிலையில் நிருவாக காரணங்களுக்காக 04-12-2022 (ஞாயிறு) அன்று அனைத்து மாவட்டங்களிலும் நடத்த தேர்வு தேதியை மாற்றம் செய்து வருவாய் நிருவாக ஆணையர் உத்தரவு (While the written examination for the selection of Village Assistant was to be held on 30-11-2022, due to administrative reasons, the date of the examination has been changed to be conducted on 04-12-2022 (Sunday) in all districts - Commissioner of Revenue has ordered)...

 கிராம உதவியாளரை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு  30-11-2022 இல் நடைபெற இருந்தநிலையில் நிருவாக காரணங்களுக்காக  04-12-2022 (ஞாயிறு) அன்று அனைத்து மாவட்டங்களிலும் நடத்த தேர்வு தேதியை மாற்றம் செய்து வருவாய் நிருவாக ஆணையர் உத்தரவு (While the written examination for the selection of Village Assistant was to be held on 30-11-2022, due to administrative reasons, the date of the examination has been changed to be conducted on 04-12-2022 (Sunday) in all districts - Commissioner of Revenue has ordered)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2022 - School Morning Prayer Activities...


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால்:அறத்துப்பால் 


இயல்:பாயிரவியல் 


அதிகாரம்: இல்வாழ்க்கை


குறள் : 50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.


பொருள்:

தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.


பழமொழி :

Nothing so bad but it might have been worse.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று. 


இரண்டொழுக்க பண்புகள் :


1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.


 2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல


பொன்மொழி :


உங்களிடம் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற வளம் நேரமாகும். --ஸ்டீவ் ஜாப்ஸ்


பொது அறிவு :


1. முதல் உலகப்போர் நடந்த ஆண்டு எது ? 


 1914 ஆம் ஆண்டு . 


 2. உலக சமாதான சின்னம் எது ?


 ஒலிவ் மரத்தின் கிளை.


English words & meanings :


ate -past tense of eat, verb. சாப்பிட்டு விட்டேன். வினைச் சொல். eight - number 8. noun எண் எட்டு. பெயர்ச் சொல்.both homonyms.


ஆரோக்ய வாழ்வு :


ஊட்டச்சத்து நிறைந்த பாதாம் சிற்றுண்டிக்கு ஆரோக்கியமான மாற்று உணவாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதே சமயம் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு முடிவின்படி, தினசரி 56 கிராம் பாதாம் சாப்பிடுவது, ப்யூட்ரேட்டின் அளவை ஊக்குவித்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.


NMMS Q


0.04, 0.09, 0.25, 0.49, ________ 


 விடை: 0.121 


 விளக்கம்- பகா எண்களின் தொடர்ச்சி மற்றும் அதன் வர்க்கமாக உள்ளது.


நவம்பர் 21


சர் சந்திரசேகர வெங்கட ராமன் அவர்களின் நினைவுநாள்


சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்


உலகத் தொலைக்காட்சி நாள் 


உலகத் தொலைக்காட்சி நாள் (World Television Day) உலகெங்கும் ஆண்டுதோறும் நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.


நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இக்கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் கூடிய முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.


நீதிக்கதை


சிட்டுக்குருவியின் ஆசை


இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து, குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி. 


தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது. 


நீதி :

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி.


இன்றைய செய்திகள்


21.11.22


* பல மின்இணைப்பு வைத்துள்ளவர்கள் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம்: மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்.


* சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் டிச.23-ல் தர்ணா: அரசுப் பணியாளர் சங்கம் அறிவிப்பு.


* தமிழ்நாடு அரசு சார்பில் நடந்து வரும் அகழ்வாய்வுகள் வரலாற்றுக்கு புதிய தரவுகளையும், தகவல்களையும் தெரிவித்து வருகின்றன என தொல்பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


* பாரதியார் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கிறது மத்திய அரசு: வாரணாசியில் பாரதி நினைவிட பணியையும் மேற்கொள்ள திட்டம்.


* டிசம்பர் 7-ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்க்க இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு.


* 2வது டி20 போட்டி - நியூசிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.


* சர்வதேச டி20 கிரிக்கெட்: ஒரே போட்டியில் பல சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்.


* 32 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.


Today's Headlines


* Multiple Electricity Connection Holders Can Link Same Aadhaar Number: Electricity Authority Explanation


 *Dharna on Dec. 23 in 7 mandals including Chennai: Government Employees Association announcement.


 *Archeology Minister Thangam Thennarasu said that the ongoing excavations on behalf of the Tamil Nadu government are providing new data and information to history.


 *Central Govt declares Bharathi's birthday as National Languages ​​Day: Plans to build Bharati Memorial in Varanasi


* It has been announced that the Winter Session of Parliament will begin on December 7.


 * UN  France supports India's permanent membership in the Security Council.


 * 2nd T20I - India win by beating New Zealand easily.


 * International T20 Cricket: Suryakumar Yadav who achieved many records in a single match.


 * The  World Cup football festival started yesterday in Qatar with 32 teams.


பருவம் 2 - 1ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களுக்கும் பாடத்தலைப்பு வாரியாக கற்றல் விளைவுகள் எண் குறியீடு (Term 2 – Lesson wise Learning Outcomes with Number Codes for all Subjects from Class 1 to Class 7)...

 


>>> பருவம் 2 - 1ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களுக்கும் பாடத்தலைப்பு வாரியாக கற்றல் விளைவுகள் எண் குறியீடு (Term 2 – Lesson wise Learning Outcomes with Number Codes for all Subjects from Class 1 to Class 7)...


Prepared by,

Block Educational Officer - K.Paramathi...


இன்றைய (21-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 21, 2022



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் ஏற்படும். வெளிப்படையான குணத்தின் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். பொதுக்கூட்ட பணிகளில் ஆதரவு மேம்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஜவுளி வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




அஸ்வினி : நெருக்கம் அதிகரிக்கும்.


பரணி : அறிமுகம் கிடைக்கும். 


கிருத்திகை : ஆதரவு மேம்படும்.

---------------------------------------



ரிஷபம்

நவம்பர் 21, 2022



இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். தாமதம் அகலும் நாள். 




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




கிருத்திகை : தனவரவு கிடைக்கும்.


ரோகிணி : விவாதங்களை தவிர்க்கவும்.


மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும். 

---------------------------------------



மிதுனம்

நவம்பர் 21, 2022



மனதில் குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் உள்ள சில நுட்பங்களை அறிவீர்கள். கேளிக்கை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சமயோஜிதமான சிந்தனைகளின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.


திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும். 


புனர்பூசம் : தெளிவு ஏற்படும்.

---------------------------------------



கடகம்

நவம்பர் 21, 2022



அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் உயர்கல்வி தொடர்பான குழப்பம் நீங்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வாகன பயணங்களால் லாபமும், அனுபவமும் உண்டாகும். மருத்துவம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூசம் : எண்ணங்கள் ஈடேறும். 


ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------



சிம்மம்

நவம்பர் 21, 2022



மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சமூக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வரவு நிறைத்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




மகம் : சிந்தனைகள் மேம்படும். 


பூரம் : ஒத்துழைப்பான நாள்.


உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------



கன்னி

நவம்பர் 21, 2022



அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எண்ணிய காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திரம் : முன்னேற்றமான நாள்.


அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------



துலாம்

நவம்பர் 21, 2022



உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மற்றும் அதை சார்ந்த பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான பணிகளில் எண்ணிய உதவி கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




சித்திரை : மேன்மையான நாள்.


சுவாதி : வாய்ப்புகள் அமையும்.


விசாகம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



விருச்சிகம்

நவம்பர் 21, 2022



நுட்பமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வாழ்க்கை துணைவரிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபமும், அலைச்சலும் ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




விசாகம் : பிரச்சனைகள் குறையும். 


அனுஷம் : அனுசரித்து செல்லவும். 


கேட்டை : அலைச்சலான நாள்.

---------------------------------------



தனுசு

நவம்பர் 21, 2022



நண்பர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். விருப்பமான உணவினை உண்டு மகிழ்வீர்கள். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




மூலம் : ஆதரவான நாள்.


பூராடம் : முன்னேற்றம் ஏற்படும்.


உத்திராடம் : புதுமையான நாள்.

---------------------------------------



மகரம்

நவம்பர் 21, 2022



மனை தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவமும், லாபமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




உத்திராடம் : தாமதங்கள் குறையும். 


திருவோணம் : அனுபவம் ஏற்படும்.


அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------



கும்பம்

நவம்பர் 21, 2022



உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அவிட்டம் : மாற்றம் உண்டாகும்.


சதயம் : முயற்சிகள் ஈடேறும். 


பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும். 

---------------------------------------



மீனம்

நவம்பர் 21, 2022



எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்களில் காலதாமதம் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்லவும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் சிந்தித்து செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கால்நடை தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.


உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும். 


ரேவதி : கவனம் வேண்டும். 

---------------------------------------


கற்றல் நோக்கங்கள் - கற்றல் விளைவுகள் எண்ணிக்கை - வகுப்பு & பாட வாரியாக - மாதிரி பாடக்குறிப்பு - LOT, MOT, HOT - Model Questions - NAS - கற்றல் விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாக்கள் (Learning Objectives - Number of Learning Outcomes - Class & Subject Wise - Model Notes of Lesson - LOT, MOT, HOT - Model Questions - NAS - Model Questions based on Learning Outcomes) - Regional Review Meeting - CEO & DEO...



>>> கற்றல் நோக்கங்கள் - கற்றல் விளைவுகள் எண்ணிக்கை - வகுப்பு & பாட வாரியாக - மாதிரி பாடக்குறிப்பு - LOT, MOT, HOT - Model Questions - NAS - கற்றல் விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாக்கள் (Learning Objectives - Number of Learning Outcomes - Class & Subject Wise - Model Notes of Lesson - LOT, MOT, HOT - Model Questions - NAS - Model Questions based on Learning Outcomes) - Regional Review Meeting - CEO & DEO...


கற்றல் விளைவு என்றால் என்ன?

பாடப்பொருளைக் கற்று முடித்த பின்னர் பெற்ற அறிவைத் தன் வாழ்வில் / நடத்தையால் பின்பற்றும் பண்பு / திறன் / செயல் வெளிப்பாடு.


What is Learning Outcome ?

The characteristic / ability / expression of action to follow the knowledge acquired in one's life / behavior after completing the subject matter...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


சேலம் புத்தகத் திருவிழா 2022 - 20-11-2022 முதல் 31-11-2022 வரை - நடைபெறும் நிகழ்வுகள் - நாள் வாரியாக (Salem Book Festival 2022 - 20-11-2022 to 31-11-2022 - Events - Day wise)...



>>> சேலம் புத்தகத் திருவிழா 2022 - 20-11-2022 முதல் 31-11-2022 வரை - நடைபெறும் நிகழ்வுகள் - நாள் வாரியாக (Salem Book Festival 2022 - 20-11-2022 to 31-11-2022 - Events - Day wise)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LMS - Inclusive Education Training - M1 to M7 - Baseline & Endline Assessment - Quiz Questions & Final Answers

  கற்போர் மேலாண்மைத் திட்டம் (LMS) - இணையவழிப் பயிற்சி - Learning Management System LMS - உள்ளடங்கிய கல்விப் பயிற்சி - கட்டகம் 1 முதல் கட்டக...